[பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்களும் ஷரியத்தின் தடையும்]

தற்கொலைத் தாக்குதல் என்பது உயிரோடு திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை. உயிரை மாய்ப்பது மட்டுமே இங்கு உள்ளது. இதையும் போரில் வீர மரணம் அடைவதையும் சமமாகக் கருத முடியாது.

போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை இமாம் புகாரியின் ஹதீஸ்களில் காணலாம். எண்ணத்தின் அடிப்படையில் கூலி என்பது அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் தான். தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நல்ல எண்ணத்தில் செய்கின்றேன் என்று கூறி யாரும் நியாயப் படுத்த முடியாது. ஒரு முஸ்லிம் எவ்வளவு தான் அநீதி இழைக்கப் பட்டாலும், என்ன நியாயம் அவனிடம் இருந்தாலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டுமே நடக்க வேண்டும். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விடக் கூடாது. இதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.

இதைக் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய்ந்தால் உலகின் பல பகுதிகளில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம். 

உலகில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை யாருக்கு எதிராக நடத்தப் படுகின்றன என்று பார்த்தால், இதில் பலியாவோர் பொது மக்களாக இருப்பதைக் காண முடியும்.

பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள், இரயில்கள், விமானங்கள், கடைவீதிகள், வணிக வளாகங்கள் போன்றவை தான் தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய இலக்காக உள்ளன.

போர்க் களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று மோதும் போது எதிரிகளைக் கொல்வதை யாரும் கொலை என்று கூற மாட்டார்கள். ஆனால் இத்தகைய போர்க்களங்களில் கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் 

 அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன. தற்கொலை செய்து கொண்டால் நிரந்தர நரகம் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே தற்கொலை கூடாது,  தற்கொலைத் தாக்குதல் கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.


ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்த்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்  அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 


யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் என்று அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம்  அவர்கள் கூறினார்கள்.

 நூல்: புகாரி 


பொதுமக்கள் மத்தியிலே குண்டுகளை வெடிக்கச் செய்து அதன் மூலம் பல அப்பாவி உயிர்களைப் பறிப்பது என்பது மனிதாபிமானம் அறவே இல்லாத செயல்களாகும்.

இஸ்லாம் இத்தகைய செயல்களை கடுமையாக எதிர்பதோடல்லாமல் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கைச் செய்கிறது.

“இஸ்லாம்” என்ற சொல்லே “அமைதி” (Peace) என்ற பொருளைக் கொண்டது. எனவே “அமைதி” மார்க்கமான இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கு அறவே இடமில்லை. இதை நாம் கூறவில்லை! அல்லாஹ்வே கூறுகிறான்: -

“எவனொருவன் அநியாயமாக மற்றொருவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்”


“எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவரைப் போலாவார்” (5:32)ஷேக் ஸாலிஹ் அல் பவ்சான் அவர்களிடம் கேட்கப்பட்டது >>

ஒசாமா பின் லாடனும் அவனை பின் தொடர்பவர்களும் , அவனுடைய கொள்கையை ஊக்குவிப்பவர்களும், கவாரிஜ்  என்ற வழிகெட்ட பிரிவை சேர்ந்தவர்களா ?


ஷேக் ஹபிதஹுல்லாஹ் பதிலளித்தார்கள் >> 

மிகவுமே பிரபல்யமான அடிப்படை தான் , ஆட்சி அதிகாரம் பெற்றவர்களுக்கு எதிராக

கலகம் செய்பவர்கள் இந்த வழிகெட்ட கவாரிஜ் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது ,  இன்னும் இது பின் லாடனோ , அவனைப் போன்ற யாராக இருந்தாலும், முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக கலகம் செய்து கிளம்பிவிட்டார்கள் என்றால் இந்த வழிகெட்ட காவாரிஜ் பிரிவில்அடங்கிவிடுவார்கள்.

ஆடியோவை கேட்க இங்கே சொடுக்கவும்.