[வித்ர் குனுத்தும் அது ருகுஉ க்கு முன்னர் என்பதும்]

வித்ர் குனுத்தும் அது ருகுஉ க்கு முன்னர் என்பதும்நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ர் தொழுகையின் ஒற்றைப்படையான ரக்காத்துகளில் வழமையாக குனூத்தில் ஈடுபடுவார்கள் (1 ) [ ஆதாரம் >>> இப்ன் நாசர் & தாரகுத்னி ஸஹிஹ்  ஆன அறிவிப்பாளர் வரிசையுடன். ], 

மற்றைய அறிவிப்பின் பிரகாரம் சில நேரங்களில் (2 ), [ ஆதாரம் >>> பத் அல் கதிர் ]

இன்னொரு அறிவிப்பில் அவர் ருக்குவுக்கு முன்னர் அதில் ஈடுபடுவார் (3). [ ஆதாரம் >>> இப்னு அபி ஷெய்பா , அபூ தாவுத், நசாயி சுனன் குப்ரா , அஹமத் , தபரானி, பைஹகி, இப்ன் அசாகீர் பார்க்க இமாம் நாசர் இன் இர்வா உல் கலீல் ]


இப்ன் மஷூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வித்ரில் வழமையாக அவர்களின் கைகளை உயர்த்துவார்கள் பின்னர் தாழ்த்தி விடுவார்கள் . ஹசனான தரத்தில் அப்துர் ரஸ்ஸாக் இல் பதியப்பட்டுள்ளது ( 4/325 ). 


حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ السَّلُولِيِّ عَنْ أَبِي الْحَوْرَاءِ عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ قَالَ عَلَّمَنِي رَسُولُاللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي قُنُوتِ الْوَتْرِ اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَاأَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ  رواه أحمد


ஹஸன் பின் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் வித்ருடைய குனூத்தில் ஓதுவதற்காக சில வார்த்தைகளை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் எனக்கு கற்றுத் தந்தார்கள். (அந்த வார்த்தைகளாவன)
அல்லாஹூம் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த. வகினீ ஷர்ர மாகலய்த்த. ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. இன்னஹூ லாயதில்லு மன்வாலைத்த. தபாரக்க ரப்பனா வதஆலைத்த.
நூல் : அஹ்மத்