ஜமாஅத் தொழுகையும், அதன் சட்டங்களும்

தொழுகை என்பது ஈமான் கொண்ட அணைத்து முஸ்லிம்களும் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமைகளுள் மிக்க முக்கியமானது என்பதனை நாம் அனைவரும் 

அறிவோம். இத் தொழுகையானது அதனை நிறைவேற்றும் முறைகளை பொருத்தும் , நிறைவேற்றுபவருடைய  உள்ளச்சதைப் பொருத்தும் கூலியில் பல ஏற்றத் தாழ்வுகளை

நிகழவேச் செய்கிறது. எமது தொழுகையும் முழுப் பலனை   ஈட்டி தரும் தொழுகையாக ஆக வேண்டும் என்றால் அதற்கான வழிமுறைகளை நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். 


தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டதும் பள்ளி வாசலுக்குச் செல்லும் வழக்கம் எம் மத்தியில் குறைந்து கொண்டே செல்கின்றது. ஆகவே அதன்  ஜமாஅத்தின் முக்கியத்துவத்தையும் , அதன் சட்டங்களையும் நாம் அறிந்து கொள்வோம். 


அல்லாஹுத்தஆலா கீழ்வரும் குர் ஆன் வசனத்தில் ஜமாஅத்துடன் தொழுவதனை 

ஏவியிருக்கிறான். 

 وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِين

மேலும், நீங்கள் தொழுகையை நிறைவேற்றுங்கள் , ஜகாத்தையும் நீங்கள் கொடுங்கள் , 

நீங்கள் ( ருகூவு செய்து ) குனிபவர்களுடன் நீங்களும் 

( ருகூவு செய்து ) குனியுங்கள் . ( 2:43 ) 


நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜமாஅத்துடன் தொழாத மனிதர்களின் மீது வெறுப்படைந்துள்ளார்கள். இன்னும் ஜமா அத்துடன் தொழுவதை தவற விடும் போது  ஏற்படும் பலாபலன்கள் பற்றி பின்வரும் ஹதீஸில் அழகிய முறையில் சித்தரித்துக் காட்டியுள்ளார்கள். 


எனது உயிர் எவன் கையில் இருக்கின்றதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! விறகுகளை  கொண்டு வருமாறு நான் கட்டளையிட்டு, அதன் படி விறகுகள் கொண்டு வரப்பட்டு, பின்னர் தொழுகைக்கு அழைக்குமாறு நான் உத்தரவிட்டு, அதன் படி அழைக்கப்பட்டு , பின்னர் ஒருவரை மக்களுக்கு தொழுவிக்குமாறு கட்டளையிட்டு , அதன் படி அவர் தொழுகை நடத்திய பின்னர் தொழுகைக்கு வராமலிருக்கின்ர ஆண்களின் வீடுகளுக்கு சென்று வீட்டோடு அவர்களை எரிப்பதற்கு நான் நினைத்ததுண்டு. என்னுடைய உயிர் எவனுடைய கையில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக மஸ்ஜிதில் ஒரு துண்டு இறைச்சி , அல்லது ஆட்டுக்கால்களின் இரண்டு , அழகிய குளம்பு கொடுக்கப்படுகிறது என்று அவர்கள் யாராவது அறிவார்களானால் நிச்சயமாக இஷாத் தொழுகைக்காக ஜமாஅத்திற்கு வந்து விடுவார்கள். ( புஹாரி ,  முஸ்லிம் )  

எனவே, மேற்சொன்ன ஆதாரங்களின் மூலம் ஜமா அத்துடன் தொழுவது வாஜிப் ( கட்டாய கடமை ) ஆகும் என உலமாக்கள் கருதுகின்றனர். 


ஜமா அத்துத் தொழுகையினை நாம் தவற விடுகின்ற போது ஏற்படும் தீமைகளை பற்றி 

பேசும் அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை கவனித்துப்

பாருங்கள். 


நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூற நான் செவிமடுத்திரிக்கிறேன் 


எந்த ஒரு கிராமத்திலோ அல்லது நாட்டுப்புறத்திலோ  தொழுகையை நிறைவேற்றாமல் 

மூன்று நபர்கள் இருப்பார்களாயின் அவர்களை ஷெய்த்தான் ஆக்கிரமிக்காமல் விட்டு விட மாட்டான். எனவே, ஜமா அத்தைப் பற்றிப்பிடிக்குமாறு உங்களை ஏவுகிறேன். ஏனெனில் நிச்சயமாக ஓநாய் சாப்பிடுவதெல்லாம் தனித்துச் செல்லும் ஆட்டைத்தான்.

 ( அஹ்மத் , அபூதாவுத் , நசாயி )

மேற்குறிப்பிட்ட நபி மொழிகள் ஜமா அத்துடன் தொழுவதனை பெரிதும் கட்டாயப் படுத்திருப்பதனை அவதானிக்க முடிகிறது. எந்த அளவுக்கு எனில் ஜமா அத்தை விட்டு விட்டு தனித்துத் தொழுபவர்களுக்கு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஓநாய் தனித்துச் செல்லும் ஆட்டை சாப்பிடுவதற்கு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்கள்.   

அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள் 

பள்ளிவாசலுக்கு ஒருவர் காலையிலோ மாலையிலோ சென்றால் , அவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்குரிய இடத்தை அல்லாஹ் தயார் செய்கிறான். (புஹாரி, முஸ்லிம் ) 


அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறியதாக அறிவிக்கிறார்கள் 

ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமா அத்துடன் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது ஒருவர் அழகிய முறையில் வுழு செய்து பின்னர் தொழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே மஸ்ஜிதுக்கு செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஒரு அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான்.

அவர் தொழுமிடத்தில்  இருக்கும் போதெல்லாம் அவருக்காக மலக்குகள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் இறைவா ! நீ இந்த மனிதனின் மீது அருள் புரிவாயாக ! உனது கருணையை அவருக்கு சொரிவாயாக ! என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் 

அவர் தொழுகையிலேயே இருக்கிறார்.  ( புஹாரி, முஸ்லிம், அபூ தாவூத் , திர்மிதி )


ஜமா அத்துத் தொழுகையின் சிறப்பை பற்றி இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை நோக்குவோம். 


எவரேனும் ஒருவர் நாளை மறுமையில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்தித்து அவனை சந்தோஷப்படுத்த ஆசைப்படுகிறாரோ அவர் ஐங்கால தொழுகைகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் சமயம் அவைகளை பேணிக் கொள்ளட்டும். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹுத்தாலா உங்களின் நபிக்கு சில வழிமுறைகளை ர்க்கமாக்கியிருக்கிறான். 

தொழுகைகளை அதன் நேரத்தில் நிறைவேற்றுவதும் அந்த வழிமுறைகளைச் சேர்ந்தவைகளாகும். இந்த தொழுகையைத் தாமதப் படுத்தி தொழுத மனிதனை போன்று நீங்களும் தொழுதால் நிச்சயமாக நீங்கள் உங்கள் நபியின் வழிமுறைகளை விட்டு விடுவீர்கள். நீங்கள் உங்கள் நபியின் வழிமுறைகளை விட்டு விட்டால் நேர் வழியிலிருந்து வழிகெட்டு விடுவீர்கள். பகிரங்க நயவஞ்சகர்களை தவிர அதனை 

பிற்படுத்த மாட்டார்கள், என்று நாங்கள் கருதுகிறோம். நடக்க  முடியாத மனிதர் இரு மனிதர்களின் தோள்களை பிடித்தவராக கொண்டு வரப்பட்டு மஸ்ஜிதில் ஸப்பில் நிற்க வைக்கப்படும் நிலை ( நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில்) இருந்தது.       

இவ்வாறு ஜமா அத்துத் தொழுகைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் முஸ்லிம் சகோதரர்களுக்கு நாம் செய்யும் உபதேசமாவது 

  1. ஒவ்வொரு பகுதியில் வாழும் முஸ்லிம்கள் கண்டிப்பாக நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய பிரகாரம் ஜமா அத் தொழுகையினை உயிர்ப்பிக்க முயற்சி செய்ய  வேண்டும்.
  2. முஸ்லிம் சகோதரர்கள் பின்னால் ஜமா அத்தாகத் தொழாமல் பிரிந்து சென்று விட்டு அல்லாஹ்வின் முன்னால் எடுத்து வைப்பதற்கு எந்தவொரு சாக்குப்போக்கும் கிடையாது பின் வரும் காரணங்களை தவிர 
  • அல்லாஹ் தடை செய்த இடங்களில் தொழுகை நடத்தப்பட்டால் 
  • நாம் தொழுவதை மக்கள் தடை செய்தால்