[தொழுகை]

நபி வழியில் ஜும்ஆ தொழுகையின் நேரங்கள் 


நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ தொழுகையை சூரியன் உச்சிக்கு வரும் முன்னும், வந்த பின்னரும் நிறைவேற்றியுள்ளார்கள். 

இக்கட்டுரையில் சூரியன் உச்சிக்கு வரும் முன் நிலைநாட்டப்படுவதைப் பற்றி ஷேய்க் நாஸிருத்தீன் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் அவர்களின் அல் அஜ்விபதுன் நாபியா என்ற நூலின் மூலம் விவரிக்கிறோம். 

ஏனெனில், இன்று இந்த ஸுன்னா மறக்கடிக்கப்பட்டதாகவும் அறிமுகமற்றதாகவும் காணப்படுகின்றது.   

 عن سلمة بن الأكوع قال : (( كنا نجمع مع رسول الله إذا زالت الشمس ، ثم نرجع نتتبع الفيء )) .أخرجه البخاري ، ومسلم ، وغيرهما 

நாங்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுடன் சூரியன் உச்சியை அடையும் போது  ஜும்ஆவைத் தொழுவோம். அதன் பின் நாங்கள் நிழலைத் தேடிச் செல்வோம். என ஸலமத் இப்னு அக்வா ணு அறிவிக்கிறார்கள்.             (ஆதாரம் : புகாரி , முஸ்லிம்)

 (( أن رسول الله كان يصلي الجمعة حين تميل الشمس )) ، رواه البخاري وغيره.

சூரியன் சாயும் நிலையில் றஸூலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ தொழுகையைத் தொழுவார்கள். என அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.   (ஆதாரம் : புகாரி )

(( كان رسول الله إذا زالت الشمس صلى الجمعة )) ، رواه الطبراني في "الأوسط"          وإسناده حسن .

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூரியன் உச்சியை அடையும் போது ஜும்ஆ தொழுகையைத் தொழுவார். என ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.   (தப்ரானி பில் அவ்ஸத்)   

ஷெய்க் அல் அல்பானி கூறுகிறார் :
சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்னால் ஜும்ஆ தொழுவது அனுமதிக்கப்பட்டது என்பதற்கு மேலே காட்டப்பட்ட ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன. 

ஏனென்றால் தொழுகைக்கு முன்னால் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் இரண்டு குத்பாக்கள் செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்த அம்சமாகும். 

மேலே கூறப்பட்ட ஹதீஸ்களில் உச்சிக்கு வந்ததன் பின்னால் தொழுததாகக் கூறப்பட்டடிருப்பதனால் இரண்டு குத்பாக்களும் சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்னால் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் செய்துவிட்டார்கள் என்பது தெளிவாகிறது. 

குத்பாவில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள்; மக்களுக்கு உபதேசம் செய்வார்கள்.  சில சமயங்களில் நபிகளார் ஜும்ஆவில் காஃப் என்ற சூறாவையும் ஓதுவார்கள் என்ற அறிவிப்பு ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. 
 
ما أخذت ق . والقرآن المجيد إلا من لسان رسول الله     ، يقرأها كل يوم جمعة على المنبر إذا خطب الناس )). "صحيح مسلم"  

நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து காஃப் சூறாவை, மிம்பரிலிருந்து மக்களுக்கு ஓதிக் காட்டும் வேளையிலேயே தவிர பெற்றுக் கொள்ளவில்லை. என உம்மு ஹிஷாம் பின்த் ஹாரித் றழியல்லாஹு அன்ஹா    (ஆதாரம் : முஸ்லிம்)   

இன்னும் சில சமயங்களில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூறதுல் பராஅ (சூறா தவ்பா) ஓதியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாராம்: ஸஹீஹ் இப்னு குதைமா) 

ஷெய்க் அல் அல்பானி கூறுகிறார் : 

இவ்வறிவிப்புகளை நாம் நினைவில் கொள்கின்ற போது இந்த அறிவிப்புகளின் அடிப்படையில் சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்னால் அதான் சொல்லப்பட்டிருக்கிறது. உச்சிக்கு வந்ததும் தொழுகை இடம்பெற்றதென்றால் அதற்கு முன்னால் அதானும், குத்பாவும்  இடம்பெற்றிருக்கின்றன. 

எனவேதான் சூரியன் உச்சியை  அடைந்ததும் தொழுகிறார்கள். இவை தெளிவாக இருக் கின்றன. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இதனை விடவும் நேரடியாக தெளிவாக ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஹதீஸ் அமைந்திருக்கிறது.  
 
(( كان رسول الله வு يصلي الجمعة ، ثم نذهب إلى جمالنا ، فنريحها حين تزول الشمس ، يعني : النواضح )) ، أخرجه مسلم

நாங்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஜும்ஆ தொழுவோம். அதன் பின்னால் நாங்கள் எங்கள் ஒட்டகங்களிடம் சென்று அவைகளை சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்னால் கட்டி விடுவோம். என ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.  (ஆதாரம் : முஸ்லிம்,நஸாயி,பைஹகி,முஸன்னப இப்னு அபீ ஷைபா)   

 ஷெய்க் அல் அல்பானி கூறுகிறார் : 
இந்த அறிவிப்பு சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்னால் தொழுது விட்டார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இதற்கு ஸஹாபாக்களின் அடிச்சுவடுகளும் சாட்சிகளாக இருக்கின்றன. 

அதில் சிலவற்றை சாட்சிகளாக நான் இங்கே முன்வைக்கிறேன். 
 
(( شهدت الجمعة مع أبي بكر الصديق ، فكانت خطبته وصلاته قبل نصف النهار ، ثم شهدنا مع عمر ، فكانت خطبته وصلاته إلى أن أقول : انتصف النهار ، ثم شهدنا مع عثمان ، فكانت خطبته وصلاته إلى أن أقول زال  النهار ، فما رأيت أحداً عاب ذلك و لا أنكره )) ، رواه ابن أبي شيبة ، والدارقطني

நான் அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு  உடன் தொழுதிருக்கிறேன். அவரது குத்பா காலை யின் அரைவாசிக்கு முன்னால் நடைபெறுவதாக இருந்தது. 

அதன் பின்னால் நாம் உமருடன் இருந்தோம். அப்போது நாம் பகல் நேரத்தின் பாதியை அடையும் போது குத்பாவின் தொழுகையை நிறைவேற்றுவோம். 

அதன் பின்னால் உஸ்மானின் காலத்தில் நாம் பகல் நேரம் முடியும் வேளையில் குத்பாவின் தொழுகையைத் தொழுதவர்களாக இருந்திருக்கிறோம். எங்களில் எவரும் இதில் குறை காணவில்லை. 

என அப்துல்லாஹ் இப்னு ஸய்தான் அஸ்ஸுலமி றஹிமஹுல்லாஹ் அறிவிக்கிறார்கள்.   ஆதாரம் : இப்னு அபீபா,தாரகுத்னி) 

ஷெய்க் அல் அல்பானி கூறுகிறார் :
மேற்கூறிய அறிவிப்பின் ஸனத் ஹஸன் என்ற தரத்தில் அமைவதற்கு வாய்ப்புள்ள அறிவிப்பாகும். இதன் ஸனத் இப்னு ரஜப் மற்றும் ஏனைய உலமாக்களின் வழிகாட்டலில் ஹஸன் என்ற தரத்தில் உள்ளது. 
இதன் அறிவிப்பாளர்களில் அப்துல்லாஹ் இப்னு ஸைதானைத் தவிர ஏனையவர்கள் தரமாக இருக்கிறார்கள். 

அப்துல்லாஹ் இப்னு ஸய்தான் மூத்த தாபிஈன்களில் ஒருவர் என அறியப்பட்டிருந்தாலும் அவரது நீதித் தன்மை அறியப்படவில்லை. 
இருப்பினும், அப்துல்லாஹ் இப்னு ஸய்தானிடமிருந்து நம்பிக்கைக்குரிய நான்கு அறிவிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். 

ஜரஹ் வத் தஃதீலில் கையாளப்படும் அளவுகோல்களின் அடிப்படையில் ஒரு அறிவிப்பாளரிடமிருந்து நம்பிக்கைக்குரிய நான்கு பேர் அறிவிக்கும் போது அந்த அறிவிப்பாளரை நாம் சந்தேகப்படத்  தேவையில்லை. 

தாபித் இப்னு ஹஜ்ஜாஜ், ஜஅபர் இப்னு புர்கான், மைமூன் இப்னு மிஹ்ரான், ஹபீப் இப்னு அபீ மர்ஸூக் ஆகிய நான்கு நம்பிக்கைக்குரிய அறிவிப்பாளர்கள் அப்துல்லாஹ் இப்னு ஸய்தானிடமிருந்து அறிவித்துள்ளார்கள். 

இந்த அறிவிப்புகளைக் குறித்து இமாம் புஹாரி கூறினார் :  “நாம் இந்த அதரை(அடிச்சுவடை) எடுத்துப் பின்பற்ற முடியாது, இதற்கு முறணாக உள்ள ஆதாரங்கள் உறுதியானவையாக உள்ளன. ஏனென்றால், அபூ பக்கரும் உமரும் உச்சிக்கு வந்து பின்னர் தொழுததாக அறிவித்துள்ளார்கள்”

ஷெய்க் அல் அல்பானி கூறுகிறார் : (இமாம் புஹாரி கூறுவது போல்) இந்த அறிவிப்புகளுக்கும் அந்த அறிவிப்புகளுக்கும் முரண்பாடு இல்லை. (அதாவது, உச்சிக்கு முன்னால் தொழுததாக வந்துள்ள ஹதீஸுக்கும் உச்சிக்குப் பின்னால் தொழுததாக வந்துள்ள ஹதீஸுக்கும் முரண்பாடு இல்லை). 

உச்சிக்கு முன்னால் தொழுவதையும் உச்சிக்குப் பின்னால் தொழுவதையும் ஸஹாபாக்கள் றஸூலுல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் றஸூலுல்லாஹ்வின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதற்காக சில சமயங்களில் அப்படியும் சில சமயங்களில் இப்படியும் செய்வார்கள்.  
 
(( صلى بنا عبد الله الجمعة ضحى، وقال خشيت عليكم الحر )) أخرجه ابن أبي شيبة

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் எங்களுக்கு லுஹா நேரத்தில் ஜும்ஆ தொழுவித்தார்கள். (ஏனெனில்) கடுமையான வெயிலை உங்களுக்கு நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். என அப்துல்லாஹ் இப்னு ஸலமா றஹிமஹுல்லாஹ் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: இப்னு அபீ ஷைபா)    

ஷெய்க் அல் அல்பானி கூறுகிறார் :
இந்த அறிவித்தலில் அப்துல்லாஹ் இப்னு ஸலமாவைத் தவிர ஏனைய அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பிக்கைக்குரியவர்கள். 

அப்துல்லாஹ் இப்னு ஸலமாவைப் பற்றி இப்னு ஹஜர் அவரது பத்ஹுல் பாரி என்ற நூலில் கூறுகையில், அவர் உண்மையானவர், ஆனால் அவர் முதிய வயதை அடைந்த போது மனனத்தில் குறைபாடுள்ளவராக இருந்தார் எனக் கூறினார்கள். 

இவ்வாறான தன்மையுள்ள அறிவிப்பாளரிடத்தில் அஞ்சப்படுவது என்னவெனில், அவர் இன்னுமொருவரிடமிருந்து பெற்ற அறிவிப்பை அறிவிப்பதில்தான். 

(ஆனால் இங்கு அப்துல்லாஹ் இப்னு ஸலாமா இன்னுமொருவரிடமிருந்து இதனை அறிவிக்கவில்லை, மாறாக) அவர் அவரது வாழ்வில் நேரடியே கண்டதையே அறிவிக்கிறார். நடைமுறையை கருத்தில் கொள்ளும் போது உச்சிக்குப் பின்னால் வழக்கமாக (ஜும்ஆவின்) தொழுகை நடைபெறுவதால் இவ்வறிவிப்பு நடைமுறைக்கு முரணாக போன்று தெரிகிறது.  

இங்கு அனைத்தையும் ஆராய்கையில் இந்த விடயத்தில் அப்துல்லாஹ் இப்னு ஸலாமாவின் மனனம் சரியானதாகும். இதில் சரியான முடிவு, இந்த அறிவிப்பு ஸஹீஹ் என்பதாகும். 

இதன் காரணமாகவே இமாம் அஹ்மத் அவரது கருத்துக்கு மேற்கூறிய அறிவிப்பை ஆதாரமாகக் கூறினார்.    அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் அவரது தந்தையான இமாம் அஹ்மதிடம் ஜும்ஆ தொழுகையின் நேரத்தைப் பற்றிக் கேட்டார். அதற்கு இமாம் அஹ்மத் உச்சிக்கு முன்னால் தொழுவதில் குறையில்லை எனக் கூறினார். அதற்கு ஆதாரமாக அப்துல்லாஹ் இப்னு ஸலாமாவிடமிருந்து அம்ர் இப்னு முர்ரா அறிவிப்பதாக, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் எங்களுக்கு லுஹா நேரத்தில் ஜும்ஆ தொழுவித்தார்கள் என்ற அறிவிப்பை கூறினார். 


இன்னும் பின்வரும் ஹதீஸையும் கூறினார் 

 ((كنا نصلي ونتغدى بعد الجمعة )) رواه البخاري 

நாங்கள் உச்சிக்கு முன்னால் ஜும்ஆ தொழுதோம். கைலூலா (முற்பகலில் சிறு தூக்கம் ) எடுத்தோம் என ஸஹ்ல் இப்னு ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.                           (ஆதாரம் : புகாரி) 
 
 عن سعيد بن سويد قال : (( صلى بنا معاوية الجمعة ضحى )) ، رواه ابن أبي شيبة عن عمرو بن مرة عنه  

முஆவியா எங்களுக்கு லுஹா நேரத்தில் ஜும்ஆ தொழுவித்தார். என ஸஈத் இப்னு ஸுவைத் றஹிமஹுல்லாஹ் அறிவிக்கிறார்கள்.  (ஆதாரம் : முஸன்னப் இப்னு அபீ ஷைபா) 

ஷெய்க் அல் அல்பானி கூறுகிறார் :   
மேற்கூறப்பட்ட அறிவிப்பின் அறிவிப்பாளரான ஸஈதைப் பற்றி அவரது நல்ல தரம் எதுவும் கூறப்படவில்லை. ஆனாலும், இப்னு ஹிப்பான் அவரது ஸிகாத் (நம்பிக்கைக்குரியவர்) என்ற நூலில் அவரது பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள்.  

 (( أن عماراً صلى بالناس الجمعة ، والناس فريقان : بعضهم يقول : زالت الشمس ، وبعضهم يقول : لم تزل )) ، رواه ابن أبي شيبة

அம்மார் மக்களுக்கு ஜும்ஆ தொழுவித்தார். மக்கள் இரு சாராராக இருந்தார்கள். ஒரு சாரார் சூரியன் உச்சிக்கு வந்து விட்டது எனக் கூற, இன்னுமொரு சாரார் சூரியன் உச்சிக்கு வரவில்லை எனக் கூறினார்கள். என பிலால் இப்னு அப்ஸி றஹிமஹுல்லாஹ் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் : முஸன்னப் இப்னு அபீ ஷைபா - ஸஹீஹ் ஸனத்)    

(( كنا نصلي مع علي الجمعة ، فأحياناً نجد فيئاً ، وأحياناً لا نجده )) ، رواه ابن أبي شيبة 

நாங்கள் அலியுடன் ஜும்ஆ தொழுவோம். சில சமயங்களில் எங்களுக்கு நிழல் கிடைக்கும். சில சமயங்களில் நிழல் கிடைப்பதில்லை. என அபீ ரஸீன் றஹிமஹ{ல்லாஹ் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் : இப்னு அபீ ஷைபா – இமாம் முஸ்லிமின் நிபந்தனையில் ஸஹீஹாக அமைகிறது)   ஷெய்க் அல் அல்பானி கூறுகிறார் :

இதுவரை கூறப்பட்ட ஆதாரங்கள், (ஜும்ஆவின்) தொழுகை உச்சிக்கு வருவதற்கு முன்னாலும் உச்சிக்கு வந்த பின்னாலும் தொழுவது ஷரீஅத் ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இது தெளிவாக உள்ளது.

இந்த ஹதீஸ்கள் மற்றும் ஆதார்களின் அடிப்படையில்தான் சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்னால் ஜும்ஆ தொழுகை அனுமதிக்கப்பட்டது என்ற முடிவை இமாம் அஹ்மத் கொண்டிருந்தார்கள். உண்மையும் அதுதான். 

இந்த விடயத்தை இங்கு விரிவாக சொல்வதற்கு வாய்ப்பில்லை. இது பற்றி விரிவாகப் பார்க்க விரும்புபவர்கள் இமாம் முஹம்மது அலி ஷவ்கானி எழுதிய நய்லுல் அவ்தார் என்ற நூலைப் பார்க்கலாம்.

  
கைகளை ஊன்றி எழுவது நபிவழியா

தொழுகையில் ஸஜ்தாவில்இருந்து எழும் போது சிலர் இரண்டு கைகளையும் மாவு பிசைவது போல் வைத்து ஊன்றிஎழுவதைக் காண்கிறோம். இது தான் நபிவழி.


இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகையில் எழும் போது மாவுபிசைவது போல் கைகளை ஊன்றி எழுந்ததை நான் பார்த்தேன். இது குறித்து அவரிடம் நான்கேட்ட போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்துள்ளேன் என்றுவிடையளித்தார்கள் என அஸ்ரக் பின் கைஸ் என்பார் அறிவிக்கிறார் என்று ஹதீஸ்உள்ளது.z


இப்ராஹீம் அல்ஹர்பீ அவர்களின் கரீபுல் ஹதீஸ் என்றநூலில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

     1- இப்னு உமர்
     2- அஸ்ரக் பின் கைஸ்
     3- அதிய்யா பின் கைஸ்
     4- ஹைஸம்
     5- யூனுஸ் பின் புகைர்
     6- உபைதுல்லாஹ் பின் உமர்

என்ற அறிவிப்பாளர் வரிசைப்படி இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முதல் அறிவிப்பாளர் நபித் தோழர் என்பதால் அதில்விமர்சனம் இல்லை.

இரண்டாவது மற்றும் மூன்றாவது அறிவிப்பாளர்கள்ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள்.

நான்காவது அறிவிப்பாளர் ஹைஸம் என்று தந்தையின் பெயர்குறிப்பிடாமல் கூறப்பட்டவர்டமாஸ்கஸ் நகரைச் சேர்ந்தஇம்ரான் என்பவரின் மகனான ஹைஸம் ஆவார்.

இவரை இப்னு ஹிப்பான் நம்பகமானவர் என்றுகூறியுள்ளார்.

இவர் வழியாக ஹதீஸ்களை அறிவித்தவர்கள் யார் என்றுதேடிப்பார்க்கும் போது நான்கு நம்பகமானவர்கள் இவர் வழியாக பல ஹதீஸ்களைஅறிவித்துள்ளனர்.

எனவே இவர் விஷயத்தில் மன நிறைவுஏற்படுகிறது.
எனவே இந்த ஹதீஸ் சரியான ஹதீஸ் தான்... இமாம் அல்பானி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~