இஸ்லாத்தில் பிறை காணுதலும் அந்நிய வழிமுறைகளும்

நாம் அல்லாஹ்வின் அருளால் பிறை தொடர்பான தெளிவுபடுத்தல்களை பல தலைப்புகளில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எத்தி வைத்திருக்கிறோம். இத்தலைப்புகள் மீதான ஆழமான விளக்கங்கள் கொடுப்பதும் அதில் வருகின்ற சர்ச்சைகளுக்குப் பதிலளிப்பதும் தெளிவுபடுத்துவதும் எமது முக்கிய பங்காக இருந்தது. இவ்வருடம் (2008 இல்) பிறை காணுதல் தொடர்பாக இச்சமூகத்தில் கையாளப்படுகின்ற அந்நிய வழிமுறைகளையும் இஸ்லாமிய வழிமுறையையும் பிரித்துக் காட்ட வேண்டும் என்ற எமது நோக்கத்தினை செயற்படுத்துவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு அருள் புரிந்திருக்கிறான.;

பிறை தொடர்பாக ஏனைய கொள்கையைச் சுமந்தவர்கள் பொது மக்கள் மத்தியில் பலவாறான விளக்கங்களைப் பரப்பி வருகிறார்கள். அதில் முக்கியமாக ‘அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா’ என்ற அமைப்பு பிறை சம்பந்தமாக மார்க்கத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கி விட்டது. எனது இந்த உரை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும் பிறை தொடர்பாக ஏனைய கருத்துகளைச் சுமந்தவர்களுக்கும் இன்னும் பிறை காணுதலில் இஸ்லாமிய மார்க்கத்தின் வழிமுறையைத் தவிர்ந்து கொண்டு யாரெல்லாம் ஏனைய வழிமுறையைக் கையாள்கிறார்களோ  அத்தகையவர்களுக்கும் ஒரு பதிலாகவும் இருக்கும்.

எமது சமூகத்தில் இன்று மார்க்க விடயங்களில் அந்நிய வழிமுறைகளைக் கையாள்பவர்கள் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக சமூகத்தினுள் பல சந்தேகங்களை உருவாக்கி விட்டார்கள். அல்லாஹு தஆலா எமக்கு வழிகாட்டியாக இறக்கி வைத்த அல் குர்ஆனிலும் ஸுன்னாவிலும் அவ்வாறான சந்தேகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பதில்களை சிறப்பாகப் பெற்றுக்கொள்ள முடியும். அனைத்து விடயங்களுக்கும் நிச்சயமாக அதில்தான் தீர்விருக்கிறது. இந்த இஸ்லாமிய சமூகத்தில் பல கூட்டங்கள் தங்கள் மார்க்கத்தை அந்நிய வழிமுறைகளில் பின்பற்றுவதற்கு முயற்சி செய்வதைக் காண முடிகிறது. பிறை விடயத்தில் மட்டுமின்றி ஏனைய விடயங்களிலும் அந்நிய வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

எந்தளவுக்கென்றால் இரட்சகனான அல்லாஹ்வை விளங்குவதற்குக் கூட பல்ஸபா, மன்திக், இல்முல்கலாம் போன்ற அந்நிய மார்க்கங்களின் அடிப்படையில் இஸ்லாமிய மத்ரஸாக்கள் என்று சொல்லப்படுகின்ற இடங்களில் போதிக்கப்படுகின்றன. இந்தக் கூட்டங்கள் அல்லாஹ்வை விளங்கும் விடயத்திலும் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் விளங்கும் விடயத்திலும் இரட்சகன் யாரென்று அறிந்து கொள்ளும் விடயத்திலும் அந்நியர்களின் கல்வியைக் கையாள்பவர்களாகவும் அதனைத் தவிர்ந்து கொள்ளாதவர்களாகவுமே இருக்கிறார்கள். இந்த அடிப்படையான காரணத்தினால் இன்று எமது சமூகம் சத்தியமான மார்க்கத்தை விளங்குவதில் இஸ்லாம் காட்டித் தந்த வழிமுறைகளை அறியாத சமூகமாக இருக்கிறது.

இன்னும் மார்க்கத்தின் முக்கிய அம்சங்களான கொள்கை, பிக்ஹ், வரலாறு, உஸுல் ஆகிய அனைத்திலும் இந்த சமூகம் அல்லாஹ்வும் அவனது து}தரும் காட்டித் தந்த வழிமுறையைத் தவிர்ந்து கொண்டு ஏனைய வழிமுறைகளில் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்ற முயற்சி செய்கின்ற சமூகமாக இருக்கிறது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான போக்கின் விளைவாக ஏற்பட்டிருப்பது என்னவெனில் அல்குர்ஆனும் ஸுன்னாவும் எதை நோக்கிக் கூறுகிறதோ அதனை அடையாத சமூகமாக அது மாறிவிட்டது. இன்னும் மனிதனுடைய ஏனைய நடவடிக்கையான திருமணம், வியாபாரம், ஆடை போன்றவற்றைக் கவனித்தால் அதிலும் கூட அல்லாஹ்வும் அவனது தூதரும் காடடித் தராத வழிமுறைகளே கையாளப்படுகின்றன.

இதன் காரணம் இந்த சமூகம் தனது செயற்பாட்டின் அடிப்படையாக அல் கிதாப் அஸ்ஸுன்னா ஆகிய இரண்டையும் கையாண்டு அதன்படி செயற்படும் சமூகமாக இல்லாதிப்பதாகும். அந்நிய வழிமுறைகளான மன்திக், பல்ஸபா, இல்முல்கலாம் என்பதை மட்டுமின்றி அந்நியர்களான காபிர்களின் விளக்கங்களும் அவர்களுடைய அடிப்படைகளும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவசியமானதொன்றாக மாறிவிட்டதால் இன்று இஸ்லாத்தின் பெயரில் இஸ்லாம் சொல்லாத கொள்கை, இஸ்லாம் சொல்லாத பிக்ஹ், இஸ்லாம் சொல்லாத வாழ்க்கை, இஸ்லாம் சொல்லாத வழிமுறைகளெல்லாம் இன்று இஸ்லாத்தினுள் காண முடிகிறது. இது இவ்வாறு இருப்பினும் இன்றைய தலைப்பில் பிறையைப் பற்றிப் பேசவேண்டியிருப்பதால் அது தொடர்பான விடயங்களை மட்டும் உங்களுக்கு எத்தி வைக்க ஆசைப்படுகிறேன். இன்று நான் எடுத்துக்கொண்ட தலைப்பு “இஸ்லாத்தில் பிறை காணுதலும் அந்நிய வழிமுறைகளும்” 

எமது மார்க்கமான இஸ்லாத்துக்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் பிறை என்ற விடயத்தில் முற்றிலும் வேறுபட்ட அடிப்படை காணப்படுகிறதென்பதை இங்கு நாம் உறுதியாகக் கூற முடியும். இஸ்லாத்தலே மட்டும்தான் நாம் பிறையை ஹிலால் என்ற வார்த்தையில் அழைக்கின்றோம். ஹிலால் என்ற வார்த்தைக்குரிய வரைவிலக்கணம் ஏனைய மார்க்கங்களில் பிறை என்பதற்குள்ள வரைவிலக்கணத்திலிருந்து முற்றிலும் மாற்றமானதாகும். பூமியில் நின்று கண்களால் முதல் பிறையைக் கண்டு அதனைக் கண்டதாக சாட்சியம் கூறும்போது அவ்வாறு காணப்பட்ட முதல் பிறையே இஸ்லாத்தில் ஹிலால் எனப்படுகிறது. இந்த வழிமுறை ஏனைய மார்க்கங்களைச் சுமந்த சமூகங்களிடம் இல்லை.

அவர்களிடம் கேட்டால் பிறை வானத்தில் தோன்றும் என்றுதான் சொல்வார்கள். ஆனால் இவர்கள் கையாளும் விஞ்ஞானம் கூறுவது என்னவென்றால் வானத்தில் சந்திரனின் நிலை எப்போதுமே அதன் அரைவாசி இருளாகவும் மற்றைய பகுதி வெளிச்சமாகவும் இருக்கும். இந்நிலை மாறுவதில்லை. நாம் பூமியிலிருந்து பார்க்கும் போதுதான் அது எமக்கு முதலாம் பிறையென்றும் இரண்டாம் பிறையென்றும் தோற்றமளிக்கிறது. இது பூமியிலிருந்து பார்க்கும் போது மட்டுமே சந்திரன் இவ்வாறு தோற்றமளிக்கிறது. ஆனால் வானத்தில் அதன் நிலை ஒன்றுதான்.

அது பாதி இருளாகவும் பாதி ஒளியாகவும் இருக்கும். இவ்வாறுதான் அவர்களுடைய விஞ்ஞானம் கூறுகிறது. எனவேதான் ஏனைய வழிமுறையைக் கையாண்டு பிறையைக் காண்பதற்கும் இஸ்லாமிய வழிமுறையில் பிறை காண்பதற்கும் வேறுபாடு காணப்படுகிறது. அந்நிய மார்க்கத்தில் அவர்கள் எந்த வழிமுறையிலேனும் பிறையென்பதற்கு விளக்கம் கொடுத்து இதுதான் பிறையென்று சொல்ல முடியும். ஆனால் இஸ்லாத்தலே பூமியில் நின்று கண்ணால் காணவில்லையென்றால் அதனைப் பிறையின் இஸ்லாமிய வார்த்தைப் பிரயோகமான ஹிலால் என்று அர்த்தம் கொடுக்க முடியாது.

ஷஹாதத் கூறிய முஸ்லிம் பூமியில் நின்று கண்களால் காணாத ஒன்றை இஸ்லாத்தின் ஹிலாலின் வரைவிலக்கணத்தின் படி ஹிலாலென்று ஒருக்காலும் சொல்ல முடியாது. என்றாலும் ஏனைய மார்க்கங்களில் பிறையைக் கண்களால் காண வேண்டுமென்றோ அல்லது பூமியிலிருந்துதான் அதனைக் காண வேண்டுமென்றோ ஒரு நிபந்தனையோ அவசியமோ இல்லை. அவர்களைப் பொறுத்தவரை எந்தவொரு வழிமுறையிலேனும் பிறையைக் கண்டுவிட்டார்களாயின் அதனை அவர்கள் புதிய பிறையென்று சொல்லி விடுவார்கள். எனவேதான் முதலில் நாம் பிறையென்ற விடயத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஹிலால் எனும் பிறையை பூமியிலிருந்து கண்களால் நேரடியே காண வேண்டும். அவ்வாறு நேரடியே காணவில்லையென்றால் அது ஹிலால் அல்ல. இஸ்லாத்தின் வரைவிலக்கணத்துக்குட்பட்ட பிறையல்ல. ஹிலால் என்ற வார்த்தை அறபியில் "அஹல்ல " என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். ஒருவர் ஒரு விடயத்தைக் கண்ணால் கண்டு நான் கண்டேன் என்று அறிவித்தார் என்பதே அஹல்ல என்பதன் பொருளாகும். எனவே அவ்வாறு ஒருவர் அல்லது ஒரு சமூகம் பூமியில் நின்று தங்கள் கண்களால் பிறையைக் கண்டு அதனைக் கண்டதாக அறிவிக்கும் போதுதான் அது ஹிலால் என்பதன் வரைவிலக்கணத்திற்கு அமைவான பிறையென்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. இதனடிப்படையில் உறுதியாகக் கூறக் கூடியது என்னவென்றால் எமது மார்க்கத்தில் பிறையென்பது மனித சமூகத்திலே ஷஹாதத் கூறிய முஸ்லிம்களில் எவரும் காணவில்லையென்றால் அதனைப் பிறையென்று இஸ்லாமிய மார்க்கம் ஏற்றுக் கொள்ளாது.

இந்த நிபந்தனை ஏனைய எந்த மார்க்கங்களிலும் இல்லை. அந்நிய சமூகங்களைப் பொறுத்தவரை அவர்களுடைய வானவியல் கல்வியின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டு விட்டால் அது அவர்களிடத்தில் முதற் பிறையாகவோ அல்லது புதிய பிறையாகவோ கருதப்படலாம். எனவே பிறை என்ற பொதுவான பதத்திற்கும் ஹிலால் என்பதற்கும் வரைவிலக்கண ரீதியாக வேறுபாடுகள் இருக்கின்றன. தமிழ் மொழியில் பிறையென்று சொன்னால் அது வெருமனே வானில் தோன்றுவதைக் கூறுவதாகும். இது ஹிலாலோடு தொடர்புடையதல்ல. ஹிலால் என்பதை ஒரு வரைவிலக்கணத்தோடுதான் சொல்ல முடியும். மாறாக அதனை ஒரு தனி சொல்லில் மொழி பெயர்க்க முடியாது. தமிழில் பிறையென்று சொல்லப்படுவது போல ஆங்கிலத்தில் அதனை "க்ரஸன்ட்"  என்று அழைப்பார்கள். ஆனால் க்ரஸன்ட் எனப்படுவது ஹிலாலை விடவும் அளவில் பெரியதாகும். க்ரஸன்ட் அல்லது பிறை என்பது ஹிலாலை விட பல விடயங்களில் வேறுபடுகிறது. அவற்றில் முக்கியமாக அந்நிய மார்க்கங்களில் பிறையென்பது மாதத்தினை தொடங்கி வைக்கும் ஒரு விடயமாகக் கருதப்படுவதில்லை. இஸ்லாமிய மார்க்கம்தான் பிறையைக் கொண்டு மாதத்தினை ஆரம்பிக்கிறது. இது பிறை காணும் விடயத்தில் முதலாவது அடிப்படை அம்சமாகும்.

ஹிலால் எனப்படுவது பூமியிலிருந்து ஒரு சமூகம் அதனைக் கண்களால் காண வேண்டும். அதிலும் ஷஹாதத் சொன்னவர்கள் மாத்திரமே. ஷஹாதத் சொல்லாதவன் அந்த ஹிலாலைக் கண்டாலும் அது சாட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு ஆதாரமாக அப்துல்லாஹ் இப்னு உமர் (றழியல்லாஹுஅன்ஹு  அறிவிக்கும் ஸஹீஹான ஹதீஸ் அபூதாவூதில் பதிவாகியிருக்கிறது.

ஒருவர் நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களிடம் தான் பிறையைக் கண்டதாகக் கூறிய வேளையில் அந்த மனிதரிடம் நபியவர்கள் நீர் வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லையென்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதரென்றும் சாட்சியம் கூறுகிறீரா என்று கேட்டார்கள்.

எனவே இந்த ஹதீஸின் மூலம் நாம் அறியக் கூடியது என்னவென்றால் நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறை காணுதலின் நிபந்தனையாக முதலில் எடுத்து வைக்கும் விடயம் சாட்சி சொல்பவன் ஷஹாதத் சொன்ன முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பதாகும். இந்த ஹதீஸ் அறிவித்தலில் சிலர் குறை கண்டு அறிவிப்பாளர் தொடரைக் குறையாகக் காட்டினாலும் ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல் அல்பானீ (றஹீமஹுல்லாஹ்) அவரது ஸில்ஸிலதுல் ஹதீஸ் ஸஹீஹா வில் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளார்கள். அதே போன்று இமாம் அபூ ஜஅபர் அத் தஹாவீ (றஹீமஹுல்லாஹ்) அவரது ஷரஹ் முஷ்கில் ஆஸார் என்ற நு}லில் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் கொண்டதாக உள்ளது. எனவே இவைகள் அனைத்தினதும் அடிப்படை என்னவென்றால் பூமியில் மனிதர்கள் நின்று கண்ணால் காண்பது மட்டுமின்றி அதனைக் காண்பவர் ஷஹாதத் சொன்ன முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பதாகும். இதுவே அதன் நிபந்தனையுமாகும். 

ஷஹாதத் சொன்ன ஒரு முஸ்லிம் பூமியில் நின்றவாறு புதிய பிறையைக் கண்டு விட்டானென்றால் அதனை நாம் ஹிலால் என்று சொல்வோம். எனவே; இன்னுமொரு மார்க்கத்தில் பிறை காணும் விடயத்தில் இப்படியானதொரு நிபந்தனை இருப்பதாக யாரேனும் சொல்ல முடியுமா? நிச்சயமாக அவ்வாறு இருக்க முடியாது. ஏனைய மார்க்கங்களில் பிறையென்பது வெறுமனே வானத்தில் தோன்றுவதாகச் சொல்லப்படுமே தவிர எங்கள் மார்க்கத்தைப் போன்று நிபந்தனைகள் எதுவும் அவைகளில் கிடையாது. ஏனைய மதங்களில் அவர்கள் பிறையினை வானசாஸ்திரக் கல்வியின் அடிப்படையில் காகிதத்தில் கணக்கிட்டு இந்த நாளில் பிறை தோன்றுமென முடிவு செய்வார்கள். இதனை அறபியில் "அலா ஹிஸாபுன் நுஜும்" என்று அழைப்பார்கள். அதற்கு நட்சத்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் கணக்கிடுவது என்று பொருள். நட்சத்திரத்தின் அடிப்படையில் உலகில் வணக்கங்களை அமைத்துக் கொள்ளுகின்ற கூட்டங்கள் அனைத்தும் பிறையைப் பார்ப்பதற்கென்று நவீன விஞ்ஞானத்தின் அடிப்படையிலோ அல்லது தொலை நோக்கிகளைப் பயன்படுத்தித்தான் பிறை தோன்றுவதைக் கணிப்பிடுகிறார்களெனச் சொல்ல முடியாது. ஏனென்றால் நட்சத்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் கணக்கிடுபவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் காலத்திலும் அதற்கு முன்னும் கூட இருந்திருக்கிறார்கள்.

இவ்வாறு நட்சட்திரத்தினைக் கொண்டு கணக்கிடுகின்றவர்களில்  மஜுஸிகளும் (நெருப்பு வணங்கிகள்) இந்துக்களும்; குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வாறு அவர்களின் மார்க்கங்களில் பிறையைக் கணக்கிடும் வழிமுறைகள் பல காணப்படுகின்றன. இதற்கு மாறாக பிறை காண்பதில் எமது வழிமுறை என்ன? அது ஷஹாதத் சொன்ன முஸ்லிம் பூமியிலிருந்து வானத்தில் முதல் பிறையைக் கண்டு அதனைக் கண்டதாகச் சாட்சி சொல்ல வேண்டும். இதுதான் புதிய பிறையைக் காண்பதில் எமது மார்க்கத்தின் அடிப்படை. இதனைத் தவிரவுள்ள ஏனைய வழிமுறைகள் அனைத்தும் அந்நிய மார்க்கங்களின் வழிமுறைகளாகும். 

பிறை விடயத்தில் நாம் விளங்க வேண்டிய இன்னுமொரு முக்கிய அம்சம் எமது மார்க்கத்தில் பிறையென்ற விடயம் எமது வணக்கத்தோடு தொடர்புடைய ஒன்றாகும். ஏனைய மார்க்கங்களைப் பொருத்தவரை பிறை என்பது அவர்களின் மார்க்கத்துடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம் தொடர்பற்றதாகவும் இருக்கலாம். ஆனால் எம்மைப் பொருத்த வரை வருடாவருடம் எம்மைத் தூய்மைப் படுத்திக் கொள்வதற்கும் அல்லாஹ்விடம் இறையச்சமுள்ளவர்களாக மனிதர்களை மாற்றுவதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள ரமழான் மாதம் ஆரம்பிப்பதைத் தெரிந்து கொள்வதற்கும் இன்னும் அதே போன்று ஏனைய மாதங்களில் நோன்பு நோற்பதற்கும் அதன் தினத்தை அறிந்து கொள்வதற்கும் பிறையென்று நாம் அழைக்கும் ஹிலால் அவசியமான ஒன்றாக இருக்கிறது. எமது சமூகம் எந்தளவுக்கு ஹிலால் என்பதன் சரியான விளக்கத்தைப் புரிந்திருக்குமோ அந்தளவுக்கு தமது மார்க்க விடயங்களில் தரமாக இருக்க முடியும். அதே போன்று யாரெல்லாம் பிறை விடயத்தில் அந்நிய வழிமுறையினைக் கையாளாமல் ஒரு முடிவினைக் காண முடியாதெனக் குறைபாடான ஈமானோடு கூறுகின்றார்களோ அல்லது அந்நிய வழிமுறைகளும் எமக்குத் தேவையெனக் கூறுகின்றார்களோ அவர்களின் வாதத்தின் அடிப்படையில் மனிதன் தனது முயற்சியால் பிறையைத் தேடுவதை விட இன்று முன்னேற்றம் கண்டுள்ள வானவியல் கல்வியின் மூலம் சிறப்பாக அந்தப் பிறையைத் தேடிப் பிடித்து விட முடியும் என்றுதான் கூற வேண்டும்.

அதன் கருத்து என்னவென்றால் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் நோன்புகளை விடவும்  ஸஹாபாக்களின் நோன்புகளை விடவும் அவர்களின் பெருநாள் தொழுகைகளை விடவும் இன்று நாங்கள் நோற்கும் நோன்புகளும் பெருநாள் தொழுகைகளும் சிறப்பானவை. அவர்களைவிட சிறப்பான ஒன்றைத்தான் நாம் கண்டு பிடித்திருக்கிறோம் என்றுதான் அவர்கள் கூறுவது அர்த்தப்படுகிறது. இந்த வார்த்தைகள் ஷஹாதத் சொன்ன முஸ்லிம் சொல்ல முடியாத வார்த்தைகளாகும். இவர்களிடம் இருக்கும் அறிவீனமும் மடமைத் தன்மைகளும் இவர்களை இவ்வாறான வார்த்தைகளைக் கூற வைத்து விடுகிறது. எனவேதான் இன்றிருக்கும் வானவியல் கல்வி தரமானதென இவர்கள் வாதிடுகிறார்கள். வானவியல் கல்வியைப் பொருத்த வரை அதில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுகளின் முடிவுகளைக் கூறும் போது அவர்களின் கணிப்பும் அளவும் மிகச் சரியாக இன்னின்ன அளவு இருக்கும் என்று உறுதியுடன் கூறுவார்கள்.

அதற்கு உதாரணமாக சந்திரன் சூரியன் போன்றவை செக்கனுக்கு செல்லும் வேகம் தூரம் போன்ற அளவுகளைக் கூறலாம். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவருடைய முடிவை மற்றவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஒருவருடைய அளவீடும் ஆராய்ச்சி முடிவுகளும் மற்றவருடைய முடிவுகளுடன் வித்தியாசப்பட்டு மோதிக் கொள்கிறது. அவர்கள் மத்தியிலேயே ஒரு தீர்க்கமான முடிவில்லாத நிலையில் முரண்படுகிறார்கள். அவர்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகள் செக்கனுக்கு எவ்வளவு வேகத்தில் செல்கிறது நிமிடத்தில் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதில் மட்டுமல்ல. அவர்கள் மத்தியில் எத்தனையோ பிரச்சினைகளும் முரண்பாடுகளும் இருக்கின்றன. அந்நிய மர்க்கத்தில் இருப்பவர்கள் தாங்கள் அனைவரும் ஒன்றுபோல காட்டிக் கொண்டாலும் அவர்களுக்குள் எத்தனையோ பிரிவுகளாகப் பிளவுபட்டிருக்கிறார்கள்.

அந்நியர்களின் இந்நிலையைத் தெரிந்திருந்தும் அவர்களின் ஆராய்ச்சியை மதித்த எமது முஸ்லிம் சமூகம் கண்களால் கண்ட பிறைக்கு ஆயிரம் குறைகள் கூறி அதனை ஏற்க மறுக்கின்றது. அந்நியர்களின் வழிமுறையைப் பின்பற்ற ஆரம்பித்ததினால் கண்களால் காணும் பிறையென்பது சந்தேகத்துக்குரியதாக மாறிவிட்டது. அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத அந்நிய வழிமுறையைக் கையாள்வது மட்டுமின்றி அந்த வழிமுறையின் மூலம் பெறப்பட்ட முடிவுகளை “பிழையில்லாதது”  “மிகச் சரியானது” என்று இந்த சமூகம் கூறுவதற்கான காரணம் முஸ்லிம்கள் இஸ்லாமியக் கல்வியைச் சரியாகப் பெற்றுக் கொள்ளாததேயாகும். இதனை விடவும் பரிதாபம் என்னவென்றால் இந்த முஸ்லிம் சமூகம் அந்நிய கலாச்சாரத்தில் வளர்ந்து அதிலேயே வாழ்ந்து கொண்டு அதனைச் சரிகாண்பதாகும். 

இஸ்லாத்திலே பிறைகாணுதல் என்ற விடயத்தைப் பற்றிப் பேசும் இடத்தில் இஸ்லாமிய சமூகத்தில் உருவாகியிருக்கும் குழப்பங்களையும் சர்ச்சைகளையும் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. இந்த இஸ்லாமிய உம்மத்தில் அல்லாஹ்வின் வேதத்தையும் அல்லாஹ்வின் து}தருடைய வழிமுறையையும் சரியாக விளங்காத மக்கள் இருக்கும் காரணத்தினால் அந்நியர்களின் வழிமுறைகளிலுள்ள அனைத்து அநியாயங்களும் எமது மார்க்கத்தினுள்ளும் புகுந்து விட்டன. இவ்வாறு புகுந்திருப்பது பிறை விடயத்தில் மடடுமல்ல. மாறாக தொழுகையிலும் கொள்கையிலும் இன்னும் மார்க்கத்தின் பல பகுதிகளிலும் அந்நிய வழிமுறைகளின் பாதிப்புகள் பல உள்ளன. இதில் எதனை எடுத்தாலும் அதற்குள் பித்அத்கள் நுழைந்ததன் காரணம் அந்நிய வழிமுறைகள் எமது மார்க்கத்தினுள் ஊடுருவியதுதான் என்பதை தெட்டத் தெளிவாக நாம் நிரூபிக்க முடியும். இதே காரணம்தான் பிறை விடயத்திலும் புகுந்து இன்று இஸ்லாமிய சமூகத்தை "வஹ்ததுல் மதாலிஹ்" என்றும் "இஹ்திலாபுல் மதாலிஹ்" என்றும் இரு பிரிவாகப் பிரித்து விட்டது.

பிறை விடயத்தில் இஸ்லாமிய உம்மத் அடிப்படையாக இரு பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. இவற்றில் வஹ்ததுல் மதாலிஹ் என்ற கருத்தைச் சுமந்த கூட்டம் எங்கு பிறை தென்பட்டாலும் அதுதான் முழு உலகிற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. இதே நிலைப்பாட்டில்தான் ஸஹாபாக்களும், தாபிஈன்களும், தபஉ தாபிஈன்களும் இவர்களின் அடிச்சுவட்டில் அன்று முதல் இன்று வரை பின்தொடர்ந்து வருகின்ற பெரும்பான்மையான இமாம்களும் உலமாக்களும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு கல்வியை மறைக்காது எத்தி வைக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதால் ஒரு உண்மையைச் சொல்வதற்கு நான் மறந்து விடக் கூடாது. மேலே சொன்ன "வஹ்ததுல் மதாலிஹ்" உடைய கருத்தைச் சுமந்தவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களில் பெரும் கல்வியைச் சுமந்த உலமாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த உண்மையை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இவ்வாறான உலமாக்கள் இந்த நிலைப்பாட்டில் இருப்பதன் காரணம் இவர்கள் மத்ஹப்களில் சிக்கியதேயாகும்.

இவ்வாறு இவர்கள் சிக்காதிருந்திருப்பின் நிச்சயமாக முரண்பட்ட  கருத்துக்களைக் கூறியிருக்க மாட்டார்கள். ஏனைன்றால் இவர்களில் பலர் பெரும் கல்வியைச் சுமந்த உலமாக்களாயிருந்தவர்கள். இருப்பினும் மத்ஹப்களில் மாட்டியதால் இஹ்திலாபுல் மதாலிஹ் உடைய கருத்தைச் சுமந்த உலமாக்களாக அமைந்துவிட்டார்கள். இவர்கள் ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு திசையில் வாழ்பவர்களும் வெவ்வேறாகப் பிறையைப் பார்க்க வேண்டுமென்று கூறுகிறார்கள். அதற்குள்ளும் பல கருத்து வேறுபாடுகள் இருக்கிறன. இந்த நிலைப்பாட்டில் இருக்கும் இவர்களுக்கு மத்தியில் எந்த அடிப்படையில் பிரதேச ரீதியாகப் பிறை பார்க்க வேண்டுமென்பதில் பல கருத்துடையவர்கள் காணப்படுகிறார்கள். இவர்களில் சிலர் சூரியன் உதிக்கும் அடிப்படையில் பூமி எவ்வாறு பிரிக்கப்படுகிறதோ அந்த அடிப்படையில் பிரதேச ரீதியாகப் பிறை பார்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனை அலா மத்லி அஷ்ஷம்ஸ் என்று அழைக்கப்படும். இவர்களில் இன்னும் சிலர் ஒரு பிரயாணியுடைய பயண தூரத்தின் அடிப்படையில் வேறுபடும் பிரதேச எல்லையின் அடிப்படையில் பிறையைப் பார்க்க வேண்டுமென்று சொல்கிறார்கள். இதனை அலா மஸாபதில் முஸாபிர் என்று அழைக்கப்படும்.

இவ்வாறு "இஹ்திலாபுல் மதாலிஹ்" உடைய கருத்தைச் சேர்ந்தவர்களில் பலரும் பல விதமான காரணங்களைக் காட்டினார்களே தவிர குர்ஆனினதும் ஸுன்னாவினதும் அடிப்படையில் முஸ்லிம்கள் எவ்வாறு பிறை காண வேண்டுமென்பதை எடுத்துக் காட்டவில்லை. இவர்கள் கையாண்ட விடயங்களான சூரியன் உதிக்கும் அடிப்படையும் பிரயாணியின் பயண தூர அடிப்படையும் பிறை காணும் விடயத்தோடு சம்பந்தமற்றவைகளாகும். இன்னும் இவர்கள் பிரதேச ரீதியாகப் பிறை பிரித்துப் பார்க்கப்பட வேண்டுமென்பதற்கு குர்ஆனிலிருந்தும் ஸுன்னாவிலிருந்தும் ஆதாரங்களை எடுத்துக் காட்ட வில்லை. வரலாற்றில் முஸ்லிம் இமாம்கள், உலமாக்கள் போன்றவர்கள் மத்தியில்  "வஹ்ததுல் மதாலிஹ்", "இஹ்திலாபுல் மதாலிஹ்" ஆகிய இரு அடிப்படைகளில்தான் வேறுபாடு காணப்படுகின்றது. வஹ்ததுல் மதாலிஹ் என்ற கருத்தில் உள்ளவர்கள் எங்கு பிறை காணப்பட்டாலும் முஸ்லிம்கள் அதனை ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். 

இமாம் அபூ ஸகரிய்யா யஹ்யா இப்னு ஷரப் நவவி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாபிஈ மத்ஹபின் பெரும் இமாம்களில் ஒருவராக இருந்தார். அஷ்அரி கொள்கையில் இருந்த இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) ஷாபிஈ மத்ஹபை வளர்த்த இமாம்களில் ஒருவராவார். முஹத்தப் என்ற நு}லுக்கு விளக்கமாக எழுதப்பட்ட  ஷாபிஈ மத்ஹபின் ஓர் பிக்ஹ் நு}லான மஜ்மூஃ என்ற நூலில் ஒவ்வொரு நாடும் அவரவர் பிறையினையே பின்பற்ற வேண்டும் என்று கூறும் இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய  ஹதீஸ்களுக்கு விளக்கம் கூறிய பின் அவர் கூறுவதாவது:

“எங்கள் ஷாபிஈ மத்ஹபில் ஒரு வகுப்பினர் எங்கு பிறை தென்பட்டாலும் அதனை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். நானும் அதே கருத்திலேயே இருக்கிறேன்.”

இவ்வாறு பிறை விடயத்தில் தனது நிலைப்பாட்டை இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார். 

இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) ஸஹீஹ் முஸ்லிமில் வருகின்ற குரைப் - இப்னு அப்பாஸ் ஆகியோரின் பிறை தொடர்பாக வரும் ஸதீஸிற்கு தலைப்பிடும் போது ஒவ்வொறு நாட்டவருக்கும் அவரவருடைய காணுதல் -ஏனையவர்களுடைய காணுதலை ஏற்காதிருப்பது என்று தலைப்பிடுகிறார். இமாம் ஸுயூதி (றஹிமஹுலாஹ்) ,இமாம் ஸுப்கி (றஹிமஹ{ல்லாஹ்), இமாம் ஷாபிஈ (றஹிமஹ{ல்லாஹ்) போன்ற இமாம்கள் சர்வதேச பிறைக்கு எதிரான கருத்துடையவர்களென்பதை நாம் அறியாதவர்களல்ல. அதே போன்று பிற்காலத்தில் வந்த அறிஞர்களான ஸித்தீக் ஹஸன் ஹான் (றஹிமஹுல்லாஹ்), முஹம்மத் அலி ஷவ்கானி (றஹிமஹுல்லாஹ்), ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானீ (றஹிமஹுல்லாஹ்),  ஷெய்க் அப்துர்ரஹ்மான் முபாரக்பூரி (றஹிமஹுல்லாஹ்)  போன்ற உலமாக்கள் சர்வதேச பிறை பற்றிய தெளிவையும் விளக்கங்களையும்; கொடுத்து நாட்டுக்கு நாடு பிறை காணுதல் விடயமான வாதங்களுக்கு மறுப்பாக பதில் கொடுத்திருப்பதையும் நாம் மறைக்க முடியாது.

எந்த வாதங்களையெல்லாம் இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) அவரது மஜ்மூஃ என்ற நு}லிலே நாட்டுக்கு நாடு பிறை காணப்பட வேண்டுமென்பதற்கு முன்வைத்தாரோ அந்த அனைத்து வாதங்களுக்கும் இமாம் அபுல் அப்பாஸ் அஹ்மத் இப்னு அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா அல் ஹர்ரானி (றஹிமஹுல்லாஹ்) அவருடைய மஜ்மூஃ பதாவா என்ற நு}லிலே பதில் கொடுத்தார். குரைப் - இப்னு அப்பாஸ் சம்பந்தமான ஹதீஸிலிருந்து பிக்ஹ் உலமாக்கள் என்னென்ன சர்ச்சைகளையெல்லாம்  ஏற்படுத்தினார்களோ அவையனைத்துக்கும் இமாம் முஹம்மத் இப்னு அலி ஷவ்கானி (றஹிமஹுல்லாஹ்) தனது நைலுல் அவ்தார் ஷரஹ் முன்தகில் அஹ்பார் என்ற நு}லில் பதில் கொடுத்தார்.

அதன் பின் இமாம் முஹம்மத் இப்னு அலி ஷவ்கானி (றஹிமஹுல்லாஹ்) கொடுத்த அதே விளக்கத்தை இமாம் அப்துர்ரஹ்மான் முபாரக்பூரி (றஹிமஹுல்லாஹ்) அவருடைய துஹ்வதுல் அஹ்வதி ஷரஹ் ஸுனன் திர்மிதி என்ற நு}லில் எழுதிவிட்டு “இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்” என்று இறுதியில் கூறிப்பிட்டார். இமாம் அப்துர்ரஹ்மான் முபாரக்பூரி (றஹிமஹுல்லாஹ்) சர்வதேச பிறைக்கு ஆதாரம் காட்டுவதற்கும் குறைப்-இப்னு அப்பாஸுடைய ஹதீஸிலிருந்து கிளம்பியிருந்த சர்ச்சைகளுக்கு பதில் கொடுப்பதற்கும் இமாம் முஹம்மத் இப்னு அலி ஷவ்கானி (றஹிமஹுல்லாஹ்) வுடைய வார்த்தைகளையே பயன்படுத்தினார். தனது விளக்கத்தை இமாம் ஷவ்கானியுடைய நு}லிலிருந்து எடுத்து விளக்கிய பின் இறுதியில் “பல் யதஅம்மல் ” -இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள் என்ற வார்த்தையை இமாம் அப்துர்ரஹ்மான் முபாரக்பூரி (றஹிமஹுல்லாஹ்) பயன்படுத்தினார். 

ஸெய்யித் ஸாபிக் எழுதிய பிக்ஹுஸ்ஸுன்னா என்ற நூலுக்கு அந்நூலிலுள்ள தவறுகளைத் திருத்தி அதற்கு மறுப்பாக ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி (றஹிமஹுல்லாஹ்) அவருடைய தமாமுல் மின்னா என்ற நூலில் விளக்கும் வேளையில் அவர் கூறுகிறார்:

“இந்த விடயங்களைத் தெளிவாக விளங்குவதற்கு இமாம் முஹம்மத் இப்னு அலி ஷவ்கானி (றஹிமஹுல்லாஹ்) எழுதிய நைலுல் அவ்தார் என்ற நூலிலும் இமாம் ஸித்தீக் ஹஸன் ஹான் (றஹிமஹுல்லாஹ்) எழுதிய ரவ்ததுந் நதிய்யா என்ற நு}லிலும் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (றஹிமஹுல்லாஹ்) எழுதிய  மஜ்மூஃ பதாவா என்ற நூலிலும் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம்” என்று வழிகாட்டுகிறார். மேலே சொல்லப்பட்ட விடயங்கள் சர்வதேச பிறை தொடர்பாக நூல்களின் அடிப்படையில் விளங்கக் கூடிய அம்சங்களாகும். இதனடிப்படையில் நாட்டுக்கு நாடு பிறை பார்க்கப்பட வேண்டுமென்று வாதிடுபவர்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக முஸ்லிம் இமாம்கள் மத்தியில் மஜ்மூஃ என்ற நூல்தான் இந்தக் கருத்து தொடர்பாக வாதிடக் கூடிய தரமானதும் பிரபல்யமானதுமான நூலாகும். இமாம் நவவியுடைய இந்த நூலையே நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்று சொல்பவர்கள் ஆதாரமாக முன் வைக்கிறார்கள். இந்தக் கருத்தைச் சுமந்தவர்கள் ஆதாரமாகச் சுமந்து வாதிடக் கூடிய அனைத்து விடயங்களுக்கும் இஸ்லாமிய உலகின் அறிஞர்கள் பதில் கொடுத்திருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் நான் மேலே சுட்டிக் காட்டியவைகள்தான் பிறை விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள்,இமாம்கள் மத்தியில் காணப்பட்ட அடிப்படையான வேறுபாடுகளாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் அறிஞர்கள் மத்தியில் இருக்கும் சர்ச்சைகளுக்கு அவ்வறிஞர்களே பதிலும் தீர்ப்பும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அறிஞர்களின் காலத்துக்குப் பின்னால் தங்களைத் தாங்களே அறிஞர்கள் (உலமாக்கள); என்று பட்டம் சூட்டிக் கொண்ட கூட்டத்தினர் தோன்றி அல்குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களின் வார்த்தைகளுக்கும் அவர்களுக்குத் தேவை போன்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் கொடுத்த விளக்கங்களை தப்ஸீர் நூல்களிலும் காண முடியாது. ஹதீஸ் நு}ல்களிலும் காட்ட முடியாது. இந்தக் கூட்டங்கள் தங்களுடைய கருத்துக்களை வளர்க்கவே துடிக்கிறார்கள். இந்த விடயத்தைக் கல்வி ரீதியாகப் பார்க்கின்ற வேளையில் இவர்களின் கருத்தான நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்ற விடயத்தை வாதிட்ட அறிஞர்களே இவர்கள் காட்டிய ஆதாரங்களை தங்களின் வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டவில்லை. அது தொடர்பான ஒரு உதாரணத்தைக் கூறுவதென்றால் அல் குர்ஆனின் சூறதுல் பகரா அத்தியாயத்தின் 185 ஆவது வசனத்தில் வருகின்ற பமன் ஷஹித மின்குமுஷ்ஷஹ்ர பல்யஸும்ஹு “…..உங்களில் யார் இந்த மாதத்தை சாட்சி பெறுகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் ” என்ற அல்குர்ஆன் வசனத்தை இன்று நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்று சொல்லுகின்ற கூட்டங்கள் தங்களின் வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

ஆனால் இவர்களுக்கு முன் இந்தக் குர்ஆன் வசனத்தை எந்த முஸ்லிம் அறிஞர்களும் நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பதற்கு ஆதாரமாக எடுக்கவில்லை. இமாம் நவவி, இமாம் ஸுப்கி இன்னும் இவர்கள் போன்ற எந்தவொரு மத்ஹப்களைச் சேர்ந்த இமாம்கள் கூட இந்தக் குர்ஆன் வசனத்தை தங்களின் வாதத்திற்கு ஆதாரமாக எடுக்கவில்லை. ஏனென்றால் அந்த உலமாக்கள் அனைவரும் அல்குர்ஆனை எந்த வழிமுறையில் விளங்க வேண்டுமென்று அறிந்திருந்தார்கள். எனவேதான் அவர்கள் அல்குர்ஆன் சொல்லாத ஒன்றை அதனுள் புகுத்துவதற்குத் தயாராக இருக்கவில்லை. எனினும் இன்றைய காலத்தில் தர்க்கவாதத்தை தங்களின் அடிப்படையாகக் கொண்ட சில கூட்டங்கள் கல்வியின் பெயரில் குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் கொடுப்பதற்கு முந்திக் கொண்டார்கள்.

இந்தக் குர்ஆன் வசனத்திற்கு தர்க்கரீதியாக விளக்கம் கொடுத்தவர்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்த P. ஜெய்னுல் ஆபிதீன் என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவர் அல் முபீன் என்ற தனது சஞ்சிகையில் பிறைக்கு விளக்கம் கொடுப்பதற்குக் களமிறங்கினார். பமன் ஷஹித மின்குமுஷ்ஷஹ்ர பல்யஸும்ஹு என்ற குர்ஆன் வசனத்திற்கு இவர் விளக்கமொன்றை எழுதினார். இந்த விளக்கம் வரலாற்றிலே தர்க்கத்திற்குப் பெயர்போனவர்களான அபூ பக்கர் ராஸி, பைளாவி போன்றவர்களின் விளக்கத்தை விடவும் எல்லை மீறிய ஒரு விளக்கமாக இருந்தது. இவர் வழிகேடெனும் விஷத்தை சற்று அதிகமாகவே அருந்தி விட்டார். அந்த வழிகேட்டையே அவருடைய ரத்த நரம்புகளில் ஓட விட்டுவிட்டார். சஊதி அரேபியாவுக்கான எனது பயணமொன்றில் அங்கு  நான் சந்தித்த அறிஞர்களிடம் P. ஜெய்னுல் ஆபிதீனுடைய வழிகேடான போக்குகள் பற்றிக் கூறிய வேளை அந்த அறிஞர்கள் என்னை நோக்கி கூறினார்கள்: நீங்கள் இந்த மனிதனின் நடவடிக்கைகளை வழிகேடென்று சொல்வது இஸ்லாத்திற்குச் செய்கின்ற அநியாயமாகும்.

ஏனென்றால் P.ஜெய்னுல் ஆபிதீன் என்ற இந்த மனிதனின் போக்கைக் கவனிக்கையில் அவரிடம் குப்ர் இருப்பது தெரிகிறது. அவரது செயல்களை வழிகேடென்று சொல்வதை விட குப்ர் என்று சொலவதுதான் சரியானது என்று அந்த அறிஞர்கள் என்னிடம் கூறினார்கள். இருப்பினும் என்னைப் பொருத்தவரை இந்த மனிதனுடைய விடயத்தை கல்வியில் சிறந்த உலமாக்களிடம் நான் விட்டுவிட்டேன். அவர்களே இவரைப் பற்றி இந்த உம்மத்திற்குத் தீர்ப்பு வழங்கட்டும். இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய உலகம் அதனை அறிந்து கொள்ளும்.

அறபு உலமாக்கள் P. ஜெய்னுல் ஆபிதீன் விடயத்தில் ஆச்சரியம் கொள்ளும் அம்சம் என்னவென்றால் அறபி தெரியாத இந்த மனிதர் எப்படி இந்த முஸ்லிம் சமூகத்துக்கு வழிகாட்ட முன்வந்தார். இந்த சமூகம் எப்படி இவரை தங்களுக்கு வழிகாட்டும் தலைவராக எடுத்தது? என்று பல அறபி உலமாக்கள் வியப்புடன் கேள்வி கேட்கின்றனர். அறபி மொழி சரியாக பேச தெரியாதது மட்டுமின்றி அறபி உலமாக்களோடு எந்தவிதத் தொடர்போ அறிமுகமோ இல்லாத ஒரு மனிதரிடமிருந்து பெரும் சமூகமொன்று எப்படி இஸ்லாமிக் கல்வியைப் பெற்றுக்கொள்கிறது என்ற உலமாக்களின் கேள்விக்கு நான் பதிலாகக் கூறியது என்னவென்றால்…எமது சமூகத்தைப் பொருத்தவரை உலமாக்களால் சிபாரிசு செய்யப்பட்ட அவ்வுலமாக்களால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவரிடம்தான் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற எந்தவித அவசியமுமில்லை. மேலும் எமது சமூகத்தில் அறபி மொழியைக் கற்றவர்தான் இஸ்லாமிய கல்வியைப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்கின்ற அவசியமுமில்லை.

எமது சமூகத்தில் ஒருவர் தனக்கென்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு பெயரையும் வளர்த்துக் கொண்டாரென்றால் அவர் மக்களிடத்தில் ஒரு ஆலிமாகி விடுவார். இதுதான் எமது சமூகத்திலுள்ள மக்கள் தெரிந்து வைத்திருக்கும் ஆலிம் என்பதற்கான வரைவிலக்கணம். இவ்வாறு நான் அந்த அறிஞர்களிடம் எமது சமூகத்தைப் பற்றி விளக்கினேன். சமூகத்திலுள்ள மக்களின் இந்த வரைவிலக்கணம் எமது இமாம்கள் (அஇம்மதுல் முஸ்லிமீன்) காட்டித் தந்த வரைவிலக்கணமல்ல. எனவே பொது மக்களின் இந்த வரைவிலக்கணத்தின் அடிப்படையில் ஆலிமானவர்களில் ஒருவராகத்தான் P. ஜெய்னுல்; ஆபிதீன் என்பவரும் இருக்கிறார். இவர் கூட்டத்தை உருவாக்கினார். பெயரை வளர்த்துக் கொண்டார். எனவே உம்மத்துக்கு வழிகாட்டும் ஆலிமாக மாறி விட்டார்.

இதனால் எந்த உலமாக்கள் இவரை ஒரு ஆலிமென்று சமூகத்துக்கு அடையாளம் காட்டினார்களென்பதோ இவர் எந்த உலமாக்களிடம் அமர்ந்து கல்வியைப் பெற்றுக் கொண்டாரென்பதோ மக்களுக்கு தேவையற்றதொரு விடயமாக மாறி விட்டது. அதன் அவசியத்தை எவரும் பொருட்படுத்தவில்லை. ஆகவே நான் குறிப்பிட்ட அதே P. ஜெய்னுல் ஆபிதீன்தான் முன்னர் குறிப்பிட்ட நோன்பு தொடர்பான குர்ஆன் வசனத்திற்கு தர்க்க ரீதியான விளக்கத்தைக் கொடுத்தார். இவர் கொடுத்த இந்த விளக்கம் எந்தத் தப்ஸீர் நூலிலும் காண முடியாத விளக்கமாகும். இந்த விளக்கத்தைத்தான் இன்று எமது சமூகத்திலுள்ளவர்கள்; அழகான விளக்கமென்று சுமந்து கொண்டார்கள்.மக்களைப் பொருத்தவரை இந்த விளக்கம் குர்ஆனிலிருந்து பெறப்பட்ட விளக்கமாகவும் சிறப்பான ஆதாரமாகவும் ஆகிவிட்டது. இந்த விளக்கத்தைச் சுமந்து கொண்டு இதுதான் நாட்டுக்கு நாடு பிறை பார்ப்பதற்கு ஆதாரமென்று பலர் பூமியெங்கும் பிரச்சாரம் செய்து திரிகிறார்கள். இதுதான் ஆதாரமென்று தமிழ் பேசும் உலகிற்குக் காட்டுகிறார்கள்.

இன்று அதே குர்ஆன் வசனத்தை நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்பதற்கு ஆதாரம் காட்டுவதற்கு இன்னுமொரு கூட்டம் வந்திருக்கிறது. நாங்கள் ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றுகிறோமென்று  இவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இவர்களை நோக்கி நான் கேற்க விரும்புவது என்னவென்றால், நீங்கள் பின்பற்றும் மத்ஹபை வளர்த்தவரும் வழிகாட்ட வந்தவருமான இமாம் நவவி (றஹிமஸுல்லாஹ்) இந்தக் குர்ஆன் வசனத்தைத் தெரியாதவராகவா இருந்தார்? நீங்கள் உங்கள் மத்ஹபாக ஷாபிஈ மத்ஹபைச் சுமந்தவர்களாக இருந்தால் இந்த மத்ஹபைச் சேர்ந்த எந்த இமாமாவது தங்கள் நூல்களில் பமன் ஷஹித… என்ற குர்ஆன் ஆயத்தை நாட்டுக்கு நாடு பிறை காண்பதற்கான ஆதாரமாக எடுத்ததாக எந்த நூலிலாவது உங்களால் காட்ட முடியுமா? உங்களால் நிச்சயமாக அது முடியாது. ஏனென்றால் அந்த அல்குர்ஆன் ஆயத்தின் விளக்கம் அதுவல்ல.

பமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர பல் யஸும்ஹு என்ற வார்த்தை யார் இந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது தவறான மொழிபெயர்ப்பாகும். ஏனைன்றால் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பை அப்படியே அறபியில் சொல்வதென்றால் "பமன் ஷஹித" என்பதற்குப் பதிலாக "பமன் தஹல" என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அல்லாஹுஸுப்ஹானஹு வ தஆலா பமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர பல் யஸும்ஹு என்றுதான் கூறுகின்றான்.  பமன் ஷஹித என்றால் (மாதத்தை) சாட்சி பெற்றவர் என்று பொருள்படும். பமன் தஹல என்று ஆரம்பித்தால்தான் (மாதத்தை) அடைந்தவர் அல்லது நுழைந்தவர் என்று பொருள் கொள்ள முடியும். குர்ஆன் ஷஹித என்றுதான் கூறுகிறது. அல்லாஹுஸுப்ஹானஹு வ தஆலா அவனைப் பற்றிக் கூறும் பொழுது

அஹ்ஸனு ஹதீஸன் வஅஸ்தகு கீலா  “செய்திகளில் மிகவும் அழகானதும் வார்த்தைகளில் மிக உண்மையானதும்” (அல்லாஹ்வின் செய்தியும் வார்த்தையுமாகும்)

எனவே அவனது வார்த்தைகளும் அவன் சொல்வதும் சிறப்பானதாகும். இன்னும் அவன் சொல்பவையனைத்தும் உண்மையானதுமாகும். அல்லாஹு தஆலா அல் குர்ஆனிலே ஒரு வார்த்தையைப் கூறுவானாயின் அதனைக் காரணமின்றிக் கூற மாட்டான். நாம் எப்போது அல்லாஹ் கூறிய வார்த்தையை அது வந்துள்ள பிரகாரமே கூறாமல் அதற்கு இன்னுமொரு கருத்தைக் கொடுக்கிறோமோ அப்போதுதான் அந்த விடயத்தில் வழிகேடொன்று உருவாகின்றதே தவிர சொன்ன பிரகாரம் அப்படியே எடுத்துக்கொண்டால் அந்த விடயத்தில் வழிகேடொன்றை உருவாக்குதை விட்டும் தப்பி விடுவோம். 

உங்களில் யார் மாதத்தைச் சாட்சி பெற்றுக் கொள்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்  என்று குர்ஆன் கூறுவதனடிப்படையில் அந்த சாட்சியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதனை நாம் அறிந்திருக்க வேண்டும். 

சாட்சி பெறுதல் என்பதில் கண்ணால் காண்பது, காதால் கேட்பது ஆகிய இரண்டும் அடங்கும். இவையிரண்டும் சாட்சி பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளாக அமையலாம். எனவே எங்களில் யார் பிறையைக் கண்ணால் காண்கிறாரோ அல்லது தகவலைக் காதால் கேட்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற குர்ஆனின் ஏவலின்படி எம்மில் எவரும் சாட்சியைப் பெறாதவராக இருக்க முடியாதென்ற அடிப்படையில் இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கூறப்பட்ட அல் குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் கொடுத்தார்கள். குறிப்பாக இந்த ஆயத்திற்கு இமாம் இப்னு கஸீர் (றஹிமஹுல்லாஹ்), இமாம் தபரி (றஹிமஹுல்லாஹ்), இமாம் குர்துபி (றஹிமஹுல்லாஹ்) ஆகியோர் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அந்த விளக்கத்தினடிப்படையில்

“உங்களில் யார் இந்த மாதத்தைச் சாட்சி பெற்றுக் கொள்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்”

என்பதன் விளக்கம் நோயாளியையும் பிரயாணியையும் தவிர மற்றவர்கள் நோன்பு நோற்கட்டும் என்பதாகும். இந்த ஆயத்தின் தொடரில் நோன்பு நோற்பதிலிருந்து சலுகையளிக்கப்பட்டவர்களான நோயாளிகளையும் பிரயாணிகளையும் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.

………எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் மற்ற நாட்களில் (விடுபட்ட நோன்பினை ) எண்ணி (நோற்று) விடவும்……

எனவே உலமாக்கள் தொடர்ந்து வரும் வசனத்தையும் ஆராய்ந்து அதன் சரியான விளக்கத்தை எமக்கு எடுத்து விளக்குகிறார்கள்.

அல்லாஹு ஸுப்ஹானஹுவ தஆலா சாட்சி பெற்றவர்களை நோன்பு நோற்குமாறு கூறிவிட்டு தொடர்ந்து கூறுகையில் நோயாளிகளுக்கும் பிரயாணிகளுக்கும் ஒரு சட்டத்தைக் குறிப்பிடுகின்றான். அச்சட்டத்தின் படி இவ்விரு தரப்பாருக்கும் நோன்பு நோற்பதிலிருந்து விதிவிலக்கு இருக்கிறது. இது இறைவனின் சட்டமாகும்.

நாட்டுக்கு நாடு பிறையென்று சொல்பவர்கள் “மாதத்தை அடைந்தவர் நோன்பு நோற்கட்டும்” என்ற மொழிபெயர்ப்பைக் காட்டி அடைந்தவர் நோன்பு நோற்கட்டும் என்று அல்லாஹ் சொல்வதன் காரணம்  மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்பதற்காகத்தான் என விளக்கம் கொடுக்கிறார்கள். இவர்கள் சொல்வதன் அடிப்படையில் ஒரு நாட்டில் பிறை காணப்பட்டால் அந்நாட்டிலுள்ள நோயாளிகளும் பிரயாணிகளும் மாதத்தை அடைந்துதானிருக்கிறார்கள். மாதத்தை அடைந்தவர்களென்ற ரீதியில் அல்லாஹ்வின் ஏவலினடிப்படையில் அந்நாட்டிலுள்ள நோயாளியும் பிரயாணியும் நோன்பு நோற்க வேண்டியிருக்கும். ஆனால் குர்ஆன் அவ்வாறு சொல்லவில்லை. அது பமன் ஷஹித என்றுதான் சொல்கிறது.

ஷஹித என்பதற்கு அடைவது எனப் பொருள் கொள்ள முடியாது. ஷஹித என்றால் சாட்சி பெறுவது என்றுதான் பொருளாகும். எனவே அல் குர்ஆன் கூறுவதன் அடிப்படையில் இஸ்லாமிய உம்மத்தில் யாரெல்லாம் கண்ணால் கண்டு அல்லது தகவலைச் செவிமடுத்து சாட்சி பெற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்கு நோன்பு நோற்பது கடமையாவதுடன் அவர்களிலுள்ள நோயாளிகளுக்கும் பிரயாணிகளுக்கும் இதிலிருந்து விதிவிலக்களிக்கப்படுவதுடன் விடுபட்ட நோன்புகளுக்குப் பகரமாக வேறு நாட்களில் நோற்றுக் கொள்ள வேண்டுமென்று தனது ஷரீஅத்தின் சட்டத்தினை அல்லாஹு ஸுப்ஹானஹுவ தஆலா கற்றுத் தருகின்றான். இதனைத்தான் அல்குர்ஆனுக்கு விளக்கவுரை கூறும் அறிஞர்கள் எமக்கு சிறப்பாக விளக்கி வழிகாட்டுகிறார்கள். ஆனால் தர்க்கவாதத்தின் அடிப்படையில் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கொடுக்க வந்தவர்கள் கூறினார்கள் :

“ஊங்களில் யார் இந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்” என்ற வசனத்தில் வருகின்ற உங்களில் யார் அடைகிறாரோ என்ற வாசகத்தின் அடிப்படையில் பார்க்கும் பொழுது மாதத்தை அடையாதவர்களும் இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம் எனக் கூறி மாதத்தை அடையாதவர் நோன்பு நோற்கத் தேவையில்லையென்று தீர்ப்பளித்து விட்டார்கள். ஸுப்ஹானல்லாஹ் ! இதை விடவும் வழகேடானதொரு தர்க்கமும் வாதமும் இருக்க முடியாது. அல்லாஹு ஸுப்ஹானஹுவ தஆலா முஸ்லிம்களை நோக்கி சாட்சி பெற்றுக் கொள்கிறவர் நோன்பு நோட்கட்டும் என்று ஏவியதனடிப்படையில் சாட்சி பெற்றுக் கொள்ளாதவனின் கடமை சாட்சியைப் பெறும் வழிமுறையைத் தேடுவதாகும். இதனைச் செய்யாமல் எனக்கு அறிவித்தல் வரவில்லை நான் கண்ணால் காணவில்லையென்று சாட்டுகளைக் கூறிக்கொண்டு நாம் நோன்பு நோற்கத் தேவையில்லையென்று கூறி இந்த உம்மத் பிரிந்து நிற்பதற்கு நாம் இடமளிக்க முடியுமா? அல்லது முஸ்லிம்கள் அறியாமையினால் நோன்பு கடமையான நேரத்தில் நோன்பு நோற்காதிருப்பதை நாம் சரி காண முடியுமா?

வழிகேட்டை உருவாக்கும் வீண் தர்க்கத்தினால் “ மாதத்தை அடைபவர் நோன்பு நோற்கட்டும்” என்ற வார்த்தையில் இரண்டு அர்த்தங்கள் இருப்பதாகவும் மாதத்தை அடைபவர் இருப்பது போல் அடையாதவரும் இருக்கிறார் என்று விளக்கம் சொல்கிறார்கள். அனால் அல்லாஹு ஸுப்ஹானஹுவ தஆலா விசுவாசம் கொண்ட மனிதர்களுக்கு ஒரு ஏவலாக உங்களில் சாட்சி பெற்றவர் நோன்பு நோற்கட்டும் என்று கட்டளையிடுகின்றான். சாட்சியைப் பெற்றுக் கொள்ளாதவன் அதனைத் தேடிப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்து அல்லாஹ்வின் ஏவலைச் செயற்படுத்தாமல்  தனது தர்க்கத்தின் காரணமாக நாங்கள் மாதத்தை அடையாததினால் அல்லாஹ்வின் இந்த ஏவலைப் பின்பற்றுவது அவசியமில்லையென்று முடிவு செய்து விட்டார்கள். இது அல்லாஹ்வின் ஏவலை நிராகரிப்பதைத் தவிர வேரில்லை.

இந்தக் குர்ஆன் ஆயத்தின் விளக்கத்தில் இந்த மாதத்தை அடையாதவரும் இருக்கிறார்கள் என்பது இருக்குமாயின் வரலாற்றில் எந்த இமாம்களெல்லாம் நாட்டுக்கு நாடு பிறை காணவேண்டுமென்று கூறினார்களோ இவர்கள் தங்களின் கருத்துக்கு ஆதாரமாக இந்தக் குர்ஆன் வசனத்தை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களில் யாரும் இந்தக் குர்ஆன் வசனத்தை ஆதாரமாக எடுக்கவில்லை. ஏனென்றால் இந்த வசனம் நாட்டுக்கு நாடு பிறை காணவேண்டுமென்று கூறும் வசனமல்ல. மாறாக இந்த வசனம் அல்லாஹ்வின் ஒரு ஏவலைப் பற்றிப் பேசுகிறது. இந்த ஏவலின் படி சாட்சி பெற்றவர் நோன்பு நோற்று ஏவலைச் செயற்படுத்துவதுதான் கடமையே தவிர இதனைப் பற்றித் தெரியாதவர் அல்லாஹ்வின் ஏவலைச் செயற்படுத்துவது கடமையாகாதென்ற அர்த்தத்தை நாம் கொடுக்க முடியாது. தெரியாத அனைவரும் தேடித் தெரிந்து கொள்வதுதான் அல்லாஹ்வின் ஏவலை ஏற்று செயற்படுத்துவதன் பூரணமான நிலையாகும். இதற்கு மாற்றமாக தெரியாதவர் ஏவலைச் செயற்படுத்த வேண்டியதில்லையென்று நாம் தீர்ப்பளிப்போமாயின் அதன் பொருள் நாம் அல்லாஹ்வின் மார்க்கத்தின் ஏவல்களை நிராகரிப்பதற்குச் சாட்சிகள் தேடுகிறோம் என்பதேயாகும். அந்தக் குர்ஆன் வசனத்திலிருந்து பெறப்பட்ட தவறான விளக்கம் அல்லாஹ்வின் ஏவலை நிராகரிப்பதன் பால் இட்டுச் செல்கின்றதென்பதை நாம் உணர வேண்டும். 

இன்று எமது சமூகத்தில் இந்த விளக்கத்தைப் பரவலாக எடுத்துப் பின்பற்றுகிறார்கள். இன்று இவர்கள் கூறும் இந்த விளக்கத்திற்கு  முன் சென்ற உலமாக்கள் யாரும் மறுப்பாக எதனையும் சொல்லவில்லையே என்று ஒரு கௌவியை இவர்கள் எழுப்புகிறார்கள். அதன் பதில் என்னவென்றால்இ முன் சென்ற இஸ்லாமிய அறிஞர்களைப் பொருத்தவரை ஏதேனும் வழிகேடான விளக்கம் வந்தால் மட்டுமே மறுப்பை முன்வைப்பார்கள். ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த அறிஞர்கள் அவர்கள் வாழுகின்ற காலப்பகுதியில் ஏதேனும் வழிகேடான கருத்துகள் வெளிவருகையில் அவ்வழிகேடுகளுக்கு மறுப்பாக பதில் கொடுத்து அதனைத் திருத்தாமல் செல்லவில்லை. ஆனால் அன்று தோன்றாத ஒரு புது விளக்கம் இன்று புதிதாக முளைக்கின்ற போது இன்று வாழுகின்றவர்கள்தான் அதற்கு பதிலளிக்க வேண்டும். இன்று உருவாகிய புதிய கருத்துகளுக்கும் விளக்கங்களுக்கும் முன் சென்ற உலமாக்களிடம் பதில் கிடைக்குமா எனத் தேட முடியாது. அன்று இந்த விளக்கம் தோன்றாததால் அதற்கு பதில் அன்று கிடைக்கவில்லை. இந்த விடயத்தில் குரைப்-இப்னு அப்பாஸ் தொடர்பான ஹதீஸை சிலர் தங்களுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இருப்பினும் பலர் இந்த ஹதீஸை ஆதாரமாக எடுப்பதில்லை. ஏனென்றால் இதனை ஆதாரமாக எடுப்பதை மறுத்து அறிஞர்களின் தெளிவான வழிகாட்டல் இருக்கிறது. இதனை அந்த அறிஞர்கள் தங்களின் நூல்களில் எழுதியே சென்றிருக்கிறார்கள். குறிப்பாக இமாம் ஷவ்கானி (றஹிமஹுல்லாஹ்), இமாம் அப்துர்ரஹ்மான் முபாரக்பூரி (றஹிமஹுல்லாஹ்), இமாம் ஸித்தீக் ஹஸன்கான் (றஹிமஹுல்லாஹ்) ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி (றஹிமஹுல்லாஹ்) போன்ற அறிஞர்கள் அதனை எடுத்து விளக்கியிருக்கிறார்கள். 


குரைப்-இப்னு அப்பாஸ் தொடர்பான ஹதீஸ் விடயத்தில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை என்னவென்று நாம் விளங்கிக் கொள்வோம். ஸஹீஹ் முஸ்லிம் என்ற நு}லைத் தொகுத்த இமாம் முஸ்லிம் (றஹிமஹுல்லாஹ்) அந்நு}லில் ஹதீஸ்களைச் சேர்த்தாலும் அந்த ஹதீஸ்களுக்கு தலைப்புகளை இடவில்லை. ஆதாரத்தை ஆராய்ந்து சரியான அறிவிப்பாளர் தொடரோடு அமைந்த ஹதீஸ்களைத் தனது நு}லில் அவர் தொகுத்து வைத்தார் . இதுதான் இமாம் முஸ்லிம் (றஹிமஹுல்லாஹ்) தனது நூலினைக் கையாண்ட வழிமுறையாகும். ஆனால் ஸஹீஹ் முஸ்லிம் என்ற நூலுக்கு முதலில் தலைப்புகளையிட்டவர் இமாம் அபூ ஸகரிய்யா யஹ்யா இப்னு ஷரப் அந் நவவி (றஹிமஹுல்லாஹ்) ஆவார். இமாம் திர்மிதி, இமாம் அபூ தாவூத் போன்றவர்கள் பிறை காணுதல் தொடர்பான ஹதீஸுக்கு தங்களின் நூல்களில் லிகுல்லி பலதின் ருஃயதுஹும் - ஒவ்வொரு நாட்டவருக்கும் அவரவருடைய காணுதல் என்று தலைப்பை இட்டிருக்கிறார்கள். இந்த வார்த்தையை இமாம்கள் பொதுவாக தங்கள் நூல்களில் பிறை காணுதல் தொடர்பான ஹதீஸுக்கு தலைப்பாக இட்டாலும் இமாம் நவவி ஸஹீஹ் முஸ்லிமுக்குத் தலைப்பிடும் போது ( லிகுல்லி பலதின் ருஃயதுஹும் ); - ஒவ்வொரு நாட்டவருக்கும் அவரவருடைய காணுதல் என்ற வார்த்தையுடன் ( வலா யஊத்து பிகைரிஹி ) – ஏனையவர்களுடைய காணுதலை ஏற்காதிருப்பது என்ற மேலதிக வார்த்தையையும் சேர்த்தார். இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) மேலதிக வார்த்தையைச் சேர்த்திருப்பினும் இமாம் திர்மிதி இமாம் அபூ தாவூத்இ இமாம் இப்னு ஹுதைமா போன்ற மேலும் பல அறிஞர்கள் தங்களின் நூல்களிலுள்ள பாடத்தின் தலைப்பாக லிகுல்லி பலதின் ருஃயதுஹும் - ஒவ்வொரு நாட்டவருக்கும் அவரவருடைய காணுதல் என்றுதான் தலைப்பினை வைத்தார்கள். இவ்வாறு அவர்கள் தலைப்பிடக் காரணம் என்னவெனில், ஒவ்வொரு இடத்தைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு நாட்டவரும் அவரவர் வாழும் இடங்களில் பிறை பார்ப்பது கடமை என்பதினாலாகும். மாறாக இன்னொருவரிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு அவர்களை எதிர்பார்த்துக் கொண்டு கடமையானதொரு விடயத்தில் கவனமற்றவர்களாக இருக்க முடியாது. இந்த உண்மை குரைப் - இப்னு அப்பாஸ் தொடர்பான ஹதீஸிலிருந்து எமக்குத் தெளிவாக விளங்குகிறது. ஏனைன்றால் குரைப் ஷாமில் இருந்தார். எனவே அவர் ஷாமில் பிறையைப் பார்த்தார். இப்னு அப்பாஸ் மதீனாவில் இருந்தார். எனவே அவர் மதீனாவில் பிறை பார்த்தார். இதிலிருந்து தெளிவாக விளங்கக் கூடியது என்னவென்றால் யாராக இருப்பினும் எங்கிருந்த போதும் அவரவர் அவரவருடைய இடத்திலிருந்து பிறையைப் பார்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதனடிப்படையில் இமாம்கள் ஹதீஸ்களிலுள்ள பாடங்களுக்குத் தலைப்பிடுவதன் காரணம் அந்த ஹதீஸ{க்குரிய பிக்ஹ் சட்டத்தை எடுத்துக் காட்.டுவதற்காகும். அப்வாபுல் அஹாதீஸி பிக்ஹ{ல் ஹதீஸ் - ஹதீஸ்களின் தலைப்புகள் அந்த ஹதீஸுக்குரிய சட்டமாகும் என்பது ஹதீஸ் கல்வியில் உலமாக்கள் கையாளும் ஓர் அடிப்படையாகும். எனவே ஒரு இமாம் ஹதீஸுக்குத் தலைப்பிடுவாராயின் அந்த ஹதீஸின் வார்த்தைகளின் கருத்தினை அடிப்படையாக வைத்தே தலைப்பிடுவார். எனவே குரைப்-இப்னு அப்பாஸ் ஆகியோரின் ஹதீஸில் அவரவர் இருந்த இடத்தில் அவர்கள் பிறை பார்த்ததினால்தான் (லிகுல்லி பலதின் ருஃயதுஹும்) ‘ஒவ்வொரு நாட்டவருக்கும் அவரவருடைய காணுதல்’ என்று இந்த ஹதீஸுக்குத் தலைப்பை இமாம்கள் வைத்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர் நாட்டில் பிறை காண வேண்டுமென்பது அனைவருக்கும் கடமையானதென்ற அடிப்படையை குரைப்-இப்னு அப்பாஸுடைய ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றதே தவிர ஏனையவர்களின் பிறையை ஏற்றுக் கொள்ளக் கூடாதென்று அந்த ஹதீஸ் காட்டவில்லை. இந்த ஹதீஸை தங்களின் நூல்களில் சேர்த்துக் கொண்ட இமாம்கள் அனைவரும் இந்த ஹதீஸிலிருந்து எடுக்கும் அடிப்படையாவது : ஒவ்வொரு நாட்டவரும் அவரவர் நாட்டில் பிறை பார்க்க வேண்டுமென்பதேயாகும். இதில் இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) மட்டுமே ஹதீஸ்களுக்குத் தலைப்பிடும் போது தனது வார்த்தைகளை மேலதிகமாகச் சேர்த்தார். மற்றவர்கள் கண்ட பிறையை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற தலைப்பை இமாம் நவவியைத் தவிர வேறு எந்த இமாமும் தலைப்பிடவில்லை. இமாம் நவவியுடைய இந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டுதான் இன்று பலர் எமது நாட்டின் பிறையை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்வோம். மற்றவர்கள் கண்ட பிறையை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோமென்று வாதிடுகிறார்கள். இதற்கு ஆதாரமாக குரைப்-இப்னு அப்பாஸ் சம்பந்தமான ஸதீஸைக் குறிப்பிடுகிறார்கள். அடுத்து நாம் அந்த ஸதீஸ் தொடர்பான விடயங்களை சற்று ஆழமாகப் பார்க்கலாம். 


குரைப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் உம்மு பத்ழ் பின்த் ஹாரிஸ் என்பவருடைய ஒரு காரிய நிமித்தம் ஷாம் சென்றார். அவர் ஷாமில் இருந்த வேளை றமழான் மாதம் வந்தது. குரைப் அங்கேயே றமழானை ஆரம்பித்தார். மாதத்தின் கடைசியில் அவர் மதீனாவை வந்து சேர்ந்தார். குரைப் (ரழியல்லாஹு  அன்ஹு) அவர்களைச் சந்தித்த அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் குரைபிடம் “நீர் எப்போது பிறை கண்டீர்” என வினவினார். இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் என்னவெனில் பிறை கண்;டது தொடர்பாக முதலில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்தான் முதலில் கேள்வி கேற்கிறார்கள். இதன் காரணம் அன்று பிக்ஹில் தரமான இமாமாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களே இருந்தார்கள். எனவேதான் அவர் மதீனாவை நோக்கி வரும் பிரயாணியை நோக்கிக் கேள்வி கேட்டார். இது தொடர்பாக இமாம் அபூ ஜஅபர் அத்தஹாவி (றஹீமஹுல்லாஹ்) தனது நூலிலே தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். மதீனத்தார் ஷாமிலிருந்து வந்திருந்த பிரயாணியான குரைபிடம் “நீர் எப்போது பிறை கண்டீர்” என வினவினார்கள். ஏனென்றால் மதீனத்தாருடைய கணக்கு தவறாக இருந்திருக்கலாம் என்பதனால் அவர்கள் அவ்வாறு கேட்டார்கள். இவ்வாறு இமாம் அபூ ஜஅபர் அத்தஹாவி (றஹீமஹுல்லாஹ்) இன்னும் ஏனைய உலமாக்களும் இந்த சம்பவத்தைப் பற்றிக் கூறுகையில் விளக்குகிறார்கள். 


இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் குரைபிடம் “நீர் எப்போது பிறை கண்டீர்”; என வினவினார். அதற்கு குரைப் “நாங்கள் ஜும்ஆவுக்கு முந்திய இரவு கண்டோம்”; எனப் பதிலளித்தார். மீண்டும் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) குரைபை நோக்கி “அதனை நீர் கண்டீரா” எனக் கேட்டார். “ஆம் நான் கண்டேன். மக்கள் நோன்பு வைத்தனர். (ஷாமின் ஆட்சியாளரான) முஆவியாவும் நோன்பு வைத்தார்” என குரைப் கூறினார். இங்கு ஷாமின் ஆட்சியாளர் என்ற ரீதியில் அதிகாரம் பெற்றிருந்த முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அந்தப் பிறையை ஏற்றுக் கொண்டதோடு ஷாமில் இருந்தவர்களும் அதனை நடைமுறைப்படுத்தினர். இந்த சம்பாஷனையின் தொடரில் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் “நாங்கள் சனிக்கிழமைக்கு முந்திய இரவு கண்டோம்” என்று கூறினார். இந்த வார்த்தை குரைப் கண்ட பிறையை இப்னு அப்பாஸ் மறுத்தார் என்பதற்கு ஆதாரமென்று சிலர் கூறுவது தவறான கூற்றாகும். இங்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நடந்ததைக் கூறினார்களே தவிர குரைப் கூறுவதை மறுப்பதற்காக அவ்வாறு கூறவில்லை. தொடர்ந்து இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் குரைபிடம் “நாங்கள் தொடர்ந்து மாதத்தை முப்பதாக்கும் வரை அல்லது பிறை காணும் வரை நோன்பு வைப்போம்” என்று தங்களின் நிலையைக் கூறினார்கள். பிறை காண்பது அல்லது மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்வது என்பது பிறை காணுதலில் ஓர் இஸ்லாமிய அடிப்படையாகும் என்ற காரணத்தில்தான் இப்னு அப்பாஸ் அவ்வாறு கூறினார். இதற்கும் மேலதிகமாகக் கூறுவதாயின் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களே அறிவித்த ஹதீஸ் தர்மிதியில் பதிவாகியிருக்கிறது.


நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


பிறையைக் கண்டு நோன்பு வையுங்கள். பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள். மேக மூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாகப் பூரணமாக்குங்கள்.


எனவே நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் நபிமொழியையே தனது வார்த்தையில் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) குரைபிடம் கூறினார்கள். எனவே இது இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) கூறிய அவருடைய சொந்தக் கருத்தல்ல. மாறாக இது றஸுலுல்லாஹ் சொன்னதொரு ஹதீஸாகும். இதனைத்தான் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) சுருக்கமாகக் கூறினார்கள். இவ்வாறு இப்னு அப்பாஸ் கூறியது குரைப் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாதென்ற அர்த்தத்திலல்ல. மாறாக இஸ்லாமிய சட்டத்தையே குரைபுக்குச் சொல்லிக் காட்டினார். இருப்பினும் இப்னு அப்பாஸுடைய வார்த்தையைக் கேட்ட குரைப் இப்னு அப்பாஸை நோக்கி “உங்களுக்கு முஆவியாவின் சாட்சியம் போதாதா என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் “இல்லை, இவ்வாறுதான் றஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) எங்களுக்கு ஏவியிருக்கிறார்கள்”; என்று பதில் சொன்னார். அதாவது முன்னால் கூறப்பட்ட நபி மொழியைக் குறித்தே இப்னு அப்பாஸ் நபியின் ஏவலெனக் குறிப்பிட்டார். றஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறியதன் அடிப்படையினை நாம் நடைமுறைப்படுத்துவோம் என்பதே இப்னு அப்பாஸ் அவ்வாறு கூறியதன் அர்த்தமாகும். இங்கு வரும் கேள்வி என்னவென்றால் இந்த சம்பவத்தின் படி பிறைகாணுதலின் அடிப்படை எடுக்கப்பட வேண்டியது மதீனாவின் அடிப்படையிலா? அல்லது ஷாமின் அடிப்படையிலா? எதனடிப்படையில் இதற்குச் சரியான முடிவைக் காண்பது?


நாம் மதீனாவின் அடிப்படையில் எடுத்தால் ஒரு நாளின் பின்புதான் பெருநாளை எடுக்க வேண்டும். அவ்வாறு ஒரு நாளின் பின் பெருநாளை எடுத்திருந்தால் அந்த நாள் குரைபுக்கு அது முப்பத்தோறாவது நாளாகும். ஷாமின் அடிப்படையில் அன்று குரைப் மாதத்தைப் பூரணமாக்கினால் மதீனத்தாருக்கு அது இருபத்து ஒன்பதாவது நாளாகும். இந்த இரண்டிலும் முப்பத்தொராவது நாளென்பது இஸ்லாமிய மார்க்கத்தில் கிடையாது. நிலை இவ்வாறிருக்கையில் இவ்விறு வேறுபாடான நிலைப்பாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது எது? பிறையைக் கண்டவர்களில் பிந்தியவர்களான மதீனாவாசிகள்தான் முந்தியவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் இரு சாராரும் இரு கருத்துக்களைச் சுமந்தவர்களாக இருந்திருந்தால் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் நிச்சயமாக அன்று இரு பெருநாள்கள் வந்திருக்கும். ஆனால் அவ்வாறு இரு பெருநாள்கள் வரவில்லையென்பதுதான் வரலாற்று உண்மையென உலமாக்கள் சொல்கிறார்கள். எனவே இங்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) குரைப் ரழியல்லாஹு அன்ஹு) உடன் முரண்படவில்லை. அவர்கள் இருவரும் ஒரு கருத்துடன்தான் இருக்கிறார்கள். இந்த சம்பவத்தை அன்றிருந்த உலமாக்களான ஸஹாபாக்களோ தாபியீன்களோ தபஉத்தாபியீன்களோ,  தபஉ அத்பா தாபியீன்களோ ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக எடுத்ததில்லை. இஸ்லாமிய உம்மத் பிறை காணும் விடயத்தில் தரமாகவும் தெளிவாகவுமே இருந்தது. என்றாலும் ஹிஜ்ரி 400 க்குப் பின் வானவியல் கல்வியை மார்க்கத்தில் புகுத்தி விட்டார்கள். இதன் பின் நாட்டுக்கு நாடு பிறை என்ற வாதம் உருவானதுடன் இந்த வாதத்திற்கு குரைப் - இப்னு அப்பாஸ் தொடர்பான ஹதீஸை ஆதாரமாகவும் காட்டுகிறார்கள். ஆனால் முன்சென்ற உலமாக்களிடம் இந்த ஹதீஸுக்கு இந்த விளக்கம் இருக்கவில்லை. இதுவரை குரைப் - இப்னு அப்பாஸ் தொடர்பான சர்ச்சைக்குக் கல்வி ரீதியாக நாம் விளங்க வேண்டியவைகளை எடுத்து வைத்தேன். அதனை சுருக்கமாகச் சொன்னால் குரைப் - இப்னு அப்பாஸ் ஆகியோருக்கிடையில் எந்த முரண்பட்ட கருத்துக்களும் இருக்கவில்லை. இருவருக்கும் இரு பிறைகளென்ற நிலை இருக்கவில்லை. இரு வேறு பெருநாள்கள் இருக்கவில்லை. இதற்கு மாறாக ஒருவர் மற்றவரை ஏற்றுக் கொண்டார் என்பதே இங்கு வெளிப்படையான உண்மையாகும். அவ்வாறு ஒருவர் மற்றவரை ஏற்றுக் கொள்ளாத நிலை இருக்குமாயின் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வருகின்ற பிரயாணியைப் பார்த்து பிறையைப் பற்றிக் கேட்டிருக்க மாட்டார். அதற்கு அவசியமும் இருந்திருக்காது. ஷாம் நாட்டில் கண்ட பிறை மதீனாவாசிகளுக்கு அவசியமானது ஏன்? மற்றவர்கள் கண்ட பிறை எமக்கு அவசியமற்றது எமது பிறையே எமக்குப் போதுமானது என்ற கருத்தை இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கொண்டிருந்திருந்தார்களென்று எடுத்துக் கொண்டால் எதற்காக அவர் மதீனாவுக்கு வருகின்ற பிரயாணியிடம் நீர் எப்போது பிறை கண்டீரெனக் கேட்க வேண்டும். எனவே நிச்சயமாக மற்றவர்கள் கண்ட பிறையைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டில் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இருக்கவில்லையென்பது தெளிவாகத் தெரிகின்ற அம்சமாகும். எனவே எங்கு பிறை கண்டாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் சர்வதேச பிறையின் விடயத்திற்கும் குரைப் - இப்னு அப்பாஸ் தொடர்பான அறிவிப்புக்கும் எந்த முரண்பாடும் கிடையாது. அவர்கள் இரு பெருநாள்கள் கொண்டாடவில்லை. இதுவே இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் பெறக்கூடிய தெளிவான முடிவாகும். இந்த ஹதீஸ் சர்வதேச பிறைக்கு சார்பான ஆதாரமே தவிர நாட்டுக்கு நாடு பிறை காணுதலுக்கு ஆதாரமன்று. இது வரை நாம் ஹதீஸின் அறிவிப்பின் அடிப்படையில் விளக்கத்தினைப் பெற்றுக் கொண்டோம். 


அடுத்து நான் முஹத்திஸீன் எனப்படும் ஹதீஸ் அறிஞர்களின் அடிப்படை ரீதியாக உங்களுக்கு சில விடயங்களைச் சொல்லலாமென நினைக்கிறேன். அதாவது இதுவரை குரைப் - இப்னு அப்பாஸ் தொடர்பான அறிவிப்பின் அடிப்படையில் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எங்கு பிறை கண்டாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டிலேயே இருந்தார்களென்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொண்டோம். வேறு இடங்களில் கண்ட பிறையை இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஏற்றுக் கொள்பவராக இருந்ததற்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கும் வார்த்தைகள் ஆதாரமாகவும் சாட்சியாகவும் உள்ளது. அந்த அறிவித்தல்களை உங்கள் முன் எடுத்து வைப்பதற்கு நான் ஆசைப்படுகிறேன். இதனை இமாம் பைஹகி (றஹிமஹுல்லாஹ்) ஸுனன் குப்ரா என்ற நூலிலும் இமாம் தபரானி (றஹிமஹுல்லாஹ்) முஃஜம் அல் கபீர் என்ற நூலிலும் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த செய்தியை தாவூஸ் இப்னு கைஸான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.


மதீனாவில் இப்னு அப்பாஸும் இப்னு உமரும் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் மதீனாவின் கவர்னரிடம் ஒருவர் வந்து நான் ஹிலாலைக் கண்டேன் என்று சொன்னார். இந்த அறிவித்தலை ஏற்றுக் கொள்வது பற்றி மதீனாவின் கவர்னர் இப்னு அப்பாஸையும் இப்னு உமரையும் நாடினார். இப்னு அப்பாஸும் இப்னு உமரும் அந்த அறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கூறினார்கள். ஏனென்றால் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் றமழானை ஆரம்பிப்பதற்கு ஒருவருடைய தகவலை ஏற்றுக் கொண்டும் மாதத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். மாதத்தை முடிப்பதற்குத்தான் இருவருடைய தகவல் தேவையென்று எதிர்பார்ப்பார்த்தார்களென இப்னு அப்பாஸ{ம் இப்னு உமரும் விளக்கினார்கள். எனவே இங்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வார்த்தைகளினாலேயே வருகின்ற தகவலை ஏற்றுக் கொள்ளுமாறு ஏவுகிறார்கள். இது ஒரு தெளிவான ஆதாரமாகும். குரைப் - இப்னு அப்பாஸ் தொடர்பான சம்பவமும் தகவல் வழங்கியவரின் தகவலை ஏற்றுக் கொள்ளுமாறு இப்னு அப்பாஸ{ம் இப்னு உமரும் வழங்கிய தீர்ப்பும் எமக்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் நிலைப்பாடு என்னவென்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தகவலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் நிலைப்பாடு என்று கூறுவது வெறுமனே நாம் இப்னு அப்பாஸின் ஹதீஸைத் துருவி ஆராய்ந்து எடுத்த எமது தனி விளக்கமோ முடிவோ அல்ல. அந்தக் கருத்தை இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களே தனது வார்த்தையினால் நேரடியாகக் கூறியதாக வந்துள்ள அறிவித்தல்களைக் கொண்டுதான் நாம் நிரூபித்தோம். சுருங்கச் சொன்னால் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களைப் பொருத்தவரை தகவல் எங்கிருந்து வந்தாலும் அத்தகவலை ஏற்றுக் கொள்பவராகவே இருந்தார்கள். இதற்கு மாறாக அவர் இருந்திருப்பின் அன்றைய மதீனா முறண்பாடான முடிவுகளையே எடுத்திருக்க வேண்டும். ஆனால் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹ{ அன்ஹ{) அவர்களோ தகவலை ஏற்றுக் கொள்ளுமாறு ஏவியதுடன் றஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வழிமுறையையும் எடுத்துக் காட்டினார்கள். அதாவது ஒருவருடைய தகவலைக்; கொண்டு மாதத்தைத் தொடங்களாமென்றும் மாதத்தை முடிப்பதற்கே இரு சாட்சிகளின் தகவல் அவசியமென்றும் சொல்லிக் கொடுத்தார்கள். இதில் ஒரு முக்கிய சர்ச்சைக்கான தீர்ப்பும் எமக்குக் கிடைக்கிறது. அதாவது மாதத்தை ஆரம்பிப்பதற்கு எத்தனை பேருடைய தகவல் தேவை? இன்னும் மாதத்தை முடிப்பதற்கு எத்தனை பேருடைய தகவல் தேவை? போன்ற கேள்விகளுக்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு), இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோர் கொடுத்த தீர்ப்பு போதுமான பதிலாக இருக்கிறது. 


தகவலை மறுக்காது ஏற்றுக் கொள்வதென்று முடிவு செய்த பின்னர் இங்கு எழும் இன்னுமொரு கேள்வி என்னவென்றால் வருகின்ற தகவல் எந்த நாட்டிலிருந்து வர வேண்டுமென்றோ எந்தத் தூர எல்லைக்குளிருந்து வர வேண்டுமென்றோ நிபந்தனை ஏதேனும் உள்ளதா என்ற கேள்விதான் அது. இந்தக் கேள்விக்கு பதில் கூறுவதாயின் அதன் பதிலாவது குர்ஆனிலும் ஸுன்னாவிலும் பிறை காணப்பட வேண்டிய நாட்டின் எல்லைகள் பற்றியோ அல்லது குறிப்பிட்ட து}ரங்களைப் பற்றியோ வந்திருக்கும் எந்த ஆதாரத்தையும் காண முடியாது. அது மட்டுமின்றி எந்த மத்ஹப்களில் நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்ற கருத்தைச் சொன்னார்களோ அவர்களிடம் கூட அதற்கென்று எந்த அளவுகோள்களும் கிடையாது. அந்த மத்ஹப்களைச் சேர்ந்தவர்கள் இன்னின்ன நாட்டிலிருந்து தகவல் வந்தால் ஏற்றுக் கொள்ளலாமென்றோ இன்னின்ன நாட்டிலிருந்து தகவல் வந்தால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றோ ஒரு குறிப்பிட்ட அளவுகோளினை எடுப்பதற்கு அவர்களால் இயலாதிருக்கிறது. அதன் காரணம் அவ்வாறு அவர்கள் சொல்வதற்கு குர்ஆனிலும் ஸுன்னாவிலும் எந்த ஆதாரத்தையும் அவர்களால் பெற்றுக் கொள்ள முடியாததேயாகும். இன்று நாம் வாழும் சூழலின் அடிப்படையில் ஒரு உதாரணத்தைக் கூறுவதாயின் இலங்கை நாட்டின் புத்தளம் என்ற பகுதியில் பிறை காணப்பட்டால் அந்தப் பிறையைத் தென்னிந்தியாவில் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள். காரணத்தைக் கேட்டால் அந்தப் பிறை இலங்கையுடைய பிறையென்று சொல்கிறார்கள். என்றாலும் புத்தளத்திலிருந்து தென்னிந்தியாவுக்குள்ள தூரத்தை விடவும் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்குள்ள து}ரம் பல மடங்கு அதிகமாகும். இப்படியிருக்க தென்னிந்தியாவில் காணப்பட்ட பிறையை வட இந்தியாவில் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏனென்றால் அது ஒரே நாட்டின் பகுதிதான் என்று காரணம் சொல்கிறார்கள். இவர்களின் இந்த வாதம் சரியானதென்று தர்க்காPதியாகவும் அவர்களால் நிரூபிக்க முடியாது. வானவியல் ரீதியாகவும் நிரூபிக்க வழியில்லை. மார்க்க ரீதியாகவும் நிரூபிக்க அவர்களிடம் ஆதாரமில்லை. இந்தக் கருத்தை எந்த அடிப்படையிலும் அவர்களால் சரியென்று நிரூபிக்க முடியாது. தங்கள் நாட்டு எல்லைக்குள் மாத்திரமே தகவலை ஏற்றுக் கொள்வதென்றால் அதனை சுருக்கமாக தேசியவாதம் - யெவழையெடளைஅ என்றே சொல்ல வேண்டும். இதனைத்தான் அறபியில் அல் கவ்மிய்யா என்று சொல்லப்படுகிறது. எனவே இவர்களின் இந்த வாதங்கள் தேசியவாத்தின் பிடிவாதமான போக்கே தவிர எமது மார்க்கத்திற்குச் சம்பந்தமான விடயமல்ல. அந்தத் தேசியவாதத்தின் ஜாஹிலிய்ய மூடப் பழக்க வழக்கங்கள்தான் இன்று எமது நாட்டிலும்; எமது மார்க்கத்திலும் நுழைந்திருக்கிறதே தவிர இலங்கைக்குள் பிறை கண்டால் ஏற்றுக் கொள் என்றோ இலங்கைக்கு வெளியே பிறை கண்டால் ஏற்றுக் கொள்ளாதே என்றோ கூறுவதற்கு மார்க்கத்தில் எங்கும் ஆதாரமில்லை. மாலைதீவுகளில் பிறை காணப்பட்டால் அந்தப் பிறையை இலங்கையில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இலங்கையிலிருந்து மாலைதீவுக்கு அரை மணி நேரத்தில் சென்று விடக்கூடிய பிரயாண தூரம்தான் இருக்கிறது. எனவே இவர்களின் இவ்வாறான வழிமுறைகள் மார்க்கத்தின் ஆதாரங்களோடு பின்பற்றப்படும் வழிமுறைகளல்ல. மாறாக இந்த வழிமுறைகள் அனைத்தும் தேசியவாதத்தின் அடையாளங்களாகும். நாம் வெறுமனே தேசியவாதத்தின் தன்மைகளையும் அதன் பழக்கங்களையும் எம்மில் உருவாக்கிக்கொண்டிருக்கிறோமே தவிர இந்தப் பழக்கங்களுக்கும் எமது மார்க்கத்துக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. இதனடிப்படையில் கவனிக்கையில் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு), குரைப் (ரழியல்லாஹ{ அன்ஹ{) தொடர்பான ஹதீஸானது தேசியவாதத்திற்குச் சம்பந்தமான அறிவித்தலல்ல. .அந்த அறிவித்தல் எமது மார்க்கத்தோடு தொடர்புடைய அறிவித்தலாகும். 

உலமாக்கள் பிறை விடயத்தில் இன்று நம் சமூகத்தில் கூறுவது போன்று நாட்டுக்கு நாடு என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தவில்லை. உலமாக்களின் வார்த்தையில் அவர்கள் அதனை இஹ்திலாபுல் மதாலிஹ் என்றுதான் அழைக்கிறார்கள். பிறை விடயத்தில் இஹ்திலாபுல் மதாலிஹ் என்பது சூரியன் உதிக்கும் வேறுபாட்டின் அடிப்படையில் அல்லது பிரயாண தூரத்தின் எல்லையின் அடிப்படையில் பிறை காண்பதன் எல்லைகளை வகுப்பதைக் குறிக்கும். இதனடிப்படையில் அவரவர் தங்கள் பகுதியில் காணும் பிறையினடிப்படையில் செயற்படுவர். இதுதான் உலமாக்கள் இடத்துக்கிடம் பிறை பார்க்கப்பட வேண்டுமென்பதற்கு முன்வைக்கக்கூடிய அடிப்படையாகும். இதனைச் சரிகாணும் உலமாக்களை இஹ்திலாபுல் மதாலிஹ் என்ற கருத்தைச் சுமந்த உலமாக்களென்று நாம் சொல்லலாம். இவர்களின் இந்தக் கருத்தனடிப்படையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சு10ரியன் உதிக்கும் அடிப்படையில் வேறுபாடு இருப்பதாக நாம் இதுவரை அறிந்ததில்லை. சு10ரியன் உதிக்கும் அடிப்படையில் வருகின்ற நேர வித்தியாசமெனும்போது அது குறைந்தது அரை நாளாவது வித்தியாசம் இருக்க வேண்டும். இதனைத்தான் வேறுபாடென்று சொல்ல முடியும். இஹ்திலாபுல் மதாலிஹ் என்ற அடிப்படைக்கு சார்பாக குர்ஆனிலும் ஸு ன்னாவிலும் எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியவில்லை. நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்ற கருத்து குர்ஆனும் ஸ{ன்னாவும் கூறும் கருத்தல்ல. இந்தக் கருத்தை ஸஹாபாக்கள் தாபியீன்கள் யாரும் தெரிவிக்கவில்லை. அதே போன்று பின்வந்தோர்களில் அஇம்மதுல் முஸ்லிமீன்களான இமாம் அபூ ஹனீபா (றஹிமஹு ல்லாஹ்), இமாம் மாலிக் (றஹிமஹுல்லாஹ்), இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்), இமாம் அஹ்மத் (றஹிமஹு ல்லாஹ்), போன்றவர்கள் கூட இந்தக் கருத்தைக் கூறவில்லை. இக்கருத்து பிற்பட்ட காலத்தில் தோன்றிய கருத்தாகும். பிற்காலத்தில் வந்த மத்ஹப்வாதிகள் அவ்வப்போது தோன்றிய கருத்துக்களைப் பிடித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். அதேபோன்று இக்கருத்தை பல இமாம்கள் மறுத்துக் கூறியிருக்கிறார்கள். எனவேதான் இமாம் ஷாபிஈ (றஹிமஹ{ல்லாஹ்) சர்வதேச பிறைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தாலும் ஷாபிஈ மத்ஹபில் சர்வதேச பிறையின் கருத்தலுள்ளவர்களையும் நாம் காண முடிகிறது. அதே போன்று அதே மத்ஹபைச் சேர்ந்தவர்களில் நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்று வாதிடுபவர்களையும் நாம் காணலாம். இதனடிப்படையில் நான் கூறுவது என்னவென்றால் இஸ்லாமிய மார்க்கத்தில் பிறை காணுதல் என்ற விடயத்தில் குர்ஆனிலும் ஸுன்னாவிலும் ஸஹாபாக்களின் நடவடிக்கையிலும் உள்ளதைத் தவிர அதற்கு வெளியே சென்றால் அங்கு வஹ்ததுல் மதாலிஹ் - இஹ்திலாபுல் மதாலிஹ் என்ற இரு கருத்தைத் தவிர வேரெந்தக் கருத்துமில்லை. 


அந்நிய மார்க்கங்களின் வழிமுறைகளைக் கையாள்பவர்களைப் பற்றிக் கூறுவதாயின்இ அந்நிய மார்க்கங்களைப் பொருத்தவரை அவர்கள் கணிப்பிடும் வானவியல் அடிப்படையில் அவர்களிடம் நாட்டுக்கு நாடு வேறுபாடென்ற பிரச்சினை கிடையாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் அவர்கள் கணிப்பிடும் வழிமுறை ஒன்றுக்கொன்று வித்தியாசமானதாகும். அதே போன்று நம் சமூகத்தில் அந்த அந்நியர்கiளின் வழியில் செல்லும் கூட்டத்தினரைப் பொருத்தவரை அவர்களில் ஒவ்வொரு ஷெய்குக்கும் ஒவ்வொரு வழிமுறை இருக்கிறது. ஒவ்வொரு தாPக்காவுக்கும் ஒவ்வொரு வழிமுறை இருக்கிறது. அவர்கள் மத்தியில் நாட்டுக்கு நாடென்ற கருத்துகள் கிடையாது. அவர்களைப் பொருத்தவரை நட்சத்திரக் கணிப்பின் அடிப்படையில் அதனைக் கணித்துக் கொள்வார்கள். இவ்வாறு கணிப்பிடும் முறைகளில் கூட ஒவ்வொரு தாPக்காவிலுமுள்ள ஷெய்க்மாருக்கும் ஒவ்வொரு கணிப்பு முறை இருக்கிறது. அந்தக் கணிப்பினடிப்படையில் அந்த ஷெய்க்மார்கள் மாதம் வருவதற்கு முன்பே இந்த நாளில்தான் எமக்கு றமழான் ஆரம்பிக்கிறதென்றும் இந்த நாளில்தான் எங்கள் பெருநாள் தினமென்றும் முடிவு செய்து விடுவார்கள். இதுதான் ஒவ்வொரு தாPக்காவிலும் அவர்களின் ஷெய்க்மார்கள் பிறைக் கணக்கை முடிவெடுக்கும் வழிமுறையாகும். இந்த வழிமுறை எங்கு பிறை கண்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற கருத்திற்கோ நாட்டுக்கு நாடு தனித்தனியாக பிறை பார்க்க வேண்டுமென்ற கருத்திற்கோ சம்பந்தமானதல்ல. மாறாக இது அந்நிய மார்க்கங்களின் வழிமுறையோடு சம்பந்தமானதாகும். இவ்வாறு வானவியல் அல்லது வானசாஸ்திரத்தின் அடிப்படையில் கணக்கெடுப்பது இன்றிருக்கும் இந்துக்களினதும் நெருப்பு வணங்கிகளினதும் வழக்கமும் வழிமுறையுமாகும். இவ்வழிமுறை இந்துக்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் அவர்களின் முக்கியமான சம்பிரதாயமாக இருந்து வருகிறது. வானத்திலுள்ள கோள்களினதும் நட்சத்திரங்களினதும் நிலையைக் கவனித்து அதனைக் கொண்டு நல்ல நேரத்தையும் கெட்ட நேரத்தையும் கணித்துக் கொள்வது குறிப்பாக இந்துக்கள் மத்தியில் முக்கியதொரு விடயமாகக் கருதப்படுகிறது. இருப்பினும் அவ்வாறு கணிப்பதில் கூட அவர்களுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகளும் பிரிவுகளும் காணப்படுகின்றன. பல்வேறு மதங்களில் நல்ல நாளையும் கெட்ட நாளையும் பிறந்த நாளின் பலனையும் இன்னும் எத்தனையோ விடயங்களையும் வானசாஸ்திரத்தைக் கொண்டுதான் முடிவெடுக்கிறார்கள். இன்று கூட இந்து மதத்தில் ஒருவர் திருமணம் செய்ய வேண்டுமென்றால் அவர்களின் மதகுருமார்களிடம் சென்று வானசாஸ்திரத்தின் அடிப்படையில் கணித்து ஒரு குறிப்பிட்ட நாளை திருமணத்திற்கான நல்ல நாளென்று முடிவு செய்து கொள்வார்கள். எனவே இவ்வாறான வழிமுறைகள் அந்நிய மதத்தைச் சேர்ந்தவர்களுடைய வழிமுறைகளென்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் நாம் விளங்குவது என்னவென்றால் அந்நிய மார்க்கங்களைப் பொருத்த வரை அவர்களிடம் பிறையைக் கணக்கிடுவதில் பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அவர்கள் அதனை நாட்டுக்கு நாடு வேறுபாடானதென்று கருதுவதில்லை. ஒரு விதத்தில் பிறையை நாட்டோடு தொடர்புபடுத்துவது ஒரு முட்டாள்தனமாகும். 


இந்துக்களின் மதகுருமார்களைப் பொருத்தவரை அவர்களுக்கு மத்தியில் பல கருத்து முறண்பாடுகள் இருக்கின்றன. இங்கு பரிதாபமான நிலை என்னவென்றால் இன்று முஸ்லிம் சமூகமும் பிறை விடயத்தில் இந்து மதத்தின் வழிமுறையைப் பின்பற்றுவதுதான். பிறை தொடர்பாக இந்துக்களின் அமாவாசையென்ற நாளை எமது மக்களும் எடுத்துக் கொண்டார்கள். முப்பதாம் பிறைக்குப் பின் பிறை மறைந்து விடும், அதன் பின்னர்தான் புதிய பிறை தோன்றுகிறது என்பது அமாவாசை தொடர்பாக இந்துக்களின் நிலைப்பாடாகும். ஆனால் இது பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு வித்தியாசமானது. அதாவது முப்பதாவது பிறையின் பின்பு பிறை மறைந்து அமாவாசை ஏற்பட்டு அதன் பின்புதான் புதிய பிறை தோன்றுமென்ற கருத்து இஸ்லாமிய மார்க்கத்திலுள்ள அடிப்படைகளல்ல. அந்நிய மதத்தவர்களுக்கு முப்பதாம் பிறைக்குப் பின் மறைந்திருக்கும் பிறையைத் தேடிப் பிடிப்பதோ அல்லது தேடாது விட்டுவிடுவதோ எந்த விதத்திலும் முக்கியத்துவமுடையதொன்றல்ல. இஸ்லாமிய மார்க்கம் பிறையைக் காணவில்லையென்றால் அதனை எவ்வாறேனும் தேடிக் கண்டுபிடிக்கச் சொல்லவில்லை. இந்த விடயம் பற்றி அல்லாஹ்வின் து}தர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் எமக்கு வழிகாட்டாமல் செல்லவுமில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:


பஇதா ஹ{ம்ம அலைக்குமுஷ் ஷஹ்ர பஅதிம்முஹு  ஸலாஸீன்


“உங்களுக்கு அது மறைக்கப்பட்டால் மாதத்தை முப்பதாகப் பூரணமாக்குங்கள்”


இவ்வாறுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். எனவே இருபத்தி ஒன்பதாம் பிறைக்குப் பின்னர் பிறை தென்படவில்லையென்றால் அதனை அடுத்துள்ள நிலை தொடர்பாக இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையும் அந்நிய மார்க்கங்களின் வழிமுறையும் முற்றிலும் வித்தியாசமானதாகும். அந்நியர்களின் வழிமுறையில் பிறை தென்படவில்லையென்று அதனது தற்போதைய நிலையை அவர்கள் ஒரு கணிப்பில் எடுத்து விடுகின்றனர். இந்த வழிமுறை எமது மார்க்கத்தின் வழிமுறையாக ஒருபோதும் இருக்க முடியாது. இன்று எமது சமூகம் அந்நிய மத நம்பிக்கையையும் வழிமுறையையும் பிறை விடயத்தில் கையாண்டதால் யவ்முஷ் ஷக் எனும் சந்தேகத்துக்குரிய நாள் எப்போது என்பதைத் தீர்மானிக்கும் விடயத்தில் அமாவாசையென்று காரணம் காட்டி மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ள அந்நிய வழிமுறையான வானசாஸ்திரத்தின் அடிப்படைகளை பிறை காணுதலைத் தீர்மானிக்கும் அளவுகோளாக்கிவிட்டர்கள். இது இஸ்லாம் காட்டும் அடிப்படையா? நிச்சயமாக எமது முஸ்லிம் சமூகம் பிறை விடயத்தில் புகுத்தியிருப்பது அந்நியர்களின் வழிமுறைகளைத் தவிர வேரில்லை. இந்த அடிப்படையை நாம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். 


நாம் இந்த முஸ்லிம் சமூகத்தை நோக்கி நீங்கள் ஏன் மார்க்க விடயத்தில் அந்நியர்களுடைய வழிமுறையைக் கையாள்கிறீர்களெனக் கேட்டால் அவர்கள் எங்களை நோக்கி இந்த வஹ்ஹாபிகள் கிறிஸ்தவர்களுக்குப் பின்னாலும் அமெரிக்காவுக்குப் பின்னாலும் இங்கிலாந்துக்குப் பின்னாலும் நிற்கின்றவர்களென்று பதிலுக்கு குதர்க்கம் பேசுகிறார்கள். உண்மையான நிலைப்பாடுகளை இன்னும் புரிந்து கொள்ளாத இவர்களை நோக்கி நாங்கள் பின்வருமாறு ஒரு கேள்வியைக் கேட்கலாம். அதாவது நீங்கள் உங்கள் வணக்கங்களில் கலிலியோ போன்றவர்களின் அடிப்படையையும் இந்துக்களின் வழிமுறைகளையும் எடுத்து அதனை உங்கள் மார்க்கத்தின் வழிமுறையாகச் சுமக்கின்றீர்கள். அவ்வாறாயின் இங்கு யார் உண்மையில் காபிர்களின் பின்னால் இருப்பது? வானவியல் அடிப்படையில் மாதத்தைத் தொடங்கலாமா என இவர்களிடம் வினவினால் அது முடியாது வானவியலைக் கையாள்வதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது என்று சொல்வார்கள். இப்படிக் கூறும் இவர்களே யவ்முஷ் ஷக் என்ற நாளில் மாத்திரம் வானவியலைக் கையாளலாமென்று ஒரு புதிய கருத்தைக் கூறுகிறார்கள். வானவியலைக் கையாள்வதைப் பொருத்தவரை அது தடை செய்யப்பட்டதொரு விடயமென்று இப்னு உமர் (ரழியல்லாஹு  அன்ஹு) அறிவிக்கும் ஹதீஸை இமாம் புஹாரி முஸ்லிம் ஆகியோர் பதிவு செய்திருக்கிறார்கள்.


நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:


இன்னா உம்மதன் உம்மிய்யா லா நக்துபு வலா நஹ்ஸ{பு யகூனுஷ் ஷஹ்ரு ஹாக்கதா ஹாக்கதா ஹாக்கதா அவ் ஹாக்கதா ஹாக்கதா ஹாக்கதா


நாங்கள் ஒரு உம்மி உம்மத். நாம் படிப்பையோ கணக்கு வழக்கையோ பாவிக்க மாட்டோம். மாதம் என்பது இப்படி இப்படி இப்படி ( என்று பத்து விரல்களையும் மூன்று தடவை காட்டி முப்பது எனக் குறிப்பிட்டார்கள் ). அல்லது இப்படி இப்படி இப்படி இருக்கும் ( என்று பத்து விரல்களையும் இரு தடவைகள் காட்டி இருபது என்று குறிப்பிட்டு மூன்றாவது தடவை ஒரு விரலை மடித்து ஒன்பது விரல்களைக் காட்டி இருபத்தி ஒன்பது எனக் குறிப்பிட்டார்கள);.


எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன இந்த வார்த்தையின் அடிப்படையில் ஷாபிஈ மதிஹப்வாதிகள்இ ஸலபிகள்; இன்னும் பலர் வானவியல் கல்வியைக் கையாள்வது தடையென்று தீர்ப்பளித்துள்ளார்கள். ஆனால் இன்று எமது சமூகமோ ஒரு புறம் வானவியல் கல்வியைக் கையாள்வதைக் கூடாதென்று கூறிவிட்டு இன்னுமொரு புறத்தால் அந்தக் கல்வியை யவ்முஷ் ஷக்குடைய நாளில் மட்டும் கையாளலாமெனக் கூறுகின்றார்கள். றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அதனைத் தடை செய்திருக்கும்போது இவர்கள் எங்கிருந்து அந்தத் தடையை நீக்குவதற்கு அனுமதியைப் பெற்றுக் கொண்டார்கள்?.


மேலே கூறப்பட்ட நபிமொழியின் அடிப்படையில் மாதம் தொடங்குவதையோ அல்லது முடிவதையோ தெரிந்து கொள்வதற்கு எந்தக் கல்வியையோ கணக்கு வழக்குகளையோ பயன்படுத்த முடியாதென்ற விடயத்தில் இஸ்லாமிய உம்மத் உறுதியான முடிவோடு இருக்கிறது. மாதத்தைத் தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் இஸ்லாம் எமக்கு இலகுவான வழியைக் காட்டித் தந்திருக்கிறது. அதாவது இருபத்தி ஒன்பது நாட்களில் அல்லது முப்பது நாட்களில் மாதத்தைப் பூரணமாக்கிக் கொள்ள முடியும் என இஸ்லாம் வழி காட்டுகிறது. இன்று யாரெல்லாம் நாங்கள் வானவியல் கல்வியைக் கையாளமாட்டோமென்றும் அதனைக் கையாள்வது மார்க்கத்தில் கூடாதென்றும் கூறுகிறார்களோ அவர்கள் அதனை றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழியை அறிந்தே அவ்வாறு கூறினார்கள். அவர்களை நோக்கி நான் கேட்க விரும்புவது என்னவென்றால்இ அந்நபிமொழி எதனைத் தடைசெய்யப்பட்டதென்று கூறுகின்றதோ அதனை நன்கு விளங்கி அதனைப் புரிந்த பின்னர் அதிலிருந்து தவிர்ந்து கொண்டீர்கள். இவ்வாறிருக்க யவ்முஷ் ஷக்கின் நாளில் மட்டும் வானவியலைப் பயன்படுத்துவதற்கான அனுமதி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?. அவ்வாறு அனுமதி வழங்கும் ஆதாரத்தை நீங்கள் காட்ட முடியுமா? அது நிச்சயமாக முடியாது. நீங்கள் ஒரு விடயத்தை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது மார்க்க விடயங்களில் எதனை நாம் முடிவாக எடுக்கின்றோமோ அதனை நாம் பின்பற்ற வேண்டும். எதனைச் செய்வதிலிருந்தும் அல்லாஹ்வின் து}தர் தடுத்தாரோ அதனை நாம் எவ்வாறு செய்ய முடியும்? அவ்வாறு நடந்து கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல. இதனடிப்படையில் பார்த்தால் இன்று எமது சமூகத்திலுள்ளவர்கள் தடை செய்யப்பட்டதொரு விடயத்தை அது தடை செய்யப்பட்டதென்று தெரிந்து கொண்டுதான் அதனைக் கையாள்கிறார்கள். இந்த சமூகம் அறியாமையினால் அதனைச் செய்யவில்லை. நன்கு தெரிந்திருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அதனைச் சரிகாண்கிறார்கள். 


ஒரு காலம் இருந்தது. அன்று பிறை கலண்டர் என்ற பெயரில் அடுத்து வரும் வருடத்தில் வரக்கூடிய றமழான் மாதம் எந்த நாளில் ஆரம்பிக்கின்றதென முன்கூட்டியே அந்தக் கலண்டரில் அடையாளமிட்டிருப்பார்கள். ஆனால் அன்றிருந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அவர்களும் அந்தக் கலண்டரைச் சரிகண்டு பின்பற்றினார்கள். இதனால் அவர்கள் சமூகத்தைத் தெளிவிலிருந்து து}ரமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அதே ஜம்இய்யதுல் உலமா அந்தப் பிறைக் கலண்டரை தவறானதென்று சொல்கிறது. அவர்களே அதனைத் தவறென்று ஏற்றுக் கொண்டதையிட்டு நான் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். இது அவர்கள் இந்த உம்மத்திற்குச் செய்திருக்கும் பெரும் உதவியென்றே நான் கருதுகிறேன். ஏனென்றால் இந்த உம்மத்திலுள்ள அனைவரும் பிறைக் கலண்டர் மீது ஒரு தனி நம்பிக்கையை வைத்திருந்தார்கள். அதனைக் கொண்டுதான் அந்த மக்கள் அவர்களுடைய நோன்பையும் பெருநாளையும் அது போன்ற ஏனைய அவசியமான ஏற்பாடுகளையும் செய்து வந்தார்கள். ஆனால் இன்று அதனை ஜம்இய்யதுல் உலமா தவறென்று ஏற்றுக் கொள்கிறது. இந்த விடயம் தவறானதென பல வருடங்களுக்கு முன்பே நாம் அவர்களுக்கு எத்தி வைத்துவிட்டோம். அந்நேரத்தில் எமக்கெதிராக அவர்கள் வாதிட்டார்கள். தங்களின் அந்தக் கருத்திலிருந்து அவர்கள் வாபஸ் பெற்றதற்காக நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செழுத்துகிறோம். ஒரு காலத்தில் ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்தவர்கள் வானொலி நிகழ்ச்சிகளில் வானவியலைக் கையாள்வதற்கு சார்பாகப் பேசினார்கள். அதை இந்த முஸ்லிம் சமூகமும் கேட்டுக் கொண்டிருந்தது. நாம் அன்றே இதற்கு மறுப்பைத் தெரிவித்திருந்தோம். இன்று அவர்கள் தாங்கள் கூறி வந்த அந்தக் கருத்தையும் முன்பு போல வாபஸ் வாங்கி விட்டார்கள். அவர்கள் சொல்வதாவது : வானவியலைப் பயன்படுத்தக் கூடாது. ஆனாலும் நாம் அதனை யவ்முஷ் ஷக்குடைய நாளில் மட்டும் பாவிப்பது குற்றமில்லை. இவ்வாறு இன்று வாதாடுகிறார்கள். இவர்கள் தாங்கள் முன்பு கூறிக் கொண்டிருந்த கருத்துகளை எவ்வாறு வாபஸ் வாங்கினார்களோ அதே போன்று யவ்முஷ் ஷக்குடைய நாளில் மாத்திரம் வானவியலைக் கையாள்வது தவறில்லையென்ற கருத்தையும் இன்ஷா அல்லாஹ் இவர்கள் விரைவில் வாபஸ் வாங்குவார்களென்று நான் எதிர்பார்க்கிறேன். நாங்கள் யவ்முஷ் ஷக்குடைய நாளில் வானவியலைக் கையாள்வதை விட்டுவிட்டு பிறையைக் கண்டு தீர்மானிப்போம் என்று இவர்கள் கூறுவார்களென நான் எதிர்பார்க்றேன். இதே போன்று குர்ஆனிலும் ஸ{ன்னாவிலும் ஆதாரமில்லாத நாட்டுக்கு நாடு பிறையென்ற கருத்தையும் இவர்கள் தவறென்று புரிந்து அதில் விளக்கத்தைப் பெற்றுக் கொண்டு தங்களின் நிலையை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த வழியில் அமைத்துக் கொண்டு இந்த முஸ்லிம் சமூகத்திற்கு உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருப்பார்களென்;று நான் எதிர் பார்க்கிறேன் இன்ஷா அல்லாஹ். 


ஓர் முக்கிய விடயம்


இன்றைய முஸ்லிம் சமூகம் மார்க்கத்தின் எத்தனையோ விடயங்களைப் புரிய வேண்டிய தேவையிருக்கிறது. மிக முக்கியமான விடயமென்று பார்த்தால் பிறை தொடர்பான விடயம் மட்டுமின்றி இன்னும் பல விடயங்கள் கவனம் செழுத்தப்பட வேண்டும். இந்நாட்டில் பிறை தொடர்பாக பல தவறான கருத்துகள் வெளிவந்ததன் காரணமாகவே அந்த விடயத்தில் எமது பொறுப்புணர்வை உணர்ந்து அதில் பதிலளிப்பதற்குப் பின்வாங்காமல் அது பற்றிய தெளிவுகளை முன்வைக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. இதனை விடவும் அவசியமானதும் முக்கியமானதுமான விடயம் என்னவென்றால்இ எமது சமூகத்தில் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை விடயத்தில் தெளிவின்மையும் மயக்கமும் ஏற்பட்டிருப்பதாகும். குறிப்பாகச் சொல்வதென்றால் கொள்கையைக் கற்பிக்கின்றோமென்றும் உலமாக்களை உருவாக்குகிறோமென்றும் கூறிக்கொண்டு செயற்படுகின்ற பல மத்ரஸாக்களில் இஸ்லாமிய அகீதாவையும் அல்லாஹ்வின் பெயர் பண்புகளை விளங்கும் கல்வியின் விடயத்திலும் அந்நிய வழிமுறைகளும் நிராகரிப்புடைய அடிப்படைகளும் கையாளப்படுகின்றன. இவைகளை அழித்து முஸ்லிம்களிடத்தில் அல்லாஹ்வினதும் அவனது து}தரினதும் மீதான நம்பிக்கையை வளர்க்க வேண்டுமென்றால் முதலில் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் அல்லாஹ் அல் குர்ஆனிலே காட்டித் தந்திருப்பது போன்றே கற்கின்ற வழிமுறையை உருவாக்க வேண்டும். இந்த முக்கியமான அம்சத்தை நான் உங்களுக்கு நினைவூட்ட வேண்டுமென விரும்பினேன். 


பிறை விடயத்தில் முஸ்லிம் இமாம்கள் குரைப் - இப்னு அப்பாஸின் ஹதீஸை சர்வதேச பிறைக்கு எதிரான ஆதாரமாக எடுத்த போது அதனை ஏனைய இமாம்கள் அதற்கு மறுப்பைக் கொடுத்து அது தொடர்பான தெளிவையும் காட்டினார்கள். அதனைத் தொடர்ந்து இன்றைய காலத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த P. ஜெய்னுல் ஆபிதீன் பமன் ஷஹித மின்குமுஷ்ஷஹ்ர பல்யஸும்ஹு “…..உங்களில் யார் இந்த மாதத்தை சாட்சி பெறுகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் ” என்ற வசனத்தையும் இன்னும் ஸுனன் அபூதாவூதில் பதிவாகியிருக்கும் அபூ உமைர் அல் அன்சாரி (ரழியல்லாஹு  அன்ஹு) அறிவிக்கும் ஹதீஸையும் நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்பதற்கு ஆதாரமாகக் காட்;டுகிறார். இதன் உண்மையான நிலைப்பாடு என்னவென்று நாம் பார்க்கலாம். 


அபூ உமைர் அல் அன்சாரி (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்


ஒரு பிரயாணக் கூட்டம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நாங்கள் பிறை கண்டோம் என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிலாலிடம் பிலாலே ! நோன்பைத் திறக்குமாறு மக்களுக்கு ஏவுங்கள் என்று கூறினார்கள்.


இந்த அறிப்பின் இன்னுமொரு பகுதி ஸ{னன் நஸாயீயிலும் பதிவாகிருக்கிறது. அந்த அறிவிப்பு சம்பவம் நிகழ்ந்த நேரத்தையும் சொல்கிறது. அந்நேரம் அஸருக்குப் பின் என்று ஸுனன் நஸாயீயுடைய அறிவுப்பு காட்டுகிறது. பிரயாணக் கூட்டம் தகவல் சொன்னபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு நோற்றிருந்தார்கள். எனவேதான் தகவல் கிடைத்தவுடன் உடனே பிலாலிடம்


பஅமரன்னாச அய்யுப்திரு வஅய்யர்து பில் முஸல்லா பில் ஹத் - “மக்களுக்கு நோன்பைத் திறக்குமாறு ஏவுங்கள் இன்னும் பெருநாள் தொழுகைக்காக நாளை முஸல்லாவுக்கு வரச் சொல்லுங்கள்


எனக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு கட்டளையிட்டதைப் பற்றி விளக்குகையில் இமாம் ஷாபிஈ ( றஹிமஹுல்லாஹ் ) கிதாபுல் உம் என்ற நூலில் கூறுவதாவது :


றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அஸருக்குப் பின் தகவல் வந்ததினால்தான் அடுத்த நாள் பெருநாள் தொழுகைக்கு வருமாறு கூறினார்கள். தகவல் சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன் ( ஸவாழுக்கு முன் ) வந்திருந்தால் அன்றைய தினமே தொழுதிருப்பார்கள்.


இவ்வாறு இமாம் அபூ அப்துல்லாஹ் முஹம்மது இத்hPஸ் அஷ்ஷாபிஈ ( றஹிமஹுல்லாஹ் ) தனது நூலிலே தெட்டத் தெளிவாகக் கூறிவிட்டார். 


அபூ உமைர் அல் அன்ஸாரி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை நாம் சற்று விரிவாக நோக்குவோம்.


அபூதாவூதின் அறிவிப்பின் படி


வஜாஅ ரகபுன் பி ஆஹிரின் நஹார்


பிரயாணக் கூட்டம் நாளின் கடைசியில் வந்தது எனப் பதிவாகியுள்ளது.


மற்றைய அறிவிப்பான நஸாயீயின் அறிவிப்பின் படி


பஃதல் அஸர் - அஸருக்குப் பின் எனப் பதிவாகியுள்ளது.


இன்று மனிதர்கள் தங்கள் அறிவீனத்தின் காரணத்தால் ஹதீஸின் அறிவித்தல்களை சரியாகக் கையாளத் தெரியாமல் எந்தளவுக்குச் சென்றுவிட்டார்களென்று கூறுவதென்றால்; அபூதாவூதின் அறிவிப்பில் வந்துள்ள ஆஹிரின் நஹார் என்ற வார்த்தைக்கு னுச. ரைஸ{த்தீன் என்பவர் அது நாளின் முதல் பகுதியைக் குறிக்கும் என்று விளக்கம் கொடுக்கிறார். ஆஹிரின் நஹார் என்பதை அவாஹிர் என்ற கருத்தில் எடுத்து விட்டார். அதற்கென்று வாதாடினார். ஸுனன் நஸயீயுடைய அறிபிப்பான பஃதல் அஸர் - அஸருக்குப் பின் என்ற அறிவித்தலைக் கொண்டு நான் அவரது வாதம் தவறானதென்று நிரூபித்தேன். எனவே அஸருக்குப் பின் என்பது மஃரிபை நெருங்கும் நேரமென்பதை நஸயீயுடைய அறிவிப்பு எமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அறிவித்தல்கள் தெளிவாக வந்த பின்னரும் மனிதர்கள் தங்களின் அறிவீனத்தின் காரணமாக ஹதீஸை எவ்வாறேனும் துருவித் துருவி ஆராய்ந்து அதனைத் தங்களுக்குச் சார்பாக ஆக்கிக் கொள்கிறார்கள். மேற்சொன்ன ஹதீஸ் தொடர்பான சர்ச்சைக்கு சுருக்கமாக பதிலளிப்பதாயின் அபூதாவூதின் ரிவாயத் ஒரு பிரயாணக் கூட்டம் வந்ததாக பொதுவான வார்த்தையில் அறிவிக்க நஸயீயுடைய ரிவாயத்தில் மேலும் தெளிவாக அஸருக்குப் பின் என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதால் பிரயாணக் கூட்டம் எந்த நேரத்தில் வந்ததென்பதை அது தெளிவாகக் காட்டிவிட்டது. இந்த அறிவித்தல் தொடர்பாக P. ஜெய்னுல் ஆபிதீன் சொல்கிறார்: பிரயாணக் கூட்டம் வந்து தகவலைச் சொன்னபோது நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் பஅமரஹ{ம் - அவர்களுக்கு ஏவினார் என்ற வார்த்தை அபூதாவூதில் பதிவாகியிருக்கிறது. இங்கே அவர்களுக்கு ஏவினார் என்றால் தகவல் சொன்ன அந்தப் பிரயாணக் கூட்டத்திற்கு நோன்பைத் திறக்குமாறு ஏவினார் என்பதே அதன் பொருளாகும். இவ்வாறு P. ஜெய்னுல் ஆபிதீன் விளக்கம் கொடுக்கிறார். இந்த சம்பவம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தின் அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுக்கு ஏவினார் என்ற வார்த்தையினை மொழி ரீதியாகப் பார்த்தால்


ஆத்தமீரு யுர்ஜ இலா அவ்வலு மா யுஃனா பிஹி


இங்கு தமீர் என்பதாக வரும் ஹும் என்ற வார்த்தை யாரைக் குறிக்கின்றதென்பதை ஆராய்ந்தால் அந்த அறிவிப்பில் ப அஸ்பஹ மதீனா ஸியாமன் -மதீனா ஒரு நாள் காலை நோன்பு வைத்தது என்று வந்திருக்கும் அடிப்படையில் பஅமரஹும்- அவர்களுக்கு ஏவினார் என்ற வாசகத்தில் தமீர் ஆக வருவது மதீனாவாகும். எனவே அவர்களுக்கு ஏவினார் என்பதன் பொருள் மதீனாவின் மக்களுக்கு ஏவினார் என்பதாகும். மேலும் இமாம் பைஹகீயின் ரிவாயத்தில் இன்னும் தெளிவாக பஅமரன்னாஸ – மக்களுக்கு ஏவினார் என்று வந்திருக்கிறது. இமாம் அலீமாபாதி ( றஹிமஹுல்லாஹ் ) ஸுனன் அபூதாவூதுக்கு விளக்கமாக எழுதிய அவ்னுல் மஃபூத் ஷரஹ் ஸுனன் அபூதாவூத் என்ற நூலில் பஅமரஹும் - அவர்களுக்கு ஏவினார் என்ற வார்த்தை வருகின்ற போது அடைப்புக் குறிக்குள் மக்களுக்கு ஏவினார் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். எனவே றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு ஏவினாரென்பது இங்கு தெளிவாகி விடுகிறது. இவ்வாறு இமாம்கள் அமரஹ{ம்- அவர்களுக்கு ஏவினார்கள் என்ற வாசகத்திற்கு மக்களுக்கு ஏவினாரென்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இது இப்படியிருக்க இதில் இன்று ஆராய்ச்சி செய்த P. ஜெய்னுல் ஆபிதீன் அமரஹ{ம் - அவர்களுக்கு ஏவினார் என்பதன் பொருள் அந்தப் பிரயாணக் கூட்டத்துக்கு ஏவினார் என்றுதான் இருக்க வேண்டும் எனக் கூறுகிறார். இதன் படி நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பிரயாணக் கூட்டத்துக்கு மட்டுமே நோன்பைத் திறக்குமாறு ஏவினாரென்ற தீர்ப்பை P. ஜெய்னுல் ஆபிதீன் கொடுக்கின்றார். இவர் இந்த ஹதீஸுக்குக் கொடுத்த இந்த விளக்கம் இவருக்கு முன் பூமியில் யாரும் கொடுக்காத விளக்கமாகும். நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்ற கருத்தில் வாதிட்ட இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூட இந்த ஹதீஸைத் தனது வாதத்துக்கு ஆதாரமாகக் காட்டவில்லை. ஏனென்றால் இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஹதீஸ்களை மடமைத் தன்மையின் முறையற்ற வழிமுறையில் கையாள்வதற்கு முயற்சி செய்யவில்லை. இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) ஒரு ஹதீஸ் அறிஞராக இருந்தார். எனவே அவர் அந்த ஹதீஸினைக் கையாளும் அடிப்படையைத் தெரிந்து அதனைக் கையாண்டார். இதனால்தான் இவ்வாறான சிறுபிள்ளைத் தனமான விளையாட்டை அவர் ஹதீஸ்களில் காட்டவில்லை. இமாம் நவவியுடைய தீர்ப்பில் தவறுகள் இருந்த போதும் அவர் ஒரு அறிஞரென்ற தரத்திலே ஆராய்ந்து முடிவு செய்திருந்தார். ஆனால் இன்று P. ஜெய்னுல் ஆபிதீன் என்பவர் தானும் ஒரு ஆராய்ச்சியைச் செய்து ஒரு தீர்ப்பைக் கொடுத்துவிட்டு தான் ஒரு புத்திசாலித்தனமான காரியத்தைச் செய்துவிட்டதாக எண்ணுகிறார். இவர்கள் தாங்களும் ஹதீஸ்களில் ஆராய்ந்து ஒரு விடயத்தைத் தேடிப் பிடிக்கிறார்கள். ஆனால் இவர்கள் தேடிப் பிடித்துள்ளதைப் பார்த்தால் இவர்களைப் போன்றவர்களுக்கு ஹதீஸ் என்ன சொல்கிறதென்று விளங்கிக் கொள்ளத் தெரியவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். இவர்களுக்கு அபூதாவூதின் அமரஹ{ம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் விளங்கவில்லையென்றால் அபூதாவூதுக்கு விளக்கமாக எழுதப்பட்ட அவ்னுல் மஃபூத் ஷரஹ் ஸுனன் அபூதாவூத் என்ற நூலில் இவர்களுக்கு விளக்கம் இருக்கிறது.


அபூ உமைர் அல் அன்ஸாரி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் எமக்குக் கூறுவது என்னவென்று சுருக்கமாக நோக்கினால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பிரயாணக் கூட்டம் வந்து தகவலைச் சொன்னவுடன் நபியவர்கள் மக்களை நோன்பைத் திறக்குமாறும் அடுத்த நாள் பெருநாள் தொழுகைக்காக முஸல்லாவுக்கு வருமாறும் கட்டளையிட்டார்கள். அடுத்த நாள் மக்களைத் தொழுகைக்கு வரும்படி ஏவியதன் காரணம் தகவல் அஸருக்குப் பின் வந்ததினாலாகும். ஏனென்றால் பெருநாள் தொழுகையை சு10ரியன் உச்சிக்கு வருவதற்கு முன்னர் தொழ வேண்டும். எனவேதான் இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்: சூரியன் உச்சிக்கு வருமுன் தகவல் வந்திருப்பின் நபியவர்கள் அன்றைய தினத்திலேயே பெருநாள் தொழுகையைத் தொழுதிருப்பார்கள். இவ்வாறு இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் விளக்குகிறார்கள். இந்த ஹதீஸை விளங்குவதற்குத் தகுதியாதொரு இமாமாக இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) இருந்ததால் அவர் அதனை சரியாக ஆராய்ந்து தெளிவுபடுத்திச் சென்றார். எனவே இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) பிரயாணக் கூட்டம் ஸவாலுக்கு முன் வரவில்லையென்பதை எமக்குத் தெளிவுபடுத்துகிறார். ஆனால் இந்த ஹதீஸ{க்குத் தானும் ஒரு விளக்கத்தைச் சொல்லியாக வேண்டுமென முந்திக் கொண்ட Dr. ரைஸுத்தீன் "ஆஹிரின் நஹார்" என்ற வார்த்தைக்கு மறுநாள் காலையென்று அர்த்தம் சொல்கிறார். நான் இங்கு குறிப்பிட விரும்புவது என்னவெனில், இவர்கள் தங்களின் அறியாமையினால் தங்களுக்கென்று ஒரு வழிமுறையை அமைத்துக் கொண்டு குர்ஆனாலும் ஹதீஸ்களாலும் ஆதாரமென்று காட்டி அந்தக் குர்ஆனையும் ஹதீஸையும் எப்படியேனும் தாங்கள் கொடுக்கின்ற விளக்கத்துக்குச் சார்பானதாக ஆக்கிக் கொள்வதற்கு முயற்சி செய்கிறார்கள். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இவர்களின் அனைத்து வழிகேடான விளக்கங்களுக்கும் நாம் பதிலளித்த பின்னரும் அதே தவறான கருத்துக்களையே மீண்டும் சுமந்து கொண்டு வாதிடுகிறார்கள். நாம் இது தொடர்பாக எதனையும் நிரூபிக்கவில்லையென்றால் ஒரு வகையில் இவர்கள் வாதிடுவதை நியாயமென்று ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் இவர்களின் நிலையை எண்ணிப் பார்க்கையில் கவலைக்குரியதாக உள்ளது. சத்தியத்தைத் தேடுகின்ற மக்களாக இருந்தால் நிச்சயமாக பதிலளிக்கப்பட்ட பின்னர் பிடிவாதத்தின் காரணமாக தவறான ஒன்றைச் சுமப்பவர்களாக இருக்கமாட்டார்கள். அல்லது அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மறுப்பை எதிர்த்து அதற்குப் பொருத்தமான பதிலைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களிடமிருந்து தகுதியான எந்த பதிலும் வருவதில்லை. அவர்களுடைய விளக்கத்தைச் சுமந்து கொண்டு நாடெங்கும் சுற்றுகிறார்கள். அதிலும் ஆச்சரியமான விடயம் தங்களை ஜம்இய்யதுல் உலமா என்று கூறிக் கொள்ளும் ஒரு கூட்டம் நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்ற தங்களின் முடிவுக்கு பின்வரும் மூன்று ஆதாரங்களையே முக்கியமாக முன்வைக்கிறாhர்கள்.


(1) பமன் ஷஹித மின்குமுஷ்ஷஹ்ர பல்யஸும்ஹு என்ற அல் குர்ஆன் வசனம்


(2) குரைப் - இப்னு அப்பாஸ் தொடர்பான ஹதீஸ்


(3) அபூ உமைர் அல் அன்சாரி (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கும் ஹதீஸ் 


மேற்கூறியவற்றை ஆதாரங்களாகக் காட்டித்தான் இவர்கள் அத்தனை விளக்கங்களையும் கொடுக்கிறார்கள். இவைகளைக் காட்டித்தான் P. ஜெய்னுல் ஆபிதீனும் தன் விளக்கத்தில் ஒரு குழப்பத்தைக் கொண்டு வந்தார். அதே அடிப்படையில்தான் ஜம்இய்யதுல் உலமாவும் அதன் தீர்ப்பைக் கொடுத்தது. இதனடிப்படையில் ஒரு உண்மை எமக்குத் தெளிவாகப் புரிகிறது. அதாவது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்தவர்கள் ஒருபோதும் P. ஜெய்னுல் ஆபிதீனின் கொள்கையோடு சேர்ந்து போகின்றவர்களல்ல. ஜம்இய்யதுல் உலமாவுக்குள் இருக்கும் குழப்பங்களுக்கும் P. ஜெய்னுல் ஆபிதீனுடைய விளக்கங்களுக்கும் ஒருபோதும் ஒற்றுமையோ உடன்பாடோ கிடையாது. இவர்கள் இரு சாராரது போக்கும் பாதையும் ஒன்றாக முடியாது. ஆனால் பிறை விடயத்தில் மட்டும் ஜம்இய்யதுல் உலமா P. ஜெய்னுல் ஆபிதீனுடைய விளக்கத்தைக் கையாள்வது ஏன்? காரணம் P. ஜெய்னுல் ஆபிதீன் என்பவர் நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்று சொல்லி வருபவர். எனவேதான் ஜம்இய்யதுல் உலமா தங்களுடன் ஒரு விதத்திலும் சேர்ந்து போகாத P.து யின் விளக்கத்தை பிறை விடயத்தில் தங்களுக்குச் சார்பாக எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்ற தங்களின் வாதத்திற்கு ஆதாரமாக இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) வுடைய விளக்கத்தையோ அல்லது தீர்ப்பையோ எடுத்துக்காட்டாததோடு முஸ்லிம் இமாம்களில் யாரெல்லாம் சர்வதேச பிறைக்கு எதிரான கருத்துக்களைக் கூறினார்களோ அவர்கள் காட்டிய ஆதாரங்களைத் தங்களுக்குச் சார்பான ஆதாரங்களாக எடுக்காமல் அவைகளைத் தவிர்ந்து கொண்டு P. ஜெய்னுல் ஆபிதீனுடைய விளக்கத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். ஏiனெ;றால் இவர்கள் இமாம் நவவியை ஆதாரம் காட்டினால் இமாம் நவவியின் கருத்துக்கு மறுப்பாக ஏனைய அறிஞர்கள் தங்களின் நூல்களில் கொடுத்திருக்கும் பதில்கள் இவர்களின் ஆதாரத்தை உடைத்து விடும். எனவே அந்த வழிமுறை இவர்களுக்குச் சாதகமாக அமையாது. 

சுமார் பத்து வருடங்களுக்கு முன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  பிறையைப் பற்றி ஒரு மாநாடு நடத்தினார்கள்.அதில் எனக்கும் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அதில் உரையாற்றிய கபூரிய்யாவின் முஹம்மத் மௌலவி என்பவர் தனது உரையில் கூறிய விடயங்களைக் கவனித்தபோது அவருடைய வார்த்தைகள் இமாம் நவவியுடைய வார்த்தைகளாக இருந்தது. அவருடைய உரையின் பின் எனது முறை வந்தபோது நான் அவர் கூறிய விடயம் தொடர்பாகக் கூறும்பொழுது நீங்கள் தெரிவித்த கருத்துகளனைத்தும் இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) வுடைய வார்த்தைகளைத் தவிர வேரில்லை. அதனை நீங்கள் தமிழில் எடுத்து வைத்திருக்கிறீர்கள் அவ்வளவுதான் என்று கூறினேன். நீங்கள் முன்வைத்த இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) வுடைய அனைத்து வாதங்களுக்கும் பதிலை இமாம் அபுல் அப்பாஸ் அஹ்மத் இப்னு அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா அல் ஹர்ரானி (றஹிமஹுல்லாஹ்) வுடைய நூலில் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறி அவர்கள் அன்று எதனை ஆதாரமாகக் காட்டினார்களோ அதனை அன்றே மறுத்து பதலளித்து நிரூபித்து விட்டே சென்றோம். நாம் எந்த ஆதாரத்தைத் தட்டினோமோ அதே ஆதாரத்தை அவர்கள் மீண்டும் எடுப்பார்களா இல்லையா என்பதை அல்லாஹ்தான் அறிந்தவன். அன்று நாம் தவறென்று நிரூபித்ததை ஏற்றுக் கொண்டதற்குச் சாட்சியாக இன்று அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள்களென்று நாம் எடுத்துக் கொண்டால் இன்று அவர்கள் ஆதாரமென்று காட்டும் P. ஜெய்னுல் ஆபிதீனுடைய மூன்று ஆதாரங்களையும் நாம் மறுத்து அந்த மறுப்புக்கான ஆதாரங்களை அதற்குத் தகுதியான நூல்களிலிருந்து எடுத்துக் காட்டி நிரூபித்தேயிருக்கிறோம். பல வருடங்களுக்கு முன்பே அல் முபீன் என்ற சஞ்சிகையில் வந்திருந்த P. து யுடைய விளக்கத்திற்கு அப்போதே மறுப்புக் கொடுத்துவிட்டோம். அந்த மூன்று ஆதாரங்களுக்கும் ஸனத் ரீதியாகவும் அடிப்படை ரீதியாகவும் பதில் கொடுத்துவிட்டோம். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்ற கூட்டம் சத்தியம் தேடுகின்ற கூட்டமென்றால் நான் தெரிவுத்துள்ள விடயங்களுக்கு மறுப்பை ஆதாரங்களுடன் எனக்குத் தெரிவிக்கட்டும். அவர்கள் கூறுவது சத்தியமென்று ஆதாரங்களினடிப்படையில் நிரூபிக்கப்பட்டால் அதனை நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இருக்கிறோம். இருப்பினும் அண்மையில் ஜம்இய்யதுல் உலமா எமது ஊரில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பிறை காணும் விடயத்தில் வானவியல் கல்வியைப் பயன்படுத்துவது பற்றிக் கூறப்பட்ட விடயங்களுக்கு புதிதாக நாம் பதிலளிக்கத் தேவையில்லை. அது ஏழு வருடங்களுக்கு முன்பே பதிலளிக்கப்பட்ட அம்சமாகும். அல்லாஹ்வே போதுமானவன். 


இன்று பலரும் பல கருத்துக்களைக் கூறி முஸ்லிம் சமூகத்தினுள் குழப்பங்களை விதைத்து விட்டதனால் நான் இந்த அனைத்து விடயங்களையும் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் இஸ்லாத்தில் பிறை காணுதலும் அந்நிய வழிமுறைகளும் என்ற தலைப்பு எமது ஊரில் ஜம்இய்யதுல் உலமா பிறை விடயத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முன்பே நான் பேசுவதற்கு முடிவு செய்திருந்த தலைப்பாகும். அல்லாஹ்வே போதுமானவன.; றமழானில் எமது இஸ்லாமிய சமூகத்துக்கு யவ்முஷ் ஷக்குடைய தினத்தில் இஸ்லாமிய வழிமுறையில் எவ்வாறு பிறை காணுதலைத் தீர்மானிக்க வேண்டுமென்று வழிகாட்டுவதும் அதில் கையாளப்படுகின்ற அந்நியர்களுடைய வழிமுறைகளை அறிந்து அதிலிருந்து எவ்வாறு தவிர்ந்து கொள்ள வேண்டுமென்று எடுத்துக் காட்டுவதுமே இந்தத் தலைப்பை நான் தெரிவு செய்ததற்கான முக்கிய காரணமாகும். மாறாக ஜம்இய்யதுல் உலமாவைக் கருத்தில் கொண்டு இந்தத் தலைப்பை நான் தெரிவு செய்யவில்லை. இருப்பினும் இந்தத் தலைப்பில் உள்ளடங்கும் விடயங்களில் ஜம்இய்யதுல் உலமாவுக்கும் தக்க பதில் கொடுக்கப்பட்டுள்ளது. எமது இஸ்லாமிய உம்மத்தில் பொது மக்களில் பலரும் இன்னும் அறிஞர்களென்று சொல்லப்படுபவர்களும் பிறை விடயத்தில் அந்நிய மார்க்கங்களின் வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் சரியான வழிமுறையைத் தெளிவுபடுத்துவதற்கும் இவற்றை எத்திவைக்கும் பாக்கியத்தை அல்லாஸு ஸுப்ஹானஹுவ தஆலா எமக்குத் தந்துவிட்டான். ஏனென்றால் இந்தத் தலைப்புக்குள் அமைந்துள்ள அம்சங்களில் பல கூட்டங்களுக்கும் பதில் அமைந்திருக்கிறது. நான் கொடுத்த இந்த பதில் ஜம்இய்யதுல் உலமாவுக்கு மட்டுமின்றி யாரெல்லாம் மார்க்கத்தின் எந்தவொரு விடயத்திலேனும் அந்நிய வழிமுறைகளைக் கையாள்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் உரியதாகும். 


முடிவுரை


நாட்டுக்கு நாடு பிறை காணுதல் என்பதற்கு ஆதாரமாக சிலர் முன்வைக்கும் அபூ உமைர் அல் அன்சாரி (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கும் ஹதீஸுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தவறான விளக்கத்தையும் அது போன்ற ஏனைய தவறான விளக்கங்களையும் மறுப்பது மட்டுமின்றி அறிவிப்புகளைத் தவறாகக் கையாளுகின்ற அனைத்துக் கூட்டங்களுக்கும் மறுப்பாகவும் இன்னும் குர்ஆன் ஸுன்னாவின் ஆதாரங்களால் வழிகேட்டை உருவாக்குவதற்கு முயற்சி செய்கின்ற கூட்டங்களுக்கு ஒரு உபதேசமாகவும் ஒரு சில விடயங்களை முன்வைக்கலாமென நினைக்கின்றேன். 


முதலில் நாமனைவரும் ஒரு விடயத்தைப் புரிய வேண்டும். அதாவது அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் தெட்டத் தெளிவாப் பூமியிலே புரிந்து அதனை விளங்கி தனது நடவடிக்கையில் செயற்படுத்திய ஒரு சிறப்பான மனிதர் இருப்பதாயின் அது றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகவே இருப்பார்கள். அந்த நபி கொண்டு வந்த மார்க்கத்தையும் சட்டங்களையும் ஒரு சமூகம் ஏற்று அதனைத் தங்கள் நடவடிக்கையில் நடைமுறைப்படுத்தியிருக்குமென்றால் அந்த சிறப்பான சமூகம் அல்லாஹ்வின் து}தரின் தோழர்களான ஸஹாபா றிழ்வானுல்லாஹி அலைஹிம் அஜ்மஈன் அவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் இந்தக் குர்ஆனையும் ஸுன்னாவையும் யாரும் விளங்காமல் பின்பற்றியவர்களாக இருக்கவில்லை. அவர்கள் இந்த மார்க்கத்துக்காக தங்களின் உயிர்களைத் தியாகம் செய்வதற்கும் தயாராக இருந்ததை நாம் காண்கிறோம். அவர்கள் தங்களின் சொத்துக்களைத் தியாகம் செய்வதற்குக் கூட பின்வாங்கவில்லை. அது மட்டுமின்றி அவர்கள் தலைமுறை தலைமுறையாக செய்து வந்த பரம்பரை வழக்கங்களை ஒரேயொரு வஹிக்காகக் கைவிட்டு அந்த வஹியின் பால் திரும்பி தங்களைத் திருத்திக் கொண்டார்கள். ஒரு குர்ஆன் வசனம் அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. ஒரு ஹதீஸுக்காக அவர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். அந்த மாற்றங்களனைத்தும் அவர்கள் அவர்கள் உண்மையை அறியாமலும் விளங்காமலும் ஒரு போதும் நிகழவில்லை. இந்த மார்க்கத்தின் ஆதாரங்களை அந்த ஸஹாபாக்கள் அறியாதவர்களாக இருந்திருந்தால் அவர்கள் பரம்பரை வழக்கமாகச் செய்து வந்தவைகளையும் விளங்கி வைத்திருந்தவைகளையும் அவர்களின் சமூகத்தின் பழக்கங்களையும் குர்ஆனின் ஒரு வசனத்திற்காக ஹதீஸின் ஒரு வார்த்தைக்காக விட்டிருக்க முடியுமா? அந்த நபித்தோழர்கள் இந்தக் குர்ஆனையும் ஸ{ன்னாவையும் தெட்டத் தெளிவாகப் புரிந்திருந்த காரணத்தினால்தான் அவர்கள் மத்தியில் இத்தனை மாற்றங்களும் திருத்தங்களும் ஏற்பட்டன. அது மட்டுமின்றி அவர்கள் எவைகளையெல்லாம் திருத்திக் கொண்டார்களோ அவைகளில் எந்தளவு உறுதியாக இருந்தார்களென்றால் அதன் காரணமாக அவர்களின் உயிர்கள் போனாலும் சொத்துகள் அழிந்தாலும் குடும்பங்களை இழந்தாலும் தங்களின் நிலையிலிருந்து தடுமாற்றமடையவில்லை. அவர்கள் தங்களின் மார்க்கத்தில் நிலைகுழையாமல் உறுதியாக நின்றதன் காரணம் அந்த ஸஹாபாக்கள் குர்ஆனையும் ஸ{ன்னாவையும் ஒரு மடமையின் தன்மையோடு பின்பற்றவில்லை. அவர்கள் அறியாமையில்; மார்க்கத்தைப் பின்பற்றவில்லை. இந்த உம்மத்தில் தங்கள் மார்க்கத்தைத் தெட்டத் தெளிவோடு பின்பற்றிய கூட்டம் அந்த ஸஹாபாக்களின் கூட்டமாகத்தான் இருக்கும். அவர்களுக்குப் பின் வந்த காலத்தில் இங்கும் அங்கும் ஒரு சிலர் தெளிவோடு மார்க்கத்தைப் பின்பற்றினாலும் ஒரு முழு சமூகமாகவும் சத்தியத்தின் சாட்சியாளர்களாகவும் ஸஹாபாக்களைத் தவிர வேறு எவர்களும் இருக்கவில்லை. அந்த ஸஹாபாக்களுடைய தெளிவும் அவர்களுடைய ஈமானும் அவர்களின் உறுதித் தன்மையும் எத்தரத்தில் இருந்ததென்பதைப் புரிந்த இரட்சகனான அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஏழு வானத்தின் மேலிருந்து சாட்சி கூறுகின்றான்:


அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான் அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள்


இவ்வாறு அந்த ஸஹாபாக்களின் உள்ளங்களைப் பற்றி அல்லாஹ் சாட்சி கூறுகிறான். இப்படியானதொரு கூட்டமாக இருந்த ஸஹாபாக்கள்தான் இந்த மார்க்கத்தைப் பின்பற்றினார்கள். நான் இந்த இஸ்லாமிய உம்மத்தின் முதல் சமூகமான ஸஹாபாக்களைப் பற்றிய விடயங்களை இங்கு எடுத்துக் கொண்டதன் காரணம் இன்று எமது சமூகத்தில் பலரும் பலவாறான விளக்கங்களைக் கொடுத்து வருவதோடு அதனைக் குர்ஆனின் விளக்கமென்றும் ஹதீஸின் விளக்கமென்றும் கூறி இந்த உம்மத்தினுள் பிரிவுகளையும் குழப்பங்களையும் உருவாக்கி வருகிறார்கள். இந்தக் குழப்பவாதிகளுக்கு நான் சொல்லிக் கொள்வதாவதுஇ நீங்கள் கூறும் இந்த விளக்கங்களெல்லாம் குர்ஆனிலும் ஸுன்னாவிலும் உள்ளவைகளாக இருந்திருப்பின் அதனை அந்த ஸஹாபாக்கள் பின்பற்றாமலும் பிரச்சாரம் செய்யாமலும் இருந்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் அதனை நடைமுறைப்படுத்தியிருப்பார்கள். மாறாக அவை அவர்களின் பூமியிலும் அவர்களின் காலத்திலும் நடைமுறை செய்யப்படாத விடயங்களாக இருக்குமாயின் நீங்கள் நன்கு புரிந்து கொள்ளுங்கள் அதாவது ஸஹாபாக்கள் ஒரு விடயத்தில் மௌனமாக இருந்தார்களாயின் அதன் காரணம் அவர்கள் அது பற்றி அறியாமையில் இருந்ததினாலல்ல. ஒரு விடயத்தில் கருத்துக் கூறும்போது அதன் எல்லையைத் தாண்டுவது மடமைத் தன்மையாகுமென்பதை தெளிவாகப் புரிந்திருந்த காரணத்தில்தான் அவர்கள் அந்த எல்லைக்கு மேல் பேசாமல் இருந்துவிட்டார்கள். இமாம் இப்னு குதாமா ( றஹிமஹுல்லாஹ்) லம்அதுல் இஃதிகாத் என்ற நூலில் ஸஹாபாக்களின் நிலைப்பாட்டைப் பற்றிக் கூறுகையில்


“அவர்கள் ஒரு எல்லையோடு போதுமாக்கிக் கொண்டதன் காரணம் கல்வி இல்லாததினாலல்ல. .அவர்கள் ஒரு விடயத்தில் மௌனமாக இருந்தார்களென்றால் அதன் காரணம் அந்த விடயத்தைப் பற்றி விளங்காததினாலல்ல”. 


எனவே ஸஹாபாக்கள் ஒரு விடயத்தின் அதன் எல்லையை அறிந்திருந்ததன் காரணமாகவே அந்த எல்லைக்கு மேல் எதுவும் சொல்வது அவசியமில்லையென அறிந்து அத்தோடு நின்றுகொண்டார்கள். அது பற்றி அவர்கள் அறிந்திருந்தார்கள். அதே போன்று அவர்கள் ஒரு விடயத்தில் மௌனமாய் இருந்ததன் காரணம் அவர்கள் அதன் எல்லையை நன்கு விளங்கி அந்த விளக்கத்தோடுதான் அவ்வாறிருந்தார்கள். அவர்கள் எக்காரணமுமின்றி ஒன்றைத் தெரிந்து கொண்டே வெளியில் சொல்லாமல் மௌனம் சாதிக்கவில்லை. தெளிவாக விளங்கியே அவ்வாறு இருந்தார்கள். இதுதான் ஸஹாபாக்களின் நிலைப்பாடாக இருந்தது. இவர்களைப் பின்தொடர்ந்துதான் தாபிஈன்களும் நடந்தார்கள். இதே அடிப்படையில்தான் தாபியீன்களைத் தபஉ அத்பாயீன்கள் பின்பற்றினர். இதே வழிமுறையைத்தான் அனைத்து ஸலபுஸ்ஸாலிஹீன்களும் பின்பற்றி நடந்தார்கள். யாரெல்லாம் இவர்களின் பாதையைப் பின்பற்றினார்களோ அவர்கள் இன்றிருப்பவர்களைப் போன்று குர்ஆனிலிருந்தும் ஸுன்னாவிலிருந்தும் புதிது புதிதாக கருத்துக்களை எடுப்பதற்கு இயலாதவர்களாய் இருக்கவில்லை. என்றாலும் அவ்வாறு செய்வது அறியாமையும் மடைமையுமென்று அவர்கள் புரிந்திருந்தார்கள். அந்த ஸலபுஸ்ஸாலிஹீன்கள் எதனை ஸஹாபாக்கள் கூறவில்லையோ அதனைத் தாங்களும் கூறுவதிலிருந்து தவிர்ந்து கொண்டார்கள்.


ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல் அல்பானீ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்.


நான் அல்லாஹ்விடத்தில் ஒரு வாக்குறுதி செய்து கொண்டுள்ளேன். அதாவது மார்க்க விடயத்தில் எனக்கு முன் ஒரு ஸலப் சொல்லாததை நான் சொல்லமாட்டேன்


இதனை இமாம் அல்பானீ (றஹிமஹுல்லாஹ்) சொன்னதன் காரணம் அவரால் எதனையும் சொல்ல முடியாமலோ அல்லது அவர் அறியாதவராக இருந்ததினாலோ அல்ல.


இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்


நான் அல்லாஹ்வின் வேதத்திலே அல்லாஹ் எதனை நாடினானோ அதனையே சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதருடைய விடயத்தில் அல்லாஹ்வின் தூதர் எதனை நோக்கினாரோ அதனையே நான் சொல்கிறேன.


இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) இவ்வாறு சொன்னதன் காரணம் அறபி மொழியின் மூலம் அவருக்கு குர்ஆன் ஸன்னாவிலிருந்து விளக்கங்களைக் கூற இயலாத காரணத்தினாலல்ல. இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) மார்க்கமென்றால் என்னவென்று புரிந்தவராக இருந்த காரணத்தினால் அந்த மார்க்கத்தில் மேலதிகமாக எந்தக் கருத்தையும் கூறி அதனை மார்க்கமென்று காட்டவில்லை. எப்பொழுதெல்லாம் ஸுன்னாவின் இமாம்கள் மார்க்கத்தின் எல்லைகளை அறிந்து அதன் அடிப்படையில் தங்களின் மார்க்கத்தை அமைத்துக் கொண்டார்களோ அப்பொழுதெல்லாம் அவர்கள் இந்த மார்க்கத்தை தெளிவாக எத்திவைத்து அதிலுள்ள அசத்தியங்களை மறுத்தும் காட்டினார்கள். இதே வழிமுறையில் வந்த அனைத்து இமாம்களும் இந்த இஸ்லாமிய உம்மத்துக்காக ஸுன்னாவை உயிர்ப்பித்துத் தந்ததுடன் அதில் முளைத்த பித்அத்களை அழித்து இந்த உம்மத்தை அல்லாஹ்விடம் நெருக்கமாக்கிவிட்டுச் சென்றார்கள். என்றாலும் யாரெல்லாம் ஸஹாபாக்களின் வழிமுறையில் மார்க்கத்தைப் பின்பற்றவில்லையோ இன்னும் கல்வியின் விடயத்தில் ஸஹாபாக்கள் சொல்லாததைத் தாங்களும் சொல்லாது தவிர்ந்து கொள்ளவில்லையோ இப்படியானவர்கள்தான் தங்களின் சுய கருத்துக்களையும் மார்க்கத்தில் இல்லாத விளக்கங்களையும் துருவியெடுத்து இஸ்லாமிய உம்மத்தினுள் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் உருவாவதற்கு வழிவகுத்தார்கள். இவர்கள் உருவாக்கிவிட்டவைகளைத் தவிர மார்க்கத்தினுள் முரண்பாடுகளென்பது கிடையாது. அது தெளிவாகவே இருக்கிறது. காலத்துக்குக் காலம் மார்க்கத்தில் முறண்பாடுகள் உருவாக்கப்பட்டபோதெல்லாம் அது தோன்றிய காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் அதனை அதன் தன்மைக்கேற்ப குர்ஆனாலும் ஸுன்னாவாலும் மொழியாலும் உஸுலாலும் பதில் கொடுக்காமலோ தெளிவுபடுத்தாமலோ விட்டுவிடவில்லை. அந்த உலமாக்கள் அன்று கொடுத்த பதில்களை இன்றும் நாம் அனைத்து மத்ஹப்களின் வாதங்களுக்கும் பதிலளிப்பதற்கு ஆதாரமாய் எடுத்துக் காட்டுகின்றோம். நிச்சயமாக இந்த இஸ்லாமிய உம்மத்தில் அறியாமையில் வாழும் மக்கள் இருக்கும் காலமெல்லாம் அவ்வறியாமையின் கருத்துக்களை குர்ஆனிலும் ஸுன்னாவிலும் புகுத்துபவர்கள் புகுத்திக் கொண்டுதானிருப்பார்கள். இவைகளை வளர விடாமல் தட்டிவிடுவது எமது கடமையாகும். அதே போன்று யாரெல்லாம் குர்ஆனையும் ஸுன்னாவையும் ஸஹாபாக்களின் வழிமுறையில் தூய்மையாகப் பெற்றுக் கொள்கிறார்களோ அவர்கள்மீதும் அது கடமையாகும். காலத்துக்குக் காலம் தோன்றும் வழிகெட்ட விளக்கங்களை அழித்து விடுவது அந்தந்தக் காலத்தில் வாழ்பவர்கள் மீது கடமையாகும். இந்த அடிப்படையில்தான் நாம் வாழும் இன்றைய காலத்தில் தோன்றியிருக்கும் வழிகெட்ட விளக்கங்களையும் கருத்துக்களையும் நாம் மறுக்கின்றோம். நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்று வாதிப்பவர்கள் அதற்கு ஆதாரமாக காட்டும்


பமன் ஷஹித மின்குமுஷ்ஷஹ்ர பல்யஸும்ஹு என்ற குர்ஆன் வசனமோ


குரைப் இப்னு அப்பாஸ் தொடர்பான ஹதீஸோ


அபூ உமைர் அல் அன்சாரி (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கும் ஹதீஸோ


நாட்டுக்கு நாடு பிறை காணவேண்டுமென்பதற்கு சம்பந்தமான குர்ஆன் வசனமோ ஹதீஸோ அல்ல. இந்த அறிவீனக் கருத்துக்கள் இன்று தோன்றியிருக்கும் வேளையில் எமது கடமையை நாம் உணர்ந்து பதிலளித்தோம். 


அல்லாஹ்வே மிக அறிந்தவன்.