[பெண்கள் கத்னா விடயம் குழப்பங்களும் இஸ்லாமிய விளக்கங்களும்]


பெண்களுக்கான கத்னா ஒரு பண்டைய கால மரபு வழியே அன்றி , இஸ்லாத்தில் சொல்லப்பட்ட விடயம் அல்ல என்று இன்று சிலர் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். 
இது மார்க்கத்தில் சொல்லப்பட்ட ஒரு விடயமாகும். கீழ் வரும்

நபி மொழி இதனை உறுதி செய்கின்றது.عَنْ أَبِي مُوسَى قَالَ اخْتَلَفَ فِي ذَلِكَ رَهْطٌ مِنْ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ

 فَقَالَ الْأَنْصَارِيُّونَ لَا يَجِبُ الْغُسْلُ إِلَّا مِنْ الدَّفْقِ أَوْ مِنْ الْمَاءِ وَقَالَ 

الْمُهَاجِرُونَ بَلْ إِذَا خَالَطَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ قَالَ قَالَ أَبُو مُوسَى فَأَنَا 

أَشْفِيكُمْ مِنْ ذَلِكَ فَقُمْتُ فَاسْتَأْذَنْتُ عَلَى عَائِشَةَ فَأُذِنَ لِي فَقُلْتُ لَهَا يَا 

أُمَّاهْ أَوْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ إِنِّي أُرِيدُ أَنْ أَسْأَلَكِ عَنْ شَيْءٍ وَإِنِّي 

أَسْتَحْيِيكِ فَقَالَتْ لَا تَسْتَحْيِي أَنْ تَسْأَلَنِي عَمَّا كُنْتَ سَائِلًا عَنْهُ أُمَّكَ 

الَّتِي وَلَدَتْكَ فَإِنَّمَا أَنَا أُمُّكَ قُلْتُ فَمَا يُوجِبُ الْغُسْلَ قَالَتْ عَلَى الْخَبِيرِ 

سَقَطْتَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا 

الْأَرْبَعِ وَمَسَّ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ رواه مسلم 


ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து கத்னா செய்யப்படும் இரு உறுப்புக்கள் சந்தித்து விட்டாலே (இருவர் மீதும்) குளிப்பு கடமையாகிவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா  ரலியல்லாஹு அன்ஹா நூல் : முஸ்லிம் ‘(கத்னா செய்யப்பட்ட ) ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சந்தித்தால் குளிப்பு கடமையாகும் . இந்திரியம் வெளியாகாவிட்டாலும் சரியே’ என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, இப்னுமாஜா)


‘(கத்னா செய்யப்பட்ட ) ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சந்தித்தால் குளிப்பு கடமையாகும் என இமாம் புஹாரி ரஹீமஹுல்லாஹ் தலைப்பிட்டிருக்கிறார்கள் . 


நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ,  பெண்களுக்கு கத்னா செய்பவராக இருந்த பெண்ணிடம்,உம்மு அதிய்யா, ஒட்ட நறுக்கி விடாதே! அது அவளுக்கு நல்லதும் கணவனுக்கு இன்பம் அளிக்கக் கூடியதுமாகும் என்றார்கள் . 


(அபூதாவுத் , இமாம் அல்பானி ரஹீமஹுல்லாஹ் ஹசன் என தீர்ப்பளித்துள்ளார்கள் , பார்க்க சில்சிலத்துல் சஹிஹா, ஸஹிஹ் அபூதாவுத் ).


தூதர் சல்லல்லாஹு அளஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் , இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை என அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார், புஹாரி 


இமாம் ஷாபி உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கத்னா கடமை என்கின்றனர்.


இமாம் நவவி அவர்களது மஜ்மூவில் கூறுகிறார்கள் : 


ஆண்களுக்கும் பெண்களுக்கும் கத்னா கடமையாகும் என்பது எங்களுடைய கருத்தாகும். இமாம் அல் கத்தாபி கூறுவது போன்று , இது சலபுகளின் வழிமுறையாகும். இது வாஜிபானது என்று கருதுபவர்களில் இமாம் அஹ்மதும் ஒருவர். இந்த முடிவே இமாம் ஷாபியும் கொண்டிருந்தார் என்பது பிரபல்யமானதும் சரியானதும் ஆகும். 


கத்னா ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடமையானது என்பது தான் தீர்ப்பு.  இது பெண்களுக்கு சொல்லப்படவில்லை என்றோ அல்லது , இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டது என்றோ அல்லது, வெறுக்கத்தக்கது என்றோ அல்லது இஸ்லாத்தில் இல்லாத ஒரு விடயம் என்றோ சலபுகளில் யாருமே கூறவில்லை.


மேலும், ஆணுறுப்பையும் பெண்ணுறுப்பையும் கிதான் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள். இந்த வார்த்தைக்கு கத்னா செய்யப்பட்ட உறுப்பு என்று பொருள் இருக்கின்றது.


இரண்டு பொருள்களை ஒரு பொருளின் பெயரால் குறிப்பிடுவது அரபுகளிடம் சர்வசாதாரணமான நடைமுறையாகும். இரண்டு பொருட்கள் ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தால் அல்லது ஒன்றையொன்று ஒத்திருந்தால் அவற்றில் ஒன்றின் பெயரை மற்றதற்கும் சொல்லும் வழக்கம் அரபுமொழியில் தக்லீப் எனப்படுகிறது.


அல்அபு என்றால் தந்தை என்று பொருள். தாய் என்பதற்கு அரபியில் உம்மு என்ற சொல் உள்ளது. ஆனால் தாய் தந்தை ஆகிய இருவரையும் குறிப்பிடும் போது அபவைனி இரண்டு தந்தைகள் என்று கூறும் வழக்கம் உள்ளது. இது மாதிரியான சொற்பிரயோகம் ஹதீஸ்களில் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாக வைத்து ஒருவனுக்கு இரண்டு தந்தைகள் என்று யாரும் கூற மாட்டோம். நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்ணுறுப்பை கிதான் (கத்னா செய்யப்பட்டது) என்று கூறியது இந்த அடிப்படையிலாகும். இது ஆணுறுப்புடன் சேர்த்து சொல்லப்படுவதால் ஆணுறுப்புக்கு மட்டும் உரிய இந்த வார்த்தையை பெண்ணுறுப்புக்கும் பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் உண்மையில் பெண்ணுறுப்பு கத்னா செய்யபடக்கூடியதல்ல. 


என்றும் ஒரு மடமைத்தனமான வாதத்தை பி. ஜே. கோஷ்டியினர் வைக்கின்றனர். இது அவர்களுடைய முற்று முழுதான அறியாமையின்
தெளிவான சான்றாகும். 


ஏனெனில், அவர்களிடமே பதில் இருக்கிறது, இரண்டு பொருள்கள் 

ஒரே பொருளின் பெயரால் அழைப்பது அரபுகளின் நடைமுறை என்று அவர்களே சொல்லி, 


மற்றும், இரண்டு பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தால் அல்லது ஒன்றை ஒன்று ஒத்து இருந்தது என்றால் ஒன்றின் பெயரை மற்றதிற்கு சொல்லும் வழக்கம் உள்ளது என்றும் அவர்களே சொல்லி பின்னர் அபவைனி எனும் சொல்லை சொல்லி தாய்க்கும் தந்தைக்கும் பதிலாக இரண்டு தந்தை என்று சொல்ல மாட்டோம் என்றும் தனது கூற்றுக்கு மாற்றமாக கூறுகின்றனர். அந்தோ பரிதாபம். 


தாய் தந்தை என்பவர்கள் இரண்டு இனங்களாக இருந்தாலும், பெற்றோர் என்ற ஒரே தன்மையை தகுதியை பெற்றுக்கின்றனர். அதே போன்று பெற்றோர் என்ற தகுதியை அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக பெற்றிருப்பதால் தான் அபவைனி என்று சொல்லப்படுகிறது. 


அதே போன்று தான் கிதான் என்ற வார்த்தையும் பயன்படுத்தப் பட்டு உள்ளது. இரண்டு உறுப்புக்கும் பொருந்தக் கூடியதாக இருந்தால் மட்டுமே இப்படியான வார்த்தை பயன்படுத்தப்படும் என்பதை அவர்களே சொல்லி , சில உதாரணங்களையும் சொல்லி சம்பந்தம் இல்லாமல் மறுக்கிறார்கள். இது அவர்களின் அறியாமை தவிர வேறில்லை. 


ஏனெனில், இரண்டு வேறான விடயங்களுக்கு பொதுவாக இருக்க கூடிய தன்மைகளை, தராதரங்களை வைத்து இந்த வார்த்தை பிரயோகம் செய்ய முடியும் என்றால் , கிதான் என்ற வார்த்தை ஏன் இந்த இரண்டு பால் உறுப்புக்கு பயன்படுத்த முடியாது ? அந்த தன்மை இருப்பதனால் தான் அந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டு உள்ளது. 


எனவே, ஒரு விடயத்தை சொல்லி , அது அப்படி பயன்படுத்தப் பட முடியும் என்று சொல்லி விட்டு , அவர்களின் கூற்றுக்கு அவர்களே முரண் பட்டால் என்ன வென்று தான் சொல்வது. 


இது தவிர ஓட்ட நறுக்காதே என்று நேரடியாக ஹதீசும் வந்ததன் பின்னர் 
இந்த விடயத்தை மறுப்பது, இவர்கள் ஹதீஸ்களை தான்தோன்றித்தனமாக மறுப்பவர்கள் என்பதை நிருபித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். 


அல்லாஹ்வே மிக அறிந்தவன்