[மில்குள் யமீன் என்ற வலது கரம் சொந்தமாக்கிய என்ற சாராரும் அது பற்றிய ஆதாரங்களும்]

மில்குள் யமீன் என்ற வலது கரம் சொந்தமாக்கிய என்ற சாராரும் அது பற்றிய ஆதாரங்களும்


அல் குர் ஆனை யார் பிரட்டினாலும் இந்த மில்குள் யமீன் என்ற வார்த்தையையும் சட்டத்தையும் அல் குர் ஆன் பேசுவதை யாரும் காணலாம். 

உம்மதுள் இஸ்லாமியாவில் மில்குள் யமீன் விடயத்தில் யாரும் கருத்து வேறுபாடு பட்டதில்லை. " மலக்கத் அய்மானுக்கும் " என்ற வாசகமும் அதே கருத்தில் வரும் வாசகங்களும் அல் குர் ஆனில் பல இடங்களில் வந்திருப்பதை யாரும் பார்க்கலாம். அதாவது " தம்முடைய வலது கரங்கள் சொந்தமாக்கிய " என்ற கருத்துள்ள வாசகங்களாகும். 

இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த மார்க்கமாகும். எனவே, அதனை ஒழித்து தான் இந்த வலது கரங்கள் சொந்தமாக்கிய என்ற வகையை இஸ்லாம் அறிமுகம் செய்தது. 

இந்த வலது கரங்கள் சொந்தமாகிய என்ற பெண்களை திருமணம் செய்ய வேண்டியதில்லை. இன்னும் இவர்கள் யுத்தத்தால் மாத்திரம் பெறப்படுபவர்கள் மட்டும் இல்லை.

மாற்றமாக யாரும் அன்பளிப்பாகவும் ஒருவருக்கு கொடுக்கலாம். நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி அன்பளிப்பாக பெற்றவர்கள் தான் மாரியதுல் கிப்தியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இவர்களை முகவ்கிஸ் என்ற எகிப்திய கவர்னர் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பரிசாக கொடுத்தார். 

இவ்வகையினரை பற்றி அல் குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது ...


 يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَحْلَلْنَا لَكَ أَزْوَاجَكَ اللَّاتِي آتَيْتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِينُكَ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّاتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَالَاتِكَ اللَّاتِي هَاجَرْنَ مَعَكَ وَامْرَأَةً مُّؤْمِنَةً إِن وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ إِنْ أَرَادَ النَّبِيُّ أَن يَسْتَنكِحَهَا خَالِصَةً لَّكَ مِن دُونِ الْمُؤْمِنِينَ ۗ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِي أَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُونَ عَلَيْكَ حَرَجٌ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا 33:50. 


நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; 

அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); 

அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; 

மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். 


இவ்வாறு தெளிவாக அல் குர் ஆனும் சுன்னாவும் பேசிய விடயங்களை தான் இன்று அறிவீனர்கள் மறுத்து பேசுகின்றனர் . 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.