[கர்பலா துக்கமும் இஸ்லாமிய விளக்கமும்]

கர்பலா துக்கமும் இஸ்லாமிய விளக்கமும்

ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்  கொலை செய்யப்பட்டதை ஒவ்வொரு முஸ்லிமும் துக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர் அமீருல் முஹ்மினீண்கலீல் ஒருவர். சஹாபாக்களில் ஒரு அறிஞ்சர். நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பான மகளான பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மகனார். அல்லாஹ்வின் சிறப்பான அடிமை . இன்னும் நல்ல தைரியசாலியும் , நல்ல குணங்களை கொண்ட மனிதர். 
ஆனால் துக்கத்தையும் கவலையையும் வெளிக்காட்டுவதற்காக இந்த ஷியாக்கள் செய்யும் காரியங்களில் எந்தவிதமான நன்மைகளும் இல்லை. அவரை விடவும் சிறப்பான அவருடைய தகப்பனார் கொல்லப்பட்டார். ஆனால் , இந்த ஷியாக்களால் அவருடைய மரணம் வருடா வருடம் துக்கம் அனுஷ்டிக்கும் நாளாக செய்யப்படுவதில்லை. ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தகப்பனார் ரமலான் மாதம் 17 ம் நாள் வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி 40 ல் பஜ்ர் தொழுகையின் பின் பள்ளிவாயிலில் இருந்து வெளியேறும் போது கொல்லப்பட்டார்.

அஹ்லுஸ் சுன்னாஹ் வின் அடிப்படையில் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை விட சிறப்பானவர் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் துல் ஹிஜ்ஜா தஷ்ரீக் ஹிஜ்ரி 36 ல் வீட்டில் அடைக்கப்பட்டு குரல்வளை அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதனை இந்த மக்கள் வருடாந்த துக்கம் அனுஷ்டிக்கும் நாளாக எடுக்கவில்லை. 

உமர் இப்ன் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் , உஸ்மான் , அலி ரலியல்லாஹு அன்ஹும் அஜ்மயீன் இருவரையும் விட சிறப்பானவர்கள். அவர்கள், மிஹ்ராபில், பஜ்ர் தொழுகையில் நின்று குர் ஆன் ஓதிக்கொண்டிருக்கையில் கொல்லப்பட்டார்கள். இதனை இந்த மக்கள் வருடாந்த துக்கம் அனுஷ்டிக்கும் நாளாக எடுக்கவில்லை. இவர்கள் அனைவரையும் விட சிறப்பான அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மௌத்தை இவர்கள் வருடாந்த துக்கம் அனுஷ்டிக்கும் நாளாக எடுக்கவில்லை.

இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் ஆதமுடைய மக்களின் தலைவரும், அல்லாஹ் சுபஹானஹுதாலாவால் நபியாக தேர்ந்து எடுக்கப்பட்ட நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இவர்கள் அனைவருக்கும் முன் மௌத்தானார்கள். அந்த தினத்தை இந்த மடையர்கலான ரவாபிழிகள் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வருடா வருடம் துக்கம் அனுஷ்டிப்பு செய்வது போன்று யாருமே செய்யவில்லை.

இந்த மாதிரியான பேராபத்தான விடயங்கள் நினைவு படுத்தப் பட்டால் , அப்போது சொல்லப்படக் கூடியதில் சிறப்பானது அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது பாட்டனார் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பு

அதாவது , முஸ்லிம்களில் யாரும் இல்லை , இந்த பேராபத்தான வருந்தக் கூடிய விடயங்களால் பாதிக்கப்பட்டு அதனை நினைவுக் கூறக்கூடிய வேளையில் , அது பழங்காலத்து விடயமாக இருந்தாலும் அவன் சொல்லுவது என்னவென்றால் "

நாங்களும் அல்லாஹ்வுக்கு உரியவர்களே; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல இருக்கிறோம் என்று கூறி பொறுமையை மேற்கொண்டவர்களுக்கு, நற்செய்தி கூறுவீராக!" இமாம் அஹ்மத் , இப்னு மாஜாஹ் .{ அல் பிதாயா வல் நிஹாயா இமாம் இப்ன் கதிர் ரஹீமஹுல்லாஹ் அவர்களின் கிதாபில் இருந்து சுருக்கம் }