[வட்டிக்கும் ஹலால் சான்றிதழ்]

இஸ்லாமிய பெயரில் வங்கிகள்

“வட்டி” இல்லை என்று மேலோட்டமாக தெரிந்தாலும் வங்கியின் “லாபத் தொகை” பின்வாசல் வழி “வட்டி”யாக வருகிறது! 

இஸ்லாமிய வங்கி முறைப்படி செய்யப்படும் அடமான விவகாரத்தில் (Mortgage Transactions), வாங்குபவருக்கு வங்கி கடன் கொடுப்பதில்லை. பதிலாக விற்பவரிடமிருந்து வங்கியே அந்தக் குறிப்பிட்ட பொருளை வாங்கி, சந்தை விலையை விட அதிக லாபத்துடன் விலை வைத்து, வாங்குபவருக்கு மீண்டும் விற்கிறது. 


வாங்குபவருக்கு வங்கி செய்து கொடுகும் ஒரே வசதி அந்தத் தொகையை திருப்பித் தர சுலபமான தவணை முறையை அளிப்பது தான். இருப்பினும், தன்னுடைய நன்மையையும் காத்துக் கொள்ளும் விதமாக வாங்குபவரிடமிருந்து விற்பனைப் பொருளுக்கு ஈடான ஜாமின் உத்தரவாதத்தையும் (strict collateral) பெற்றுக் கொள்கிறது வங்கி.


இதன் மூலம் என்ன தெரிகின்றதென்றால், “வட்டி” இல்லை என்று மேலோட்டமா தெரிந்தாலும், வங்கியின் “லாபத் தொகை” பின்வாசல் வழி “வட்டி” யாக வருகிறது!

  • இந்த வங்கிமுறை அறுபதுகள் வரை இல்லாதிருந்து, கடந்த ஆண்டுகளாகத் திடீரென்று இம்முறை பழக்கத்தில் வருவதும் அதிகமாவதையும் காணக்கூடியதா இருக்கிறது.
  • மற்றொரு உண்மை என்னவென்றால், வட்டி முறை வங்கிகளை விட இஸ்லாமிய வங்கிகளில் தான் லாபம் அதிகம் என்பது நிரூபணமாகிய உண்மையே! அதனால் தான் இன்று எல்லா வங்கிகளும் இஸ்லாமிய வங்கியாக மாரிவருதற்கு முயன்று கொண்டு இருக்கின்றன. ஐரோப்பிய அமெரிக்க வங்கிகளும் இந்த லாபத்தை என்ற பெயரில் வட்டியை பங்கு போட்டு கொள்வதற்கு Islamic Banking Window என்ற தனி பி‌ரிவுகளை திறக்க துவங்கி உள்ளன!!


  • தீவிர வலதுசாரி கொள்கையுடைய அரசு, பிரெஞ்சு நாட்டிலேயே எதிர்ப்புகளுக்கிடையிலேயும் இஸ்லாமிய வங்கி முறையினால் கிடைக்கும் லாபம் என்ற பெயரில் வட்டியை, முதலீட்டையும் கருத்தில் கொண்டு சட்டத்திருத்தம் ஏற்ப்படுகின்றது என்றால்......!!!!!?????


  • மற்றொரு உண்மை என்னவென்றால் வட்டி ஹராம் ஆனதால் வட்டி என்ற பெயரில் இல்லாமல் லாபம் என்ற பெயரில் அதே பணத்தை பெற்றுக் கொள்வதில் மக்களுக்கு மனத்தடை ஏதும் இருப்பதில்லை.
  • தலைமை செயல் அதிகாரி இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லை.

ஏற்கனவே மேலே கூறியபடி இஸ்லாமிய பெயர் தாங்கிய வங்கி முறை என்பது ஒரு ஹராமாவர்த்தக கோட்பாடே  தவிர மார்க்கத்தை பின்பற்றுவதல்ல.

  • லீசிங் முறை கொள்வனவும் இஸ்லாமிய விளக்கங்களும் கேட்க 


இதோ
இன்னுமொரு உதாரணம் >>>>

வீட்டுடமை நிதி -  எவ்வாறு செயல்படுகிறது.
 
நீங்கள் வாங்கவிருக்கும் வீட்டை அடையாளம் காண்க.
விற்றல் வாங்கல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தேவையான அளவு முன் பணம் செலுத்தவும்.
இந்த இஸ்லாமிய வங்கி நிறுவனம் உங்களின் மனுவை தகுதி, நிதி தவணைக்காலம் மற்றும் திரும்பச் செலுத்தும் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசீலனை செய்யும்.
இந்த இஸ்லாமிய வங்கி நிறுவனம் சொத்து கொள்முதல் ஒப்பந்தப்படி சொத்தை உங்களிடமிருந்து வாங்கும்.
இந்த இஸ்லாமிய வங்கி நிறுவனம் மேம்பாட்டாளருக்கோ அல்லது விற்பனையாளருக்கு கொள்முதல் விலையை (நிதித் தொகை)க் கொடுக்கும்.
இந்த இஸ்லாமிய வங்கி நிறுவனம் அவ்வீட்டை உங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட விற்பனை விலையில் (இலாபத்தை உள்ளடக்கிய கொள்முதல் விலை) சொத்துடமை விற்பனை ஒப்பந்தப்படி விற்கும்.
நீங்கள் மாதாந்திர தவணைக் கட்டணங்களை இஸ்லாமிய வங்கி நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டும்.

இதோ இன்னுமொரு உதாரணம் >>>> 


வாடிக்கையாளர் வாங்க விரும்பும் வீடானது, வங்கி மற்றும் வாடிக்கையாளரின் பெயரில் கூட்டுச் சொத்தாக பதிவு செய்யப்படும். இதில், யார் எவ்வளவு பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்றும் குறிப்பிடப்படும். பிறகு இந்தச் சொத்து வாடிக்கையாளருக்கு வாடகைக்கு விடப்படும். இந்த வாடகைத் தொகை, சொத்தில் வங்கி மற்றும் வாடிக்கையாளருக்கு உள்ள பங்கிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, வங்கிக்கு உரிய பங்கை (அதிகரிக்கப்பட்ட விலையில்) மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையைக் கட்டி வாடிக்கையாளர் அந்த வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம். 


வீடு வாங்க கடன் கேட்டு சென்றால் , கடனை வட்டியில்லாமல் கொடுக்காமல் , கடன் கேட்டு சென்றவருடைய காசுடன் , வங்கியிடம் கடனாக கேட்ட காசை முதலீடு என்ற பெயரில் வங்கி கொடுத்து , வாடிக்கையாளர் வங்கி இருவரின் பேரில் கூட்டுச் சொத்தாக வீடு வாங்கப்படும். பின்னர் அந்த வீடு கடன் கேட்டு சென்றவருக்கு வாடகைக்கு விடப்படும். அதாவது வங்கி கடனாக கொடுத்த காசுக்கு வட்டி என்று கேட்டு வாங்காமல் , வாடகை என்ற பெயரில் வட்டி அறவிடப்படுகிறது.
இஸ்லாமிய வங்கிகளின் பிரதான செயற்பாடுகள் சில...

முராபஹா

குறிப்பிட்ட ஒரு பொருளை குறித்த நபர் அப்பொருள் செந்தக்கார னிடம் சென்று அப்பொருள் பற்றி விபரம் அறிந்து அவ் அறிக்கையை வங்கிக்குச் சமர்ப்பிக்கின்றார். அதனைக் கொள்வனவு செய்து தரு மாறும் வேண்டிக் கொள்கின்றார். வங்கியின் முகவர் அங்கு சென்று அதனைப் பார்வையிட்டதன் பின்னர் வங்கி அதனைக் கொள்வனவு செய்து இலாபத்தையும் சேர்த்து முயற்சியாளனுக்கு விற்பனை செய்யும்.  இவ் வகைகளில் முராபஹா வியாபாரம் மேற்கொள் ளப்படுகிறது.


தவணை அடிப்படையில் பொருட்களை விற்றல்.

இங்கு பொருளின் விலை உடன் காசுக்கு பெறுவதை விட சற்று அதிகமாகக் காணப்படுகி றது. 11 இலட்சத்திற்கு கொள்வனவு செய்த வாகனம் ஒன்றை வங்கி 15 இலட்சத்திற்கு வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்பனை செய்கின்றது. இதனைச் சரிசமமான முறையில் பிரித்து மாதாந்த தவணைக் கட்டணமாக செலுத்துவார். 


இவ்வாறு , வட்டி என்ற சொல்லுக்கு இலாபம் / வாடகை என்று பெயரிட்டு வட்டி அறவிடப்படுகிறது. இந்த இஸ்லாமிய பெயரில் வட்டி வங்கி முறையை ஒரு பாடத்திட்டமாக பிரித்தானியா போன்ற நாடுகள் தாங்கள் நடாத்தும் பிரபல்யமான கற்கை நெறிகளில் உள்ளடக்கி இருக்கிறது. இந்த பிரித்தானிய கற்கை நெறிகளை எமது முஸ்லிம்களும் இஸ்லாமிக் பிநேன்ஸ் என்று கூறி படித்தும் கொடுக்கிறார்கள். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّذَلِكَ

بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ

مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ

النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ  (2:275

யார் வட்டி(வாங்கித்) தின்றார்களோ, அவர்கள் (மறுமையில்)  ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல்  (வேறுவிதமாய்)  எழமாட்டார்கள்;  இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைத் போன்றதே" என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது  என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும்  தங்கிவிடுவார்கள்.

பொதுவாக மேற்கூறிய இஸ்லாமிய பெயர் தாங்கிய வங்கிகள், பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அனைத்தும் வட்டியையே பிரதான வருவாயாகக் கொண்டு இயங்குகின்றன என்பதை நாம் அறிவோம்.
நாம் வட்டி வாங்கவில்லை அல்லது கொடுக்கவில்லை என்றாலும் இதைச் செய்கின்ற நிறுவனங்களில் பணிபுரிவது வட்டி சம்பந்தமான ஒப்பந்தத்தை எழுதுவதற்கோ அல்லது அதற்கு சாட்சியாக, உடந்தையாக இருப்பதில் அடங்கும்.

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் நபி ஸ்ல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” (என்று கூறினார்கள்). அறிவிப்பவர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.


இலங்கை நாட்டில், இந்த வட்டிக்கு ஹலால் சான்றிதழ் கொடுத்து வேகமாவும் முனைப்பாகவும் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்கள் பிரபல்யமான முப்திகளும், இஹ்வானி கலாசாலை பணிப்பாளர்களும் etc.......