[முஸ்லிமும் வெளித்தோற்றமும்]

தலையை மறைப்பது தொடர்பான இஸ்லாமிய சட்டம் 


இந்தப் பகுதியில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தலை மறைக்கும் விடயத்தில் வேறுபாடுகள் இருக்கின்ற காரணத்தால் இந்தவிடயத்தில் நபி வழியை நாம் சுட்டிக்காட்டுவது எமது கடமை என்பதால் கீழ்வரும் ஆதாரங்களை சுட்டிக்காட்டுகிறோம்.

நபி சல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கிகாரம் ஆகியவைகளே சுன்னத் என அழைக்கப்படுகிறது என்ற விடயம் அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஅத்தின் அறிஞ்சர்கள் மத்தியில் அங்கிகரிக்கப்பட்ட ஒரு பொதுவான கருத்தாக காணப்படுகிறது. 


அதே நேரம் சுன்னத் என்ற போர்வையில் சொந்த கருத்துக்களிலும், சமூகத்தின் பழக்க வழக்கங்களிலும் , இயக்க வெறிகளிலும் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் ஆதாரப்பூர்வமாக நிருப்பிக்கப்பட்டாலும் கூட அவைகளை சுன்னத் என்று முடிவு எடுப்பதனை விட்டும் பின் வாங்கி அவைகளுக்கு ஆயிரம் சாட்டு போக்குகளையும், காரணங்களையும் கூறிக் கொண்டிருப்பது எமக்கு ஒரு புதுமையான விடயம் அல்ல.


நாம் எம்முடைய சமூகத்திற்கு உபதேசமாக எத்திவைப்பது என்னவெனில், சத்தியத்தை வளர்த்து அசத்தியத்தை அழிக்க விரும்பும் மக்கள் என்றால் உண்மைகள் கசப்பாக இருக்காமல் இருக்க இயக்க வெறிகளையும் , கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களையும் , சமூக கலாச்சாரங்களையும் ஒதுக்கி தள்ளி விட்டு தூய்மையான இஸ்லாமியக் கொள்கையையும், குர் ஆனையும் சுன்னாவையும் நேசிக்கும் 

மக்களாகவும் , சஹாபாக்கள் சமூகத்தின் பழக்க வழக்கங்களை மதித்து உண்மையை கண்டுக்கொள்ள முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..


அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு மனிதர் அல்லாவின் தூதரே, இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும் ? என்று கேட்டார், 


அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அளிஹி வசல்லம் அவைகள், (முழு நீளச்) சட்டைகள், தலைப்பாகைகள், முழுக்கால் சட்டைகள், தொப்பிகள், காலுறைகள் ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்து கொள்ளட்டும். ஆனால் காலுறை இரண்டும் கனுக்கால்களுக்குகீழே இருக்கும் படி கத்தரித்துக்கொள்ளட்டும். குங்குமப் பூச்சாயம் மற்றும் "வர்ஸ்" எனும் வாசனைச் செடியின் சாயம் தேய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள் என்று சொன்னார்கள்.        (புஹாரி 5083)


இஸ்ஸத் பின்த் இயாத் கூறியதாவது  

அபா கிர்ஸாபா கூற நான் கேட்டிருக்கிறேன் 

நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் எனக்கு ஒரு தொப்பியை அளித்து "இதனை நீ அணிந்து கொள்" எனக் கூறினார்கள்.   

                                   (முக்ஜமுல் கபீர் அத்தபரானி 3/19 (2520))


சுலைமான் பின் தர்கான் அவர்கள் கூறியதாவது

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது தொப்பியொன்றை நான் கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பலி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது.       (புஹாரி 5082)


(கடும் வெப்பத்தின் காரணமாக) ஸஹாபாக்கள் தலைப்பாகையின் மீதும், தொப்பியின் மீதும் ஸஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர் : ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு

நூல் : புகாரி


“நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் (மக்கா வெற்றியின் போது) கறுப்புத் தலைப்பாகை அணிந்தவர்களாக மக்காவில் நுழைந்தனர்” அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்துல்லா ரலியல்லாஹு அன்ஹு  நூல் : முஸ்லிம் 


(அதே மக்கா வெற்றியின் போது) “நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 

 அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்” அறிவிப்பவர் : ஜஃபர் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு

நூல் : முஸ்லிம் 


“நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளூ செய்யும் போது தன் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்தார்கள்” அறிவிப்பவர் : அனஸ் ரலியல்லாஹு 

அன்ஹு நூல் : அபூதாவூத், இப்னு மாஜா 


இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தலைப்பாகையை இரண்டு தோல்களுக்குமிடையில் தொங்க விடுபவர்களாக இருந்தார்கள்.      (திர்மிதி)


“இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு  மக்காவுக்குப் புறப்பட நேர்ந்தால், ஒட்டகப்பயணம் சிரமமாகும் போது ஏறிச் செல்வதற்கு (மாற்று வாகனமாக) கழுதையையும், ஒரு தலைப்பாகையையும் வைத்திருப்பார்கள். அதை தலையில் 

கட்டிக் கொள்வார்கள்”. அறிவிப்பவர் : இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு 

நூல் : முஸ்லிம்


எமக்கு இந்த விடயத்தில் சஹீஹான அறிவிப்புக்கள் நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுடைய வழிமுறையை சுட்டிக்காட்டுகிறது. இதனால் தலையை மறைப்பது ஒரு சுன்னத்தான விடையம் என உறுதியாகக்  கூறமுடியும்.


தலையை மறைப்பது சுன்னத் எனும் இந்த முடிவு இன்ஷா அல்லாஹ் அல் குர் ஆனையும் சுன்னாவையும் சஹாபாக்கள் விளங்கிய அடிப்படையில் சமூகத்தில் இஸ்லாத்தை உயிர்பிக்க வேண்டும் என்று நாடி இமாம்களுடைய தலையை மறைக்கும் விடயத்தில் அவர்களது மேலதிக விளக்கங்களை எத்தி வைக்க ஆசைப்படுகிறோம். அந்த வகையில் ஷேக் முஹம்மத் நாசிருத்தீன் அல்பானி ரஹீமஹுல்லாஹ் அவர்களின் கருத்தை நாம் எத்தி வைக்கிறோம். 


தொழுகையில் திறந்த தலையுடன் தொழ முடியும் என்பதற்கு பிக்குசுன்னாஹ் எனும் நூலின் ஆசிரியர் செயித் ஸாபிக் அவர்கள் தொழுகையில் தலையை மூடுவத்தின் சிறப்பு பற்றி வந்துள்ள ஆதாரத்தை மறுப்பது பற்றி நோக்குவோம்.


 " நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில சமயம் தனது தொப்பியை கழற்றி சுத்ராவாக பயன்படுத்துவார்கள்" என்ற அறிவிப்பை ஆதாரமாக குறிப்பிடுகின்றார். 


அதற்க்கு ஷேக் அல்பானி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் பிக்குசுன்னாவின் விமர்சன நூலான தமாமுள் மின்னா எனும் தனது நூலின் பக்கம் 164 - 166  களில் பின்வருமாறு பதிலளிக்கின்றார்கள். 

தலையை திறப்பதற்கு மேற்படி அறிவிப்பின் காரணங்களை ஆதாரமாக கொள்ள முடியாது.

  • 1. இந்த ஹதீஸ் பலஹீனமானதாகும். இது பற்றி எனது சில்சிலத்து ஹா ஹதீஸுல் லயிப்பா (2538) ல் விபரித்துள்ளேன். 
  • 2.  ஒரு வாதத்திற்காக இந்த ஹதீஸை ஸஹிஹ் என வைத்துக்கொண்டாலும் பொதுவாக திறந்த தலையுடன் தொழ முடியும் என ஆதாரமாக கொள்ள முடியாது. ஏனெனில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுத்ரா இல்லாத சந்தர்ப்பத்தில்  தான் அவ்வாறு தொழுதுள்ளார்கள்.  

இந்த விடயத்தில் எனது அப்பிபிராயம் என்னவெனில் திறந்த தலையுடன் தொழுவது மக்ருஹ் வெறுக்கத்தக்கதாகும். மனிதன் அலங்காரம் செய்துக்கொல்வதற்க்கு   அல்லாஹ்வே மிகவும் அருகதை உடையவன் என்ற நபி மொழிக்கேற்ப ஒரு முஸ்லிம் பூரணமான இஸ்லாமியத் தோற்றத்தில் தான் தொழுகைக்கு செல்ல வேண்டும் என்பது எல்லோரும் அறிந்த , எற்றுக்கொண்ட விடயமாகும். 

வழமையாக திறந்த தலையுடன்  காணப்படுவதும் , அவ்வாறே வீதிகளில் உலாவருவதும், வணக்கஸ்தலங்களில் நுழைவதும் சலபுஸ் சாலிஹீன்களின் வழக்கில் நல்ல தோற்றம் அல்ல. 


மாறாக இது காபிர்கள் முஸ்லிம் நாடுகளில் நுழைந்து தங்களுடைய கேட்ட வழக்கங்களை கொண்டு வந்ததன் காரணமாக ஊடுருவிய ஒரு அந்நிய வழக்கமாகும். 

இது போன்ற வேறு அந்நிய பழக்க வழக்கங்களாலும் தங்களுடைய இஸ்லாமிய அடையாளத்தை வீணடித்துவிட்டார்கள். 

இவ்வாறு இடையில் ஏற்பட்ட பழக்கம் தொன்று தொட்டு இருந்து வரும் எமது இஸ்லாமிய பாரம்பரியத்திற்கு மாறு செய்வதற்கோ திறந்த தலையுடன் தோழா முடியும் என்பதற்கோ சான்றாக அமைய முடியாது. அத்துடன் எகிப்த்தில் உள்ள " அன்சாருள் சுன்னா " மக்கள் சிலர் ஹஜ்ஜில் திறந்த தலையுடன் தொழுவது இதையே முஸ்லிம்கள் பின்பற்றி இதன் 

தொழுகையில் தலை திறந்து இருக்க முடியும் என் ஆதாரமாகும் என் கியாஸ் அடிப்படையில் கூறுவது மிகவும் பிழையான கியாஸாகும். 


கியாஸ் சரியானதாக இருந்தால் ஹஜ்ஜில் தலையை திறப்பது எவ்வாறு கடமையோ அதேபோன்று தொழுகையிலும் தலையை திறப்பது கடமை (வாஜிப்) என்றாகிவிடும். எனவே இந்த கியாசை இவரகள் விட்டு விட வேண்டும். 


இன்னும் " பள்ளிவாயலுக்கு தலையை திறந்தவர்கலாகவும், தலையை கட்டியவர்களாகவும் வாருங்கள் , நிச்சயமாக தலைப்பாகைகள்  முஸ்லிம்களின் கிரீடங்களாக இருக்கின்றன " என்ற அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸும் இவர்களின் கருத்திற்கு ஆதாரமாக அமைய முடியாது. காரணம் இது மைசரா என்பவரால் இட்டுக்கட்டப்பட்டதாகும். 


ஏனெனில் ஹஜ்ஜில் தாலியை திறப்பது இஸ்லாத்தின் அடையாளச் சின்னமாகும். ஹஜ் கிரியைகளும் ஏனைய    வணக்கங்களும் ஒருபோதும் சமமாகாது . இவர்கள் கூறும் இந்த மேலும், பயபக்திகாக வேண்டி திறந்த தலையுடன் தொழுவது விரும்பத்தக்கது எனக்கூறுவது   சொந்த அபிப்பிராயத்தின்படி ஆதாரமின்றி மார்க்கத்தில் தீர்ப்பு ஒன்றை பித் அத் ஆக ஏற்படுத்துவதாகும். இவ்வாறு கூறுவது உண்மையாக இருந்தால் ரசூல் சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திறந்த தலையுடன் 
தொழுதிருப்பார்கள். அவ்வாறு நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது இருந்தால் அது பற்றி அறிவிப்புகள் வந்திருக்கும். அறிவிப்புகள் இல்லாததது இது பித் அத் என்பதை காட்டுகிறது. 


எனவே இது பற்றி எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். 
எனவே மேற்படி விடயங்களை கவனத்தில் கொள்ளும் போது ஆசிரியர் (சய்யித் சாபிக்) தொழுகையில் தலையை மூடுவத்தின் சிறப்பு பற்றி வந்துள்ள ஆதாரத்தை மறுப்பது முற்றிலும் சரியல்ல. அவர் ஒரு குறிப்பிட்ட ஆதாரத்தையே மறுக்கின்றார். 


மாறாக நாம் மேலே தெளிவு படுத்தியது போல் தொன்று தொட்டு இருந்து வரும் இஸ்லாமியச் சீருடையைக்கொண்டே தொழுகைக்காக நாம் அலங்கரித்துக்கொள்ள வேண்டும் என்ற பொதுவான ஆதாரத்தை மறுக்கவில்லை. ஒரு பொதுவான ஆதாரத்திற்கு வேறு ஆதாரம் முரண்பாடாக வரவில்லை என்றால் எல்லோரும் அதை ஆதாரமாகவே கருதுகிறார்கள். எனவே இவ்விடயத்தில் நாம் மிக்க கவனமாக நடந்து கொள்ள வேண்டும். 


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இமாம் அல்பானி அவர்கள் காற் சட்டை  அணிவதில் இரண்டு பிரச்சினைகள் இருப்பதாக   குறிப்பிடுகிறார்கள்.  


  1 . இது இறை நிராகரிப்பாளர்களை பிரதிபலிக்கும் ஆடைகளாகும்.  
  முஸ்லிம்கள் பொதுவாக அகன்ற கீழ் ஆடை ( சராவீல் ) அணிபவர்களாக இருந்தனர். அதாவது இறுக்கம் இல்லாத நன்கு அகன்றதானவை, இன்றும் சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் அணிவர். முஸ்லிம்கள் காலனித்துவ ஆட்சியால் இந்த இறுக்கமான காற்ச்சட்டை அணியும் பழக்கத்தை பழக்கமாக்கிக் கொண்டனர். காலனித்துவ ஆட்சியாளர்கள் சென்றதன் பின்னர் , முஸ்லிம்களுடைய அறியாமையின் காரணத்தால் , அவர்கள் விட்டுச் சென்ற இந்த அசிங்கமான / கெட்ட பழக்கம் மிகைத்து அவர்களை மாற்றி விட்டது. 


2. இந்த வகையான ஆடை இறுக்கமானதும் அவ்ரத்தை( மறைக்க வேண்டிய பகுதி )அழுத்தி பிடிப்பதுமாகும். மனிதனின் மறைக்கப்பட வேண்டிய பகுதி தொப்புள் தொடக்கம் முழங்கால் வரையாகும். இன்னும் தொழுகையாளி அவரது தொழுகையில் அவரால் முடிந்த அளவு அல்லாஹ்வுக்கு கீழ் படியாத தன்மையை விட்டு தூரமாக கட்டாயம் இருக்க வேண்டும். அவனுக்கு சுஜூது செய்வது கீழ்படிவதற்கும்

அடிபணிவதற்கும் ஆகும். அவன் தனது இரட்சகனின் முன்னாள் தனது பின் பகுதியையும் அதற்கு மத்தியில் உள்ளவைகளையும் தெளிவாக காட்டியவாறு எப்படி நிற்க்க முடியும் ?


ஆச்சரியமான விடயம் தான் , இஸ்லாமிய இளைய சமுதாயத்தினர் பெண்கள் இறுக்கமாக அணிவதை அனுமதிக்காது தாங்கள் அணிவதற்கு விதிவிலக்காக எடுத்து மேனியுடன் ஒட்டிய அதே ஆடையை அவர்களும் அணிகின்றனர். இன்னும், இந்த 

இளஞ்சர்கள் தங்களையே மறந்தும் விட்டனர். பெண்கள் அணியும் உடலை அழுத்தி பிடிக்கும் அந்த இறுக்கமான ஆடைகளுக்கும் ஆண்கள் அணியும் மேனியுடன் ஒட்டிய அதே காற்சட்டைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் 

பின்புறம், அவ்ரத்தை சேர்ந்ததாகும், இன்னும் அவை ஒத்ததாகும்.  இந்த விடயத்தில் 

குருட்டுத்தனமாக இருக்கும், இந்த இக்கட்டான நிலைமையை பற்றி  இளைய சமுதாயத்தினருக்கு எச்சரிக்கை செய்வது கட்டாய கடமையாகும். அல்லாஹ் அருள் புரிந்தவர்களை தவிர, சொற்பமானவர்களே இவ்வாறு முன்னுதாரணம் மிக்கவர்களாக 

இருப்பதுபோல் தோன்றுகிறது. 


ஷேக் ரபிய் இப்னு ஹாதி அல் மத்கலி ஹபிதஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது " 

அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும் , 

காற்ச்சட்டை அணிவது இறைமறுப்பாளர்களை பிரதிபலிப்பதாகும் என நீங்கள் எச்சரித்து உள்ளீர்கள். இதன் காரணமாக நிறைய சகோதரர்கள் இது ஹராமா ? எனக் கேட்கிறார்கள் ? "


பதில் >> 

ஆம் , இறை மறுப்பாலர்களுடைய  காற்ச்சட்டையை ஒத்திருக்கும் காற்ச்சட்டை ஹராமாகும். ( எவர் ஒரு சமூகத்தை பிரதிபலிக்கின்ராரோ அவர் அவர்களை 

சார்ந்தவர் ). நான் சில அரபு நாடுகளில் பார்த்திருக்கிறேன் அதாவது சில பெண்களை பார்த்தால் அவர்களின் வெட்ககேடான ஆடையின் காரணமாக அவர்களை கிறிஸ்தவர்களா ? முஸ்லிமா ? என வித்தியாசம் காண முடியாது. 

மேலும் நீங்கள் ஒரு  முஸ்லிம், ஒரு கிறிஸ்தவர் , ஒரு யூதர் , ஒரு கம்யூனிஸ்ட் ஐ  பாருங்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் காணுவீர்கள் தாடியை நன்கு மலித்தவராக, 

தலையை திறந்தவராக , கழுத்தில் ஒரு கச்சை ( necktie ) அணிந்தவராக, அவர் கூறுவார் " நான் ஒரு முஸ்லிம் " என்று. 


இன்னும் பெண்கள் யூத கிறிஸ்தவர்களை விடவும் முடியுமான அளவு வெட்கக்கேடான ஆடைகளை, முஸ்லிம் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு அணிகிறார்கள். இது எந்தளவுக்கு என்றால் இவர் ஒரு முஸ்லிம் , இவள் ஒரு முஸ்லிம் என்று சொல்லித்தான் தெரியவேண்டும்.  


இவ்வாறு அவளுடைய தோற்றமும் அவளுடைய ஆடையும் உங்களால் அவளை முஸ்லிம் என்று அடையாளம் காண முடியாத நிலையில் இருக்கும் என்றால் இது 

பற்றி நீங்கள் என்ன சொல்லுவீர்கள் ? ஹராமா ? ஹலாலா ? 

தாடிக்கு ஒரு பிடிக்கு மேல் வைப்பது 
பித்அத்  ஆகும் 


“மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விடுங்கள்!” அறிவிப்பவர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ


“இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)

“நெருப்பை வணங்குவோருக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)

“இப்னு உமர் (ரழி) அவர்கள் தன் தாடியில் ஒரு பிடிக்கு மேல் உள்ளதை நீக்கக் கண்டேன்” என்று மர்வான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல் : அபூதாவூது)

“இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹஜ், உம்ராச் செய்யும் போது, தங்கள் தாடியிலிருந்தும், மீசையிலிருந்தும் (சிறிது) குறைத்துக் கொள்வார்கள்” அறிவிப்பவர் : நாபிவு ரழியல்லாஹு அன்ஹு, நூல்கள் : புகாரி, முஅத்தா

தாடியை விட்டு விடுங்கள் என்ற நபிமொழியின் கருத்து,  இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஒரு பிடி என்பது தான் என்று தெளிவாக உணரலாம். குறிப்பாக இப்னு உமர் (ரலி) அவர்களைப் பொறுத்த வரை நபிமொழியை ஜானுக்கு ஜான் கடைப்பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். 


தாடியை விட்டு விடுங்கள் என்ற ஹதீஸ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு  அவர்களுக்கு தெரியாமலிருக்கலாம் என்றும் கருத முடியாது, அந்த ஹதீஸை அறிவிப்பதே இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு  அவர்கள் தான். ஒரு ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளரே அந்த ஹதீஸைப் பற்றி நன்கறிந்தவராக இருப்பார் என்று ஹதீஸ் கலையில் ஒரு விதி கூறப்படும். ஹதீஸை அறிவிக்கக் கூடிய இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு  அவர்களே தன் தாடியைக் ஒரு பிடிக்கு மேல் உள்ளதை குறைத்துள்ளார்கள் என்றால், குறைக்கலாம் என்பதற்கு சரியான ஆதாரமாகும்.

மேற்கூறிய ஆதாரங்களிலிருந்து, “தாடியை விட்டு விடுங்கள்” என்ற நபிமொழியின் கருத்து ஒரு பிடி விட்டு விடுங்கள் என்பது தான் என்று தெளிவாக உணரலாம்.மேற்கூறிய ஆதாரங்களிலிருந்து, தாடியை சிரைக்கக் கூடாது என்றும் தெளிவாக உணரலாம்.

கன்னத்தைக் சிரைத்துக் விட்டுத் தாழ்வாயில் மட்டும் முடிகளை விட்டுவிட்டு, அதைத் தாடி என்று சிலர் கருதுகின்றனர். “கன்னம், தாழ்வாய்” இரண்டும் சேர்ந்தே தாடி எனப்படும். இதில் ஒரு பகுதியைச் சிரைத்தாலும், தாடியைச் சிரைத்ததாகவே கருதப்படும். தாடியை சிரைப்பது ஹராமாகும்.

எனவே தாடி வைப்பது வலியுறுத்தப்பட்ட நபிவழி என்று இதன் மூலம் அறிய முடிகிறது. இந்த சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக நாம் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. நமது முயற்சியில்லாம் தானாக வளரும் தாடியை அகற்றாமல் இருந்தாலே சுன்னத்தை நிறைவேற்றிய நன்மை நமக்கு கிடைக்கின்றது. 

அது மட்டுமின்றி தாடியைப் பொறுத்த வரை அது நமது உடலில் ஒரு அங்கமாக இருக்கின்றது. நமது வாழ்நாள் முழுவதும் இந்த சுன்னத்தைத் தொடர்ந்து நிறைவேற்றும் பாக்கியம் இதன் மூலம் நமக்குக் கிடைக்கின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் தாடி வைக்க வேண்டும். உங்கள் வெண்மையான தாடிகளை சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். 


அல்லாஹ்வின் தூதர் சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதிர்ந்த வயதுடைய அன்சாரிகள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்சாரிக் கூட்டத்தாரே (உங்கள் தாடிகளை) சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் முழுக்கால் சட்டை அணிகிறார்கள். வேட்டி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் முழுக்கால் சட்டையும் வேட்டியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் காலுறை அணிகிறார்கள். காலணி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் காலுறையும் காலணியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களது மீசைகளை நீங்கள் (ஒட்ட) கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் 

என்று கூறினார்கள். நூல் : அஹ்மது 21252
நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் தலை முடி பற்றி….


நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் (தலை) முடி அவர்களின் 

தோள்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. புஹாரி : 5904 அனஸ் (ரலி)


அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு  அவர்களிடம் தூதர் சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் (தலை) முடி பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘தூதர் சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் (தலை) முடிஅலையலையானதாக இருந்தது. படிந்த முடியாகவும் இல்லை. சுருள் முடியாகவும் இல்லை. அவர்களின் காது மடல்களுக்கும் அவர்களின் தோளுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது” என்று பதிலளித்தார்கள்.

 புஹாரி :5905 


நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலையைப் படிய வாரி இருந்ததை நான் கண்டிருக்கிறேன். அறிவிப்பவர்: இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி.


இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த விஷயத்தில் தமக்கு (இறைக்) கட்டளை ஏதும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக் காரர்களுடன் ஒத்துப்போவதை விரும்பி வந்தார்கள். வேதக்காரர்கள் தங்களின் தலை முடியை (வம்டெடுத்து வாரிவிடாமல் நெற்றியில்) தொங்கவிட்டுவந்தார்கள். இணைவைப்பாளர்கள் தங்கள் தலை(முடி)களை வம்டு எடுத்துப் பிரித்துவந்தார்கள். எனவே, நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (முதலில்) முன் தலைமுடியை (நெற்றியில்) தொங்கவிட்டு வந்தார்கள். பிறகு அதை (வம்டெடுத்து)ப் பிரித்தார்கள்.  நூல் : புகாரி.


அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
(என் தந்தை) உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், '(தலையில்) சடை வளர்த்திருப்பவர் (ஹஜ்ஜின் முடிவில் தலை முடியை) மழித்துக் கொள்ளட்டும். (சடை வளர்ப்பதன் மூலம்) களிம்பு தடவித் தலை முடியைப் படிய வைப்பர்களுக்கு ஒப்பாம் விட வேண்டாம்' என்று சொல்ல கேட்டேன்.
(இதை அறிவிப்பாளரான சாலிம் இப்னு அப்தில்லாஹ் ரஹீமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.)  (என் தந்தை) இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், 'நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் தலை முடியைக் களிம்பு தடவிப் படிய வைத்துக் கொண்டதை பார்த்தேன்' என்று கூறுவார்கள். நூல் : புகாரி.


அபூபக்கர்  ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை அபுபு குஹபொ ரழியல்லாஹு அன்ஹு அவர்களை மக்கா வெற்றியின்பொது (நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடம்) அழைத்து வரப்பட்டது. அவரது தலை முடியும், தாடியும் வெள்ளை வெளர் என்று காணப்பட்டது. “இந்த முடியின் வெண்மையை ஏதேனும் (சாயத்தைக்) கொண்டு மாற்றி விடுங்கள்! கருப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!” என்று நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம்.