ஹிஸ்பியூன் நீர் கொழும்பு அத் தார் அஸ் ஸலபிய்யா வின் சூழ்ச்சிகளும் தம்மாஜ் னுள் அதன் பிரவேசமும் தம்மாஜ் மக்கள் அவர்களுடன் சகவாசமும்

ஹிஸ்பியூன் நீர் கொழும்பு அத் தார் அஸ் ஸலபிய்யா வின் சூழ்ச்சிகளும் தம்மாஜ் னுள் அதன் பிரவேசமும் தம்மாஜ் மக்கள் அவர்களுடன் சகவாசமும்


بسم الله الرحمن الرحيم 
الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد


ஸ்ரீ லங்கா நாட்டில் உள்ள சர்ச்சைகளில் ஒரு பெரும் பெரிய சர்ச்சை ஆக இருக்கிறது. அது என்னவென்றால், இயக்க வாதியாக இருக்கும் அத்தார் அஸ் லபிய்யா நீர் கொழும்பு கூட்டம் , பல காலமாக ஸலபி தஃவாவுக்கு எல்லா விதமான எதிர்ப்புகளும் காட்டினார்கள்.


இப்போது, இந்த கூட்டம் இந்த தஃவா வை உடைப்பதற்காக தம்மாஜ் இல் நுழைந்து உள்ளார்கள். அதனுள் நுழைந்துக் கொண்டு , ஷேக் யஹ்யா அல் ஹஜூரி ஹபிதஹுல்லாஹ் அவர்களின் பறக்கத்தான , சிறப்பான ஸலபி தஃவா வின் பின்னால், அவர்கள் இன்னொமொரு ஸலபி தஃவாவை உடைப்பதற்கு காத்துக் கொண்டு இருக்கிறார்கள் , முயற்சி செய்கிறார்கள். 


அது நடக்குமா ? அது நடந்தே தீராது. இது அவர்களது பின்னால் இருக்கும் பையன்களாலும் , கூட்டங்களாலும் செய்யப்படும் காரியங்களாகும்.


இந்த விடயத்தின் காரண காரியங்களை சற்று விரிவாக நோக்குவோம். 


ஒரே காலத்தில் ஒரே தரத்தில் இருக்கும் அறிந்ஜர்கள் ஒருவர் மற்றவரை
பற்றி பேசும் விடயங்களை கவனத்தில் கொள்ளக்கூடாது. அதாவது
ஒரே காலக் கட்டத்தில் உருவான இரண்டு அறிந்ஜர்கள் ஒருவரை பற்றி
மற்றவர் சொல்லும் குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொள்ளக்கூடாது. இதனை உலமாவுஸ் ஸுன்னா கவனத்தில் எடுப்பதில்லை.


அதாவது , ஒருவர் மற்றவரை பற்றி பேசும் விடயங்களில் அகீதாவோ , மன்ஹஜூ தவிர்ந்து ஒருவர் மற்றவரை பற்றி தனிப்பட்ட விடயங்களை பேசும் போது , உதாரணமாக , ஒருவர் மற்றவரை பொய்யர், ஷெய்த்தான் என்றெல்லாம் சொல்லப்படும் விடயங்களை கருத்தில் கொள்வதில்லை.


ஏனெனில், அந்த அறிந்ஜர்களை கவனித்து பார்த்தால், அவர்கள் சிறப்பான கல்வி சுமந்தவர்களாக தான் இருப்பார்கள். இதற்கு தற்காலத்தில் உள்ள ஒரு உதாரணம் தான் தம்மாஜ் க்கும் ஷேக் உபைத் அல் ஜாப்ரி ஹபிதஹுல்லாஹ் இருவருக்கும் இடையில் நடைபெறும் சர்ச்சைகள்.


அதாவது, ஒரே தரத்தில் இருக்கும் அறிந்ஜர்கள் ஷேக் உபைத் அல் ஜாப்ரி யும் ஷேக் யஹ்யா அல் ஹாஜூரியும் இருவரும் ஐமதுஸ் ஸுன்னா, ஐமதுஸ் ஸலபுஸ் ஸாலிஹீன். இரண்டுபேரின் கல்வியும் எமக்கு
அவசியம். இந்த இரண்டு பேரில் இருந்தும் எவரையும் நாம் தூரமாக்க முடியாது. இந்த இரண்டு பேரில் இருந்து மக்களை தூரமாக்க வருபவன் ஸுன்னாவின் எதிரி. சத்தியத்தின் எதிரி.


அதே நேரத்தில் இரண்டு பேரும் ஒருவரை பற்றி மற்றவர் பேசியதை. 

நாம் சம்பந்தமாக்கி பேசக்கூடாது. ஏனெனில், இப்படியான விடயங்களை மூடி மறைத்து விடு அறிவிக்க வேண்டாம் என்று ஸலபுஸ் ஸாலிஹீன்கள் கூறுவார்கள். இது தான் ஸலபுஸ் ஸாலிஹீன்களின்
வழிமுறையை பின்பற்றுபவர்களின் வழிமுறையாகும்.


ஷேக் உபைத் அல் ஜாப்ரி ஹபிதஹுல்லாஹ் அல் குர் ஆன் அஸ்ஸுன்னா வை சஹாபா விளக்கத்தில் பின்பற்றும் ஒரு அறிஞ்சர். அதே போன்று ஷேக் யஹ்யா இப்னு அலி அல் ஹாஜூரி ஹபிதஹுல்லாஹ் அல் குர் ஆன் அஸ்ஸுன்னா வை சஹாபா வழிமுறையில் பின்பற்றும் ஒரு அறிஞ்சர். இந்த விடயத்தில் எவரும் அவர்களை மறுத்து பேச முடியாது.


மனிதன் என்ற ரீதியில் யாரிடமும் ஆராச்சியில் தவறுகள் நடக்கும். தவறுகளை சுட்டிக் காட்டுவதில் , ஆதரங்களை சுட்டிக் காட்டுவதில் அறிஞ்சர்களின் கருத்துக்களை , ஆராய்ச்சிகளை நாம் ஏற்றுக் கொள்வோம். எது ஆதாரத்துடன் முன்வைக்கப்படுகிறதோ அதனை ஏற்று தவறை நிறுத்தி விடுவோம். அதற்கு மேலதிகமான பேச்சுகளில் அதாவது, அவரிடம் சென்று படிக்க வேண்டாம், இவரிடம் சென்று படிக்க வேண்டாம்
இவரது கூடத்திற்கு போக வேண்டாம் , அவரது கூட்டத்திற்கு போக வேண்டாம் என்ற வார்த்தைகள் எல்லாவற்றையும் மூடி மறைத்து வீசி விடு. அறிவிக்க வேண்டாம்.


இருப்பினும், இவற்றை மூடி மறைக்காமல் பரத்திக் கொண்டு இருப்பது அவர்களது பின்னால் இருக்கும் பையன்களாலும் , கூட்டங்களாலும் செய்யப்படும் காரியங்களாகும். மாற்றமாக இப்படியான விடயங்கள் அந்த அறிந்ஜர்கள் மத்தியில் மனிதர்கள் என்ற ரீதியில் நடக்கும் தவறுகளாகும். 


அந்த அறிந்ஜர்கள் தான் இவ்வாறு கூறினார்கள் என்று அவர்களின் வார்த்தைகளை சுமந்துக் கொண்டு , ஒரே காலத்தில் வாழும் அறிந்ஜர்கள் மத்தியில் நடைபெறும் சச்சரவுகளை பரத்தக் கூடாது. இன்னும், இவ்வாறு அவர்கள் மத்தியில் கூட நடப்பது இயல்பே.


ஏனெனில் , மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள். அவர்களில் சிறப்பானவர் தவ்பா செய்துக் கொள்பவர். அந்த அடிப்படையில் அவர்கள் இருவரும் தஃவா ஸலபிய்யாவை ஒன்று சேர்ந்து கட்டியெழுப்ப வேண்டும் என்று நாங்கள் ஆசைபடுகிறோம் , எதிர்பார்க்கிறோம்.


என்றாலும், ஸுன்னாவின் கோடியை உயர்த்துபவர்கள் என்று அறிந்துக் கொண்டே , ரசூளுல்லாவின் ஸுன்னாவை உயிர்பிக்க கூடியவர்கள் என்று 
அறிந்துக் கொண்டே , குர் ஆன் ஸுன்னா சஹாபா விளக்கத்தை உயிரூட்டுபவர்கள் என்று அறிந்துக் கொண்டே , நாங்கள் எந்த எதிர்ப்பு பக்கத்திற்கும் சார்ந்து , அந்த உலமாவுஸ் ஸுன்னாவை விமர்சித்து, கேவலமாக்கி , அவர்களது தவறுகளை பெரிதாக்கி காட்டி , மக்களையும் சமூகங்களையும் வழி கெடுக்க முடியாது.


அப்படி நாங்களும் மறுத்து , கெடுத்து விட்டோம் என்றால் நாங்களும் ஸுன்னாவின் எதிரி தான். நாங்களும் குர் ஆன் ஸுன்னாவின் எதிரியாகி விடுவோம். இந்த அடிப்படையில் மறுப்பு என்ற ரீதியில் , அவர்கள் மத்தியில் மறுப்புகள் நடந்து இருக்கிறது.


எனவே, இந்த விடயத்தில் கூறிக் கொள்ள அவசியமாகிறது , கல்வி ரீதியில் இருவருடனும் நாம் சம்பந்தமாக இருப்பது அவசியம். இந்த அடிப்படையில் உலமாவுஸ் ஸுன்னா அனைவரிடமிருந்தும் குந்தி கல்வியை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.


என்றாலும் தம்மாஜ் என்ற ஊரை நோக்கி சென்று கல்வி கற்பது பற்றி ஷேக் ரபியல் மத்ஹலி ஹபிதஹுல்லாஹ் பேசி இருக்கிறார்கள். ஷேக் முஹம்மத் இப்னு ஹாதி அல் மத்ஹலி ஹபிதஹுல்லாஹ் பேசி இருக்கிறார்கள். இன்னும் ஏனைய உலாம்வுஸ் ஸுன்னா பேசி இருக்கிறார்கள்.


அதாவது, அவர்கள் கூறுவதாவது , அங்கு சென்றவர்கள் கடுமையாக 

ஏனைய ஸலபுஸ் ஸாலிஹீன்களின் உலமாக்ககளை விமர்சனம் செய்வதிலும், இழிவாக்குவதிலும் , நாக்கிலே கூச்சமும் வெட்கமும் இல்லாமல் பகிரங்கமாக பேசுகிறார்கள்.


இதன் காரணமாக தம்மாஜ் சென்று கல்வி பெறுவதை தவிர்த்துக் கொள்வதை உலமாவுஸ் ஸுன்னா உபதேசிக்கிறார்கள். அதுவும்  முக்கியமான ஸலப் உலமாக்கள் இவ்வாறு உபதேசிக்கிறார்கள். அது தவிர வேறு குறைகள் இல்லை.


அதாவது அந்த நடவடிக்கைகள் , உலமாவுஸ் ஸுன்னாவை இழிவாக்குவது, குர் ஆன் ஸுன்னா பிரச்சாரம் செய்யும் மக்களை குழப்புவது போன்ற சர்ச்சைகள் , தம்மாஜ் இல் இருந்து வருவது நிறுத்த பட வேண்டும்.


அது மட்டுமில்லாமல் தம்மாஜ் ஐ ஷீயா கூட்டங்கள் சுற்றி வளைத்த போது , ஷேக் ரபியல் மத்ஹலி ஹபிதஹுல்லாஹ் தம்மாஜ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும், வெற்றி கொடுக்க வேண்டு என்று உடனே வேண்டுகோள் விடுத்தார்.


அப்போது தம்மாஜ் செல்ல வேண்டாம் என்று தடை செய்து விட்டு தற்போது ,உதவி செய்ய சொல்கிறீர்களே , அது எப்படி ? என்று பித்அத் வாதிகள் கேட்கிறார்கள். இது முரண்பாடு இல்லையா என்றும் கேட்கிறார்கள்.


இதற்கு ஷேக் முஹம்மத் அல் ஹாதி அல் மத்ஹலி ஹபிதஹுல்லாஹ் அவர்களின் பேச்சை முன்வைக்கிறேன். அதாவது, தம்மாஜ் இல்
கல்வி கற்க வேண்டாம் என்பதில் வாபஸ் இல்லை. அது அதே இடத்தில் தான் இருக்கும். அதே நேரத்தில், அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னா என்ற அடிப்படையில் அவர்களுக்கு வெற்றி கொடுப்பது எமது கடமை என்ற  ரீதியில் அழைப்போம். அவர்களுக்கு வெற்றி கொடுத்தே தீர வேண்டும், அவர்களுக்கு உதவி செய்தே ஆக வேண்டும்.


இது தான் எவரெல்லாம் உலமாவுஸ் ஸுன்னா வின் வார்த்தைகளை பிரட்டி தடுமாறும் அனைவருக்கும் பதிலாகும். இந்த அடிப்படையில் தான் நாங்களும் தம்மாஜ் இல் சென்று கல்வி கற்பதை தவிர்த்துக் கொள்ளும் படி உபதேசம் செய்கிறோம்.


அதே நேரத்தில், அந்த மக்களுக்கு வெற்றி கொடுக்க வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்று சொல்வதில் முரண் பாடு கிடையாது. உசூளுஸ் ஸுன்னாவின் அடிப்படையில் அஹுளுஸ் ஸுன்னா வுக்கு வெற்றி கொடுப்பது கடமை. அந்த அடிப்படையில் வெற்றி கொடுப்போம் , உதவி கொடுப்போம். அதற்காக மக்களை அங்கு அனுப்பி உலமாவுஸ் ஸுன்னா வுக்கு எதிராக வளர்த்து வைக்க எவருக்கும் உபதேசம் செய்ய மாட்டோம்.


இது ஸ்ரீ லங்கா நாட்டில் உள்ள சர்ச்சைகளில் ஒரு பெரும் பெரிய சர்ச்சை ஆக இருக்கிறது. இதன் முட்டை இப்போது தான் பொறித்து வருகிறது. ஆனால் , கோழி குஞ்சி இன்னும் வெளியே வரவில்லை.


அது என்னவென்றால், இயக்க வாதியாக இருக்கும் ஒரு கூட்டம் , பல காலமாக ஸலபி தஃவாவுக்கு எல்லா விதமான எதிர்ப்புகளும் காட்டினார்கள். இவர்கள் போகாத ஷேக் மார்கள் , ஊர்கள் இல்லை. ஷேக் ரபியல் மத்ஹலி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் ஷேக் யஹ்யா அவர்கள்
சந்தித்தபோது கூறினார்கள், யஹ்யா , நான் உன்னை பற்றி அறிந்து இருந்ததால் , உன்னை சந்திக்கும் வரை தான் காத்து இருந்தேன். உன்னை பற்றி பல கதைகளை இந்த மக்கள் வந்து சொல்கிறார்கள் என்று.


அதன் போது ஷேக் யஹ்யா அவர்கள் பதில் கூறினார்கள். இவர்களின் பேச்சுக்களுக்கு நான் பொறுப்பு இல்லை. என்னால் என்ன செய்ய முடியும் ? ஊர் மக்களின் வாயை என்னால் மூட முடியாது. இவர்களின் எல்லா வார்த்தைகளுக்கும் என்னால் பதிலும் சொல்ல முடியாது என்றார்கள்.


அதன் பின்னால் ஷேக் ரபியல் மத்ஹலி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் , நீ இவர்களை பற்றி என்ன சொல்ல விரும்புகிறாயோ அதனை எனக்கு எழுத்து மூலமாக எழுதி தா , இந்த மக்கள் வந்தால் நான் முன்வைக்கிறேன் என்றார்கள். ஷேக் யஹ்யா அவர்களும் எழுதி கொடுத்து விட்டு தான் வந்து உள்ளார்கள். இவ்வாறு எல்லோரும் தடுமாறினார்கள்.


இதனால் , நாம் இவர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்கிறோம் , நாம் செய்யும் தஃவா தவறு, வழிகேடு, ஷிர்க் , குப்ர், பித் அத் என்றால் ஆதாரங்களுடன் நிருபிக்கட்டும். பகிரங்கமாக மறுப்பை வெளிவிடட்டும். ஆசையுடன் ஏற்றுக் கொள்வோம். நாம் செய்த குப்ர் என்ன, பித் அத் என்ன , ஷிர்க் என்ன , வழிகேடு என்ன ?


மாற்றமாக குப்ர் ஐ கண்டவுடன் மறுத்து பேசுகிறோம், ஷிர்க் ஐ கண்டவுடன் மறுத்து பேசுகிறோம், பித் அத் ஐ கண்டவுடன் மறுத்து பேசுகிறோம். இவ்வாறு நாம் செய்யும் தஃவா இவர்களுக்கு தாங்க முடியவில்லை.


இதனால், நிறுத்த வந்து உள்ளார்கள் ஷிர்க் ஐ , குப்ர் ஐ , பித் அத் ஐ அல்ல. எம்மை நிறுத்த வந்து உள்ளார்கள். அபாண்டங்களையும் , அவதூறுகளையும் பொய்யான கதைகளையும் சொல்லி தஃவா ஸலாபிய்யாவை ஸலபிய்யா வின் பெயரில் நிறுத்த வந்து விட்டார்கள்.


ஷேக் பலா இஸ்மாயில் ஹபிதஹுல்லாஹ் அவர்கள் இலங்கை வந்து இருந்த போது அவரிடம் ஷேக் யஹ்யா அவர்கள் கூறினார்கள், இந்த மக்கள் ஹிஸ்பியூன், இயக்க வாதிகள் என்று.


ஷேக் பலா இஸ்மாயில் அவர்கள் (தற்போது உலமாக்கள் இவரைப்பற்றியும் எச்சரித்து விட்டார்கள் ) ஷேக் யஹ்யா அவர்களின் கையை பிடித்து சொன்னார்கள் , இவர்கள் ஹிஸ்பியூன் என்றால் , நான் அவர்களுடன் இல்லை என்றார்கள். உடனே ஒதுங்கி விட்டார்கள். அதன்மேலாக பேச்சு கிடையாது. அவர்கள் ஹிஸ்பியூன் என்றால் யார் என்று உணர்ந்தவர்கள். அவர்களுக்கு யாரும் ஹிஸ்பியூன் பற்றி விளக்கம் சொல்ல தேவை இல்லை. ஹிஸ்பியூனின் மாயஜாலங்களை அவர்கள் அறிந்தவர்கள்.


ஆனால் இவைகளை போது மக்கள் அறிய மாட்டார்கள். அது இது என்று சாட்டுகளை சொல்லி இதன் பின்னால் தடுமாறுவான். ஏனெனில், அவன் படிக்கவில்லை. உலமாவுஸ் ஸுன்னாவின் கிதாபுகளை திறக்க வில்லை. திறந்திருந்தால் புரிந்துக் கொண்டு இருப்பான்.


இவ்வாறு அனைத்து சூழ்சிகளையும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி தஃவா ஸலபிய்யா வை முடக்க பார்த்தார்கள்.


ஆனால் அல்லாஹ் போதுமானவன். அவனுடைய தஃவா, அவனுடைய மார்க்கம் , அவனுடைய பூமி , அவனுடைய அடிமைகள், அவன் நாடுகின்ற மாதிரி அவனது வெற்றி வரும் என்று நாங்கள் நம்பி இருப்பதால் அளவுக்கு அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. எங்களால் இயலுமானதை செய்தோம். இயலுமான அளவில் பதில் அளித்தோம்.


அதன் பின்னர் அல்லாஹ்விடம் விட்டு விட்டோம். யா ரப்பே நீயே பொறுப்பு எடு என்று. எனவே, அவனது உதவியால் இந்த தஃவா இலங்கை மட்டுமல்லாது ஏனைய நாடுகளையும் சென்றடைந்து உள்ளது. நாம் அல்லாஹ்வுக்கே நன்றி சொல்கிறோம். அவனது உதவி அன்றி இது வேறொன்றும் இல்லை.


இதனால், இப்போது, ஒரு கூட்டம் இந்த தஃவா வை உடைப்பதற்காக தம்மாஜ் இல் நுழைந்து உள்ளார்கள். அதனுள் நுழைந்துக் கொண்டு , ஷேக் யஹ்யா அல் ஹஜூரி ஹபிதஹுல்லாஹ் அவர்களின் பறக்கத்தான ,  

சிறப்பான ஸலபி தஃவா வின் பின்னால் இன்னொமொரு ஸலபி தஃவாவை உடைப்பதற்கு அவர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் , முயற்சி செய்கிறார்கள். அது நடக்குமா ? அது நடந்தே தீராது.


ஆம் காலம் காலமாக ஏமாற்றலாம் , எல்லா மாய ஜாலங்களையும் காட்ட முடியும். ஆனால் , 


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَنصُرُوا اللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ 

அல்லாஹ்வுக்கு வெற்றி கொடு , அல்லாஹ் உனக்கு வெற்றி தருவான், உன் பாதங்களை உறுதியாக்குவான் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதியின் அடிப்படையில் இந்த சூழ்ச்சிகள் பலிக்காது.


இதனால் நிறைய பொதுமக்கள் இதனுள் சிக்கி சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள். இந்த பித் அத் வாதிகளுடன் சேர்ந்து ஸலபுஸ்
ஸாலிஹீன்களின் தஃவாவை நிறுத்த முயற்ச்சி செய்கிறார்கள்.


இவர்கள் இயக்க வாதிகள் என்று அறிந்துக் கொண்டு பொறுமையாக  அவர்களுடன் இருந்து செயல் படுகிறார்கள் . ஏனென்றால் , இங்கிருக்கும் ஸலபி தஃவா வை நிறுத்தி விடுவதற்காக ஆகும்.


இது என்று எமது பலகத்துறையில் நடந்துக் கொண்டு இருக்கிறது. இது அரபியில் சொல்லப்படும் ஒரு பழ மொழி மாதிரி, பானைக்கு மூடி கிடைத்து விட்டது போன்றதாகும். அதாவது அத் தார் அஸ் ஸலபிய்யா வுக்கு தம்மாஜ் பையன்கள் சிலர் வந்து சேர்ந்து விட்டார்கள். எழுப்பப்பட்டு இருக்கும் ஸலபி தஃவா வை நிறுத்து வதற்கு வந்து சேர்ந்து உள்ளார்கள்.


இதனால் இவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்க எமக்கு நேரமில்லை. சுருக்கமாக சொல்வது என்றால், பித் அத் வாதியுடன் சேர்ந்து ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறை தஃவாவை நிறுத்த வருகிறாய் என்றால் நீ யார் ?


நீ எங்கிருந்து வந்தாலும் பரவாயில்லை. பித் அத் வாதியுடன் சேர்ந்து ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழி முறை தஃவாவை நிறுத்த , அதற்கு இருட்டடிப்பு செய்ய நீ வருகிறாய் என்றால், நீ யார் ? நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.


இதனை உசூளுஸ் ஸுன்னா சொல்கிறது.அஹ்லுஸ் ஸுன்னா வின் நூற்கள் சொல்கின்றன. இதனை நாம் தான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.


இவர்களும் ஒரு பித் அத் வாதி என்பதில் எள்ளவும் சந்தேகம் கிடையாது. ஒரு ஸுன்னா வாதி ஒரு நாளும், பித் அத் வாதி யுடன் சேர்ந்து அழைப்பு பனி செய்ய மாட்டான். 


ஏனெனில், அவனுக்கும் இவனுக்கும் சேர்ந்து போகாது. பித் அத் வாதி க்கு தான் பித் அத் வாதி யுடன் சேர்ந்து போக முடியும் என்ற அடிப்படையில் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும் பித் அத் வாதியுடன் சேர்ந்து போய் ஒன்றும் செய்ய முடியாது.


இதனுடன் இன்னொரு விடயத்தையும் எடுத்துக் காட்ட ஆசைப்படுகிறோம். அதாவது இந்தியாவில் அஹ்லுல் ஹதீஸ் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஷேக் யஹ்யா அவர்கள் பெங்களூரில் இருந்த போது அங்கிருந்த சகோதரர்கள் கேட்டார்கள் , ஷேக் யஹ்யா அவர்கள் 
ஸ்ரீ லங்காவில் பித் அத் வாதிகளை தவிர்ந்துக் கொண்டு தனி மஸ்ஜித் அமைத்து ஸலபி தஃவாவை கட்டியெழுப்பிய மாதிரி , பெங்களூரிலும் தனி மஸ்ஜித் அமைத்து ஸலபி தஃவா வை கட்டி எழுப்பலாமே
என்று கேட்டுக் கொண்டனர்.


அதற்கு ஷேக் யஹ்யா அவர்கள் மறுத்து கூறி விட்டார், பெங்களூரில் அஹுளுள் ஹதீஸ் வல் அதர் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களின் அடிச்சுவடுகள் ஹயாதுடன் இருக்கிறது . அப்படி இருக்கும் போது ஷேக் யஹ்யா அவர்கள் தனித்து அல் ஜமாஆ வை உடைத்து இயங்குவது கூடாது என்று மறுத்து விட்டார்கள். அது செய்யக் கூடாத காரியம் என்றும் கூறி விட்டார்கள்.


அதன்போது, அங்கிருந்த மக்கள் ஷேக் ரபிய் இப்னு ஹாதி அல் மத்ஹலி ஹபிதஹுல்லாஹ் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்ப்பு கொண்டார்கள். இந்த சர்ச்சையை அவரிடம் கூறினார்கள்.


ஷேக் ரபிய் அல் மத்ஹலி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் தொலைபேசியை ஷேக் யஹ்யா விடம் கொடுக்கும் படி கூறி , அவரிடம் வினவினார்கள், பெங்களூரின் மக்களின் நிலைப்பாட்டை பற்றி நீ என்ன சொல்கிறாய் என்றார்கள். ஷேக் யஹ்யா கூறினார்கள், ஷேக், பெங்களூரில்
அஹுளுள் ஹதீஸ் வல் அதர் இருக்கிறார்கள் என்றாலும் தவறுகள் இருக்கிறது. அதனால், அவர்களில் இருந்து பிரிந்து தனி மஸ்ஜித் அமைத்து கலைத்து விடுவது அஹுளுஸ் ஸுன்னாவை கலைத்து பிரித்து விடும்.


அதன் போது ஷேக் ரபிய் அல் மத்ஹலி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள், யஹ்யா நீ பார்த்து முடிவு எடு என்று. ஏனென்றால்,
அஹ்லுஸ் ஸுன்னா ஒன்று இருக்கும் போது ஒருக்காலமும் சத்தியம் சொல்ல வருபவன் அதனை கலைத்து, உடைத்து, கெடுத்து
தஃவா செய்ய முடியாது.


மாற்றமாக அதனுடன் சேர்ந்து அமர்ந்து மௌனமாக அதன் திருத்தலை செய்ய வேண்டுமே தவிர பித் அத் வாதி கலை தூக்கி உயர்த்தி வைத்து விட்டு போவதல்ல . இது தான் ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழி முறை.


ஆனால் அவன் பித் அத் வாதியாக இருந்தால், அவனுக்கு ஸலபி தஃவா பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. அது
நாசமாகினாலும் அவனுக்கு திருப்தி தான்.


அல்லாஹ்வின் பரகத்துடன் இந்த ஸலபி தஃவா வை இந்த ஊரில் நாம் எடுத்து வைத்திருபத்தற்கு அஹுளுஸ் ஸுன்னா உலமாக்கள் சாட்சியாய் இருக்கிறார்கள். நாம் இதனை அல்லாஹ்வின் ரஹ்மத்தாக  சொல்கிறோம்.


ஏனென்றால், எங்கள் எண்ணங்களில் பெருமை இல்லாமல் வைக்க வேண்டும். இது அல்லாஹ் தந்த அருள். அவன் தந்த வாய்ப்பு . அவன் நாடவில்லை என்றால் இது ஒரு நாளும் எமக்கு சாதியமாகாது என்று உணர்ந்து சொல்கிறோம் , அவனது இரக்கமும் அருளும் தான் எமக்கு வாய்ப்பாக இருந்தது.


இவ்வாறு உலமாக்களின் சாட்சியங்கள் எமது தஃவாவுக்கு இருக்க , அதனை சர்ச்சையாக்க வருகிறார்கள் என்றால் , அவர்கள் எங்களுக்கு மட்டும் இல்லை சர்ச்சை உருவாக்க வருகிறார்கள், மாறாக , எந்த உலமாக்கள் எமக்கு ஆதரவாக குரல் கொடுத்து உள்ளார்களே , அவர்களுக்கும் எதிராக தான் சர்ச்சை உருவாக்க வருகிறார்கள்.


உண்மையான ஸலபிகள் என்றால், தவறுகள் எவராலும் வரும் என்று
அனுசரித்து, ஸலபி களுடன் சேர்ந்து தான் செயல் படுவான். அது தவிர ஒரு காலமும் அவன் பித் அத் வாதிகளுடன் சேர்ந்து தடுமாற மாட்டன். இது தான் ஐமதுஸ் ஸுன்னா வின் உபதேசம். பித் அத் வாதிகளுடன் அமர வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.


ஏனென்றால், பழகினால் இது தான் நடக்கும். இதனால் தான் ஸலபி ஒரு நாளும் பித் அத் வாதிகளுடன் சேர்ந்து செயல் பட மாட்டன். அவர்களுடன் அமரவே மாட்டான்.


ஏனென்றால், பித் அத் ஐ வளர்த்து வைத்து விட்டு போவது, பொது மக்களை அது சரியா, இது சரியா என்று குழப்பி வைத்து விட்டு போவது , அதுவும் நேர்வழி என்று எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள், இதனால் 

தடுமாற்றம் பொது மக்களுக்கு தான் ஏற்படும். 


ஏனெனில், இவர்கள் வருகிறார்கள், சில காலம் இருந்து விட்டு சென்று விடுகிறார்கள். பின்னர் ஊரில் சர்ச்சை ! யாருக்கு சர்ச்சை ? ஸலபி தஃவா வுக்கு சர்ச்சை! சத்தியத்திற்கு சர்ச்சை!


பொது மக்களை குழப்பி விட்டார்கள். சத்தியத்தை இருட்டாக்கி விட்டார்கள். இது ஒரு காலமும் அஹ்லுல் இல்ம் , அஹ்லுஸ் ஸுன்னா செய்யும் நடவடிக்கை அல்ல.


அதற்கு தான் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் , அஹ்லுஸ் ஸுன்னா வுடன் தொடர்ப்புகளை வைத்து உபதேசங்களை செய்வார்கள். எந்த எந்த ஊரில் எவர் இருக்கிறார் என்று கூறி அவர்களுடன் சம்பந்தமாகும் படி. இவைகள் அடையாளமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், இன்றைக்கு ஒருவர் ஸலபி தஃவாவை படித்த பின்னால், பித் அத் வாதி உடன் குந்தினாள் அவனும் நாசமாகி தான் போவான். யாரும் இதனை பொடுபோக்காக எடுக்க வேண்டும். பித் அத் வாதி யுடன் குந்தி தப்ப முடியும் என்று நினைக்க வேண்டாம். தப்ப மாட்டீர்கள்.
நீங்கள் நாசமாகி தான் போவீர்கள், அல்லது நீங்கள் நாசமாகும் வரை, போது மக்கள் நாசமாகி விடுவார்கள்.


ஏனென்றால் நீங்கள் அங்கே போவது கண்டு , நீங்கள் அந்த பித் அத் வாதியுடன் பழகுவது கண்டு , ஊரும் , மக்களுக்கும் அவனை ஸுன்னத் வாதி யாக அடையாளமாக கண்டுவிடுவார்கள். இவர்களுக்கு பின்னல் , அந்த வழிகேடர்களை தான் பொது மக்கள் பின்பற்றுவார்கள். இந்த  அக்கிரமத்தின் பொறுப்பை யார் சுமப்பார்கள் ?


عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ دَعَا إِلَى هُدًى 

كَانَ لَهُ مِنَ الأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ 

دَعَا إِلَى ضَلاَلَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ 

آثَامِهِمْ شَيْئً 


ஹதீஸ் சொல்வது போன்று 


எவரெல்லாம் ஒரு நல்ல வழிமுறையை ஹயாத்தாக்கி விட்டு போறானே அவனுக்கு அதனுடைய நன்மைகள் இருக்கும். யாரெல்லாம் அதனை பின்பற்றுவார்களே அவர்களின் நன்மையையும் பின்பற்றுபவர்களுக்கு குறைவு இல்லாமல் இவர்களுக்கும் கிடைக்கும். எவரெல்லாம் ஒரு கெட்ட வழியை ஹயாதாக்கி விட்டு போறானே , அந்த தீமை அனைத்தும் இவருக்கும் கிடைக்கும் அந்த தீமையை செய்பவனுக்கும் எந்த குறைவு இல்லாமல்.


இந்த அடிப்படையில் பித் அத் வாதி உடன் சேர்ந்து செயல்பட்டு ,
காரியங்களை கையாண்டு ஊரை திருத்தலாம் என்று ஒரு நாளும் நினைக்க வேண்டாம். இது வரலாற்றில் நடக்காத ஒன்று.


உலமாவுஸ் ஸுன்னாவின் கட்டுப்பாடுகளுக்கும், அடிப்படைகளுக்கும் , உபதேசங்களுக்கும் மாறானது. மாறாக உலமாவுஸ் ஸுன்னாவின் உபதேசம் பாடங்களாக கிதாபுகளில் தலைப்புகளாக கூட போட்டு இருக்கிறார்கள். 


இமாம் ஆஜூரி அவருடைய கிதாபில், இமாம் இப்னு அபி ஆசிம் அஸ்ஸைபாணி அவருடைய கிதாபில் தனியாக பாடம், இமாம் லாலக்காயி அதற்கு ஒரு பாடம், இமாம் முகமத் இப்னு மர்சவி ஒரு பாடம், இமாம் அஹ்மத் அதற்கென ஒரு குறிப்பு என்று , எல்லா இமாம்களும் இவைகளை கடுமையாக சுட்டிக் காட்டாமல் செல்ல வில்லை.


அதாவது, பித் அத் வாதியுடன் குந்தாமல் , சேர்ந்து செயல் படாமல் , பழகாமல் இருக்க வேண்டும்.


ஏனென்றால், அது மக்களை கெடுத்துவிடும், நாசமாக்கி விடும். அப்படி ஆகாது என்று யாரும் வாதாடினாலும், ஆகக் குறைந்தது நீங்கள் தான் நாசமாகா விட்டாலும் இன்னொருவன் நாசமாகுவான்.


ஏனென்றால், நீங்கள் தரமாக பின்பற்றுவதையும் காணுவான். உங்கள் பித் அத் ஆன தோழர் பின்பற்றுவதையும் காணுவான். உங்களுக்கு பின்னால் உங்கள் தோழரை எடுத்து செயல் படுத்துவான்.


அந்த தோழர் ஸுன்னத் வாதி அல்ல. ஸுன்னத் பின்பற்றுபவனும் அல்ல.
மக்கள் அவன் பின்னால் வழிகேடாகும். இதனால் எல்லோரும் இந்த பித் அத் வாதிகளுடன் குந்துவதையும் சகவாசம் வைத்துக் கொள்வதையும் முற்றாக விட்டு விட வேண்டும்.