[சுய இன்பமும் அதன் தீர்ப்பும்]

சுய இன்பமும் அதன் தீர்ப்பும்

இந்த பிரசுரத்தின் நோக்கம் , மார்க்கத்தில் இந்த விடயத்தின் உண்மையான நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதாகும். ஏனெனில், இந்த விடயம் பற்றி சலபி விளக்கங்கள் இல்லாமல் தவறாக தீர்ப்பு சொல்லப் படுவதனால், மருத்துவ ஆதாரங்களோடு பிரசுரிக்கப்படுகிறதே தவிர ஆர்வமூட்டுவதற்கு அல்ல. மார்க்க ரீதியான நிலைப்பாட்டை மேலே உள்ள லிங்கை சொடுக்கி ஆடியோவை கேட்கவும். 
அத்தோடு, இந்த விடயத்தில் குர் ஆன் ஆயத்திற்கு தவறாக விளக்கம் எடுத்து , குர் ஆன் தப்ஸீரின் விரிவுரையாளர்களில் எல்லோரையும் விட சிறப்பானவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட சஹாபியின் கூற்றும் இருக்க , இதனை விபச்சாரம் என்று முத்திரை குத்துவது மார்க்கத்தின் விடயத்தில் எல்லை மீறுவதாகும். இப்படி பிழையான பத்வா நிறைய நடமாடுவதால் , மார்க்கத்தின் சரியான தீர்ப்பை வெளிப்படுத்துவது கடமையாகும். 

இந்த விடயம் பற்றி இமாம் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்டு அவர்கள் திர்ப்பும் சொன்ன பிறகு , இதனை வேறு எந்த சஹாபாக்களும் விமர்சிக்காத நிலையில் நாமாக எமது பார்வையில் மானக்கேடானது என்று கூறி ஒரு ஆயத்தையும் அதற்கு சம்பந்தமாக்க முற்சிப்பது , ஷரியத்தின் ஒரு விடயத்தை எமது புத்தியை கொண்டு மறுத்ததாக அமையும். 

ஷரியத்தின் அனுமதி வந்ததன் பின், எமது சிந்தனை மானக்கேடானது என்றால் எமது மன்ஹஜ்ஜை ஒரு முறை மீளப் பரிசீலனை செய்வது தான் சாலச் சிறந்தது. இதே போன்று கேள்வி கேட்கப் பட்டு பதிலும் அளிக்கப்பட்டுள்ளது. தயவு செய்து மேலே உள்ள ஓடியோவை நல்ல முறையில் கேட்கவும்.

இந்த விடயத்தை தடை என்று சொல்ல பலரும் கையாளும் வழி முறைதான் மருத்துவம். எனவே, மருத்துவ ரீதியாக மருத்துவர்கள் சொன்ன செய்திகள், செய்தி தாள்களில் வந்தவைகளை, கீழே சேர்க்கப்பட்டுள்ளது. 


அது ஆபத்தானது; தவறானது; சுய இன்பத்தில் ஈடுபட்டால், கண் பார்வை போய்விடும்; சுய இன்பத்தில் ஈடுபடுவோருக்குக் கேன்சர் வரும்; உடல் நலிவு ஏற்படும். எல்லாமே தவறு! உடல் நலிவு, பார்வை இழப்பு போன்றவை எல்லாம் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததால் ஏற்படுமே தவிர, சுய இன்பத்தால் அல்ல!


விந்து உற்பத்திக்கும் சுய இன்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆண், பெண் உடல் உறவு மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தேவைப்படுவது இருவரின் ஆரோக்கியமும் உடல் உறவு பற்றிய உடல்கூறு / உளவியல் அறிவும்தான். குழந்தை பெற முடியாத மலட்டுத்தன்மை ஆணிடமோ, பெண்ணிடமோ இருப்பதற்கான மருத்துவக் காரணங்கள் வேறு. அதற்கும் சுய இன்பத்துக்கும் சம்பந்தம் இல்லை.

டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரம் செய்கிறார்கள். 

உண்மையில் சுய இன்பத்தில் எந்த பிரச்சனையும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள்.
நன்றி இந்திய தினகரன். 

 அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.