[கப்று ஸ்தானங்களில் பள்ளிவாயில்கள்]

 وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا

அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன. எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (72:18)


Dharga of of Wali Allah Sheikh Usman

கப்ருகள் மீது மஸ்ஜித்கள்  கட்டுவது அல்லது மஸ்ஜித்களை அங்கு நிர்மானிப்பது அது சில வேளை மஸ்ஜிதின் கிப்லா பக்கம், அல்லது பின்னால், அல்லது ஒரு பகுதியில், அல்லது மையவாடியில்  அமைந்திருக்கும் படி நிர்மாணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

கப்ருகள் இருக்கின்ற பள்ளிவாயல்களில் எக்காரணம் கொண்டும் நாம் தொழுதுவிடக் கூடாது. நாம் அலட்சியம் செய்து தொழுகைகளை பாழ்படுத்திவிடவும் கூடாது. இன்னும் அலட்சியமாக கருதி தொழுதுவிடுவோமாயின் அல்லாஹ்வின் சாபத்தை பெற்றவராக ஆகிவிடுவோம் என்பதில் சந்தேகம் இல்லை. கப்ருஸ்தலங்களில் தொழுகை நடத்தவோ அல்லது அந்த இடங்களில் பள்ளிவாசல் கட்டுவதோ இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. கப்ருகள் இருக்கும் இடங்களில் பள்ளிகள் கட்டப்பட வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால் அங்கே இருக்கும் கப்ருகள் தோண்டியெடுக்கப்பட்டு அந்த கப்ரில் மீதமிருப்பவைகளை பொது மையவாடிகளுக்கு எடுத்துச் சென்று அங்கே இருக்கும் மற்ற கப்ருகளோடு தனித்தனியாக புதைக்க வேண்டும்.

பள்ளிவாசல்களில் கப்ருகள் இருப்பதற்கு அனுமதியில்லை. அந்த கப்ரு எத்தகைய பெரிய மனிதருடையதாக இருந்தாலும் அல்லது எத்தகைய இறை நேசருடையதாக இருந்தாலும் சரியே !. 


மஸ்ஜிதுன் நபவி கட்டப்பட்ட வரலாறு சொல்கிறது அவ்விடத்தில் இணைவைப்பவர்களின் சமாதிகள் இருந்தன. அங்குள்ள கப்ருகளைத் தோண்டி அப்புறப்படுத்துமாறு நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்  அவர்கள் கட்டளையிட்டனர். அவ்வாறே அவை தோண்டப்பட்டன. அப்பூமியைச் சமப்படுத்துமாறு கட்டளையிட அதுவும் சமப்படுத்தப்பட்டது. பின்னர் தான் பள்ளி நிர்மாணிக்கப்பட்டது. (புகாரி) 


'யா அல்லாஹ் எனது கப்ரை வணங்கப்படக்கூடிய இடமாக ஆக்கிவிடாதே! நபிமார்களின் கப்ருஸ்தலங்களை மஸ்ஜித்க்குரிய இடமாக மாற்றியவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக'. எனக் கூறினார்கள். அது அவர்களுடைய கப்ராகவோ அல்லது வேறு யாருடைய கப்ராகவோ இருக்கலாம்.

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஒரு முறை அபுல் ஹய்யாஜ் என்பவருக்கு இப்படிச் சொல்கிறார்கள், 'அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் என்னை அனுப்பிய ஒரு காரியத்திற்காக இப்பொழுது நான் உன்னை அனுப்புகிறேன். எந்த ஒரு சிலையையும் உடைக்காமல் விட்டு விடாதே ! பூமி மட்டத்தை விட உயர்ந்திருக்கக்கூடிய எந்த ஒரு கப்ரையும் பூமியோடு சமப்படுத்தாமல் விட்டு விடாதே'. என்று கூறினார்கள். (அறிவிப்பவர்அபுல்ஹய்யாஜ் அல்அசதீ ரஹ்மதுல்லாஹி அலைஹிநூல்முஸ்லிம்)


நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கப்றுகள் மீது சாந்து பூசப்படுவதையும் அதன் மீது அமருவதையும், அதைக் கட்டுவதையும் அதன் மீது எழுதுவதையும் தடுத்தார்கள். கப்ருகளை மஸ்ஜித்கலாக  மாற்றுபவர்களையும் அதன் மீது விளக்குகள் தொங்க விடுவபவர்களையும் தடுத்தார்கள்.

நபித்தோழர்களின் காலத்திலோ தாபிஈன்களின், தபஉத் தாபிஈன்களின் காலத்திலோ எந்த நபிமார்களின் கப்ரோ அல்லது வேறு எவர்களின் கப்ருகள் மீதும் தர்ஹாக்கள் கட்டப்படவில்லை.


யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜித் ஆக்கிய காரணத்தால், அல்லாஹ் சபித்துவிட்டான் என தன்னுடைய மரண தருவாயில் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள், என ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துவிட்டு, “இவ்வாறு ரஸூல் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் சொல்லியிருக்கா விட்டால் அவர்களின் கப்ரும் (தரைமட்டத்தைவிட)உயர்தப்பட்டிருக்கும் “என்று கூறினார்கள் .(புகாரி)


கப்ருகள் பூசப்படுவதையும் , அதன்மீது உட்கார்வதையும் ரஸூல் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தடுத்தார்கள். ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு முஸ்லிம்


யூத, கிறிஸ்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும்போது அவனது கபுரின் மீது ஒரு மஸ்ஜித் கட்டிக்கொள்வார்கள், நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக்கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள். என்று நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள். 

ஆயிஷா 

ரலியல்லாஹு அன்ஹா (புகாரி)


 أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ ۚ وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَىٰ إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். ( 39:3)


ஸூபியாக்கள்   கப்ருகளின் மீது பள்ளிவாயல்கள் எழுப்பி ஸியாரத் வழிமுறை, அவ்லியாக்களிடம் கையேந்திப் பிரார்த்தித்தல், கப்ரை வலம் வருதல், கப்ரை முத்தமிடல், கப்ரின் மீது மண்டியிடல், கப்ரை விழாக்கோலமாக மாற்றுதல் போன்ற ஷிர்க், பித்அத்கள் அனைத்தையும் செய்கின்றனர். இவைகள் அனைத்தும் ஹராமாக்கப்

பட்டவைகள் ஆகும். 


மஸ்ஜிதுன் நபவி பள்ளியை விஸ்தீரனப்படுத்த விரும்பிய வலீத் பின் அப்துல் மலிக் பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு நபிகளாரின் மனைவியர்களின் அறைகளை பள்ளியோடு சேர்த்து விட்டார். இக்கட்டத்தில் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின்  (நபிகளாரின் கப்ரு இருந்த) அறையும் பள்ளியோடு ஒன்றாகிவிட்டது. (ஆதாரம்:  இப்னு ஜரீர் - இப்னு கதீர்)


அல்குர்ஆனுக்கோ, அஸ்ஸுன்னாவிற்கோ, நபித்தோழர்களுக்கோ சம்பந்தமில்லாத வலீத் என்ற ஆட்சியாளனின் மார்க்கத்திற்கு முரணான செயல், ஒரு காலமும் மார்க்க ஆதாரமாக அமையாது.  இன்னும் உமர் ரலியல்லாஹு அன்ஹு , உத்மான் ரலியல்லாஹு அன்ஹு ஆகிய இரு சஹாபாக்களும் இதே விஸ்தீரனப்பனியை மேற்கொண்டே இருக்கின்றனர். ஆனால், அவர்களில் எவரும் நபிகளாரின் கப்ரை பள்ளிவாயலுக்குள் நுழைவிக்கவில்லை. இதன் மூலம் வலீத் செய்த இக்காரியம் தவறானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அவர் விஸ்தீரனப்படுத்தும் போது நபிகளாரின் கப்ர் விடயத்தை மார்க்க அடிப்படையில் செய்யவில்லை. இதனை அக்காலத்தில் வாழ்ந்த தாபீஈன் ஸயித் இப்னு முசைய்ப் ரஹீமஹுல்லாஹ் அவர்கள் கண்டித்தார்கள்.


இதனை இன்னும் சிறப்பாக இமாம் அஹமத் இப்னு ஹன்பல் ரஹீமஹுல்லாஹ் 

கூறினார்கள் " இஸ்லாத்தில் கப்ரும் மஸ்ஜிதும் ஒன்றிணைய முடியாது "


இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு  . நூல் :திர்மிதீஇமாம் வுக்கானியின் நூல்

கப்ருகளை உயர்த்தி கட்டுவது ஹராம் என்பதனை

உள்ளங்களுக்கு தெளிவுகாட்டுதல் (முழுமையானது )1 2 3 4

கப்று ஸ்தானங்களில் பள்ளிவாயில்களூம் ஷியாக்கலின் சூழ்ச்சிகளும்