[சட்டங்களும் தீர்ப்புகளும்]

இஸ்லாமிய மார்க்கம் அல்குர் ஆன் அஸ்ஸுன்னா எ‌ன்ற இரண்டு அடிப்படைகளில் அமைந்துள்ள ஒரு கண்ணியமான மார்க்கமாகும். அந்த அல்குர் ஆணையும் அல்ஹதீஸையும் சரிவரப் புரிந்துக் கொள்ள அதற்கென ‌சில அடிப்படைகள் இருக்கின்றன. 

ஹதீஸ்களை விளங்கவும் அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் அணுவணுவாக அலசிடவும் உலமாக்கள் பல அடிப்படைகளை எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். அவைகளை நாம் சரிவரப் புரிந்துகொண்டதன் பின்னர் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன, அது தரும் போதனைகள் என்ன என்பன போன்ற பல விடயங்களை சரியாகவும் நேராகவும் புரிந்துக் கொள்ள முடியும். இல்லையெனில் வழிகேட்டை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் கதை தான் நமது கதையாகிவிடும்.

எனவே நாம் இந்த  விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவதோடு அதனை சரிவர நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளை வெகுமதிகளாக பெற்றுக் கொள்ள முயல்வோமாக.  


எனவே அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! அல்குர் ஆணையும் அஸ்ஸுனாவையும் எடுத்துவைக்கும் கருத்துக்களை ந‌ல்ல முறையில் அலசி நேரான பாதையில் செ‌ன்று வெற்றி பெற்றவர்களாக வாழ எம்மனைவருக்கும் அல்லாஹ்  தெளபீக் செய்தருள்வானாக !