niyas moulavi copy

 


இன்னும்  நியாஸ் மௌலவி விட்டுச் சென்ற காரியங்கள் மார்கத்தை கலங்கப்படுத்துவதாகும்.. இதனை இன்னொரு மௌலவியோ, மார்க்க பற்றுள்ளவரோ இவரை உதாரண புருஷராக எடுத்து நாட்டுக்கு சேவை செய்ய முற்பட்டு விட்டால் அது 

ஆபத்தாகும்..

இவர் மார்கத்திற்க்கு செய்த அநியாங்களும் , ஜும்மா குத்பாக்களில் பரிகசித்தவைகளும், தூய்மையான மிம்பர்களை நகைச்சுவை கொமாளியாக்கியவைகளும் , பாமியன் சிலைகளுக்கு ஆதரவான அவரது குரலும், எதிப்பும், ஊர்வலமும், 

இலங்கை நாட்டின் முஸ்லிம்களின் பிரதிநிதியாக சென்று இஸ்லாமிய வரலாற்றில் முதன்முறையாக வத்திக்கானில் கிறிஸ்தவ பாதிரி தலைவருக்கு சால்வை போர்த்தி அவரை பாராட்டியதும் , சி றச டீ.வி யின் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் முதலிடம் பெற்றவரை சூரத்துல் பாத்திஹாவை ஓதி ஆசீர் வதித்ததும் , இப்படியான இன்னும் பல சமுகம் அறியாத குப்ரான விடயங்களை பகிரங்கமாக இவர் செய்திருந்தும் இவரது ஜனாஸா மனித சமுகத்தின் உதாரண புருஷராக அறியப்பட்டு மதிப்புடன் வரவேற்க்கப்படுகிறது.. 

ஆம் , முஸ்லிம் அல்லாதவர்கள் இவர் இஸ்லாத்தை மற்ற மதங்களுடன் சரிசமம் ஆக்கியதை  மெச்சி சந்தோசப்படுகையில் நாம் மௌனமாக அவதானித்துக்கொண்டு தான் இருந்தோம். இவரது ஜனாஸாவில் சரி நாம் தவிர்ந்து , மார்க்கத்தை கொச்சை படுத்திய இவருக்காக துவா கேட்டு அல்லாஹ்வின் முன் முனாபிகீன் ஆகிவிடாமல் இருப்பது எமது கடமையாகிவிட்டது.   

பெயருக்கும் புகழுக்கும் வேண்டி மார்க்கத்தை விற்று பிழைத்தார்.. 

அதனை அடைந்தார் .. இஸ்லாத்தை விட்டு விட்டார் .     


இவருடைய நடவடிக்கைகளில் வெளிப்படையான குப்ர் தென்பட்டதால் இவர் இறை மறுப்பாளர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டார். இவருடைய இந்த தன்மைகளை ஷேக் ரபியல் மத்களியிடம் எடுத்து வைக்கப்பட்டது.. அதற்க்கு ஷேக் ரபியல் மதகளி அவர்கள் , இது இறை மறுப்பை தவிர வேறில்லை என்றார்கள் ... இவரிடம் தென்பட்ட வெளிப்படையான குப்ரின் உதாரணங்கள் .....


 

  • பாமியன் புத்தர் சிலை உடைப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினார்.
  • உலக கிறிஸ்துவ மதத் தலைவர் பதினாறவது பெனடிக்  பாப்பரசர் அவர்களுக்கு வத்திகான் மாளிகையில் வைத்து பொன்னாடைப் போர்த்தி வரலாறு படைப்பதை இப் படம் சித்தரிக்கிறது! உலகின் ஒரு முஸ்லிம் உலமா பாப்பரசருக்கு பொன்னாடைப் போர்த்திய முதல் தடவை இது. மேலும் வாசிக்க
  • சி றச டீ.வி யின் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் முதலிடம் பெற்ற அஜித் பண்டார என்பவரை சூரத்துல் பாத்திஹாவை ஓதி ஆசீர் வாதித்தார்.
  • ஆயத்துஸ் ஷெய்த்தான் கொமெய்னியின்சிரார்த்த தின வைபவத்தில் இவர் பேசுகையில் >>  மேற்கத்திய நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் குரல் கொடுத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றிய இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களைப்பற்றி நினைவு கூர்வது எமது கடமையாகும். நல்லோரைப்பற்றிப்பேசுவதும் அவர்களைப்பற்றி நினைவு கூர்வதும் தஃவாப் பணியிலுமுள்ளது. 1930 ஆம் ஆண்டிலிருந்தே புரட்சியை மேற்கொண்ட இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள், மேற்கும் வேண்டாம் கிழக்கும் வேண்டாம் இஸ்லாம் ஒன்றே போதும் என்று புரட்சியை ஆரம்பித்தார்கள். ஒற்றுமையை அனைவர் மத்தியலும் நிலைநாட்டுவதில் தான் வெற்றி உண்டு எனும் விடயத்தில் ஒற்றுமையை வழியுறுத்தி முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்தால், அவர்களே உலகின் பெரும் சக்தியாக விளங்குவர் என்ற இமாமின் கூற்று முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி எல்லா சமூகங்களுக்கும் நாடுகளுக்கும் பொருந்துவதாகவே அமைந்தது. முரண்பாடுகளை நீக்கி உடன்பாடுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறிவந்தார்கள். ஈரானிய மக்கள் அல்லாஹூ அக்பர் கொமெய்னி ரஹ்பர் என்ற கோசத்துடன் இஸ்லாமிய புரட்சியை வெற்றியடையச்செய்தார்கள் ( iqna.ir ) 



    நேற்று முன்தினம் காலை அலரி மாளிகையில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியின் போது உரைநிகழ்த்திய நியாஸ் மெளலவி,  நபி (ஸல்) அவர்களுடைய பொன்மொழிகளை புத்த பிரானின் போதனைகளுடன் ஒப்பிட்டுக் காட்டி உரைநிகழ்த்தியது அனைத்து சமயத் தலைவர்களையும் கவர்ந்தது. புனித மக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட விசேட ‘அத்தர்’ பெட்டியொன்றை ஜனா திபதிக்கு அன்பளிப்புச் செய்த அவர், இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மணம் பூசுவதில் மிக்க விருப்பம் கொண்டி ருந்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். வெளியே செல்லும்போது ஜனாதிபதி மணம் பூசி செல்லவேண்டிய முக்கியத்துவத்தை அவர் மேலும் விபரித்துக் கூறினார்... 


    கேதீஸ் ஞாபகார்த்தமாக - பத்தரமுள்ளே சீலரத்ன தேரர் பிரித் ஓதி மும் மணிகளின் ஆசீர்வாதத்தை சமாதானச் செயலகத்திற்கும் அதில் ஈடுபட்டுள்ளோருக்கும் வேண்டினார். எஸ்.சத்தியசீல சர்மா சுவாமி, மௌலாவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத் மற்றும் வணக்கத்திற்குரிய பிதா சரத் ஹெட்டியாரச்சி ஆகியோர் முறையே இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமய நிகழ்ச்சிகளை நடத்தி சமாதான செயலகத்தின் நடவடிக்கைகளில் வெற்றிக்கு இறை அருளை வேண்டினார். August 17th, 2007





உங்கள் கருத்துக்களை இந்த லிங்கை பயன்படுத்தி ஆங்கிலத்தில் டைப்  செய்து தமிழில் பதியலாம்