[நிவாரணப் பணிகளும் கிறிஸ்தவ வழிமுறைகளும்]

நிவாரணப் பணிகளும் கிறிஸ்தவ வழிமுறைகளும் 

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمْ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. "அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்) (அல்குர்ஆன் 2:214 ) 


சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவையே. ஆதம் அலைஹிஸ் ஸலாம் முதல் முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வரை எல்லா நபிமார்களும் மற்றும் இறைநேசர்களும் அல்லாஹ்வின் சோதனைக்கு ஆளானவர்களே. 


அல்லாஹ் குர்ஆனில் பல்வேறு நபிமார்களிகன் வரலாறுகளைக் கூறுகின்றான். அதில் எல்லா நபிமார்களும் சோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. தூதுத்துவத்தைச் சொல்ல வந்த நபிமார்களை, அல்லாஹ் சொல்லெண்ணாத் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் இடர்படுத்திச் சோதித்தான். 


எனினும் அவர்கள் அல்லாஹ்வின் மீது திடமான நம்பிக்கையை வைத்திருந்தனர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தூதுத்துவப் பணியை செம்மையென நிறைவேற்றினார்கள்.


எனவே, ஒரு முஃமின் தனக்கு பிரச்சனைகளும் துன்பங்களும் வரும் பொது பொறுமையாக இருப்பான். இன்னும் அல்லாஹ்வின் பக்கம் மீளக் கூடியவனாக இருப்பான். இதே போன்று ஒரு முஃமின் அல்லாஹ் சுபஹானஹுதாலா அவனுக்கு கொடுத்த நிஃஹ்மத்களுக்கும் நன்றி சொல்பவனாக இருப்பான் மற்றும் பெருமை அடிக்க மாட்டான். 


மாறாக அல்லாஹ்வை மறந்து , பொடு போக்காக வாழும் மனிதனின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்றால், அவனுடைய சொத்து செல்வங்களுக்காக பெருமை அடிப்பான். எனது திறமையினால் கிடைத்தவை என்று பெருமை அடிப்பான். 


அதே போன்று அவனுக்கு ஒரு துன்பம் , துயரம் 

ஏற்பட்டு விட்டால், அல்லாஹ்வுக்கு மாறு செய்வான். இன்னும், அல்லாஹ்வையே குறை சொல்ல தொடங்கி விடுவான். இது தான் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் உள்ள வித்தியாசம். 


இந்த நிலைப்பாட்டை தான் நாம் இன்று நிதர்சனமாக காணுகின்றோம். அல்லாஹ்வின் சோதனை வந்தபோது இந்த மக்களின் ஈமான் அதிகரித்ததா ? பொறுமை காக்கின்றார்களா ? ஏன் இந்த நிலைமை ? 


மக்கள் அல்லாஹ் பற்றிய நம்பிக்கையை 

அறியவில்லை, ஸுன்னாவை கைவிட்டார்கள், தூய்மையான இல்மை தேடுவதை விட்டும் தூரமானார்கள், அந்த இல்மை சுமந்த மனிதர்களுடன் உறவாடுவதை கைவிட்டார்கள். எனவே, சோதனைகள், ஈமானை அதிகரிக்கவில்லை. 


மாற்றமாக 

இன்னும் குப்ரின் பக்கமும், ஷிர்க்கின் பக்கமும் , பித் அத்தின் பக்கமும் , பாவங்களின் பக்கமும் செல்வதோடு , மக்களிடம் கையேந்துபவர்களாக ஆகிவிட்டார்கள். 



இவர்கள் இல்மை தேடியிருந்தால், அந்த இல்மை சுமந்த உலமாக்களோடு கலந்துறவாடி இருந்தால், சோதனை வரும்போது அதனை அடியாளம் கண்டு அல்லாஹ்வின் பக்கம் மீண்டு இருப்பார்கள். ஈமானோடு ஈமான் அதிகரித்து இருக்கும். 

ஆனால், ஈமானில் குறைப்பாடு, ஈமான் இருக்கிறதா என்று என்னும் அளவுக்கு பாவிகளாக மாறி, மார்க்கம் என்றால் என்னவென்று தெரியாமல் அந்த இயக்கத்தோடும், இந்த இயக்கத்தோடும் சிதறுண்டு இருக்கிறார்கள். 

எனவே, இந்த மாதிரியான அழிவுகளில் இருந்த பாதுகாப்பு பெற வேண்டுமானால், என்ன வழி என்று இவர்கள் சீர்தூக்கி பார்க்க மறந்து விட்டார்கள். அல்லாஹ் சுபஹானஹுதாலா இது பற்றி கூறும் பொது 

" وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرَىٰ بِظُلْمٍ وَأَهْلُهَا مُصْلِحُونَ


இன்னும், நபியே, ஊர்களை , அவ்வூரார் சீர்திருத்துபவர்கலாக இருக்கும் நிலைமையில் அநியாயமாக உமதிரட்சகன் அழித்து விடுபவனாக இல்லை. {11 :117 } 


இது தான் அல்லாஹ்வின் நியதி என்று அவனே கூறிவிட்டான். எனவே, அல்லாஹ் சுபஹானஹுதாலா ஒரு அழிவை, சோதனையை அனுப்பும் முன் அந்த இடத்தில் ஒரு சீர்திருத்த வாதி இருந்தால் அவரை வெளியேற்றி விடுவான், பின்னர் தான் அந்த ஊரை , கிராமத்தை , குறிப்பிட்ட இடத்தை அழிப்பான். 

இதனை தான் நூஹ் நபியின் வரலாறு சொல்கிறது. லூத் நபியின் வரலாறு சொல்கிறது. 


அதாவது, அல்குரானை ஸுன்னாவை சஹாபா விளக்கத்தை கொண்டு மக்களை சீர்த்திருத்தும் சீர்திருத்தவாதிகள் சீர்திருத்தம் செய்துக் கொண்டிருக்கும் வரை அழிவுகள் வராது. இது தான் அழிவுகளில் இருந்து பாதுகாப்பு பெரும் வழி .


எனவே,   இந்தப் பனி , இந்த தூய்மையான சீர்திருத்த வாதிகள் , அண்மையில் அழிவு வந்த இடங்களில் இருந்தார்களா , இருக்கிறார்களா என்று சீர் தூக்கி பாருங்கள். நாமறிந்த வரை இல்லவே, இல்லை. இது அல்லாஹ் சுபஹானஹுதாலா பட்டவர்த்தனமான அடையாளமாக எமக்கு காண்பிக்கிறான். 

இது கிழக்கு மாகாணமாக இருந்தால் என்ன ? மத்திய மாகாணமாக இருந்தால் என்ன ? இந்த பிரதேசங்களில் குர் ஆன் ஸுன்னாவை  சஹாபா விளக்கத்தில் எத்தி வைப்பவர், மக்களை நல்வழி படுத்துபவர் இல்லை என்பதை உறுதி செய்கின்றது.  

இதற்கு பின்னரும் இதனை உணரவில்லை என்றால், மார்க்கத்தை தூய்மையாக நிலை நாட்டவில்லை என்றால் , இல்மை சுமந்தவர்களை நோக்கி திரும்பவில்லை என்றால் இந்த மாதிரியான அழிவுகள் தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை. 


எனவே, செய்யவேண்டிய முதலாவது நிவாரண நடவடிக்கை தான் தாயிகள் என்று, மௌலவிகள் என்று , சீர்திருத்தவாதிகள் என்று மார்க்க பிரச்சாரத்தில் இருந்த வர்களை வெளியேற்றி விட வேண்டும். போங்கள் , பொய் முறையாக படியுங்கள். பின்னர் வந்து சீர்திருத்த பணிகளில் ஈடுபடுங்கள். இந்த முதலாவது நிவாரண நடவடிக்கை அவசியம் செய்யப்பட வேண்டும் . 


இல்லை என்றால், சீர்திருத்தம் என்ற பெயரில் இவர்களது

அக்கிரமம் காரணமாக அல்லாஹ் எம்மை மீண்டும் பிடித்து விடலாம். இது நாம் யாரையும் சீர்திருத்த பணி செய்ய வேண்டாம் என்றோ , அழைப்பு பனி செய்ய வேண்டாம் என்றோ சொல்வதா கருதக் கூடாது. இவர்கள் முறையாக கற்று , தூயைமையாக அழைப்பு பனி செய்யாதளால் ஏற்பட்ட நாசம் மீண்டும் பீடிக்காதிருக்க முறையாக கற்றபின் , அழைப்புப் பணிக்கு தகுதியானவர்கள் என்று தகுதியானவர்கள் அனுமதித்த பின் ஈடுபடுங்கள் என்றே சொல்கிறோம். 


இவர்கள் செய்த நாசம் போதும். இனிவரும் காலங்களில் சரி பேணுதலாக இருப்போம். மாற்றங்களை காணுவோம் , அனுபவிப்போம். 


எனவே, இந்த முதலாவதான நிரந்த நிவாரணப் பணியான மார்க்கத்தை முறையாக கற்று சீர்த்திருத்து பவர்களை உருவாக்குவதும், அந்த முறையாக கற்ற அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ உலமாக்களுடன், இல்மை சுமந்தவர்களுடன் 
சேர்ந்துக் கொள்வதாகும். தன்னை அவர்கள் மூலம் பயிற்றுவித்துக் கொள்வதாகும். இது தான் அல் ஜமாஆ. இதனை தவிர்ந்துக் கொண்டு எவ்வளவு தான் நிவாரணம் தேடினாலும் , அது கானல் நீர் தான். 

இந்த விடயங்களை தவிர்ந்து இன்று இயக்கங்கள் தனி வழியில் இறங்கி விட்டன. எவ்வாறு, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு அனர்த்தம் ஏற்பட்டால் , சமூக சேவை என்று வீதி வீதியாக , பாதையோரங்களில் எல்லாம் பிச்சை கேட்பது போன்று அலைவார்களோ , தமது மிஷனரி சேவை செய்கிறது என்று காட்டுவதற்கு முழு பிரயாச்சித்தம் செய்வார்களோ, அதே வழி முறையில் இறங்கி விட்டார்கள். 

எந்தளவுக்கு என்றால் ஒரு ரூபாய் ஆயினும் போடுங்கள் என்று பாத்திரங்களை பிடித்துக் கொண்டு மக்களின் முன்னும் பின்னும் அலைகிறார்கள். 

இறை மறுப்பாளர்களை , சகோதர்களே என்று விழித்து , தர்மம் செய்யுங்கள், உதவுங்கள் என்று அலைகிறார்கள். யாருக்கு நிவாரண உதவி , யாரிடம் பெறுவது, யாரிடம் பெற்று யாருக்கு நிவாரண உதவி செய்வது , எப்படி உதவி பெறுவது , அந்த உதவி கேட்டு எப்படி எங்கே அறிவிப்பு செய்வது என்றெல்லாம் தெரியாமல் தெருத் தெருவாக அலைகிறார்கள். இது அந்நிய வழி முறைகள் அன்றி வேறில்லை. 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறான நிலைமைகளில் எப்படி சேகரித்தார்கள் என்று முதலில் தெரிந்துக் கொள்ளட்டும். 

ஆக சிறப்பான வழி நபி வழி என்று கத்து கத்து என்று கத்தி விட்டு அந்நிய வழிமுறையில் பிரண்டுதான் கொடுக்கிறார்கள். கேட்டால் தடை இல்லை , நல்ல காரியம் என்கிறார்கள். இந்த நிவாரணப் பணி நிவாரணத்தை கொண்டு வருமா ? 




இன்னும், இப்படி கிறிஸ்தவ மிஷனரி வழிமுறையை பின்பற்றுவது மட்டுமில்லாமல் இந்த இயக்கங்கள் அனைத்தும் ஊழலுக்கு பேர் போனவர்கள். 

இந்த இயக்கங்களில் இருந்து ஒருவர் வெளியேறினால், வெளியேற்றப்பட்டால் அவர் செய்த  ஊழல்களை , அவர் செய்த மோசடிகளை அவர்களே பட்டியல் போடுவார்கள். இந்த மக்களிடம் நிவராணப் பணிகளையும் அதன் சேகரிப்புகளையும் கொடுத்தால் எப்படி இருக்கும் ? 

நம்பி கொடுக்க முடியுமா ? சுனாமியில் செய்தது  இன்னும் வெளிவந்துக் கொண்டு இருக்கின்றன , தற்போதைய வெள்ள நிவாரண மோசடிகள் பின்னர் வெளிவரும். 


மேலும், இந்த இயக்கங்கள் ,  தங்கள் இயக்க ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை ,என்றெல்லாம் சமுதாயத்தை கூறு போட்டு நிவாரணத்திலும் பிரித்து விடுகிறார்கள். 


எனவே, இந்த இயக்கங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதும் , ஒரு ரூபாயேனும் கொடுப்பதும் வீணே அன்றி வேறில்லை. இன்னும் பிரிவுகளையும் குரோதங்களையும் கொண்டுவருமே அன்றி வேறில்லை. இயக்கங்களை வளர்த்த பாவம் தான் வந்து சேரும். 

எனவே, எமது முஸ்லிம் சகோதருக்கு நாம் செய்யவேண்டிய முக்கிய நிவாரணம் அவர்களுக்காக துஆ செய்வதாகும். மனிதர்கள் அனைவர்களது உதவிகள் ஒத்தாசைகள் அனைத்தையும் விட பூரண நிவாரணத்தை இந்த துஆ கொண்டு வரும். 
ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய அந்த துஆக்களுக்கு சொந்தக் காரர்களாக நாம் முதலில் மாறவேண்டும். நிவாரணப் பணிகள் உட்பட அனைத்து விடயங்களிலும் இல்மை சுமந்த மனிதர்களின் வழி காட்டுதலில் செய்வதற்கு பழக வேண்டும்.செய்ய வேண்டும்.    


قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلْ الْمُؤْمِنُونَ

"ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன் 9:51)