[பலகத்துரை ஊர் பள்ளிவாயல்களின் குழப்பங்களும்]

பலகத்துரை ஊர் பள்ளிவாயல்களின் குழப்பங்களும் அல்லாஹ்வையே மறுத்து பேசும் குத்பாக்களும்

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம், 
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹுமதுல்லாஹி வ பரகாத்தஹு.. 

அல்லாஹ் அர்ஷ் இன் மீது உயர்ந்து விட்டான் என்று நம்புவது குப்ர் உம் அதனை நம்பியவர்கள் காபிர் என்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கம்பஹா மாவட்ட காரியதரிசி அண்மையில் 27 டிசம்பர் 2013 நீர்கொழும்பு பலகத்துரை தக்கியா பள்ளிவாயில் குத்பா பிரசங்கம் நிகழ்த்த 

அதனை கேட்ட பொது மகன் சகிக்க முடியாமல் பிரசங்கத்தின் நடுவில் குறுக்கிட்டு கேள்வி கணை தொடுக்க; ரகளையாகி விட்டது. 

பலகத்துரை என்ற கிராமத்தில் அல்லாஹ்வின் நம்பிக்கையும் அவனது பெயர் பண்புகள் பற்றியும் அதிகமாக பேசப்படுவதால் தான் நான் இவ்வாறு பேசினேன் என்றும் அந்த ACJU காரியதரசி கூறினார். 

இதன் பின்னர் இந்த வழிகெட்ட ஜஹ்மிய்யா கொள்கையை நிலை நாட்ட , தக்கியா பள்ளிவாயுலுடன்
சேர்ந்து கப்ரு ஸ்தான பலகத்துரை பெரிய பள்ளிவாயல் ஒரு மகாநாடு ஒன்றையும் நடத்தியது 

எனவே இந்த மகா பாதாக ஷிர்க் ஐ ஷிர்க் என்று தெளிவு காட்டி, அஹுளுஸ் ஸுன்னாவின் தெளிவான ஏகத்துவக் கொள்கையை பரத்தி முஸ்லிம்களை பாதுகாக்க தொடர்ச்சியாக பல உரைகளும் வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது

  • 05 Jan 2014 அல்லாஹ்வின் நம்பிக்கையில் அஹ்லுஸ் சுன்னாஹ்வின் போக்கும் அஹுலுல் பித்ஆ வின் போக்கும் 1  2 
  • 13 Jan 2014 இமாம் தஹபியின் கிதாப் அல் உலூ லில் கைரில் கப்பார் - இமாம் அல்பானியின் சுருக்கம் - ஷேக் சைலானியின் விளக்கம் பாடங்கள் 1 2 3 4 
-------------------------------------------------------------------------------------------------

ஜனாஸா அடக்குவதும் பலகத்துரை கப்ருஸ்தான பள்ளிவாசல் சட்டத்தில் அமைய வேண்டுமென்பதும் 

பலகத்துரை ஊர் மக்களின் ஜனாஸாக்கள் அடக்கப்படுவதாக  இருந்தால் பலகத்துரை பள்ளிவாசலின் சட்ட திட்டங்களுக்கு அமையவே ஜனாஸா அமல்கள் நடைபெற வேண்டும் அது அல்குர் ஆன் ஸுன்னாவிற்கு முரணாக இருப்பதாக ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டாலும் சரியே 

எனவே இது சம்பந்தமான முடிவுகளும் விளக்கங்களும் அகில இலங்கை ஸலப் கவுன்சில் மக்களுக்கு தெளிவு காட்டவும் வழிகாட்டவும் ஏற்பாடு செய்தது. இதன் ஒலிப்பதிவுகளை கீழே காணலாம். 


பேருவலை - மஹகொட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் எரிப்பும், படுகொலையும் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் இரத்தக் கறை படிந்த நிகழ்வாகப் பதிவாகி விட்டது. ஒரு முஸ்லிமினது மானமும் இரத்தமும் இன்னொரு முஸ்லிமுக்கு ஹராம்.


   வெள்ளி கிழமை மாலை மஸ்ஜிதுக்குக் கல்லெறிந்துள்ளனர். பின்னர் வந்த ஒரு குழு கல்லெறிந்த மஸ்ஜிதைச் சேதப்படுத்தியது மட்டுமன்றி ஒருவரைக் கத்தியாலும் குத்தியுள்ளனர். 

பின்னர் திட்டமிட்டு காலியிலிருந்து காடையர்களை வரவழைத்துப் பெரும் திரளாகப் பள்ளியைச் சூழ்ந்து பள்ளியைத் தாக்கியுள்ளனர். 

அப்போது பள்ளியில் இருந்த 30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட சகோதரர்களின் மோட்டார் சைக்கிள்கள், புஷ் சைக்கிள்களை ஒன்றாகச் சேர்த்து எரித்துப் பள்ளிக்கும்  தீ வைத்துள்ளனர்.

பள்ளியின் அனைத்துக் கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர். அங்கிருந்த சகோதரர்களைக் கதறக் கதறக் கருவறுத்துள்ளனர். வுழூச் செய்யுமிடத்தில் 6 இடங்களில்  இரத்த வெள்ளம், கலகக்காரர்களிடம் கடுகளவு கூட இஸ்லாமிய உணர்வோ, ஈவு இரக்கமோ இல்லை என்பதற்கான இரத்த சாட்சியங்களாகத் திகழ்கின்றன.


  • பேருவலை கொலைகளும் ஜம்மியத்தில் உலமாவின் நிலைப்பாடும்    ஒலிப்பதிவு