[வாராந்த வகுப்புகள் - நிகழ்கால நிகழ்வுகள்]
வாராந்த வகுப்புகள் : செவ்வாய்  வெள்ளி  சனி  ஞாயிறு  
---------------------------------------------------------------------------------

  • பித்னா காலங்களும் அதில் முஸ்லிம்கள் நடந்துக் கொள்ளும் வழிமுறைகளும் 1 2 
ரிசானா நபீக் இன் தண்டனை சந்தேகங்களும் சர்ச்சைகளும்
  • சர்வதேச மரண தண்டனையும் இஸ்லாமிய மரண தண்டனையும்  
  • இஸ்லாமிய கிலாபத்தும் இன்றைய பிரச்சாரங்களின் ஆபத்தும்  
  • இஸ்லாமிய ஷரியத்தின் உண்மைகளும் அதனை நிலைநாட்டும் வழிமுறைகளும்   கேட்க 
  • ரிசானா நபீக் இன் தண்டனை சந்தேகங்களும் சர்ச்சைகளும் அதற்கு ஷரியா ரீதியான விளக்கங்களும்  கேட்க 
  • ஷரியா சட்டங்களின் நடைமுறை கிலாபா ஆட்சியில் மட்டுமா ? அல்லது மன்னர் ஆட்சியிலுமா ?  கேட்க

அண்மையில் துல்கஃதா 1433 ( அக்டோபர் 2012 ), நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  மீது அவதூறும் இழிவும் செய்யும் வகையில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில்  இயக்கங்களும் வழிகெட்ட கூட்டங்களும் அரசியல் வாதிகளும் யூத நசாரா கைக்கூலிகளும்  நபியின் நேசிப்பு என்ற பெயரில் யூத நசாரா வழிமுறையில் நேசிப்பை வெளிப்படுத்தி , குழப்பங்களையும்  நாசங்களையும், கொலைகளையும் , சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தினர்.

அதன் போது உலமா  அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆ வினர் மக்களுக்கு , உபதேசங்களையும் வழிகாட்டுதல்களையும்  முன்வைத்தனர். அவைகளை கீழே காணலாம் .


நபி வழியின் உண்மைகளும் திரைப்படங்களின் மடமைகளும்   1  2 

இந்த வார குத்பா (12  துல்கஃதா  1433 / 28.09.12 )  

Neg - நபியின் வழிகாட்டதலும் அவர் மீது நேசத்தின் அடையாளமும்  நபிவழிக்கு இயக்கங்களின் நாசங்களும் உம்மத்தின் வீழ்ச்சியும் 


Q & A - இஸ்லாத்தை உள்ளாலும் வெளியாலும் தடுக்கும் திட்டங்களும்  யூத நசாரா கூட்டங்களும் இயக்கங்களும் அதன் போராட்டங்களும்  


Col - நபி விடயத்தில் யூதர்களின் தந்திரங்களும் அதில் சிக்கிய வழி கெட்ட கூட்டங்களும்


الحمدلله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده 

أما بعد


நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக  எதிர்த்து ஆர்ப்பாட்டம் என்று மிருகங்கள் போன்று  நடந்துக் கொள்வது  எப்போதும் இஸ்லாமிய வழி முறையன்று.  

மாற்றமாக கோபத்திலும் அன்பு காட்டுவதிலும் கூட நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சிறப்பான முன்மாதிரி இருக்கிறது. 
இதனை நபி சல்லல்லாஹு அவர்களை உண்மையாகவே பின்பற்றக் 
கூடியவர்கள் அந்த முன்மாதிரிமிக்க பாதையில் இருப்பார்கள். 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தவிர்ந்து ஏனையோரை பின்பற்றுபவர்கள் தான் நபியோ அவரை 
பின்பற்றுபவர்களினதோ முன்மாதிரி இல்லாத கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். 

இதனை என்னுடைய உபதேசமாக முஸ்லிம் மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் யாரை முன்மாதிரியாக பின்பற்றுகிறீர்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.

Written with praises to Allah and Salaam & Salawaath to the last and final leader for all mankind the great Prophet Muhammed Sallallahu alaihi wassallum 
by Abu Abdur Rahman Yahya Silmy bin Muhammed Nubar bin Usman bin Noah Lebbe Aala Marikaar As-Sayla ni Al-Yemani As-Salafi Al-Athari - Governor of All Ceylon Salaf Council (ACSC) Tel +94722251277.

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் படம் ஒரு வருந்தத்தக்க மற்றும் குற்றவியல் முயற்சி ஆகும்.  


நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தற்காத்து நிற்க சிறந்த வழி அவரது ஸுன்னாக்களை பின்பற்ற வேண்டும் என்று ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் , வலியுறுத்தினார். நபியவர்களின் பண்புகள் மற்றும் வாழ்க்கை வழி முறைகள் பரப்பப்பட்டதால் தான் இஸ்லாமியம் மதிப்புகள் பரவியது என்றும் கூறினார். 

ஷேக் அப்துல் அஸீஸ் பின் அ ப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் வெளியிட்ட ஒரு அறிக்கையில் , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் படம் ஒரு வருந்தத்தக்க மற்றும் குற்றவியல் முயற்சி ஆகும். 

இது நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையோ இஸ்லாத்தையோ பாதிக்காது . ஏனெனில், நபியை யார் வெறுக்கிறாரோ அவர் தான் சந்ததி அற்றவர் ( இந்த உலகத்திலும் மறுமையில் இருந்தும் எல்லா நலவுகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டவர். ) அத்தியாயம் 108, வசனம் 3) என்று அல்லாஹ் சுபஹானஹு தாலாஆ அல்குர் ஆனில் கூறி விட்டான். 

ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் அவர்கள் மேலும் கூறுகையில் இந்த குற்றவியல் முயற்சியை கண்டித்து முஸ்லிம்கள் அப்பாவி மக்களை கொலை செய்வதாலும் மற்றும் பொது சொத்து வசதிகளை தாக்குவதாலும் தங்கள் கோபத்தை முன்னிறுத்த அனுமதிக்க கூடாது. 

மாற்றமாக முஸ்லிம்களின் செயல்பாடுகள் அல்குர் ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முஸ்லிம்கள் தங்கள் கோபத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்றால், இந்த படத் தயாரிப்பாளர்கள் அவர்களின் இலக்குகளை அடைந்துக் கொள்வார்கள். 

அனைத்து நபிமார்கள் , ரசூல்மார்களை கேலி செய்யும் செயலை , சமூக விரோத செயல் என ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் அவர்கள் அனைத்து உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் .  


--------------------------------------------------------------------------------------------

இலங்கையில் நடந்த நான்காவது ஈழப்போர் 2009ம் ஆண்டின் மத்தியில் முடிவுக்கு வந்தது .போரின்  இறுதியில் நிகழ்ந்தவை ஒரு சாரருக்கு பேரதிர்ச்சியையும் இன்னொரு பக்கம் மகிழ்ச்சியையும் அளித்தது.............. ஒரு ஸலபி நோக்கு :]-.....


இலங்கையின் சமாதாண கொண்டாட்டங்களும்

முஸ்லிம்களின் நிலைப்பாடும்  1  2