[ஷஹாதா]

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48)

 

எவரேனும் ஒருவர் உண்மையாகவே தமது முந்திய மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தில் நுழைய விரும்பினால், இஸ்லாம் தான் இறைவனால் மனித குலத்திற்கு வழங்கப்பெற்ற உண்மையான மார்க்கம் என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டால் அவர் தமது நம்பிக்கையின் அத்தாட்சியாக ஷஹாதா கலிமாவை உடனடியாக மொழியவேண்டும்.
அல்லாஹ்வின் அல்குர்ஆன் இதை மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறது. அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளத்தக்க மார்க்கம் இஸ்லாம்தான்.
(அல்குர்ஆன் 3:19)
மேலும் கூறுகிறான்:இஸ்லாத்தை விடுத்து வேறொரு வாழ்க்கை நெறியை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால் அவரிடமிருந்து அது ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும் மறுமையில் அவர் நஷ்டமடைந்தவகளுள் ஒருவராகவே இருப்பார்.(அல்குர்ஆன் 3:85)


முதற்கடமையாகிய ஷஹாதத் கலிமாவை வெருமனே தனியாகவோ, பிறர் முன்னிலையிலோ வாயால் மொழிவது மட்டும் போதாது. அசைக்க முடியாத, உள்ளத்தில் உறுதியான நம்பிக்கையுடன் இதனை வெளிப்படுத்த வேண்டும். ஒருவன் நேர்மையான மனப்பக்குவத்துடன், தனது எஞ்சிய வாழ்க்கை முழுவதிலும் இஸ்லாத்தின் போதனைகளை ஏற்று நடக்க உறுதி கொண்டால், அவன் தன்னை அன்று பிறந்த குழந்தையைப் போன்று பாவமற்றவனாக ஆக்கிக் கொள்கிறான். உயிரூட்டமுள்ள நம்பிக்கை என்னும் ஒளி இவன் உள்ளத்தை வெளிசமுடையதாக்கி. அந்த நம்பிக்கையின் மறு உருவமாகவே அவனை ஆக்கிவிடும். தன்னை முஸ்லிம் என்று அறிவித்த பிறகு ஒருவன் அடுத்ததாக ஆற்ற வேண்டிய பணி யாது?
இதன் பிறகு தான் அல்லாஹ்வின் ஒருமைத்தன்மையில் அடங்கியிருக்கும் உண்மையான விளக்கத்தையும் அதன் தேவைகளை நிறைவேற்றும் அவசியத்தையும் ஒருவன் உணரத் தொடங்க வேண்டும். அவன் இந்த உண்மையான நம்பிக்கையைத் தன் சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்தி, அதன் படியே நடக்கத் தொடங்க வேண்டும்.


ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள்

தவ்ஹீத் எனும் ஏகத்துவ கொள்கை.

தவ்ஹீத் எனும் ஏகத்துவ  கொள்கை மூன்று அம்சங்களைக் கொண்டது.


1. தவ்ஹீத் அர் ருபூபிய்யா – அல்லாஹ்வின் ஆதிபத்தியத்தில் ஏகத்துவம். அகிலங்களுக்கெல்லாம் அதிபதி ஒருவனே என்றும் அவனே அதனைப் படைத்தவன், நிர்வாகிப்பவன், பரிபாலிப்பவன், உணவளிப்பவன், பாதுகாவலன் என்றும் அவன்தான் அல்லாஹ் என்ற உறுதியான நம்பிக்கை.


2. தவ்ஹீத் அல் உலூஹிய்யா – அல்லாஹ்வின் வணக்கத்தில் ஏகத்துவம். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்ற விசுவாசம். உதாரணமாக வணக்கங்கள், வேண்டுதல் செய்தல், சத்தியம் செய்தல், குர்பான் கொடுத்தல், ஏழைகளுக்கு தானம் கொடுத்தல், நோன்பு நோற்றல், ஹஜ் யாத்திரை, போன்ற சகலவற்றையும் அல்லாஹ்வுக்காக மாத்திரம் செய்தல்.


3. தவ்ஹீத் ஈ அஸ்மா வ ஸிபாத் – அவனுடைய அழகிய திருநாமங்களிலும் தன்மைகளிலும் ஏகத்துவம்.


பின்வரும் அம்சங்களில் நம்பிக்கை வைத்தல்.

* அல்லாஹ்வோ அல்லது அவனுடைய தூதர்  صلى الله عليه و اله و سلم‎ அவர்களோ குறிப்பிட்ட அல்லாஹ்வின் திருநாமங்கள் அல்லது தன்மைகளைத் தவிர வேறு எவற்றையும் அல்லாஹ்வை குறிப்பிட உபயோகிக்கக் கூடாது.


* அல்லாஹ்வுடைய குர்ஆனும் அவனுடைய திருத் தூதர் முஹம்மது صلى الله عليه و اله و سلم‎ அவர்களும் அல்லாஹ்வைப் பற்றிக் கூறிய தன்மைகளை உறுதிப்படுத்தல். அவற்றை எல்லளவேனும் மாற்றாமலும் புது அர்த்தங்களை புகுத்தாமலும், எப்படி எவ்வாறு  என்ற கேள்விகள் கேட்காமலும், அவற்றை முற்றாகப் புறக்கணிக்காமலும்,  படைப்பினங்களை சுட்டிக்காட்டும் தன்மைகளை கொடுக்காமலும் இருக்க வேண்டும். 


முஹம்மது صلى الله عليه و اله و سلم‎ அவர்கள் அல்லாஹ்வின் திருத் தூதர் ஆவார்கள் எனக் கூறும் சாட்சியத்தில் பின்பற்றுதற்குரியவர் அல்லாஹ்வின்  தூதர் முஹம்மது صلى الله عليه و اله و سلم‎ அவர்களைத் தவிர வேறு யாருமில்லை.
முஸ்லிம் என்பவர் அந்தத் தூதரின் போதனைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கடமைப்பட்டவராவார். அந்த நபியின் போதனைகளை நம்பி, அவற்றைத் தன் வாழ்க்கையில் கடைபிடித்து, அவர் தடுத்தவற்றை விட்டு ஒதுங்கி, அவருக்கு அல்லாஹ்வால் அருளப்பெற்ற தூதுச்செய்தியின் அடிப்படையிலேயே இறைவனை வணங்கி, வாழ்வதுதான் முஹம்மத் நபியைத் தூதர் என்று ஏற்றுக்கொண்டதன் உண்மையான அடையாளமாகும். 

லாயிலாஹ இல்லல்லாஹ் வின் நிபந்தனைகள் வகுப்பு 1 பாகம் 1 2 வகுப்பு 2 வகுப்பு 3 வகுப்பு 4 வகுப்பு 5

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~