[மஸ்ஜித்களில் இரண்டாவது ஜமாஅத் தொழுகைகளும் கூடுமா ? கூடாதா ? என்ற விளக்கங்களும்]

மஸ்ஜித்களில் இரண்டாவது ஜமாஅத் தொழுகைகளும் கூடுமா ? கூடாதா ? என்ற விளக்கங்களும்

இமாமும் முஅத்தீன் நியமிக்கப்பட்ட  மஸ்ஜிதில் இரண்டாவது ஜமாஅத் நடத்துவது பற்றி தான் என்ன தீர்ப்பு என்று இங்கே ஆராயப் படுகிறதே தவிர இவ்வாறான மஸ்ஜித்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் தொழுகையை திரும்ப திரும்ப ஜமாஅத் ஆக நடத்துவது ஆகுமாக்கப்பட்டுள்ளது. 


இமாம் ஷாபி ரஹீமஹுல்லாஹ் இது தொடர்ப்பாக அவருடைய கிதாபுல் உம்மில் பேசும்போது

" ஒரு கூட்டம் மஸ்ஜிதில் நுழைந்து , அந்த மஸ்ஜிதில் இமாம் தொழுகையை ஜமாஅத்தாக முடித்திருந்தால் அவர்கள் தனியே தொழட்டும். இருப்பினும் அவர்கள் ஜமாஅத் ஆக தொழுதார்கள் என்றால், அவர்களது தொழுகை ஆகுமானது ஆகும். என்றாலும், அவர்கள் இவ்வாறு செய்வதை நான் வெறுக்கிறேன்.  இது சலபுகளின் வழிமுறை அல்ல.. 


மேலும் , கூறினார் " இமாமும் முஅத்தீனும் நியமிக்கப்படாத பாதை ஓரப் பள்ளிவாசல்களில் எத்தனை ஜமாஅத் தொழுகை நடத்தினாலும் அதில் பாதகமில்லை. 


பின்னர் கூறினார்., " நாங்கள் நினைவு படுத்தியிருந்தோம், ஒரு சஹாபாக்களின் கூட்டம் மஸ்ஜிதுக்கு வந்து , ஜமாஅத் தொழுகையை தவற விட்டதால் அவர்கள் தனியாக தொழுதார்கள். அவர்களுக்கு அது செய்யக்கூடியாதாக இருந்தும் அவ்வாறு செய்யவில்லை ஏனெனில் ஒரே மஸ்ஜிதில் இரண்டு தடவைகள் ஜமாஅத் நடத்துவது அவர்களுக்கு வெறுப்பான செயலாக இருந்தது. 


மேலே கூறியவைகள் இமாம் ஷாபி இன் வார்த்தைகள்.  சுருக்கமாக இந்த இமாம் ஷாபி இன் விடயங்களை இமாம் ஹாபித், அபு பக்கர் இப்னு அபி ஷைபா அவர்கள் தங்களுடைய முஸ்னபில் மாற்றி அறிவித்துள்ளார்கள். அதாவது,  உறுதியான அறிவிப்பாளர் வரிசையுடன் இமாம் ஹசனுள் பஸரி ரஹீமஹுல்லாஹ் ஊடாக , சஹாபாக்கள் ஜமாஅத் தொழுகை தவறிவிடின் தனித் தனியாக தொழுவார்கள் என்பதாக அறிவிக்கிறார்கள்.


இன்னும் இந்த விடயம் கீழ் வரும் ஹதீதின் ஊடாக விளக்கப்படுகிறது.

அபூ பக்ரஹ் ரழியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-

தொழுகையை நாடி ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் மதீனாவின் எல்லையிலிருந்து புறப்பட்டு வந்தார்கள். அப்போது மனிதர்கள் தொழுது முடித்திருக்கக் கண்டார்கள். எனவே தங்களது வீட்டிற்குச் சென்று,தங்களது குடும்பத்தினரை ஒன்றுகூட்டி, அவர்களை வைத்துத் தொழுகைநடாத்தினார்கள்.

(தபரானி கபீர்,தபரானி அவ்ஸத்,இமாம் அல்பானி ஹசன் என்று திர்ப்பளித்துள்ளார்கள்) 


அப்துல்லாஹ் இப்னு மஸ்ஹூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், தங்களுடைய இரு தோழர்களுடன் ஜமாஅத் ஆக தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அவர்கள் மஸ்ஜிதை நெருங்கிய பொது மக்கள் தொழுகை முடிந்து வெளியேறுவதை கண்டார்கள். அவர்கள் வீட்டுக்கு திரும்பி தொழுகையை முன் நின்று நடத்தினார்கள்.

( முஹ்ஜமுள் கபீர் ) 


நபிக்கு தோழராக இருந்து , மார்க்கத்தின் அறிவும் விளக்கமும் பெற்ற இமாம் இப்னு மஸ்ஹூத் அவர்கள் திரும்பியது எப்படி என்றால், அவருக்கு ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்கள் நடத்துவதை கூடும் என அறிந்திருந்தால் அவர்கள் தங்களின் தோழர்களுடன் தொழுதிருப்பார்கள் . ஏனெனில் , அவர்கள் , " ஜமாஅத் தொழுகையை தவிர ஏனைய தொழுகைகளை வீட்டில் தொழுவது தான் சிறப்பு என்ற நபி மொழியை அறிந்திருந்தார்கள். கடமையான ஜமாஅத் தொழுகையை அவர்கள் மஸ்ஜிதில் தொழாமல் அவர்களை தடுத்தது எது ?? ஏனெனில் அவர் அறிந்திருந்தார், மஸ்ஜிதில் தொழுவதாக  இருந்தால் தனியே தான் தொழவேண்டும்.  மஸ்ஜிதில் தனித் தனியே தொழுவதை விடவும் வீட்டில் ஜமாஅத் ஆக தொழுவது சிறந்தது, என்பதை அறிந்திருந்த படியால் அவர் வீட்டில் ஜமாஅத் நடாத்தினார். இன்னும் இந்த விடயம் கீழ் வரும் ஹதீதின் ஊடாக விளக்கப்படுகிறது. அதாவது, 

ஒரு தொழுகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மக்கள் வராமல் இருப்பதைப் பார்த்து விட்டு, ''மக்களுக்குத் தொழவைக்கும் படி நான் ஒருவரை ஏவி விட்டு தொழுகைக்கு வராதவர்களை நோக்கிச் சென்று அவர்களுடன் அவர்களுடைய வீடுகளைக் கொழுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எலும்புள்ள கொளுத்த இறைச்சி கறித்துண்டு கிடைக்கும் என அவர்களில் யாருக்காவது தெரியுமானால் இஷா தொழுகையில் கலந்து கொண்டு விடுகிறார்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் )


மீண்டும் ஜமாஅத் தொழுகைகள் மஸ்ஜிதில் நடாத்த முடியும் என்றால் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் வீடுகளை எரிக்க் நாடுகிறேன் என்று கடுமையாக கூற தேவையில்லை. ஏனெனில் ஒரு ஜமாஅத் தவறினால் இன்னொன்று கிடைக்கும் என்பது வெளிப்படையானது. 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு ஸதகா  அளிக்கக்கூடியவர் யார்? என்று கேட்டார்கள். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார். அறிவிப்பவர்: அபூ ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு,

நூல்: திர்மிதி அபூதாவூத்.


இந்த ஹதீதை ஆதாரமாக சொல்பவர்களுக்கு நாம் பதிலாக கூறுவது என்னவென்றால், நாம் தலைப்பாக எடுத்துள்ள கடமையான இரண்டாவாது ஜமாஅத் பற்றி அல்ல இந்த ஹதீத் பேசுகிறது.  முதல் ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன் , ஒருவர் மஸ்ஜிதுக்கு வருகிறார், அவர் தனியாக தொழ முற்படுகிறார். இதனை கண்ணுற்ற நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , ஏற்கனவே, அவர்களுடன் தொழுது முடித்திருந்தவர்கள் நபிலான ஒரு செயலை செய்வற்கு இடமளித்து அங்கிருத்த ஒருவர் நபிலான தொழுகையை வந்தவருடன் சேர்ந்து தொழுகிறார். இது தான் 

அங்கு நடந்தது. எனவே, இந்த ஜமாஅத் தொழுகை இரண்டு பேரை கொண்டது. ஒருவர் இமாம் , மற்றவர் மஹ்மூன். இமாம் ஏற்கனவே தொழாதவர் , மஹ்மூன் ஏற்கனவே தொழுதவர். இமாம் தனது கடமையான தொழுகையை நிறைவேற்றுகிறார். மஹ்மூன் தனது நபிலான தொழுகையை நிறைவேற்றுகிறார். இவ்வாறு தொழுமாறு ஏவியது யார் ? அதாவது இமாமாக, தொழாதவரும் மஹ்மூன், ஆக தொழுதவரும். அங்கே தொழுதவர் ஒருவர் இல்லை என்றால் ஜமாஅத் இல்லை. எனவே இது ஒரு பர்ள் ஆன நபிலான ஜமாஅத் தொழுகை தவிர கடமையான ஜமாஅத் தொழுகை இல்லை. இங்கே பேசுவற்கு எடுக்கப்பட்ட விடயம் இரண்டாவது கடமையான ஜமாஅத்

பற்றியது. எனவே, இந்த விடயத்திற்கு இந்த ஹதீதை ஆதாரமாக எடுப்பது பொருத்தம் இல்லை. ஏனெனில், இந்த ஹதீத் மேலும் ஒரு உண்மையை உறுதிபடுத்துகிறது. அதாவது, இந்த மனிதருடன் தொழுது ஸதகா செய்யக்கூடியவர்  யாரும் உண்டா ? என நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கிறார்கள். 

இங்கே, ஒரு ஸதகா கொடுப்பவரும், ஒரு ஸதக்கா பெறுபவரும் இருக்கிறார்கள். அறிவிலும் , விளக்கத்திலும் குறைந்த ஒருவரிடம் இதை பற்றி கேட்டாலும் கூறுவார், அதாவது நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதித்த ஸதகாவில், யாரு கொடுப்பவர், யாரு பெறுபவர் என்பதை.    

இப்போது , இந்த விடயத்தை எமது தலைப்புக்கு ஒப்பிட்டு பார்ப்போம் . உதாரணமாக :, 

ஆறு அல்லாது எழு பேர் மஸ்ஜிதுக்கு வருகிறார்கள், கவனிக்கிறார்கள் ஜமாஅத் தொழுகை முடிந்து விட்டதை பின்னர் வந்தவர்களில் ஒருவர் தொழுவிக்கிறார், 

மற்றவர்கள் அவரின் பின்னல் இரண்டாவது ஜமாஅத் ஆக தொழுகிறார்கள். இப்போது கூறுங்கள், இவர்களில்  யாரு ஸதகா கொடுப்பவர் ? யாரு ஸதகா பெறுபவர் ? மேலே உள்ள ஹதீதில் கூறிய பிரகாரம் யாருக்கும் பதில் அளிக்க முடியாது. ஏனெனில், இங்கே, தொழுபவர்கள் அனைவரும் பிந்தி வந்த காரணத்தால் அவர்களது கடைமையானதை செய்கிறார்கள், எனவே, யாரும் யாருக்கும் ஸதகா செய்ய முடியாது என்பது மேலே உள்ள ஹதீதுடன் ஒப்பு நோக்குகையில் வெளிப்படையானது.  மேலே உள்ள ஹதீதில் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதவர் ஸதகா கொடுக்கிறார் , ஏனெனில் அவர் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுது 27 மடங்கு நன்மையை பெற்றவர். இதனால் அவருக்கு தொழுகையை நடத்திய இமாமுக்கு ஸதகா கொடுக்கமுடிந்தது. அங்கே 

ஸதகா கொடுப்பவர் இல்லை என்றால் மேலே உள்ள ஹதீதில் வந்தவர் தனியாக தொழுவார். ஏனெனில் வந்தவர் நிச்சயமாக நன்மையை இழந்தவர், ஏழை. , ஸதகா கொடுப்பவர் ஏற்கனவே பெற்றுக்கொண்டதை பின்னர் வந்தவர் பெற்றுக்கொள்ளாத காரணத்தினால், அங்கே ஏற்கனவே நன்மையை பெற்றுக்கொண்டவர் அவருக்கு ஸதகா கொடுக்க வேண்டியதாயிற்று. எனவே, இங்கு யார் ஸதகா கொடுப்பவர் , யார் ஸதகா பெறுபவர் தெளிவாகிவிட்டது. மேலே நாம் எடுத்துக் கொண்ட உதாரணத்தில் உள்ள அனைவரும் முதல் ஜமாஅத் ஐ தவறவிட்ட காரணத்தால் ஏழைகள் , எனவே, நபி சள்ளல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கேட்ட மாதிரி " இந்த மனிதருடன் தொழுது ஸதக்கா செய்யக்கூடியவர்  யாரும் உண்டா ? " என்ற கேள்வியை இங்கு பிரயோகிக்க முடியாது. ஆகவே, இந்த ஹதீதை ஆதாரமாக மஸ்ஜித்களில் இரண்டாவது ஜமாஅத் நடத்துவதற்கு எடுத்துக்கொள்ள முடியாது. இன்னும் அப்படிக் கொள்வது இந்த விடயத்திற்கு சம்பந்தம் இல்லாதது.   

   

இந்த ஆதாரங்களோடு ஒப்பிடும் இன்னொரு ஹதீதையும் பார்ப்போம் . அதாவது, நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், " ஜமாஅத் ஆக தொழுவது தனியாக தொழுவதை விடவும் 27 மடங்கு சிறப்பானதாகும். " அவர்கள் இந்த ஹதீதை ஒரு பொதுவான ஆதாரமாக கொள்கிறார்கள். ஏனெனில், இந்த ஹதீதில் ஜமாஅத் என்ற வார்த்தைக்கு முன் வரும் "அல் ,அந்த " என்ற வார்த்தையை பொதுவாக எல்லா ஜமாஅத் தொழுகைக்கும் என்று கருதுயீடு செய்துக் கொண்டார்கள். இதன் 

அடிப்படையில் அவர்களிடம் எல்லா ஜமாஅத் தொழுகைகளும் சிறப்பானது தனியே தொழுவதை விட. இதற்கு விளக்கமாக நாம் கூறுவோம், " அந்த, அல் " என்ற வார்த்தையின் அடிப்படையில் இது பொதுவான எல்லா ஜமாஅத் தொழுகைகளையும் குறிக்காது. மாறாக இது ஒரு குறிப்பிட்ட வகையை குறிக்கும் என்பதாகும். 

அதாவது, நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கப்படுத்திய , குறிப்பிட்டு சொன்ன அந்த ஜமாஅத் ஐ, மக்களுக்கு பங்குபற்றும்  படி ஏவிய ஜமாஅத் ஐ

, அதனை கை விட்டர்வகளின் வீட்டை எரிப்பதாக எச்சரிக்கை செய்த ஜமாஅத் ஐ

, இப்படியானவர்கள் முனாபிக்குகள் என்று கூறிய அந்த முதல் ஜமாஅத் தான் தனியே தொழுவதை விடவும் 27 மடங்கு கூலியை பெற்று தரும் சிறப்பான ஜமாஅத் ஆகும்.. 


இதே நடவடிக்கையை தான் இப்னு மஸ்ஹூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் செய்கிறார்கள். இமாம் ஹசனுள் பஸரி ரஹீமஹுல்லாஹ் , சஹாபாக்கள் இவ்வாறு தான் நடந்து கொண்டார்கள் என்று சொல்கிறார்கள். இதே கருத்துதான் இமாம் ஷாபி , இமாம் மாலிக், இமாம் அபு ஹனீபா , இமாம் அஹ்மத் ரஹீமஹுல்லாஹ் அஜ்மயீன்

அனைவரும் கூறுகிறார்கள். எனவே, சுன்னாவுக்கு விளக்கம் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களிடம் இருந்தும் சஹாபாக்களிடம் இருந்தும் இமாம்களிடம் இருந்தும் வந்து விட்டது. எனவே, இரண்டாவது ஜமாஅத் நடாத்துவது பித்அத் ஆகும். 


இமாம் அல்பானி ரஹீமஹுல்லாஹ் அவர்களின் பதில்களில் இருந்தும் , இதற்கு ஷேக் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் அளித்த விளக்கங்கங்களில் இருந்தும் தொகுக்கப்பட்டது. 


அல்லாஹ்வே மிக அறிந்தவன். 


  • இரண்டாவது ஜமாத்தும் அதன் வழிமுறைகளும் கேட்க