[தொழுகை]

நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

இஸ்லாமிய தொழுகை நேர அட்டவணையும் வானவியல் கணக்குகளின் குளறுப்படிகளும் 


http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRqq9NYVO_ioEOpm172ej1xKYav9Zvslip9FZVbekJiWXMC6M8&t=1&usg=__zOj3u1uqu6x61vUkTBveFy2JexA=

கடிகாரம் கண்டு பிடிக்கப்பட்டு, சூரியனைப் பார்த்து நேரத்தை அறிந்து தொழுவதற்குப் பதிலாக, கடிகாரத்தைப் பார்த்து நேரத்தை அறிந்து தொழ ஆரம்பித்ததை சலபுஸ்  சாலிஹீன்கல் எச்சரித்த போது இந்த மக்கள் விதண்டாவாதம் செய்தனர். அவர்கள் திருந்தவில்லை. இப்போது ஒவ்வொரு பள்ளிகளிலும் தொழுகை நேர அட்டவணை தொங்குவதை நீங்கள் பார்க்கிறீர்கள். 


அதே போல் இப்போது ஹிஜ்ரி ஆண்டு கணக்கும் ரமழான், ஷவ்வால், ஹஜ் முதல் அனைத்து மாதங்களும் ஆரம்பிக்கும் அட்டவணையும் சேர்ந்து பள்ளிகளில் தொங்குவதைப் பார்க்கலாம்.  


தொழுகை நேரம் அறிய சூரியனைப் பார்ப்பதை மறந்துவிட்டது போல், மாதத்தை அறிய பிறையைப் பார்ப்பதையும் மறந்து விடுவார்கள்.  அல்லாஹ் காப்பாற்றுவானாக!..  


ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்ப நேரத்தையும் முடிவு நேரத்தையும் கற்றுக் கொடுத்தது அல்லாஹ்வே! இந்த நேரம் அறியும் வழிமுறையை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களே நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு கற்று கொடுத்தார்கள் என்பதை பின்வரும் ஹதீது தெளிவு படுத்துகின்றது.

நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள், கஃபதுல்லாவில் இரு முறை எனக்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் தொழுகை நடத்தினார்கள். சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த போது எனக்கு லுஹரை தொழுவித்தார்கள் அப்போது (நிழல் செருப்பின்) வாரளவு இருந்தது. நிழல் அந்த பொருளின் அளவாக (நீளமாக) இருந்த போது எனக்கு அஸரை தொழுவித்தார்கள். நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் எனக்கு மஃரிபை தொழுவித்தார்கள். செம்மேகம் (சூரியன் மறைந்த போது) மறைந்த போது எனக்கு இஷாவை தொழுவித்தார்கள். நோன்பாளிக்கு குடிப்பதும் உண்பதும் தடுக்கப்பட்ட நேரத்தில் எனக்கு ஃபஜ்ரை தொழுவித்தார்கள். (இது முதல் நாள் தொழுவித்த நேரம்).அடுத்த நாள் ஒரு பொருளின் அளவு அந்த நிழல் வந்த போது எனக்கு லுஹரை தொழுவித்தார்கள். ஒரு பொருளின் நிழல் இரு மடங்கு வந்த போது எனக்கு அஸரை தொழுவித்தார்கள். நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் (சூரியன் மறைந்த போது) எனக்கு மஃரிபை தொழுவித்தார்கள். இரவின் மூன்றில் ஒரு பகுதி வந்தபோது எனக்கு இஷாவை தொழுவித்தார்கள். சூரியனின் மஞ்சள் (நிறம்) வருவதற்கு சற்று முன் எனக்கு ஃபஜ்ரை தொழுவித்தார்கள். பின்பு என் பக்கமாக திரும்பி முஹம்மதே! இது உங்களுக்கு முன் சென்ற நபிமார்களின் (தொழுகையின்) நேரமாகும். (ஆகவே உங்களுக்குரிய தொழுகையின்) நேரமும் இந்த இரண்டு நேரங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும் எனக்கூறினார்கள். (அபூதாவூத்)

இந்த விளக்கம் இல்லாததால், வான் கணித ஆய்வாளர் என்று பீற்றிக் கொள்ளும் ஒருவர் முன்கூட்டியே சூரியனின் உதய அஸ்தமன நேரங்களை கணக்கிட்டு , நாளை எத்தனை மணிக்கு சூரியன் உதயமாகும் அஸ்த்தமனம் நடைபெறும் என்பது மட்டுமில்லாமல் அடுத்த ஆண்டுகளில் எத்தனை மணிக்கு சூரியன் உதயமாகும் அஸ்தமனமாகும் என்று கணிப்பிட்டு எதிர்வு கூறியதை முற்று முழுமையாக நம்பி செயல்பட்டு , சூரியனைப் பார்த்து நேரத்தை அறிந்து தொழுவது ஒரு இபாதத் என்பதை மறந்து விட்டார்கள். மறக்கடித்து விட்டார்கள். பித்அத் / குப்ரான வழிமுறையை தேர்ந்து எடுத்துவிட்டார்கள்.


பூமியின் நில மட்ட , கடல் மட்ட வித்தியாசங்களுக்கு ஏற்ப அந்த அந்த பிரதேசங்களில் சூரியனின் உதய அஸ்தமன நேரங்கள் மாறுபடும் போனறவைகளை கருத்தில் கொள்ளாமல் செயல்படுகிறார்கள். தொழுகையின் சரியான நேரத்தை பாழாக்குகிறார்கள். இதன் அடிப்படையில் சில இடங்களில் சூரியன் மறையும் முன்னே நோன்பை திறந்தும் விடுகிறார்கள். இவை நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய நடைமுறைக்கு மாறுபட்டது.


இன்று எவரும் சூரியன் மறைவதை கண்ணால் கண்டு அல்லது சாட்சிகளினால் கேட்டு நோன்பைத் துறப்பதோ அல்லது அதிகாலையில் அடிவானத்தின் வெள்ளை கீற்றுகளின் துவக்கத்தை பார்த்து பஜ்ர் தொழுகைக்கு அழைப்பு விடுவதோ இல்லை, மேலும் அஸ்ர் தொழுகையைக் கணக்கிட குச்சி, கம்பு போன்றவற்றினைப் பயன்படுத்தி முடிவு செய்வதில்லை.


மாறாக sin cos tan minus numbers ( கற்பனை எண்கள் ) போன்ற அண்ணளவான கணித கணிப்பீடுகளை வைத்து கணிக்கப்பட்ட நேர அட்டவனையை பயன்படுத்துகின்றனர்.


இவர்களின் அடிப்படையில் பார்த்தாலும் இந்த நேர அட்டவனை பிழையானது. ஏனெனில் இந்த sin cos tan minus numbers (கற்பனை எண்கள் ) என்ற கணித அலகுகள் துல்லியமானவை அல்ல என்பது கணிதம் படித்த அனைவரும் அறிந்ததே. 


உண்மை என்னவென்றால் அந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவருடைய முடிவை மற்றவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஒருவருடைய அளவீடும் ஆராய்ச்சி முடிவுகளும் மற்றவருடைய முடிவுகளுடன் வித்தியாசப்பட்டு மோதிக் கொள்கிறது. அவர்கள் மத்தியிலேயே ஒரு தீர்க்கமான முடிவில்லாத நிலையில் முரண்படுகிறார்கள். அவர்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகள் செக்கனுக்கு எவ்வளவு வேகத்தில் செல்கிறது நிமிடத்தில் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதில் மட்டுமல்ல. அவர்கள் மத்தியில் எத்தனையோ பிரச்சினைகளும் முரண்பாடுகளும் இருக்கின்றன.
 


இருப்பினும் இதனை அறிந்துக்கொண்டே வானவியலார்களால் எதிர்வு கூறப்பட்ட கணிப்பீட்டு நேரத்தை நம்பி முஸ்லிம் உம்மத்தின் ஒரு பெரும் பெரிய கூட்டம் தொழுகையை சரியான நேரத்தில் தொழாமல் பாழடித்துக்கொண்டிருக்கிறது. 


நபி வழியில் தொழுகை நேரத்தை கணிக்கும் வழிமுறை தெளிவாக காட்டப்பட்ட  பின்னாலும் அதனை முதுகுக்கு பின்னல் தள்ளிவிட்டு இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட வழிமுறையான வான சாஸ்திரத்தின் அடிப்படையில் செயல்படுகிறார்கள்.

ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் பாதுகாத்து தொழ நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக!ஷேக் அல்பானி ரஹீமஹுல்லாஹ் >>

தொழுகை நேர அட்டவணை என்பது அல்லாஹுதாலாவால் வானத்தில் இருந்து இறக்கப்பட்டது அல்ல மாறாகஇவைகள் மனித முயற்சியால் உருவாக்கப்பட்டவை. எனவே அவைகளில் பிழைகள் இருப்பது தவிர்க்க முடியாதது. இவைகள் வான சாஸ்திரத்தை சேர்ந்தவைகளாகும். 

மக்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த தொழுகை நேரம் அறியும் வழிமுறைகளை கைவிட்டு விட்டு இந்த வானவியல் கணக்கு வழக்குகளில் தங்கிவிட்டார்கள்.
  • 15 Jan 2014 மாதாந்த வகுப்பு - ஸிபத் ஸலாத் நபி இமாம் அல்பானியின் கிதாப் முன்னுரை வகுப்பு 5
  • 25 Dec 2013 மாதாந்த வகுப்பு - ஸிபத் ஸலாத் நபி இமாம் அல்பானியின் கிதாப் முன்னுரை வகுப்பு 4
  • 17 Nov 2013 மாதாந்த வகுப்பு - ஸிபத் ஸலாத் நபி இமாம் அல்பானியின் கிதாப் முன்னுரை வகுப்பு 3
  • 26 Oct 2013 மாதாந்த வகுப்பு - ஸிபத் ஸலாத் நபி வகுப்பு 2
  • "கியாமு ரமலான்" இமாம் நாசீருத்தீன் அல்பானியின் கிதாபில் இருந்து பாடங்கள் வகுப்பு  1   2   3    4   5   6   7   8   9