[மாதவிடாய் தடுப்பு மாத்திரையின் நிலைப்பாடும் ஹஜ்ஜில் அது பற்றிய நபி வழியும் ]மாதவிடாய் ஒரு இயற்கையான விடயமாகும். நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் பெண்களுக்கு இந்த உபாதை ஏற்பட்டிருக்கிறது. அவர்களும் நம்மை விட கூடுதல் வணக்கம் செய்பவர்ளாகவும் , வணக்கத்தில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அதனால் பின்வருமாறு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். 
“நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்! , தூய்மையாகும் வரை கஃபாவில் தவாப் செய்யாதே” என்று நபி 
சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா நூல் : புகாரி 

தவாப் செய்வதும், ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவதும் விலக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டைத் தவிர ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம். 

ஹஜ் காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் தவாபை தவிர மற்ற காரியங்களில் ஈடுபடலாம் என்று நபி வழி இருக்கிறது. எனவே எதில் அனுமதியிருக்கிறதோ அதற்காக நாம் வருந்த வேண்டிய அவசியமில்லை. இன்னும், நபி வழியில் ஒரு விடயம் பற்றி தீர்ப்பு வந்ததன் பின்பும் மாற்று வழி தேடுவது கூடாது.