[ஹஜ்]
என்னிடமிருந்து உங்களின் ஹஜ் கடமைகளை எடுத்துக் கொள்ளுங்கள் சிலநேரம், இந்த வருடத்திற்கு பின் நான் உங்களை பார்க்காமல் இருக்கலாம் என நபி صلى الله عليه و اله و سلم‎ அவர்கள் கூறினார்கள். 

(சுனனுல் குப்ரா லில்பைஹகி)


ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறில்லை” என நபி صلى الله عليه و اله و سلم அவர்கள் கூறினார்கள்


  • 01st Oct 2013 நபியவர்களின் ஹஜ்ஜின் போது அவர்கள் செய்த உபதேசங்களில் இருந்து சில உபதேசங்கள்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

  • சிறப்பான துல் ஹஜ் 10 நாட்களும் சிறப்பின் பெயரால் அதனை  நாசப்படுத்தும் முஸ்லிம்களும் 1 2 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு எதுவும் இல்லை.  
அந்த வரிசையில் “அய்யாமு அஷ்ரு தில்ஹிஜ்ஜா”   “துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்” மிகவும் முக்கியமான நாட்களாகும்.  அல்லாஹ் குர்ஆனில் ” வல்ஃபஜ்ரி வலயாலின் அஷ்ர் ” என்னும் 89:2 வசனத்தில் “பத்து இரவுகளின் மீது ஆணையாக!” என ஆணையிட்டுக்கூறுவதும், “வயத்குரு ஸ்மல்லாஹி ஃபீ அய்யாமின் மஃலூமாத்தின்” ஹஜ்ஜின் குறிப்பிட்ட நாட்களில் இறைவனை நினவு கூறுவது (22:28) என்ற வசனமும் துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களையே குறிக்கின்றன என குர்ஆனின் விரிவுரையாளர்களில் இப்னு உமர்,இப்னு அப்பாஸ் போன்ற நபித்தோழர்களும், இமாம் இப்னு கதீர் போன்ற இமாம்களும் குறிப்பிடுகின்றனர்.


(துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களை விட மிகச் சிறந்தது எது ? என நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதும் தோழர்கள், '(அதைவிட) அறப்போர் மிகச் சிறந்ததல்லவா ? எனக் கேட்டனர். அதற்கு நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் 'அறப்போர் கூட மிகச்சிறந்ததல்ல. ஆயினும் போர்க்களம் சென்று தனது உயிரையும் உடமைகளையும் அர்ப்பணித்துவிட்ட (திரும்பியவராக)வரின் அறப்போரை விடச் சிறந்ததல்ல' எனக் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் (புகாரி).


(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு எதுவும் இல்லை எனவே அந்த நாட்களில் தஹ்லீல், தக்பீர், தஹ்மீது அதாவது { லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹுஅக்பர், அல்ஹம்து லில்லாஹ்} அதிகமாகக் கூறுங்கள் என நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதாக அப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (தப்ரானி)


துல்ஹஜ் மாதத்தின் முதல்  பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு எதுவும் இல்லை. 


எனவே அந்த நாட்களில் நோன்பு வையுங்கள் என்றும் இதற்கு ஆதாரமாக சில பலஹீனமான ஹதீசுகளையும் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். 


இந்த சிறப்பான காலத்தில் நபி சள்ளல்லாஹு அலைஹி வசல்லம்  அவர்கள் காட்டித்தந்த அமல்களை செய்வதுதான் அல்லாஹ் சுபஹானஹுதாலா  விடம் கூலியை பெற்றுத்தருமே தவிர பித்அத்கள் அல்ல. 


'(துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்அவர்கள் நோன்பு நோற்று நான் கண்டதில்லை' என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா  அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம்) . 


எனவே நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எதனை தவிர்ந்து கொண்டாரோ அதனை நாமும் தவிர்ந்துக் கொள்வோம். இந்த விடயத்தில் நாமும் 

தவிர்ந்து கொள்வதுதான் நபி வழி ( சுன்னாஹ் ) ஆகும்.


இந்த நாட்களில் வருவது தான் அரஃபா நாள் ! அரஃபா நாள் பாவங்களுக்கு மன்னிப்பும்,நரக விடுதலையும் கிடைக்கும் உயரிய நாளாகும்.

நபி  சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்:-


“அல்லாஹ் தனது அடியார்களை நரகிலிருந்து அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரஃபா நாளாகும்.இதைவிட வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செய்வதில்லை. இந்நாளில் அல்லாஹ்  இறங்கி வந்து எனது அடியார்கள் என்ன விரும்புகிறார்கள்? ( கேட்பதைக் கொடுப்பதற்கு சித்தமாக உள்ளேன்.) என அமரர்களிடம் பெருமையோடு கூறிக்கொள்வான்” என ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா  அறிக்கும் செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. 


அரஃபா நாளின் சிறப்புக்கு இது ஒன்றே போதுமானது.


ஹஜ்ஜின் முக்கிய கிரியைகளில் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும். இந்நாளில் ஹஜ்ஜுக்கு செல்லாத மற்ற உலக முஸ்லிம்களுக்கு  அரஃபா தின நோன்பு , ஹஜ் செய்யாதவர்களுக்கு அந்த நோன்பு மிகவும் வலியுறுத்தப்பட்டதாகும். 


ஏனெனில், 'அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பதன் மூலம் ஒருவருடைய கடந்த ஒருவருட கால (சிறிய) பாவங்களும் அடுத்து வரும் ஒருவருட கால (சிறிய) பாவங்களும் மன்னிக்கப்படும் என நான் கருதுகின்றேன்' என நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள்  கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)


குர்பானி கொடுக்க எண்ணியவர் செய்யக்கூடாதவை: 

       குர்பானி கொடுக்க வேண்டும் என்று எவர் நாடுகிறாறோ அவர் துல்ஹஜ் பிறை ஒன்றிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை பத்து நாட்களுக்கு நகங்கள், முடிகளை களையக்கூடாது.
       உங்களில் யாரேனும் குர்பானி கொடுக்க விரும்பினால் அவர் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து (அறுத்து முடியும்வரை பத்து நாட்களுக்குத்) தன் நகங்களையும் முடிகளையும் களையாதிருக்க வேண்டும் என்று நபி 
சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா ரலியல்லாஹு அன்ஹா , நூல்:முஸ்லிம் .


குர்பானி பங்கிடும் முறை:   

குர்பானி கொடுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள் (உறவினர்கள், ஏழைகளுக்கும்) உண்ண கொடுங்கள் சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்அவர்கள் கூறியுள்ளதால் நாம் அதனை உண்ணுவதும், பிறருக்கு உண்ணக் கொடுப்பதும் சுன்னத்தாகும். 


இவ்வளவுதான் உண்ண வேண்டும் என்று வரம்பு எதுவும் கிடையாது.அவரவர் விரும்பிய அளவு தர்மம் செய்யலாம். இது ஒரு இபாதத் என்றபடியால் இதனில் முஸ்லிம் அல்லாதவர்களை கூட்டு சேர்கவும் முடியாது, அவர்களுக்கு பங்கிடவும் முடியாது.


பெருநாள் தக்பீர்


பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.


கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறலாம். இதனை கூட்டாக செய்வது ஆதாரமற்றதாகும். 


இப்னு உமர்  ரலியல்லாஹு அன்ஹு  அபூஹுரைரா  ரலியல்லாஹு அன்ஹு  ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். ஆதாரம் - புஹாரி.


அல்லாஹுஅக்பர் அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஅல்லாஹுஅக்பர். அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து” அறிவிப்பவர்கள்: உமர் ரலியல்லாஹு அன்ஹு , இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு  

( முசன்னப் இப்னு அபி செயிபா , தமாமுள் மின்னா ஷேய்க் அல்பானி )