[ஸக்காதுல் பித்ர் சட்டங்களும் தீர்ப்புகளும்]

ஸக்காதுல் பித்ர் சட்டங்களும் தீர்ப்புகளும் 

ஸவ்வால் மாத தலைப் பிறை (பெரு நாள் பிறை) கண்டதிலிருந்து பெருநாள் தொழுகைக்கு முன் நிறைவேற்றிவிட வேண்டும்.

“மனிதர்கள் (பெரு நாள்) தொழுகைக்கு வெளியேரி செல்ல முன் அதனை நிறைவேற்றி விடுமாறு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்தார்கள்”. அறிவிப்பவர் இப்னு உமர் (ரலியாழ்ல்லாஹு அன்ஹு ) நூல் புஹாரி.


முற்படுத்திக் கொடுக்க விரும்புவோர் ஷக்குடைய தினத்தில் இருந்து முற்படுத்த முடியும்

 “அப்துல்லாஹ் பின் உமர் (ரலியாழ்ல்லாஹு அன்ஹு) அவர்கள் (பெரு நாளைக்கு) ஒரு நாள் அல்லது இரு நாட்களுக்கு முன்னர் அதைக் கொடுப்பார்கள். புஹாரி.


“எவர் அதனை(ஸக்காதுல் பித்ரை) தொழுகைக்கு முன் நிறைவேற்றினாரோ அது ஒப்புக்கொள்ளப்பட்ட (சகாதுல் பித்ர் ) ஸகாதாகும் , எவர் தொழுகைக்குப் பின் அதனை நிறைவேற்றினாரோ அது தர்மங்களில் ஒரு  தர்ம்மாகிவிடும்”. என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம்) கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு ) நூல் அபூதாவூத் , இப்னு மாஜா , தாருகுத்னி , ஹாகிம் .. இதன் அறிவிப்பாளர் தொடர் ஹசன் தரத்தில்

அமைந்ததாகும் என இமாம் நாசிருத்தீன் அல்பானி ரஹீமஹுல்லாஹ் தீர்ப்பளித்துள்ளார்கள். பார்க்க இர்வாகுள் கலீல்.


யார் மீது கடமை: -

“ஸக்காத்துல் பித்ரை முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரமான ஆண்கள் பெண்கள், சிறியோர், பெரியோர் அனைவர் மீதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் கட்டாயக் கடமையாக்கினார்கள்”. அறிவிப்பவர் இப்னு உமர் (ரலியழ்லாஹு அன்ஹு ) நூல் புஹாரி.


வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு கடமை இல்லை.

பொருளும் அளவும்:-

நமது நாட்டில் பிரதான உணவாக உட்கொள்ளப்படுவதிலிருந்து இருந்து ஒருவருக்கு சுமார் 2 1/2 kg கொடுக்க வேண்டும்.


 “ஸக்காத்துல் பித்ராக ஒரு ஸாவ் ஈத்தம் பழத்தை அல்லது ஒரு ஸாவ் தீட்டாத கோதுமையை முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரமான ஆண்கள் பெண்கள், சிறியோர், பெரியோர் அனைவர் மீதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம் ) அவர்கள் கட்டாயக் கடமையாக்கினார்கள்”. அறிவிப்பவர் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு ) நூல் புஹாரி .


இது தவிர்ந்து பணமாக இதனை கொடுக்க முடியாது. சேகரிப்பவர்கள் பணத்தை பெற்றால் , அரிசியை / தானியத்தை வாங்கி விநியோகிக்க வேண்டும்.