[நோன்புப் பெருநாள் சட்டங்களும் ஸலபி விளக்கங்களும்]

நோன்புப் பெருநாள் சட்டங்களும் ஸலபி விளக்கங்களும்


அல்லாஹ் சுபஹானஹுதாலா மிக உன்னதமான நோக்கத்தின்அடிப்படையில் இரு பெருநாட்களையும்   வழங்கியிருக்கின்றான். ஒன்று ஈதுல் பித்ர் மற்றொன்று ஈதுல் அள்ஹா. இஸ்லாத்தை பொறுத்தமட்டில் நன்மைகள் செய்யக் கூடிய  நல்வாய்ப்பாகவே பெருநாட்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. 

முஸ்லிம்களுக்கு மகிழ்சிக் குறிய தினங்களாக இஸ்லாம் இரண்டு தினங்களை ஏற்படுத்தியுள்ளது. 


“புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா… என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கரே! அந்த சிருமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாட்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள். இது பெருநாள் தினத்தில் நடந்தது.”  (அறிவிப்பவர் : ஆய்ஷா ரலியல்லாஹு அன்ஹா புகாரி)”

“தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்  ரலியல்லாஹு அன்ஹு அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குறிய தினமாகும் என்றார்கள்.

(அறிவிப்பவர் : ஆய்ஷா ரலியல்லாஹு அன்ஹா  புகாரி)

பெருநாள் தினத்தில் அபிஸீனிய நாட்டவர்கள் பள்ளியில் அம்பெறியும் வீர விளையாட்டுகளை விளையாடினார்கள். ஆய்ஷாவே! உனக்கு பார்க்க விருப்பம் இருக்கிறதா என்று கேட்டு என்னைப் பார்க்க சொன்னார்கள். அவர்களுக்கு பின்னே நான் மறைந்து நின்று விளையாட்டைப் பார்த்தேன்.

(அறிவிப்பவர் : ஆய்ஷா ரலியல்லாஹு அன்ஹா புகாரி)” 


பெருநாளைக்காக  அலங்கரித்தல் 

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு  அறிவித்தார். 
பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்  ரலியல்லாஹு அன்ஹு  பார்த்தார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே' என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உமர் ரலியல்லாஹு அன்ஹு  கேட்டார்கள். "மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது" என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்கள். 

பின்னர் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சில பட்டாடைகள் வந்தன. அதில் ஓர் ஆடையை உமர் ரலியல்லாஹு அன்ஹு க்குக் கொடுத்தனர். அதற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு  'பட்டாடை பற்றி வேறு விதமாக நீங்கள் கூறிவிட்டு அதை எனக்குக் கொடுக்கின்றீர்களே' என்று கேட்டார்கள். அதற்கு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'நீர் அணிவதற்காக இதை உமக்கு நான் தரவில்லை' என்று கூறினார்கள். அந்த ஆடையை மக்காவில் இருந்த முஷ்ரிக்கான தம் சகோதரருக்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு  வழங்கினார்கள்.

இமாம் சிந்தி ரஹீமஹுல்லாஹ் கூறினார்கள், மேற்கூறிய ஹதீதில் இருந்து பெரு நாளைக்காக அலங்கரித்துக் கொள்வது சஹாபாக்கள் மத்தியில் மரபாக   இருந்து வந்துள்ளது. இதனை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மறுக்கவில்லை. இன்னும் இந்த மரபு பின்னரும் இருந்தே வந்துள்ளது. ( நசாயி விரிவுரைக்கு )

 

இமாம் இப்னு ஹஜர் ரஹீமஹுல்லாஹ் இப்னு அபி துன்யா மற்றும் பைஹகி வாயிலாக அறிவிக்கிறார்கள் , இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இரு பெருநாளைக்கும் சிறப்பான ஆடைகளை அணிபவர்களாக இருந்தார்கள். 

(பதஹுல் பாரி )

பெருநாள் தினங்களில் குளிப்பு

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு பெருநாள் தினங்களில் தொழுகைக்குப் போகும் முன்பு குளித்து விடுவார்கள் என்ற செய்தி முஅத்தாவில் வருகிறது.


பெருநாளில் தொழுமிடம் - முஸல்லா

நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் இரண்டு பெருநாட்களையும் திறந்த வெளியிலேயே நிறைவேற்றியிருக்கிறார்கள் (புகாரி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பெருநாள் தொழுகைக்காக) ''முஸல்லா'' என்னும் திடலுக்குப் புறப்படுவார்கள்.அறிவிப்பவர்இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹுஆதாரம்புகாரி


கஃபத்துல்லா மற்றும் மஸ்ஜித் நபவி ஆகிய பள்ளிகளில் தொழுவது நிறைய நன்மைகளைப் பெற்றுத் தரும் தொழுகையாக அமையும் என்றாலும் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் பெருநாள் தொழுகைகளை அங்கு தொழ வைக்கவில்லை என்பதையும் அதற்காக தனி மைதானத்திற்கு சென்றுள்ளார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

நிறைய ஊர்களில் இந்த நபிவழி புறக்கணிக்கப்பட்டு பள்ளிவாயில்களிலேயே தொழுகை நடத்தப்படுவதை பார்க்கிறோம். இது நபி வழி முறைக்கு மாற்றமான செயல் என்பதை அவர்கள் உணரவேண்டும்.

கன்னிப் பெண்களையும்மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும்.

“வீட்டில் தனித்து இருக்கும் நாங்கள், மாதவிடாய் பெண்கள் முதற்கொண்டு இரு பெருநாள் தொழுகைக்கு வெளியே வர ஆணையிடப்பட்டோம். தொழுகையில் கலந்து கொள்ளவும்பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஒதுங்கி இருக்க பணிக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்காவது உடை இல்லையெனில் என்ன செய்வது என வினவினார். அதற்கு நபி அவர்கள் உங்களது தோழிகளிடமிருந்து ஓர் உடையை கடனாக வாங்கி உடுத்தி வாருங்கள் என பதில் கூறினர்.” 
(அறிவிப்பவர் உம்மு அதிய்யா ரலியல்லாஹு அன்ஹு நூல்கள்: புகாரிமுஸ்லிம் )


பெருநாளில் (தொழும் திடலுக்கு நாங்கள் புறப்படவேண்டும் எனவும்கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும்மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்பெண்கள் ஆண்களுக்குப்பின்னால் இருப்பார்கள்ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள்ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆ செய்வார்கள்அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்துவத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்அறிவிப்பவர்உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா ஆதாரம்புகாரி. 


மாதவிடாய் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கட்டளையிட்டதிலிருந்து பெருநாள் தொழுகை என்பது வாஜிபானது என்பது தெளிவாகிறது.

ஈத் தொழுகையின் நேரம்

சூரியன் உதயமாகி தொழுகை தடுக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகு முதல் சூரியன் உச்சிக்கு வருமுன் ஈத் தொழுகையின் நேரம்.


சூரியன் உதயமாகி தொழுகை தடுக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகு பெருநாள் தொழுகை தொழுவது நபிவழியாகும் (புகாரி )

ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்!

பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும்போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.

நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்  அவர்கள் ஒரு பாதையில் வருவார்கள். இன்னொரு பாதையில் திரும்புவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியள்ளஹு அன்ஹு  நூல்: இப்னுமாஜா) 

பெருநாள் வந்துவிட்டால் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்  அவர்கள் (போவ தற்கும் வருவதற்கும்)பாதையை மாற்றிக் கொள் வார்கள்.” (அறிவிப்பவர்: ஜாபிர் ரலியள்ளஹு அன்ஹு  நூல்: புகாரி)

“தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள் என இப்னு உமர் ரலியள்ளஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.” அபூதாவூத்


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈத் தொழுகைக்கு நடந்தே சென்று நடந்தே திரும்பி வருவார்கள். அறிவிப்பவர்அப்துர் ரஹ்மான் பின் ஸஃது ரளியல்லாஹு அன்ஹு ஆதாரம்இப்புனுமாஜா


தக்பீர் கூறுதல்!


الله أكبر الله أكبرلااله الا الله والله أكبر الله أكبر ولله الحمد


அல்லாஹுஅக்பர் அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஅல்லாஹுஅக்பர். அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து” அறிவிப்பவர்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு , இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு 


( முசன்னப் இப்னு அபி செயிபா , தமாமுள் மின்னா ஷேய்க் அல்பானி )


பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும்புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். 


பெண்கள்ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்தநாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.”

(அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா(ரலி) நூல்கள் புகாரீமுஸ்லிம்)


இதனை கூட்டாக செய்வது ஆதாரமற்றதாகும்


எப்படித் தொழ வேண்டும்?

பெருநாள் தொழுகைக்கு பாங்குஇகாமத் மற்றும் முன்பின் சுன்னத் தொழுகைகள் இல்லை. 


“நான் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடன் ஒருமுறை அல்ல இருமுறை அல்ல பலமுறை பெருநாள் தொழுகை தொழுதிருக்கிறேன். அதில் அவர்கள் பாங்குஇகாமத் கூறியதில்லை. (அறிவிப்பவர்: சமுரா ரலியல்லாஹு அன்ஹு நூல்: திர்மிதி)

நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்கு) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையும் தொழவில்லை.”

(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி)

பெருநாள் தொழுகை ஏனைய தொழுகைகளைப் போன்றே தொழப்பட்டாலும் இந்தத் தொழுகையில் அதிகப்படியாக பன்னிரண்டு தக்பீர்கள் சொல்லப்பட வேண்டும்.

நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் முதல் ரக்அத்தில் தக்பீர்களும், 2 வது ரக்அத்தில் தக்பீர்களும் கூறுவார்கள். இவ்விரண்டு தக்பீர்களையும் கிராஅத்திற்கு முன்புகூறுவார்கள்.” 

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு  நூல்: அபுதாவுத்,பைஹகீதாரகுத்னீ)

ஏனைய  தொழுகையில் உள்ள எல்லா அம்சங்களும் பெருநாள் தொழுகையில் உண்டு. மாறாக 12 தக்பீர்கள் மட்டும் தான் மேலதிகமான செயலாகும். அதே போல் இவ்வாறு இமாம் தக்பீர் கூறும் போது கைகளை உயர்த்தி அவிழ்த்து கட்டும் முறை பரவலாக காணப்படுகிறது. 


ஆனால் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்  அவர்களின் காலத்தில் அவ்வாறு இருந்ததாக ஹதீஸ்களில் காணப் படவில்லை. ஏனெனில் தக்பீர் என்பது வாயால் சொல்வது தான் என்பதை நாம் விளங்கி செயல்பட வேண்டும். ஆதாரமில்லாத செயல்களை செய்து நம் தொழுகைகளை பாழ்படுத்தி விடக்கூடாது. 

அதைப்போல தக்பீர்களுக் கிடையில் எதையும் ஓதவேண்டியதில்லை


நோன்புப்  பெருநாளில் தொழுகைக்கு முன் சாப்பிடுதல்!

நோன்புப் பெருநாள் தொழுகைக்கு உண்ணாமல் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் புறப்படமாட்டார்கள். ஹஜ்ஜப் பெருநாளில் தொழுகைக்கு முன் உண்ணமாட்டார்கள்.

(அறிவிப்பவர்: புரைதா ரலியல்லாஹு அன்ஹு நூல்: திர்மிதி)

நோன்புப் பெருநாள் அன்று நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் காலை உணவாக பேரித்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்பார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுதுவிட்டு வந்த பின்னரே குர்பானி இறைச்சியிலிருந்து உண்பார்கள்.

(அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு  நூல்: புகாரி )


தொழுகைக்குப் பிறகு குத்பா உரை


பெருநாள் தொழுகை முடிந்தவுடன் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் குத்பா உரை நிகழ்த்துவார்கள்.

“நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் (பெருநாள் தொழுகைக்கு) தயாராகி தொழுகையை துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் பகுதிக்கு சென்று பிலால் ரலியல்லாஹு அன்ஹு உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்கு போதனை செய்தார்கள்.”

(அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு நூல்: புஹாரி)

“நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களும் அபூபக்கர் – உமர் ரலியல்லாஹு அன்ஹும் அஜ்மயீன்  போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள்.”

(இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு  புகாரி – முஸ்லிம்)

இந்த தெளிவான நபி வழிக்கு பிறகும் நபி வழிக்கு மாற்றமாக நிறைய ஊர்களில் ஜூம்ஆ போன்று ஆரம்பத்தில் பிரச்சாரம் (குத்பா) செய்து விட்டு பின்னர் தொழுகை நடத்துவதைப் பார்க்கிறோம். 


ஏன் இப்படி நபி வழிக்கு மாற்றமாக செய்கிறீர்கள் என்று கேட்டால் முதலில் தொழுது விட்டால் பிரச்சாரத்தில் உட்காராமல் மக்கள் களைந்து சென்று விடுகிறார்கள் அதனால் தான் முதலில் பிரச்சாரம் செய்கிறோம் என்று நியாயம் 

கற்பிப்பதை காணலாம். 

இன்னும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரை போன்று இரண்டு குத்பாக்கலாக பிரித்து இடையில் அமர்வது ,  மிம்பர் மேடைகள் அமைப்பது ..,

இவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும், நபி வழிக்கு முரணானதாகும். 


ஏதும் முக்கியமான வேலைகள் இருந்தால் 

தொழுகை முடிந்தவுடன் இடத்தை விட்டு வெளியேறி செல்ல நபி வழியில் அனுமதியுண்டு. இதனை தனது குத்பா உரையிலேயே 
நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறி விடுவார்கள் (இப்னுல் கையும் ). 


பெருநாளன்று வாழ்த்து தெரிவிப்பது


நான் அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு போன்ற 

நபித்  தோழர்களுடன் இருந்தபோது பெருநாள் தொழுகை முடிந்து திரும்பியதும் அவர்களில் ஒருவருக்கொருவர்,

تقبل الله منا ومنك

''தகப்பலல்லாஹு மின்னாவமின்கும் "

என்று கூறிக்கொள்வார்கள்.என முஹம்மது இப்னு ஸியாத் ரஹ்மதுல்லாஹி அலைஹிஅறிவிக்கிறார்கள்இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹீமஹுல்லாஹ் 

இந்த ஹதீஸின் இஸ்னாத் தரம் சிறந்தது எனக் கூறுகிறார்கள். இமாம் அல்பானி ரஹீமஹுல்லாஹ்  ஹசன் என்று தீர்ப்பளித்துள்ளார்கள், தமாமுள் மின்னா .

அதிகமான சகோதரர்கள் பெருநாள் தினத்தன்று கப்று ஸ்தானங்களை தரிசிக்கின்றனர். இது உண்மையில் பித்அத் எனும் நூதன கிரியை ஆகும். பெருநாள் தினம் என்பது எமது கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே விதியாக்கப் பட்டிருக்கும் போது எமது கவலைகளை புதுப்பித்துக் கொள்ளும் தினமாக இந்த தினத்தை மாற்றிக் கொள்ளவது இஸ்லாமிய சட்டத்துக்கு முரணான செயலாகும் என்பதனை நாம் கவனத்தில் கொண்டு உரிய முறையில் பெருநாளை கொண்டாடி ஈருலக பயன்களையும் அடைந்துகொள்ள முயற்சிப்போம்.

  • '' தூதர் உங்களுக்குத் தந்ததை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தடுத்ததைத் தவிர்ந்து கொள்ளுங்கள் "