[லைலதுல் கத்ர் அடையாளங்களும் தேடுவதும் அதனை அடையும் வழிமுறைகளும்]

லைலதுல் கத்ர் அடையாளங்களும் தேடுவதும் அதனை அடையும் வழிமுறைகளும் கேள்வி >> சில மக்கள் ரமளானின் மற்றைய இரவுகளை விடவும் ஒரு குறிப்பிட்ட இரவை லைலதுல் கத்ர் என, பல வகையான வணக்க வழிபாடுகளில் மூலம் கழிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். இது சரியான  வழிமுறையை சேர்ந்தது தானா ?  


பதில் >> இல்லை, இது சரியான வழிமுறையை சேர்ந்தது அல்ல, நிச்சயமாக லைலதுல் கத்ர் இரவானது  ஹதீதுகளில் சுட்டிக்காட்டியது போல் அது 27 ம் இரவாகவும் இருக்கலாம், ஏனைய இரவுகளில் ஒன்றாகவும் இருக்கலாம். நோன்பு 27 இரவு லைலதுல் கதர் இரவாக இருக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றது. 27 ஆவது தினத்தை சிறப்பித்து ஹதீசுகள் வந்திருக்கிறது.


நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் " அந்த குறிப்பிட்ட வருடத்தில் லைலதுல் கத்ர் 21 ம் இரவில் அருளப்பட்டது ". இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

எனவே, ஒரு குறிப்பிட்ட இரவில் வணக்கங்களுக்காக நிற்பதும் அல்லது அவர்கள் ஒரு இரவை கருதி மற்ற இரவுகளில் இருந்து வித்தியாசப் படுத்தி வணக்கங்களுக்காக நிற்பதும் மனிதர்களுக்கு உகந்ததல்ல. 

 

மாறாக , கடைசிப் பத்து இரவுகளிலும் கடுமையாக முயற்சி செய்வது நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலாக இருக்கிறது.

 

கடைசி பத்து நாட்கள் வந்தடைந்து விட்டது என்றால் அவர் தனது இடுப்புப் பட்டியை இறுக்கமாக கட்டிக் கொள்வார், தனது குடும்பங்களை எழுப்பி விடுவார், அவற்றை வணக்க வழிபாடுகள் மூலம் கழித்து உயிர்ப்பிப்பதை வழமையாக்கி இருந்தார். 

 

எனவே, கடைசி பத்து நாட்களிலும் கடுமையாக முயற்சி செய்வது  விவேகம் உள்ள மூமினுக்கு உகந்ததாகும். ஏனெனில் அந்த வெகுமதிகள் அவனை விட்டும்  தவறி விடாமல் இருப்பதற்காக ஆகும். 

 

தற்போது இந்த புனிதமிக்க 27 இல் ஏராளாமான பித்ஹத்கள்  நடாத்தப்படுகிறது. இதை எதிர்த்து பிரச்சாரம் செய்வது கடமையாக உள்ளது.


ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு,


اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي


 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி' என்று சொல் என்று கூறினார்கள். 

(நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா திர்மிதி)