சிறப்பான 10 நாட்களும் , தொடர்ச்சியாக நோன்புகள் வைக்காமல் இருப்பதும்

சிறப்பான 10 நாட்களும் , தொடர்ச்சியாக நோன்புகள் வைக்காமல் இருப்பதும்

(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு எதுவும் இல்லை.


எனவே அந்த நாட்களில் தஹ்லீல், தக்பீர், தஹ்மீது அதாவது { லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹுஅக்பர், அல்ஹம்து லில்லாஹ்} அதிகமாகக் கூறுங்கள் என நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதாக அப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (தப்ரானி)

எனவே அந்த நாட்களில் நோன்பு வையுங்கள் என்றும் இதற்கு ஆதாரமாக சில பலஹீனமான ஹதீசுகளையும் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். 

இந்த சிறப்பான காலத்தில் நபி சள்ளல்லாஹு அலைஹி வசல்லம்  அவர்கள் காட்டித்தந்த அமல்களை செய்வதுதான் அல்லாஹ் சுபஹானஹுதாலா  விடம் கூலியை பெற்றுத்தருமே தவிர பித்அத்கள் அல்ல. 


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَائِمًا فِي الْعَشْرِ قَطُّ رواه مسلم


'(துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்அவர்கள் நோன்பு நோற்று நான் கண்டதில்லை' என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா  அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம்) . 

எனவே நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எதனை தவிர்ந்து கொண்டாரோ அதனை நாமும் தவிர்ந்துக் கொள்வோம். இந்த விடயத்தில் நாமும் தவிர்ந்து கொள்வதுதான் நபி வழி ( சுன்னாஹ் ) ஆகும்.


أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ قَالَ حَدَّثَنِي أَبُو النَّضْرِ قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْأَشْجَعِيُّ كُوفِيٌّ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلَائِيِّ عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ الْخُزَاعِيِّ عَنْ حَفْصَةَ قَالَتْ أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِيَامَ عَاشُورَاءَ وَالْعَشْرَ وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ رواه النسائي

ஆஷூராவுடைய நோன்பு (துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது ஃபஜர் தொழுகைக்கு முன்னால் உள்ள இரண்டு ரக்அத்கள் இந்த நான்கு நல்லறங்களையும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் விட்டதே இல்லை.
அறிவிப்பவர் : ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா ,  நஸாயீ , இப்னு ஹிப்பான், முஸ்னது அஹ்மது, தப்ரானீ.


இந்தச் செய்தி பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூ இஸ்ஹாக் அல்அஷ்ஜயீ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் சைலவி , அவர்களது நஸ்பூர் ராயா என்ற கிதாபில் சொல்கிறார்கள். மேலும் இது பலவீனமான செய்தியாகும் என்று இமாம் நாசிருத்தீன் அல்பானி ரஹீமஹுல்லாஹ்  இர்வாகுள் கலீல் என்ற அவர்களுடைய கிதாபில் தீர்பளித்துள்ளார்கள். 


 மேலும், இந்த பத்து நாட்களில் செய்யக்கூடிய அமல்களாக தொடர்ச்சியாக நோன்பு வைப்பது, அதனுடைய இரவை  வணக்கங்களால் கழிப்பது , அதிகமாக திக்ரு கள் செய்வது என்று சுட்டிக் காட்டி ஆர்வமூட்டுவது கூடாது , ஏனெனில்  அந்த அறிவிப்புக்கள் பலஹீனமானதாகும் என்று இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் லதாயிப் என்ற கிதாபில் குறிப்பிடுகிறார்கள். 


இன்னும், பத்து நாட்கள் நோன்பு வைப்பது என்ற வாசகமே  தவறாகும். ஏனெனில், பத்தாவது நாள் பெருநாள் ஆகும். பெருநாள் நோன்பு வைப்பது தடை செய்யப்பட்ட நாள், 


மேலும், சுன்னத்தான  நோன்புகள் கடுமையாக தடைசெய்யப்பட்ட நாள் சனிக்கிழமை.  இதுவும், இந்த பத்து நாட்களில் அமைந்து விடும். எனவே, அந்த  சனிக்கிழமை நாளும் நோன்பு வைக்க முடியாது. 


ஆகவே, துல்ஹஜ்  பத்து நாட்கள் நோன்பு என்ற விடயத்தில் இந்த இரண்டு நாட்கள்  நோன்பு வைக்க முடியாது என்பதே ஒரு வெளிப்படையான  தவறாகும்.  

 பத்வா ஸயிலானி : இருந்தும், பலஹீனமான ஹதீஸ் செய்திகளின் அடிப்படையில்  பத்து நாட்கள் நோன்பு என்று பல பத்வாக்கள் இருகின்றன, எனவே,  ஆதாரத்தின் அடிப்படையில் செயல்படுவதில் கவனமாக இருந்துக் கொள்ளுங்கள்