இலங்கையில் ஸலபி தஃவாவும் அதற்கு பொறுப்பானவர்களும்

இன்று பிரச்சாரப் பணியில களமிறங்கியிருக்கும் கூட்டங்களின் முறையற்ற  அனுகுமுறையாலும்  அழைப்புப் பணியின்  பெயரில் செய்யப்படுகின்ற அநியாயங்களாலும் உண்மையான குர்ஆனின் வெளிச்சம் வெளிவரவில்லை.  அதேபோன்று உண்மையான ஸுன்னா நடவடிக்கைக்குக் கொண்டுவரப்படவுமில்லை.  மாறாக  குர்ஆன், ஸுன்னாவின் பெயரில் சொந்தக் கருத்துக்களும்  வழிகேடான  கொள்கைகளும் ஷிர்க்களும், குப்ர்களும், பித்அத்களும் பரவலாகப் பரந்திருப்பதை நாம்  காண்கிறோம்.  எனவே, இந்தக் களங்கங்களைத் துடைக்க வேண்டுமென்ற  நோக்கத்துடனும் இன்னும் யாரெல்லாம் சத்தியமான மார்க்கத்தை விளங்கி அதற்குக் கைகொடுக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்களோ அவர்களுக்கு  வழிகாட்டுவதற்கென்றும் அழைப்புப் பணியில் நபிமார்களின்  வழிமுறைகளை முன்வைக்க நாம் ஆசைப்படுகிறோம்.  இதனை மக்கள் புரிந்து கொள்வதன் மூலம் அதனடிப்படையில் செயற்படும் மக்களாக மாறி, அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் இந்த நபிமார்களின் அழைப்புப் பணிக்காக தோழர்களாக மாறுவதற்கு  முயற்சி செய்ய வேண்டுமென்றும் நாம் ஆசைப்படுகிறோம்


எமது சமூகத்தைப் பொருத்தவரை உலமாக்களால் சிபாரிசு செய்யப்பட்ட அவ்வுலமாக்களால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவரிடம்தான் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற எந்தவித அவசியமுமில்லை. மேலும் எமது சமூகத்தில் அறபி 

மொழியைக் கற்றவர்தான் இஸ்லாமிய கல்வியைப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்கின்ற அவசியமுமில்லை. எமது சமூகத்தில் ஒருவர் தனக்கென்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு பெயரையும் வளர்த்துக் கொண்டாரென்றால் அவர் மக்களிடத்தில் ஒரு ஆலிமாகி விடுவார். இதுதான் எமது சமூகத்திலுள்ள மக்கள் தெரிந்து வைத்திருக்கும் ஆலிம் என்பதற்கான வரைவிலக்கணம்.


அழைப்புப் பணியில் தெளிவுடன் இருப்பதன் அவசியத்தை அறிந்ததனால்தான் யாரும் ஒருவன் எந்தளவுக்குப் படித்தவனாக இருந்தாலும் அவனுக்கு அழைப்புப் பணிவிடயத்தில்  உலமாக்கல் அனுமதி கொடுக்கும் வரை அவனை அழைப்புப் பணிக்குத் தகுதியுடையவனாக அயிம்மத்துஸ் ஸுன்னா (ஸுன்னாவுடைய இமாம்கள், உலமாக்கள் ) ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  ஏனென்றால்  அழைப்புப் பணியைச் சுமந்தவன் தெளிவைப் பெற்றவனாக இருக்க வேண்டும்.  அது எத்தகைய தெளிவு என்றால் எத்திவைப்பதற்கு முன் கற்றுக்கொண்டதை சரிவர அறிந்தவர்களாகவும், பூரணமாக விளங்கியவர்களாகவும் இருக்க வேண்டும். இலங்கையில் ஸலபி வாவும் அதற்கு பொறுப்பானவர்களும் கேட்க
இலங்கையும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஆவும் கேட்க
இல்மை சுமந்த மனிதரும் இலங்கை மக்களும் கேட்க

இல்மை சுமந்த மனிதர்களுடன் உறவாடுவதின் பாக்கியமும் அதனை அறுத்துவிடுவதில் ஷெய்தான்களின்  பங்கும் கேட்க

ஒற்றுமையும் இலங்கையில் அதனை நிலைநாட்டும்  வழிமுறைகளும் கேட்க
பிரிவுகளை தவிர்ந்திருப்பதும் அல் ஜமாத்தோடு இணைந்திருப்பதும் வாசிக்க
அழைப்புப் பணியின் அவசியமும் அதன் எல்லைகளும் வாசிக்க

ஸலபி தஃவாவும் தெற்காசிய நாடுகளுக்கான அதன் பரவுதலும் 1 2 3  

கொள்கையின் உண்மைகளும் மனிதனின் தன்மைகளும் வாசிக்க

வழிகேடுகளுக்கு  எதிரான  போராட்டங்களும்  பலகத்துறை  மக்களுக்கு  ஒரு  உபதேசமும் கேட்க