அழைப்புப் பணியின் அவசியமும் அதன் எல்லைகளும்

அல்லாஹுத்தஆலா அவனுடைய மார்க்கத்தை ஏழு வானத்தின் மேலிருந்து இறக்கி அவனுடைய தூதராக நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியாக இந்த மார்க்கம் எந்த வழிமுறையில் விளக்கப்பட வேண்டும், அது எவ்வாறு அமுல்படுத்தப்பட வேண்டும், இன்னும் அம்மார்க்கம் எவ்வாறு எத்திவைக்கப்பட வேண்டும் என்பவற்றை குர்ஆன், சுன்னா ஆகிய இரு அடிப்படைகள் மூலம் எமக்குக் காட்டித் தந்திருக்கிறான்.


இந்த இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் அல்லாஹ்வின் வேதமும் நபிவழியெனும் சுன்னாவும் விளங்கப்பட வேண்டுமென்ற நோக்கத்திற்காக பல காலங்களுக்கு முன்பே நாம் சில செயற்திட்டங்களை திட்டமிட்டிருந்தோம்.  அதாவது ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தை ஆசையோடு படிக்க வேண்டும் என்றும் அதனை விளங்க வேண்டும் என்றும் சில தலைப்புக்களைத் தயார் செய்தோம்.  இதனால், சமூகத்தில் மார்க்கத்தின் பால் ஆர்வமுள்ளவர்களாவது தங்களைச் சீர்திருத்திக்கொண்டு தங்களுடைய மார்க்கத்தை நேர்வழியில் எடுத்துச் செல்லும் மக்களாக மாறக்கூடும் என்பது எமது நோக்கம்.  இதன் முதல் கட்ட செயற்பாடாக எமது தாருஸ் ஸலப் இஸ்லாமிய கல்வி ஆராயச்சி நிலையத்தில் குர்ஆன் சுன்னாவை விளங்கும் சரியான வழிமுறைகளைப் பற்றி பல தலைப்புக்களின் கீழ் ரமழானின் ஒவ்வொரு வாரங்களிலும் இந்த சமூகத்திற்கும் எத்திவைத்தோம்.  அதற்கு அடுத்த வருடத்தில் அதாவது 2007  ரமழானில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையான சுன்னா எங்கள் உம்மத்திற்கு ஒளியாகவும் நெருக்கமானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக “நபி மொழியின் உண்மைகளும் மடமையின் தன்மைகளும்” என்ற தலைப்பின் கீழ் வாராவாரம் வகுப்புக்கள் நடத்தினோம்.  இவ்வாறு தலைப்பிடக் காரணம் என்னவெனில் இன்று முஸ்லிம் சமூகம் நபிவழியின் நேரிய வழிமுறையை அறியாமல் மடமைத்தனமான வழிமுறைகளினால் நபிவழிக்கு கலங்கம் கற்பித்துவருதனை எடுத்துக்காட்டும் நலலெண்ணத்தின் அடிப்படையிலேயே அப்பணி அமைந்திருந்தது.   யாரெல்லாம் நபிவழிக்கு தடைக்கல்லாக இருக்கிறார்களோ அவர்களுக்தெதிரான மறுப்பை முன்வைத்து, அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த தர்க்கவாதியான பி.ஜைனுல் ஆபிதின் அவர்களைப் பற்றியும் தர்க்கத்தின் மூலம் நபிமொழிகளை மறுக்கும் நிலையையும் மக்களுக்கு அடையாளம் காட்டினோம்.  இஸ்லாமிய உம்மத்துக்கு குர்ஆன் சுன்னாவை விளங்கும் வழிமுறையையும் அந்த சுன்னாவின் முக்கயத்துவத்தையும் காட்டியபின், இந்த வருடமான 2008 இன் ரமழானில் அழைப்புப் பணியின் உண்மையான தன்மைகள் என்னவென்பதை எமது சமூகத்திற்கு தெளிவுபடுத்த முடிவெடுத்திருக்கிறோம்.  


இன்று பிரச்சாரப் பணியில கலமிறங்கியிருக்கும் கூட்டங்களின் முறையற்ற அனுகுமுறையாலும் அழைப்புப் பணியின் பெயரில் செய்யப்படுகின்ற அநியாயங்களாலும் உண்மையான குர்ஆனின் வெளிச்சம் வெளிவரவில்லை.  அதேபோன்று உண்மையான சுன்னா நடவடிக்கைக்குக் கொண்டுவரப்படவுமில்லை.  மாறாக குர்ஆன், சுன்னாவின் பெயரில் சொந்தக் கருத்துக்களும் வழிகேடான கொள்கைகளும் ஷிர்க்களும், குப்ர்களும், பித்அத்களும் பரவலாகப் பரந்திருப்பதை நாம் காண்கிறோம்.  எனவே, இந்தக் களங்கங்களைத் துடைக்க வேண்டுமென்ற நோக்கத்துடனும் இன்னும் யாரெல்லாம் சத்தியமான மார்க்கத்தை விளங்கி அதற்குக் கைகொடுக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்களோ அவர்களுக்கு வழிகாட்டுவதற்கென்றும் அழைப்புப் பணியில் நபிமார்களின் வழிமுறைகளை முன்வைக்க நாம் ஆசைப்படுகிறோம்.  இதனை மக்கள் புரிந்து கொள்வதன் மூலம் அதனடிப்படையில் செயற்படும் மக்களாக மாறி, அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் இந்த நபிமாரகளின் அழைப்புப் பணிக்காக தோழர்களாக மாறுவதற்கு முயற்சி செய்ய வேண்டுமென்றும் நாம் ஆசைப்படுகிறோம் அதற்கென இன்றைய கருப்பொருள் “அழைப்புப் பணியின் அவசியமும் அதன் எல்லைகளும்”


அழைப்புப் பணியென்பதன் அவசியம் எதை நோக்கியதாக இருக்கின்றதென்பதை நாம் அனைவரும் புரிந்திருக்க வேண்டும்.  ஏனென்றால் இன்று அதே அழைப்புப் பணியின் பெயரில் எத்தனையோ இலககங்கள், கூட்டங்கள், கொள்கைகள் என்று பலர் பல விதமாக அழைப்புப் பணியைச் சுமந்தவர்களான இருக்கிறார்கள். அழைப்புப் பணியென்பது இஸ்லாத்தை ஏற்றவர்களிடம் மட்டும் காணப்படக் கூடிய ஒனறல்ல.  அந்நிய மார்க்கங்களில் கூட அழைப்புப் பணியென்பது இருக்கறது.  அவர்கள் அவர்களுடைய விளக்கத்தை சமூகத்திற்கு எத்திவைப்பதற்கும் அவர்களின் இலட்சியத்தை அடைந்து கொள்வதற்கும் அவர்களுக்கென்ரொறு அழைப்புப் பணி இருக்கிறது.  ஆனால் எமது அழைப்புப் பணியானது எதற்காக நாம் படைக்கப்பட்டிருக்கிறமோ அதற்கான அழைப்புப் பணியாகும்.  நாங்கள் எதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பதைப் பற்றி அல்லாஹ் ஸுபஹானஹுவதஆலா தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

“நான் மனிதவர்க்கத்தினரையும் ஜின் வர்க்கத்தினரையும் என்னை வணங்குவதற்கேயன்றி படைக்கவில்லை” 


எனவே இந்த நோக்கத்திற்காக வாழும் மக்களாக நாங்கள் இருப்போமாயின் எங்கள் அழைப்புப் பணியும் அதை நோக்கியே  இருக்கும்.  அதாவது அல்லாஹ்வை மட்டுமே தனித்துவப்படுத்தி வணங்க வேண்டும் என்பதே எமது அழைப்புப் பணியின் அடிப்படை நாதமாக இருக்கும்.  மாறாக அழைப்புப் பணி அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பதாக இல்லாமல் கிலாபத்துக்காகவும், ஊர்களுக்காகவும், மக்களை சீர்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அல்லது ஏனைய இதர விடயங்களுக்காக இருக்குமாயின் இவ்வாறு அழைப்பவன் அல்லாஹ் அவனை எதற்காகப் படைத்தான் என்பதை அவன் அறியாதவனாக இருக்கின்றான்.  அனைவரும் புரிந்துகொள்ளுங்கள் எனவேதான் எத்திவைப்பதில் அதன் நோக்கத்தை அவன் மறந்து விடுகின்றான்.   எத்திவைப்பதானது அல்லாஹ்வை மட்டும் தனித்து வணங்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டுமென்பதை அவன் தெரிந்தவனாக இருந்தால் அதனை அவன் அவனது அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்துபவனாகத் திகழ்வான்.  அது அவனது தனிப்பட்ட வாழ்க்கையாக, குடும்ப வாழ்க்கையாக, அல்லது வேறு எந்தவொரு அம்சமாக இருந்தாலும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி வணக்கவழிபாடுகளில் அவன உறுதியாக இருப்பது மட்டுமன்றி அதற்கென முயற்சி செய்வதற்கும் பின்வாங்கமாட்டான். ஏனென்றால், அதற்காகவே அவன் படைக்கப்பட்டவனாக இருக்கிறான் என்ற உண்மையை உணர்ந்து விட்டான்.  ஒருவன் தான் ஏன் படைக்கப்பட்டிருக்கிறான் என்ற வினாவிற்கு விடை அறியாதவனாக, தெரியாதவனாக அவன் தனது வாழ்வினை கழிக்கின்றபோது அவன் அவனது வாழ்வினை நபிவழியைப் பின்பற்றுவேரில் நினறுமுள்ளவாராக இருக்க மாட்டார்.  இஸ்லாத்தில் எவைகளை அவனது மனம் விருப்புகிறதோ, அவனுக்கு இலகுவானதாக இருக்கிறதோ அதனைப் பின்பற்றுபவனாகவும் எவையெல்லாம் அவனுக்கு தெரியாமல், பாரமாக, கசப்பாக இருக்கிறதோ அவைகளை தவிர்ந்து கொள்பவனாகவும் அவனை நீங்கள் காண்பீர்கள்.  இந்த நிலை ஏற்பட மிக தலையாய காரணமாகத் திகழ்வது என்வென்றால் அவன் தான் படைக்கப்பட்டதன் உண்மையான நோக்கத்தினை உணராமையேயாகும்.


எவனெருவன் அல்லாஹ்வை மாத்திரமே வணங்கவேண்டும் என்ற அடிப்படையை சரிவர புரிந்துகொண்டால் அவனுக்கு எது கஷ்டமாக இருக்கிறதோ அல்லது இலகுவாக இருக்கிறதோ எந்த விடயமாக இருந்தாலும் பின்பற்றுகின்ற விடயத்தில் அணுவளவேனும் பின்வாங்கவோ, தயக்கம் காட்டவோ மாட்டான்.  நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது அவனது தலையாய கடமையாக இருக்கும்.  இது ஏகத்துவத்துடன் வாழ்பவனின் உண்மையான தன்மையாகும்.  இதன் அடிப்படையில் நான் அழைப்புப் பணியைச் சுமப்பவர்களை நோக்கி மேற்சொன்ன அதே அடிப்படையில் அழைப்பு விடுக்கும் வசனத்தைக் கூறலாம்.  


“நபியே நீங்கள் கூறுங்கள்: இதுவே எனது நேரான வழி.  நான் உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றேன்.  தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றுபவர்களும் இருக்கின்றோம்.  அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.  ஆகவே (அவனுக்கு) இணை வைப்பதில் நானும் ஒருவனல்ல.”

இந்த அல்குர்ஆன் வசனத்திற்கான விளக்கவுரையில் இமாம் அபுல் பிதா இஸ்மாயில் இப்னு கஸீர் அவர்கள் குறிப்பிடுகின்றபோது:


நபியே கூறுங்கள் இது எனது நேராக பாதை.  நான் உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றேன்.

என்ற வசனத்தில் -


இங்கு அழைப்புப் பணி எதற்காக செய்யப்படுகின்றதென்றால் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்தி;ற்குத் தகுதி அல்ல.  அவனுக்கு எந்த இணையுமில்லை.


என்ற அடிப்படை நோக்கத்தில்தான். எனவே இதுதான் அல்லாஹ்வின் தூதருடைய பாதையாகும்.  இதையே அல்லாஹ் தனது தூதருக்கு கற்றுக்கொடுத்திருக்கின்றான்.


அல்லாஹ்வின்பால் அழைப்பதென்றால் அதன் மூலம் அனைவரும் அல்லாஹ்வின்பால் திருப்ப வேண்டும் அவனை வணங்குபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.  அதன்பால்தான் நான் உங்களை அழைக்கின்றேன் என்று நபியே நீர் கூறும் என அல்லாஹ் கூறுகின்றான. 


அதுபோன்ற இன்னுமொரு விடயத்தையும் அல்லாஹ் கூறுகின்றான்.


“தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றுபவர்களும் இருக்கின்றோம்.”


எனவே அழைக்கும் விடயத்தில் நானும என்னையும் பின்பற்றுவர்களும் தெளிவோடு அனைத்தையும கையாள்கிறோம் என்று கூறுமாறு அல்லாஹ் எடுத்துக் காட்டுகின்றான்.


இதன் மூலம அல்லாஹ் தன் நபிக்கு அதனை உணர்த்துகிறான் என்றால் நீர் எந்த அழைப்புப் பணியில் இருக்கிறீரோ அதில் நீர் உன் இஷ்டப்படி பேசுபவரல்ல.  உனது அறிவுக்கு தோன்றுவதையெல்லாம் நீர் பேசுபவரல்ல.  மாறாக நீர் மக்களுக்கு கூறிவடும் ஒரு தெளிவோடு நான் அழைப்பவனாக இருக்கிறேன். என்று!  ……. என்ற வார்த்தையில் அல்லாஹ் கூறிக் காட்டும் இன்னுமொரு விடயம் என்னவென்றால் இந்த விடயத்தில் தெளிவோடு இருப்பதும் நீர் மட்டுமல்ல அதாவது யாரெல்லாம் உன்னைப் பின்பற்றுவார்களோ அவர்களும் அதிலே தெளிவோடுதான் இருப்பார்கள்.  என்று அல்லாஹு தஆலா கூறிவிட்டு மேலும் கூறுகின்றான்

“அல்லாஹ் மிகத் தூய்மையானவன்! ஆகவே அவனுக்கு இணைவைப்பவர்களில் நானும் ஒருவனல்ல”


அவ்வாறென்றால் இந்த அழைப்புப் பணியிலே அல்லாஹ் ஏற்படுத்தித் தராத சட்டத்தை நான் சட்டமென்று எடுக்கமாட்டேன்.  அவன் சொல்லாததை நான் சுமந்துகொண்டு செல்லமாட்டேன் ஏனென்றால் இதுதான் தெளிவோடு நானும என்னைப் பின்பற்றுவோரும் நடந்து கொள்றும் வழிமுறையாகும்.  அல்லாஹ் தூய்மையானவன் அதில் நான் ஒரு போதும் அவனோடு இணைவைப்பவனாக இருக்க மாட்டேன் என்று கூறுமாறு நபியிடம் அல்லாஹ் கூறுகின்றான். 


நான் அல்லாஹ்வின்பால் அவனுக்காக அழைப்புப் பணியை செய்ய வந்து விட்டேனென்றால் அவனோடு இன்னொன்றை நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன் .  ஏனென்றால்


அழைப்பு என்பது அல்லாஹ்வை வணங்குவதற்காக மக்களுக்குக் கொடுக்கப்படும் அழைப்பே தவிர எங்களுடைய மானங்களை பாதுகாத்துக்கொள்வதல்ல.  எங்களுடைய கௌரவத்தையும், அந்தஸ்தையும்,  தக்கவைத்துக் கொள்வதற்கல்ல.  எங்களது பெயர்களையும் பட்டங்களையும் வளர்த்துக்கொள்வதற்கல்ல.  மாறாக அழைப்புப் பணி அல்லாஹ்வின்பால் அழைப்பு விடுப்பதற்காக!  அழைக்கும் விடயத்தில் - 


நானும் என்னைப் பின்பற்றுபவர்களும் தெளிவோடு இருக்கின்றோம்.  என்ற அழைப்புப் பணியின் ஒரு முக்கிய அடிப்படையை மேற்கண்ட குர்ஆன் வசனம் எடுத்துக் காட்டுகின்றது.


அன்பின் இஸ்லாமியச் சகோதரர்களே, சகோதரிகளே,


இதனை எவ்வாறு நாம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றால், இன்று நாம் அழைப்புப் பணியைச் சுமந்து அதனைச் சொல்ல வந்துவிட்டோமெனின் அதில் முதலாவதாக நாம் இந்த அழைப்புப் பணியில் என்ன செய்கிறோம் என்பதைப் புரிந்தவர்களாக இருக்க வேண்டும்.  நான் இந்த அழைப்புப் பணியில் அல்லாஹ்வின் பால் அழைப்பு விடுக்கின்றோம் என்றால் இது எமது கெட்டித்தனம் அல்ல, அது எமது விருப்பத்திற்கு ஏற்றது போன்று செய்வதல்ல.  எனவே இதில் எமது கடமையானது எந்த இரட்சகனை வணங்கும் படி ஏனைய மக்களை அழைப்பதாகும்.  அல்லாஹ்வை எவ்வாறு வணங்கவேண்டும் என்று அவன் கூறியிருக்கிறானோ அவ்வாறுதான் வணங்க வேண்டும்.  மாறாக எமக்கு தேவையான விதத்தில் அவனை வணங்கக் கூடாது.  நாம் அழைப்பவர்களாகவும் அழைப்புபணியைச் சுமந்தவர்களாகவும் இருக்கலாம் என்றாலும் அல்லாஹ்வை அவன் கூறிய விதத்தில்தான் வணங்க வேண்டும்.  எமது விருப்பத்திற்கு ஏற்பவல்ல.  அது அனுமதிக்கப்பட்டதும் அல்ல.


நான் அழைப்புப் பணி செய்பவனாக இருந்து, என்னோடு மக்கள் நெருக்கமாக இருப்பதால் அல்லாஹ் வணங்கப்படுவதில்லை.  என்னோடு மக்கள் தோழமை கொண்டாடினால் அல்லாஹ் வணங்கப்டமாட்டான்.  நான் மக்களை சந்தோஷமாக வைத்திருப்பதால் அல்லாஹ் வணங்கப்படமாட்டான்.  அல்லாஹ் எப்போது வணங்கப்படுவானென்றால் நான் மக்களுடைய உள்ளத்தில் பதியும் படியாக அல்லாஹ்வின் ஏகத்துவத்தையும் அவன் தனித்தவன் என்பதையும் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறி அதனை உறுதியாக எடுத்துரைத்து விட்டடேனென்றால் அப்போது அல்லாஹ் வணங்ப்படுபவனாக இருப்பான்.  அல்லாஹ் ஒருவன் இருக்கிறான். அவனை நாம் வணங்க வேண்டும் அவன் எங்களது இரட்சகன் என்று அந்த இரட்சகனுடைய பெயர்களையும் பண்புகளையும் புரிந்தவர்களாக மாக்களை நாம் மாற்றி விட்டோமென்றால் அன்று நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் பால் திரும்புவார்கள.  மாறாக அவர்கள் இதனை அறியாதவர்களாகவும் தங்களின் இரட்சகனை புரியாதவர்களாகவும் இருந்தார்களென்றால் எவ்வாறு அவர்கள் இஹ்லாஸாக மனத்தூய்மையுடன் நடந்து கொள்வார்கள்? எப்படி அல்லாஹ்வுடைய விடயத்திலே தூய்மையுடன் நடப்பவர்களாக அவர்களை எதிர்பார்க்க முடியும்.


அல்லாஹ்வின் பால் நாம் அழைப்புவிடுப்பவராக இருப்பதென்றால் அல்லாஹ்வுடைய சட்டத்தை மட்டும் தான் நாம் சொல்ல முடியும.  அது எமக்கோ நாட்டுக்கோ, மக்களுக்கோ புரிய முடியாததாக இருந்தாலும் சர்ச்சையை உருவாக்குவதாக இருந்தாலும் எமக்கு கடினமாமதாக இருந்தாலும் அல்லாஹ் கூறியதை அப்படியே எத்திவைக்க வேண்டும் மாற்றமாக எமது கருத்துக்களையோ சிந்தனைகளையோ அழைப்பு என்ற பெயரில் எத்திவைக்க முடியாது.  அல்லாஹ் கூறிய விடயங்களை எங்கே பெற்றுக்கொள் முடியும்?  அவை ஒன்று அவனது அல்குர்ஆன் இரண்டு அவனது தூதரின் மூலமாகக் காட்டித்தந்த நபிவழி - ஸுன்னா ஆகிய இரண்டில் இருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.  ஏனவே அழைப்பாளர் ஒருவர் அல்குர்ஆனினதும், 

அஸ்ஸு ன்னாவினதும் வழிமுறையை விடுத்து வேறொரு முறையில் அழைப்புபணியை மேற்கொள் முடியாது.  நாம் அழைப்புப் பணியைச் சுமந்தவர்கள் என்றால் நாம் சொல்வது அல்லாஹ்வின் களாமிலும் அவனது தூதரின் ஸுன்னாவிலும் நின்றுமுள்ளதாக இருக்கவேண்டும்.  இதனை நாம் அனைவரும் முதலில் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.


அல்குர்ஆனை சரியான முறையில் விளங்கமால் நபிவழியின் வழிகாட்டல்களை அறியாமல் நாம் நம்மை எப்படி அழைப்பாளர்களா தேர்வு செய்ய முடியும்? நாம் சொன்ன, சொல்கின்ற, சொல்லப் போகின்ற விடயங்கள் அல்குர்ஆனிலும், அஸ்ஸ{ன்hனவிலும் நின்றுமுள்ளவைகள் என்பதனை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்?  எனவேதான அல்லாஹ்தஆலா கூறுகின்றான்.


இதனை – நான் (பஸீரா) எனும் தெளிவோடு சுமப்பேன்.  அது போன்று என்னைப் பின்பற்றுபவர்களும் அவ்வாறுதான் இருப்பார்கள்.  அதாவது அல்லாஹ்வின் பால் அழைக்கும் அழைப்புப் பணியானது தௌவோடு இருக்கும்.  அந்தத் தெளிவு என்பது என்னவென்றால் அவை அல்குர்ஆனின் ஆதாரங்களேர்டும் அஸ்ஸ{ன்னாவின் ஆதாரங்களோடும் அத்தெளிவு இருக்கும்.  அந்தத் தெளிவை அந்த நபி பெற்றவராக இருப்பதுடன் அந்த நபியை அழைப்புப் பணியில் பின்பற்றுபவர்களும் தெறிவோடு இருப்பார்கள்.  அழைப்புப் பணியில் தெளிவுடன் இருப்பதன் அவசியத்தை அறிந்ததனால்தான் யாரும் ஒருவன் எந்தளவுக்குப் படித்தவனாக இருந்தாலும் அவனுக்கு அழைப்புப் பணிவிடயத்தில் உலமாக்கல் அனுமதி கொடுக்கும் வரை அவனை அழைப்புப் பணிக்குத் தகுதியுடையவனாக அஹிம்மத்துஸ் ஸுன்னா (ஸுன்னாவுடைய இமாம்கள், உலமாக்கள் ) ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  ஏனென்றால் அழைப்புப் பணியைச் சுமந்தவன் தெறிவைப் பெற்றவனாக இருக்க வேண்டும்.  அது எத்தகைய தெளிவு என்றால் எத்திவைப்பதற்கு முன் கற்றுக்கொண்டதை சரிவர அறிந்தவர்களாகவும், பூரணமாக விளங்கியவர்களாகவும் இருக்க வேண்டும்.


இன்று பலர் குர்ஆனைப் படிக்கின்றார்கள் ஆயத்தின் விளக்கங்களை வாசிக்கின்றார்கள்  வாசித்த பின் அதனை விளங்க முடியாத நிலைவருகின் போது அதனை தங்களுக்குள் மறைத்துககொண்டு தங்களது தேவைக்கேற்றாற் போல் விளக்கமளிக்கின்றார்கள்.  இவ்வாறு விளக்கம் கொடுப்பது பஸீரா அல்ல.  மாறாக அந்த ஆயத்துடைய விளக்கங்களில் எந்தெந்த ஆயத்துக்களுக்கு என்னென்ன வரைவிலக்கனங்கள் அதன் வரையரைகள், அதற்கான ஸஹாபாக்களின் விளக்கங்கள் இன்னும் அதன் சட்டங்கள்  என்பவற்றையெல்லாம் அவர்கள் புரிந்தவர்களாக இருக்க வேண்டும்.  அதே போன்று இதற்கு முரணான விடயங்களில் எப்படி குர்ஆன் ஸுன்னா அடிப்படையைக் கையாள்வது எனத்தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.    அதேபோன்று எந்த ஆயத் எந்த ஆயத்துடன் சம்பந்தமானது என்பதை விளங்குவதுடன் ஒரு விடயத்துடன் எந்த ஆயத் தொடர்புடையுது எந்த ஆயத் அதனுடன் தொடர்பற்றது என்பதைப் புரிந்தவர்களாக இருக்க வேண்டும்.  அதேபோன்று எந்த ஹதீஸ்கள் எந்த ஹதீஸுடன் தொடர்புடையது இன்னும் எது தொடாபற்றது என்பவற்றையெல்லாம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.  இவையனைத்தையும் எதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்?  எமக்குத் தேவையான மாதிரி ஓதுவதாலும், வாசிப்பதனாலும், பெற்றுக்கொள்ள முடியுமா?  ஒரு போதும் முடியாது.  இவர்களுக்கு யார் இதனைக் கற்றுக்கொடுப்பது,  ஆயத்துக்களின் வரையரைகள் என்னவென்றும், ஒரு ஆயத்தினை இன்னுமொரு ஆயத்துடன் எவ்வாறு சேர்த்து, பிரித்து விளங்குவதென்றும் மேலும் ஒரு ஹதீஸுடன் எந்த ஆயத்தினை அல்லது எந்த ஹதீஸினை சேர்து விளங்குவது என்பதையும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களுக்குக் காட்டிக் கொடுத்த வழமுறை எவையென்பதையும் நாம் அறிந்துகொள்ளவில்லை என்றால் ஒவ்வொருவரும் அவர்களது தேவைக்கேற்றாற் போல் ஹதீஸ்களை ஹதீஸ்களுடனும் ஆயத்துக்களுடனும் தொடர்புபடுத்தி தங்களுக்குத் தேவையான விளக்கங்களைப் பெற்றுக்கொள்வார்கள்.  இந்த வழிமுறையில் வந்த கூட்டங்கள்தான் குர்ஆன் ஸுன்னாவின் பெயரில் அவர்அவரது தேவைக்கேற்ப வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டார்கள்.  இதனால்தான் இயக்கங்கள் வளர்ந்தன.  இதன்காரணமாகத்தான் மத்ஹபுகள், பிரிவுகள் வேறுபாடுகள் சர்ச்சைககள் என்று தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஏற்பட்டுவிட்டன.


ஸஹாபாக்களின் காலத்தில் அவர்கள் கற்றவர்களாகவும் அதனைப் புரிந்த மார்க்க மேதைகளாக திகழ்ந்தும் அவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கவில்லை.  அவர் அவர்களுது தேவைக்கேற்ப அல்குர்ஆனுக்கும் அல்ஹதீஸிற்கும் விளக்கம் கொடுக்கவில்லை.  நபித்தோழர்களிடத்தில் ஒரு ஆயத்திற்கு பலவிதமான விளக்கங்கள் இருக்வில்லை.  இதற்குக் காரணம் அவர்கள் அதன் வரையறைகளை அறிந்தவர்களாகவும் நன்கு புரிந்தவர்களாகவும் இருந்தார்கள்.  இதனால்தான் அந்த ஸஹாபாக்களின் காலத்தில் பித்அத் என்ற பேச்சிற்கே இடமிருக்கவில்லை.


அவர்கள் மத்தியில் பிரிவுகள் உருவாகவில்லை.  அவர்களது கொள்கையும் மாறுபட்டதாக இருக்கவில்லை.  இதனால் அந்த உம்மத்தின் மத்தியில் பிரிவுத்தன்மை தலைதுக்கவில்லை.  எபபொழுது உம்மத்தே இஸ்லாமியா ஸஹாபாக்களின் வழிமுறையை ஓரம் கட்டிவிட்டார்களளோ அன்று தொடக்கம் ஒவ்வொருவரும் குர்ஆன் விடயத்தில் தான்தோன்றித்தனமான விளக்கங்களும், ஹதீஸ் விடயத்தில் அவரவருக்கென்று புதுப்புது விளக்கங்களும் வர ஆரம்பித்து விட்டன. அவனுடைய விளக்கத்திற்கு சார்பாக அவர்களுக்குத் தோன்றியது போன்று ஆயத்துக்களையும் ஹதீஸ்களையும் தொடர்புபடுத்தி கொள்வார்கள் இவ்வாறு தம் விருப்பத்திற்கேற்ப ஒன்றையொன்று சம்பந்தப்படுத்தி குர்ஆன், ஸுன்னாவின் பெயரில் ஆதாரம் என்று வாதிடுகின்றார்கள்.  இதனால்தான் இன்று அழைப்புப்பணியில் பல பிரிவுகள், இயக்கங்கள், கூட்டங்கள், மத்ஹபுகள், சர்ச்சைகள் என்று ஆகிவிட்டது.  நிச்சயமாக குர்ஆன் ஆயத்துக்களினாலும் ஹதீஸ்களினாலும் இவ்வாறு பிரிவுகள் உருவாகுமென்றிருந்தால் அது முதலில் ஸஹாபாக்கள் மத்தியில் தான் உருவாகியிருக்க வேண்டும்.    ஏனென்றால் அவர்களைவிட மார்க்கத்தை தெளிவாக விளங்கிய கூட்டம் யாருமே கிடையாது.  ஆயத்துக்களின் வரையரைகளையும் அதன் ஆழமான கருத்துக்களையும் அவர்களைவிடவும் விளங்கியவர்கள் எவருமிலர்.  அந்தளவு தூரம் விளங்கிய அவர்கள்  ஒற்றுமையாக வாழ்ந்ததன் காரணம் அவர்கள் அதற்கான் வரையரைகளை சரிவரப் புரிந்து பேணிவந்தமையேயாகும்.  அதனுடைய விளக்கங்களை சரியாக விளங்கிய காரணத்தினால் அவர்களுடைய கொள்கை ஒன்றாக இருந்தது.  அவர்களுடைய வணக்கவழிபாடுகள் ஒன்றாக இருந்தன.  அனைத்து அம்சங்களும் ஒன்றாகவே இருந்தன. விடயங்கள் அனைத்தும் ஒரு அடிப்படையோடு இருந்த காரணத்தினால் அந்த மக்கள் வேறுபடவில்லை.  இன்று அடிப்படைகள் பலவாகிவிட்டன.  இதில் ஒவ்வொருவரும் அவரவருக்கென்று தேவைபோன்று விளக்கங்கள் கொடுத்த காரணத்தினால் அழைப்புப் பணியென்பது பல திசைகளுக்குத் திரும்பி விட்டது. அதன் திசை மாறிவிட்டது.  அல்லாஹ்வை தனித்துவப்படுத்தி வணங்கவேண்டும் என்பதற்கான அழைப்புப் பணியைக் காண்பது இன்று ஒரு புதுமையான விடயமாக மாறிவிட்டது.  எந்தளவுக்கென்றால் அழைப்புப் பணியென்பது ஷஹாதது லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டே அமையவேண்டும் என்று நாம் கூறுகின்றபோது இதனைக் கேட்டு ஒருசில கூட்டங்கள் சிரிக்கவும் செய்கிறார்கள்.  மேலும சிலர் இழிவாகக் கருதுகிறார்கள்.  அப்படியென்றால் நாம் அது தவிரவுள்ள ஏனைய விடயங்கள் அனைத்தையும் பற்றிக் கூறக்கூடிய ஆயத்துக்களை என்ன செய்வது என்று அறிவிழித்தனமாக கேள்வி கேட்கின்றார்கள்.  இவ்வாறு அவர்கள் கூறினாலும் அனைத்து குர்ஆன் வசனங்களின் சட்டங்களும் , அனைத்து ஹதீஸ்களின் தீர்ப்புகளும் அந்த அல்லாஹ்வை தனித்துவப்படுத்தி , ஏகத்துவப்படுத்தி வணங்குவதற்காகவே அருளப்பட்டிருக்கின்றன என்பதை அவர்கள் அறிந்தும் அறியாதவர்கள் போல் நடந்துகொள்கின்றார்கள்.  அழைப்புப்பணியின் திசைகள் பல திசைகளாக மாறியதன் விளைவாக அவன் அல்லாஹ்வை சரிவரப் புரியவில்லை.  அந்த மனிதன் அல்லாஹ்வை வணங்கும விடயத்தைப் புரிந்தவனாக இருந்திருந்தால் அவனுடைய திசை மாறியிருக்காது.  இதுவே அழைப்புப் பணியின் உண்மையான நிலைப்பாடாகும்.  அழைப்புப் பணியென்பது அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி வணங்குவதற்கான அழைப்புப் பணியாக இருக்கவேண்டும்.

அல்லாஹ்வைத் தனிப்பட்டவனாக வணங்க வேண்டும் என்ற அழைப்புப் பணி முதலில் எம்முடைய உள்ளத்தில் ஆரப்பிக்கப்பட வேண்டும்.  நாம் மற்றையவர்களுக்கு எத்திவைப்பதற்கு முன்னர் அவற்றை எமது உள்ளத்திற்கு எத்திவைத்துக் கொள்ள  வேண்டும்.  எமது உள்ளத்திற்கு எந்த மார்க்கத்தை உபதேசமாக சொல்ல முடியாததாக இருக்குமோ அந்த மார்க்கம் யாருக்கும் உபதேசமான நாம் எத்திவைப்பதற்கு தகுதியானதல்ல. எந்த மார்க்கத்தை நீங்கள் மார்க்கமென்று நம்பியிருக்கின்றீர்களோ அதை உங்கள் உள்ளம் நம்பத் தயாரில்லை என்றால் அதனை யாருக்கும் சொல்வதில் பயனேதுமில்லை. நீங்கள் உங்களையே ஏமாற்றுபவர்களாக இருக்கின்றீர்கள்.  நீங்கள் எந்த மார்க்கத்தை மார்க்கமென்று புரிந்திருக்கின்றீர்களோ அதை உங்கள் உள்ளங்களுக்கு உறுதியாகச் சொல்லிக் கொடுங்கள்.  நீங்கள் அதிலே திருந்தி வாழுங்கள்.  நீங்கள் அதனைப் பின்பற்றியவர்களாக இருங்கள்.  அதிலே நீங்கள் அதற்கென்றே உறுதியாக வாழுங்கள்.  நீங்கள் அவ்வாறு நடந்து கொண்டால் உங்கள் வாழ்க்கையும் அதில் நீங்கள் வாழும் வழிமுறையும் ஒரு அழைப்புப் பணியாக மாறிவிடும்.  நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அருமைத் தோழர்கள் அனைவரும் உலமாக்கள் என்ற பெயரில் இருந்தார்களா? அவ்வாறு அவர்கள் இருக்கவில்லை.  இருப்பினும் அந்த அனைத்து நபித்தோழர்களும் இந்த மார்க்கத்தின் பிரச்சாரத்தில் எடுத்துக்கொண்ட பங்களிப்பு ஒருபோது குறைத்து மதிக்கத்தக்க ஒன்றல்ல.  ஏனென்றால் அவர்கள் தாங்கள் தெரிந்து கொண்டதை தமது வாழ்வில் எடுத்து நடந்தார்கள் அறிந்துகொண்ட மார்கத்தை தங்கள் வாழ்வில் உயிர்ப்பித்தார்கள்.  எனவே யாரெல்லாம் அந்த நபித்தோழர்களை சந்தித்தார்களோ அல்லது அவர்களது சபைகளில் அமர்ந்தார்களோ அவர்கள் அந்த ஸஹாபாக்களிடமிருந்து ஏதேனும் ஒரு படிப்பினையை பெறாது அங்கிருந்து நகரமாட்டார்கள்.  ஒரு தெளிவை பெற்றுக்கொள்ளாமல் போகவில்லை.  இதன் காரணம் அநத ஸஹாபாக்கள் அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி வணங்குவதன் விடயத்தில் உயிரோட்டத்தோடு வாழ்கின்ற நிலையிலே இருந்ததுடன் அதுதான்  தங்களது அழைப்புப் பணியென்பதை விளங்கியவர்களாக இருந்தார்கள்.  அந்த அழைப்புப் பணியில் அவர் சொல்கின்ற, செய்கின்ற அனைத்தும் அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்துவதை நம்பிக்கை கொண்டவன் என்ற அடிப்படையில்தான் அமைந்திருக்கும்.  அந்தப் பாதையில் எந்தத் துன்பமோ, அவமானமோ, நன்மையோ, தீமையோ, அவனைத் தடுத்துவிட முடியாது.  அவனது கடமையைச் செய்வதை விட்டும் அவனைத் தடுத்து விட முடியாது.  அவனுக்கு எப்படியானதொரு துன்பம் வந்தபோதும் அவனைப் பொறுத்தவரை அல்லாஹ்வை ஏகத்துப்படுத்துவதே முக்கிய இலட்சியமாக இருக்கும்.  இன்னும் யார் அழைப்புப் பணி என்பது என்னவென்று அறிந்தவனாக இருக்கிறானோ அவனே இந்த முக்கியத்துவத்தை அறிந்திருப்பான்.  மாறாக அதனைப் புரியாதவனோ தனது மானத்திற்கும் மரியாதைக்கும் குறைவந்துவிட்டதென்றால் அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் ஒரு புறம்தள்ளிவிடுவான்.  மார்க்கத்தைவிட்டும் ஒதுங்கிவிடுவான்.  தனது கௌரவத்தையும் மதிப்பையும், அந்தஸ்தையும் பேணிக்கொள்ள அல்குர்ஆனின் வசனங்களையும், அல்ஹதீஸ்களையும மறுத்துவிடுவான்.  இதில் அல்குர்ஆனுக்கும், அல்ஹதீஸிற்கும எந்தவொரு அநியாயம் நிகழ்ந்தாலும் அதனைப் பற்றி சற்றும் கவலைப்பட மாட்டான்.  அவனுடைய கவலையெல்லாம் சொத்துக்காகவும், பொருளுக்காகவும், கௌரவத்திற்காகவுமாக தவிர வேறொன்றுகாகவுமாக இருக்காது.  இது அல்லாஹ்வுக்கு தனித்துவப்படுத்தி வணங்குபவனுடைய தன்மையல்ல. இவன் அல்லாஹ்வுக்காக அழைப்புப் பணியைச் சுமந்தவனல்ல.  சகோதரர்களே, சகோதரிகளே இதனை நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்.


அழைப்புப் பணியின் அவசியத்தைப் பற்றிக் கூறுகையில் ஊரெங்கும் எத்திவைப்பதற்கு முன்னர் அதன் அவசியத்தை ஒரு அவசியமாக நாம் முதலில் புரிந்தவர்களாக இருக்க வேண்டும்.  நாம் அழைப்புப் பணியை அவசியமென்று தெரிந்தவர்களாக இருந்தால் இந்த மார்க்கத்தில் அல்லாஹ்வைத் தனித்துவப்படுத்தி வணங்கும் விடயத்தில் முதலில் நாம் அதில் வாழக்கூடியவர்களாக இருக்க முடியும்.  இதில் எத்தகைய இடையூறுகளும், சர்ச்சைகளும் இருந்து போதும் அது எமக்கு ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக இருக்காது.  மக்களைப் பொறுத்தவரை சர்ச்சையாகவும், குழப்பமாகவும், பிரச்சினையாகவும் இருக்கலாம்.  என்றாலும் அல்லாஹ்வை வணங்கும் ஒருவனுக்கு அது ஒரு தியாகமாகவும் ஒரு ஜிஹாதாகவும், பெருமையாகவும் இருக்கம். அவன் செய்த தியாகங்கள் அல்லாஹ்வுக்காக செய்த தியாகமாகவும் அவன் விட்டுவிட்டவைகளும், தவிர்ந்து கொண்டவைகளும் அல்லாஹ்வுக்காக செய்தவைகள் என்பதையும் இதன் மூலம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் இது ஒரு ஆதாரமாக அமையும் என்று உறுதியாக இருப்பவனாக இருப்பான்.  இதன் வழியில் அழைப்புப் பணியைச் சுமந்தவன் இந்தப்பண்பை உடையவனாக இருப்பான்.  மாறாக, இந்த அடிப்படையை சுமக்காத ஒருவனுக்கும் அழைப்புப் பணியென்பது இருக்க முடியும் ஆனால் அந்த அழைப்புப்பணி அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அழைக்கும் அழைப்புப் பணியாக இருக்காது.  இதனாலேதான் அழைப்பு பணியென்ற பெயரில் அழைக்கும் முன்பு நாம் அழைக்கும் அந்த விடயத்தை நம் வாழ்வில் செய்து காட்டுபவர்களாக இருக்க வேண்டும்.  நாம் அதைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும்.  நாம் அதனை செயல்படுத்துபவர்காளக இருக்க வேண்டும்.  அவசியமான அனைத்து விடயங்களுக்கும் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  அதற்காக நாம் தியாகங்கள் செய்ய வேண்டும்.  அதற்கென கஷ்டப்பட வேண்டும். அன்பின் சகோதரர்களே, சகோதரிகளே !


அல்லாஹ்வை தனித்துவப்படுத்தி வணங்குவதன் அடிப்படையில் தன்னைத் திருத்திக் கொள்வதானது கடினமானதொரு காரியமென்று யாரும் சொல்ல முடியாது.  நாம் அல்லாஹ்வைத் தனித்துவப்படுத்தி வணங்குவது எமக்கு ஒருபோதும் கடினமாக இருக்கக் கூடிய ஒன்றல்ல.  மாறாக அது ஒரு இலகுவான காரியமாகும்.  ஆனாலும் ஷெய்த்தான் அல்லாஹ்விடம் “நான் ஆதமுடை மக்களை வலதாலும், இடதாலும், முன்னாலும், பின்னாலும் நின்று வழிகெடுப்பேன்” என்று வாக்குக் கொடுத்துவிட்டான். ஷெய்த்தானின் இந்த வலையிலே சிக்கிக்கொண்டிருக்கும் காரணத்தினால் நாம் ஏகத்துவத்தை நிலை நாட்டுவதிலே பின்வாங்குகின்றோம்.  என்றாலும் ஷெய்த்தான் இன்னுமொன்றையும் கூறிவிட்டான்.  அதுதான் “உன்னுடைய முஹ்லிஸான அடிமையைத் தவிர” (மற்ற அனைவரையும் வழிகெடுப்பேன்.  இதன் அடிப்படையில் நம்மிடம் இஹ்லாஸ் குறைவடைந்து விடுகின்ற காரணத்தினால் வழிகேட்டை அடைய நேரிடும் என்பதை உறுதியாக விளங்கிக்கொள்ளுங்கள்.  இஹ்லாஸில் நாம் உறுதியாக  இருக்கவில்லையென்றால் அதாவது அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்வதில் நாம் உறுதியாக இருக்கவில்லையென்றால் த்தானின் வலையில் சிக்கி வழிகேட்டை அடைந்து விடுவோம்.  மாறாக இஹ்லாஸுடன் நடந்து கொண்டோமையானால் எமது விடயத்தில் ஷெய்த்தானுக்கு தலையிட முடியாது.  இங்கு இஹ்லாஸ் (உளத்தூய்மை) தான் மிக முக்கியமானதாகத் திகழ்கிறது.  எனவே, அழைப்புப் பணியை நாம் இஹ்லாஸுடன் சுமந்தால் நாம் ஒருபோதும் வழிகேடுகளை சுமந்தவர்களாக இருக்கமாட்டோம்.  இன்னும் வழிகேடுகளை எம்மோடு சேர்த்துக்கொண்டு அழைப்புப் பணியை மேற்கொள்பவர்களாகவும் இருக்கமாட்டோம்.  பித்அத்களுக்கும் சார்பாகப் பேசுபவர்களாக இருக்கமாட்டோம்..  பித்அத்கள் வளர்வதற்கு இடமளிப்பவர்களாகவும் இருக்கமாட்டோம்.  இன்னும் ஷிர்க்களுக்கும் சார்பாக செயற்படுபவர்களாகவும் அதனை வளர்வதற்கு இடமளிப்பவர்களாகவும் நாம் இருக்கமாட்டோம்..


எங்கெல்லாம் இந்த முஹ்லிஸான அடிமை இருப்பானோ அங்கெல்லாம் இந்த ஷிர்க்குகளுக்கு எதிர்ப்புகளும் தடைகளும் இருப்பதைக் காண்பீர்கள்.  பித்அத்களுக்கு மறுப்பளிக்கும் குரல்களைக் கேட்பீர்கள்.  அல்லாஹ்வின் இந்த மார்க்கத்திற்கு என்னென்ன குழப்பங்கள் வருகின்றதோ அவைகளுக்கு பதில் கொடுப்பவனாக நீங்கள் அவனைக் காண்பீர்கள்.  ஒரு முஹ்லிஸான அடிமை அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைகின்ற ஷிர்க்குகளுடனும், பித்அதகளுடனும் நடந்துகொள்ளும் முறை இவ்வாறுதான் இருக்கும்.  


சகோதர, சகோதரிகளே !


அழைப்புப் பணி என்பது அவசியாமானதென யார் கூறுகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் குழப்பத்தைக் கண்டும் அதற்கெதிராக பதிலளிக்காமல் இருக்க முடியுமா?  ஒருவன் அல்லாஹ்வின் திருமறையான அல்குர்ஆனை இழிவுபடுத்தும் போது அதற்கெதிராக பதிலளிக்காமல் இருக்க முடியுமா?  குர்ஆனை இழிவுபடுத்துபவனைக் கண்டுகொள்ளாமல் அதறகெதிராக குரலெழுப்பாமல் அழைப்புப் பணியை மேற்கொள்வது அழைப்புப் பணியென்று சொல்வதற்குத் தகுதியானதொன்றாகுமா?  குர்ஆனின் விளக்கத்தில் குழப்பம் விளைவிப்பவன் ஒருவன் இருக்கின்ற நேரத்தில் நாம் அழைப்புப் பணியை சுமந்தவர்களாக இருப்போமாயின் இங்கு எமது கடமை என்ன?  எமது கடமையானது முதலில் அவனுக்கெதிராக, அவனுடைய போக்குக்கெதிராக குரல்கொடுப்பதுதான.  இன்னும் அந்தக் குர்ஆனை தூய்மைப் படுத்தி வைப்பதும் மக்களுக்கு மத்தியில் குர்ஆனி;ன் விளக்கத்தைத் தூய்மையாக முன்வைப்பதும் எமது கடமையாக அமையும்.  ஆனால் இன்னும் பலர் இந்தக் குழப்பத்தில் மத்தியில் வாழ்பவர்களாக இந்தக் குழப்பத்தினால் தோன்றியுள்ள தவறான விளக்கத்திலிருந்து தூய்மையான விளக்கத்தை பிரித்து அவற்றை சரிவர அடையாளம் காட்டுவதை அவசியமாகக கருதாதவர்களாக இருக்கிறார்கள்.  இன்னும் இந்தக் குழப்பமான விளக்கங்களுக்கு மறுப்புத் தெரிவிப்பதையும் அவசியமானதெனக் கருதுபவர்களாகவும் அவர்கள் இல்லை.  


நம்மில் பிரச்சாரம் செய்பவர்களாக இருந்தாலும் அல்லது சாதாரண மனிதனாக தனது வாழ்வை வாழ்பவர்களாக இருந்தாலும் 

ஷிர்க்குகளை காணும் போது அதற்கு மாற்றமான வாழ்க்கையை நாம் வாழவில்லையென்றால் ஷிர்க்கை அழிக்கும் அழைப்புப் பணிக்குத் தோழர்களாக இருக்கவில்லை என்றால் நம்மிடத்தில் ஏகத்துவ அடையாளம் எங்கே?  நீங்கள் பித்அத்களைக் கண்டு அதற்கு முரணாக வாழ்கின்றவர்களாக இல்லாமல், பித்அத்களுக்கு எதிர்ப்புகாட்டுகின்ற அதற்கெதிராக குரல் கொடுக்கின்ற அழைப்புப் பணிக்கு ஒத்துழைப்பளிக்கும் தோழர்களாக இருக்கவில்லை என்றால் நீங்கள் பித்அத்தை வெறுப்பதற்கு ஆதாரம் என்ன? நபிவழிமுறைகளைச் சர்ச்சைக்குரிய விடயமாக ஆக்குவதைக் காண்கிறோம்.  இவைகளுக்கு மறுப்புகளைக் கொடுக்காமல் நாம் வாழ்வதெல்லாம் நாம் நபிவழியை நோக்கிறோம் என்பதற்கு ஆதாரம் என்ன?


சகோதர, சகோதரிகளே,


நான் நபிவழியில் இருக்கின்ற மனிதனென்றால் நபிவழிக்கு முரணானதைக் கண்டு அதில் நான் பொறுத்திருக் முடியாது.  அதைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது.  உங்களுக்கு அதை மறுத்துரைப்பற்கு போதிய கல்வியறிவு இல்லாதிருக்கலாம்.  ஆனாலும் கல்வியைச் சுமந்தவர்களுக்குக் கைகொடுப்பதில் நீங்கள் பின்வாங்கக் கூடாது.  உங்கள் ஒவ்வொருவரது சக்தியும் தகுதியும் என்னவென்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்.  இதுபற்றி நீங்கள் அல்லாஹ்வின் முன்னிலையில் பதில் கூற வேண்டிய ஒரு காலம் வரும்.  இதுபற்றி அல்லாஹ் உங்களிடம் கேட்கும் நேரம் வரும்.  அன்று நீங்கள் கவலையடைவதில் எவ்வித பயனுமில்லை.  இன்று உலகில் உயிரோடு இருக்கும் பொழுதே அல்லாஹ்வுக்காக செய்யப்படும் அழைப்புப் பணிக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதன் மூலம் அல்லாஹ்வின் தூய்மையான மனிதர்களாக மாறிவிடுங்கள்.  ஆல்லாஹ்த்தஆலா அவனது தூதரான நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பி அந்நபிக்கு ஏழு வானத்தின் மேலிருந்து அனைத்து உதவிகளையும் வழங்கினான். இவ்வாறு அனைத்து உதவி, ஒத்துழைப்புகளையும் அல்லாஹ் வழங்கிய பின்னரும் இந்த சமூகத்தை நோக்கிக் கூறுகிறான்


"..................... எப்பணி நன்மையானதாகவும் இறையச்சத்திற்குரியதாகவும் உள்ளதோ அதில் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள்.  (ஆனால்) எது பாவமானதாகவும் வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்."  


ஆல்லாஹ்வின் உதவி அந்த நபிக்கு போதுமானதாக இருந்தும் , ஆதாரத்திற்கு அல்லாஹ்வின் வஹி போதுமானதாக இருந்தும் அல்லாஹ் காட்டிய அற்புதங்கள் (முஹ்ஜிஸாத்) போதுமானதாக இருந்தும், இவை அத்தனையையும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவாகளுக்கு கொடுத்து அந்த நபி கொண்டு வந்த மார்க்கத்தை உயர்த்தி வைத்த பின்னும் அல்லாஹ்தஆலா பொது மனிதனுக்கு ஏவுகின்றான்.


"நன்மையான விடயத்திலும் இறையச்சத்திற்குரிய விடயத்திலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள்."


ஏன் இதனை அல்லாஹ் பொது மனிதனை நோக்கி ஏவுகின்றான் அல்லாஹ்வுக்கு அனைத்தும் இயலுமானதாக இருந்த போதிலும் மனிதர்களை நோக்கி அல்லாஹ் கூறுவதன் அடிப்படையில் நம்மில் ஒவ்வொருவரும் அவரவர் பங்களிப்பில் பின்வாங்க முடியாது.  அனைவரும் அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி வணங்குவதை நோக்கி அழைப்பதில் தங்களின் தகுதிக்கேற்ப அவரவர் பங்களிப்பை வணங்க வேண்டும்.  இந்தப் பங்களிப்பின் மூலம் ஒவ்வொருவரும் தங்களின் செயல்பாட்டினை பரிபூரணமாக நிலைநாட்ட வேண்டும்.  இதன் மூலம்தான் ஒருவன் எநதளவுக்கு அல்லாஹ்வை தனித்துவப்படுத்தி வணங்குகிறான் என்பதைக் கண்டு கொள்ள முடியும்.  இதன் மூலம் தான் அல்லாஹ்வின் மீது உண்மையாள நம்பிக்கையை நிலைநாட்டுவதென்பது உறுதியாக நிரூபிக்கப்படும்.  நிச்சயமாக அதில்தான் ஒருவன் அவனுடைய ஈமானை நிலைநாட்டுவதைக் காண முடியும்.  இந்த அனைத்து உண்மைகளும் உற்பொதிந்திருப்பதன் காரணத்தால்தான் அல்லாஹ் மனிதர்களை நோக்கி மேற்கூறிய திருமைறை வசனத்;தில் ஒரு ஏவலை ஏவுகிறான்.  நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே ஒத்துழைப்பு கொடுப்பது அவசியமானதென்றால், அந்த நபிக்குப் பின் வந்த சத்தியத்தை சுமந்த மக்களுக்கு ஒத்துழைப்பது அவசியமாகாதா?  நிச்சயமாக அது அவசியமாகும்.  


சகோதர, சகோதரிகளே !


நான் மேற்சொன்ன அனைத்தும் அழைப்புப் பணியின் அவசியம் என்பதில் உள்ளடங்கும் அம்சங்களாகும்.  ஆந்த அனைத்து அம்சங்களையும் நாம் முதலில் எமது வாழ்வில் செயல்படுத்தி வாழ வேண்டும்.  ஆதன்பின்அதன் தேவையேற்படும் நிலைகளில் உதவிகளை வழங்குபவர்களாக இருக்க வேண்டும்.  எமது சக்திகேற்ப பங்களிப்பை வழங்க வேண்டும்.  ஆல்லாஹ் மட்டுமே எமது சக்தி என்னவென்பதை அறிந்தவன்.  அதிலே அல்லாஹ்வுக்கு “தூய்மையாக நடந்துகொள்ளுங்கள்.  இந்தப் பங்களிப்பு யாரோ ஒரு மனிதருக்காளதோ அல்லது ஊருக்கானதோ, கௌரவத்திற்கானதோ அல்ல. அந்தப் பங்களிப்பு சுத்தமாக அல்லாஹ்வுக்கும் அவனது மார்க்கத்திற்குமானது. ஊங்கள் கடமையில் நீங்கள் சரியாக நடந்து மறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறமுடியுமான நிலையில் இருப்பீர்களாயின் அதுவே உங்களுக்குப் போதுமானதாகும்.  ஊங்கள் சகதியையும் வரையரைகளையும் நீங்கள் அறிந்தவர்களாகவே இருக்கிறீர்கள்.  அதனை அல்லாஹ் நன்கு அறிந்தவன்.


சகோதர, சகோதரிகளே !


மேலே நான் சொன்ன அழைப்புப் பணியின் அவசியம் என்பதைப் போன்று அந்த அழைப்பு பணிக்கென வரம்புகளும் காணப்படுகின்றன.


அழைப்புப் பணியின் வரம்புகள் என்றால் என்ன?     


வரம்பு என்பது யாரும் மீறிச் செல்லக் கூடாத ஒன்றாகும்.  வரம்புகளை மீறி யாரும் செல்ல முடியாது.  அந்த வரம்பு மீறப்பட்டுவிட்டதென்றால் இந்த அழைப்புப் பணி நாசமாகிவிடும்.  அதன் வரம்புகளுடன் நின்று கொண்டால் அழைப்புப் பணி சிறப்பாக தலைதூக்க முடியும்.  வஹி இறங்கும் காலமான நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் தெட்டத் தெளிவாக விளக்கப்பட்ட அந்த மார்க்கத்தில் ஏதேனும் ஒரு விடயம் தொடர்பாக யாரேனும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேள்வி கேட்பாராயின் அந்த நபருடைய நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்றால், அந்த நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்குத் தேவைபோன்று பதில் அளிக்கமாட்டார்கள்.  கேள்வி கேட்கப்பட்ட அவர் மௌனமாக இருப்பார்.  கேள்விக்கு வஹி இறங்கும் வரை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மௌனமாகவே இருப்பார்கள்.  பின்னர், கேள்வி கேட்டவர் அழைத்து வருமபடி கூறி அக்கேள்விக்கான பதிலை அளிப்பார்கள்.  ஏனென்னறால் அந்த நபிக்கும் கூட ஒரு வரம்பு இருக்கிறது.  அல்லாஹ்விடமிருந்து இறக்கப்படாததைக் கொண்டு எதனையும் பேச முடியாது என்பதனை அந்த நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணாந்திருந்தார்கள்.  அல்லாஹ்வின் பயிற்சிப் பாசறையில் வளாந்தவர்களாகத் திகழ்ந்தார்கள்.  


"இன்ன அலைனா பயானா"


உமக்குத் தெளிவுபடுத்துவது எமது கடமையாகும்.   என்று அல்லாஹ் கூறுகின்றான்.    அல்லாஹ்விடம் இருந்து தெளிவைப் பெற்று எத்திவைக்கும் கடமையுடைய நபியாக இருந்த போதும்,  அவரிடம் கேள்வி கேட்கப்பட்டால் பதில் கூறாமால் மௌனமாக இருப்பார்கள்.  ஏனெனில் அந்த விடயத்தில் அவருக்கு வஹி அறிவிக்கபடவில்லை என்பதை அவர்கள் நனகு அறிந்தவர்களாக இருந்தார்கள்.  இதுதான் அந்த நபி வளர்ந்த கட்டுப்பாடான எல்லையும், கட்டுப்படுத்தப்பட்டதாக எமக்கு காட்டித் தந்திருக்கும் வரம்புகளாகும்.  இதுவே நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரம்பு என்றால், அந்த நபிக்குப் பின் வந்தவர்களுடைய வரம்புகல் எப்படி இருக்க வேண்டும்?   நபிக்குப் பின் வந்தவர் குர்ஆனையும் ஹதீஸையும் விளங்காமல் எதனையும் கையாள முடியுமா?  இது அனுமதிக்கப்பட்டதாகுமா?  


அல்லாஹ் தூதரான நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் கூறுகையில் அந்த நபிக்கு தான் இறக்கி வைத்த வஹியினை தெளிவானதாக ஆக்குவது தனது பொறுப்பு என்று அல்லாஹ் கூறிக்காட்டுகினறான்.  இதில், அல்லாஹ் நபிக்கு தெளிவை வழங்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறான்.  ஆகவே,  தெட்டத்தெளிவான பாதையில் இருக்கும் அந்த நபியே தன்னிடம் ஒரு அறயாத விடயத்தைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டால் அவர் தனக்குத் தோன்றிய போன்று, தானே ஆராய்ச்சி செய்து பதில் கூறமாட்டார்கள்.  அமைதியாக இருந்து விடுவார்.  இதுபற்றி அல்லாஹ் இன்னுமொரு இடத்தில் இன்னும் தெளிவாகக் கூறுகிறான்.  


"வமாயன்திக்கு அனில் ஹவா இன்ஹவுர் ........."


"அவர் தன்னிச்சைப்படி பேசமாட்டார்.  ஆவர் பேசியதெல்லாம் நாம் வஹி மூலம் அறிவித்தவேயன்றி வேறில்லை. " 


மேலே கூறிய வசனத்தில் இந்த நபியைப் பற்றி இன்னும் உறுதியாக அல்லாஹ் எமக்கு சொல்லித் தருகிறான்.  


"ஆலா பஸிரதன் அலா.........."


தேளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னை பின்பற்றுபவர்களும் இருக்கின்றோம்.  என்ற வசனம் எனக்கு உணர்த்தும் ஒரு அடிப்படையாகும்.  


இது தான் அந்த பஸீரா இதுதான் அந்த தெளிவு.  நானும் என்னைப் பின்பற்றுபவர்களும் தெளிவு.  எனக் கூறுமாறு அந்த நபிக்கு திருமறையில் கூறிக்காட்டுகின்றான்.  இதுவே அந்த பஸீரா ஆகும்.  பஸீரா என்பது புத்தியில் தோன்றிய சிந்தனைகளல்ல.  புத்திக்குத் தோன்றுவதெல்லாம் தெளிவென்றால், அது நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரியதா ஒன்றல்ல.  நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விளங்க முடியாத குர்ஆனாக அது இருக்கவில்லை.  ஏனென்றால் இறக்கப்பட்ட வஹியின் தெளிவை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்குவதை அல்லாஹ் தனது பொறுப்பாக எடுத்துவிட்டான்.   அப்படிப்பட்ட ஒரு நபிக்கு விளங்காத விளக்கத்தை இன்று எவரெவரோ விளங்கிவிட்டார்களா?  இவ்வாறு விளங்கிவிட்டு அதனைப் பார்த்து இது தான் தெறிவு என்று அவன் சொல்லிவிட்டால் அது தெளிவாகிவிடுமா?  இது எப்படித் தெளிவாக இருக்க முடியும்.    அல்லாஹ்வின் தூதர் காட்டாத மார்க்கம் தெளிவாகுமா?  அது வெறுமனே இருள் என்றுதான் சொல்ல முடியும்.  அதற்கு நாம் தெளிவு என்று சொல்ல முடியாது.  எனவே, நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரம்பு என்னவென்றால் அவர்களுக்க வஹி வராமல் வஹியை அல்லாஹ் அறிவிக்காமல் அவர்கள் பேசமாட்டார்கள்.  நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசுவார்களாயின்,  அது இறக்கப்பட்ட வஹியோடுதான் அதனைப் பேசுவார்.  இதுதான் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய மார்க்கமாக எத்திவைத்தது ஆகும்.  அவருக்குரிய வரம்புடன் அந்த மார்க்கத்தை அவர் எந்திவைத்துச் சென்றார்.  

தஃவா பணியில் எங்களுடைய பங்களிப்பு இருக்குமாயின் அது எத்தகைய பங்களிப்பாக இருக்க வேண்டும் என்ற வினாவிற்கு விடையாக அமைவது அது மார்க்கத்தைப் பேசுகின்ற விடயத்தில் கல்வியறிவு இன்றி, கல்வியினூடே விளங்காமல் எமது நாவில் உச்சரிப்பதை நாம் தவிர்த்து கொள்ள வேண்டும்.  துன்னுடைய புத்தியில் தெளிவென்றும் சிந்தனைக்கு விளங்க வேண்டுமென்றும் தோன்றியதற்காக ஒருவன் நானும் பங்களிப்புக் கொடுக்கின்றேன் என்று கூறி அவனுடைய கருத்துக்களையும் விளக்கங்களையும் கூறுவதில் முந்திக் கொண்டானாயின் அதன் மூலம் என்ன நிகழும்?  கருத்து வேறுபாடுகளும், முரண்பாடுகளும் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.  குழப்பங்கள் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. மார்க்கத்தில் சர்ச்சைகளும் சந்தேகங்களும் தோன்றாமல் இருக்க முடியாது.  இதன் மூலம் வழிகேடுகள் தோன்றுவதைக் கண்டு ஆச்சரியம் கொள்ளத் தேவையில்லை.  இதற்கு மாறாக,  நாம் எதையெல்லாம் கற்கவில்லையோ இன்னும் கற்றுத் தெரிந்து, புரிந்து, விளங்கவில்லையோ அவைகளை நாம் கையாளாதிருந்தால் எங்கிருந்து குழப்பங்கள் வர முடியும்.  எங்கிருந்து பிரிவுகள் தோன்ற முடியும்?  சர்ச்சைகளும், சந்தேகங்களும் வழிகேடுகளும் எங்கிருந்து உருவாக முடியும்?   இவை அனைத்திலிருந்தும் நீங்கள் தவிர்ந்து, இந்த அனைத்துத் தீமையிலிருந்தும் தப்பி வாழ்வீர்கள்.  நேர்வழியில் இருப்பீர்கள்.  தேரிந்து வைத்திருப்பதில் தூய்மையாக நடந்து கொள்வீர்கள். தெரியாததைத் தவிர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்கள்.  இதனைத் தான் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறப்பாக கூறினார்கள்


"இல்ம் (அறிவு) என்பது அல்லாஹ் கூறியது, அல்லாஹ்வின் தூதர் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது, மூன்றாவது எனக்குத் தெரியாது."


இன்னுமொரு அறிவிப்பில்" இல்ம் (அறிவு) என்பது அல்லாஹ் கூறியது, அல்லாஹ்வின் தூதர் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது, இன்னும் ஸஹாபாக்கள் கூறியது."


இங்கு இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவாக்ள எனக்குத் தெரியாது என்பதையும் ஒரு இல்ம் என்று கூறுகிறார். 


நிச்சயமாக கழுதைக்கும் குதிரைக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்தவன்தான் கழுதையை கழுதை என்றும் குதிரையை குதிரை என்றும் சொல்வான்.  இதைத் தெரிந்தவன் இரண்டையும் வேறுபடுத்தி அறிந்து கொள்வான்.  இதனை அறியாதவன் கழுதையை குதிரை என்றும் குதிரையை கழுதை என்றும் எடுப்பான்.  இவர்கள் தான் மடையர்கள்.  இவர்கள்தான் தங்களுக்கு தெரியாதவற்றை கூறுவதற்கு முந்திக்கொள்வார்கள். தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை என்று எண்ணுவார்கள்.    இதன் விளைவாக இவர்கள் தீர்ப்புக் கொடுப்பதற்கு முந்திக் கொள்வார்கள்.  இது அறியாதவனுடைய அடையாளமாகும்.   ஆனால் அறிந்தவர்களோ தங்களுக்குத் தெரிந்தவற்றையே பேசுவார்கள்.  தெரியாதவிடயங்களில் நாவை அசைப்பதில் அவசரம் காட்டமாட்டார்கள்.  


இமாம் ஹஸனுல் பஸ்ரி அவர்கள் கூறுகிறார்கள் நீங்கள் சில விடயங்களில் அவசரப்படுகிறீர்கள்.  ஒரு விடயத்ததை ஸஹாபாக்களில் தொன்னூறு பேர்களிடத்தில் கேட்கப்பட்டாலும் ஒவ்வொருவரும் தான் பதில் கூறுவதற்கு முந்திக்கொள்ளாது மற்ற ஸஹாபாக்கள் சொல்லும் வரை எதிர்பார்த்திருப்பார்கள்.  


நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பயிற்றுவிப்பில் வளர்ந்த காரணத்தினால்தான் அந்த ஸஹாபாக்கள் அவ்வாறு நடந்துகொண்டாhகள்.  அவர்கள் எதிலும் முந்திக்கொள்ள மாட்டாhகள்.  ஏனென்றால், அவர்கள் கல்வி என்றால் என்னவென்று அறிந்திருந்தார்கள்.  இருப்பினும் , எதிலும் முந்திக்கொள்ளாதவர்கலாக இருந்தும் அவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுடைய ஒரு வார்த்தையை மறக்கவில்லை.  அதுதான் 


"என்னிடம் இருந்து செவிமடுத்த ஒரு வசனத்தையேனும் மற்றவர்களுக்கு எத்திவையுங்கள்."  


இதனை நபித்தோழர்கள் தம் வாழ்வில் பின்பற்றி வந்தார்கள்.  இதில் நபித்தோழர்கள் ஒரு குறையும் செய்யவில்லை.  அவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட அனைத்தையும் எத்திவைத்தார்கள்.  அதல்லாத விடயங்களில் அவர்கள் கைவைக்கவில்லை.  கிடைத்தவற்றை எத்திவைத்ததோடு நின்றுகொண்டார்கள்.  இவ்வாறு அந்த ஸஹாபாக்கள் நடந்து கொண்டதால்,  மார்க்கம் இவர்களிடம்pருந்து தூய்மையாக தாபீயீயின்களை செனறடைந்தது.  அதே தூய்மையான வழிமுறையைத் தாபியீன்கள் பின்பற்றி நடந்ததன் காரணமாகவே அதே தூய்மையுடன் மார்க்கம் தபுஅத் தாபியின்களை வந்தடைந்தது.  அவர்களின் பின் வந்த உலமாக்களில் யாரெல்லாம் அதே தூய்மையான வழிமுறையை பையாண்டார்களோ அவர்களுக்கு மத்தியில் இந்த தூய்மையான பாதை தூய்மையாகவே வளர்ந்தது.  இன்னும்,  யாரெல்லாம் தெரிந்தது தெரியாதது என்றெல்லாம் அனைத்திலும் கைவைத்து, அதைப் பேச ஆரம்பித்தார்களோ அப்போதுதான் வழிகேடுகளும் பிரிவுகளும், சர்ச்சைகளும், குழப்பங்களும் மார்க்கத்தில உருவாக ஆரம்பித்தன.  


சகோதர, சகோதரிகளே !


பொது மனிதர்களாக இருப்பவர்கள் இஸ்லாமிய தஃவாவில் அவர்களுடைய பங்களிப்பை மறந்துவிட முடியாது.  அல்லாஹ்தஅலா குர்ஆனில் 


"தாஆவனு அலல் பிர்ரி வத்தக்வா........"


”நன்மையான காரியத்திலும் இறையச்சமுடைய காரியத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள்.” என்று கூறுகின்றான்.   


இங்கு உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும் விடயத்திற்கென எல்லைகள் இருக்கின்றன.  அதேபோன்று அழைப்புப் பணியைச் செய்பவர்களுக்கும் எல்லைகள் இருக்கின்றன.  உலமாக்களுக்கும் எல்லைகள் இருக்கின்றன்.  “தாலிபுல் இல்ம்”  எனும் கல்வியைச் சுமந்த மாணவாகளுக்கும் எல்லைகள் இருக்கினறன.  எங்களில் எல்லைகள் இல்லாதவர்கள் யாருமில்லை.  நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு எல்லை இருக்கும் போது அவருக்குப் பின் வநதவர்களுக்கு எல்லைகள் இல்லாமல் போகுமா?  அனைவருக்கும் அவரவர் சக்திகேற்ப எல்லைக்ள உண்டு.  யாரெல்லாம் அந்த எல்லையை மீறிவிட்டார்களோ, அவர்களால் இந்த மார்க்கத்தில் குழப்பங்கள் தோன்றும்.  அவர்களால் மார்க்கத்தில் சர்ச்சைகள் உருவாகும்.  அவர்களால் மார்க்கத்தில் முரண்பாடுகளும், பித்அத்களும், ~pர்க்களும், குப்ர்களும் தோற்றம் பெறும்.  எனவே வரம்புகள் என்பது கற்பவன், கற்றுக்கொடுப்பவன், அழைப்பாளன், பொதுமனிதன், அனைவருக்கும் உள்ளதொன்றாகும்.  ஓவ்வொருவரும் அவரவர் எல்லையை அறிந்து அதில் தூய்மையோடு நடந்து கொண்டால், மார்க்கம் தூய்மையாக வளரும்.  முப்தி என்பவர் முப்திக்குரிய பணியைச் செய்ய வேண்டும்.  கதீப் அவருடைய பணியைச் செய்ய வேண்டும்.  இமாம் இமாமுடைய பணியைச் செய்ய வேண்டும்.  ஆதைப் போன்று பொது மனிதன் அவனது பணியைச் செய்ய வேண்டும்.  அனைவருக்கும் அவரின் தகுதிக்கேற்ப இந்த மார்க்கத்தின் மீது ஒரு பங்களிப்பு இருக்கிறது.  ஓவ்வொருவரும் அவரவர் பங்களிப்பில் முறையாக நடந்துகொண்டால்,  இன்னும் அவரவரின் எல்லைகுட்பட்டுச் செயற்பட்டால் இந்த மார்க்கம் தூய்மையாக வளர்வது மட்டுமன்றி, அனைத்து சர்ச்சைகளுக்கும் முகம் கொடுத்து வெற்றியடைந்த கூட்டமாக அனைவரும் ஆக முடியும்.  அல்லாஹ்தஆலா எந்த வழிமுறைகளோடு எல்லைகளை அமைத்திருக்கிறானோ, அந்த வரம்புகளுடன் நாம் நின்று கொள்ள வேண்டும்.  அதிலும் மிகவும் முக்கியமானது என்னவென்றால், அதனை நீங்கள் அறியாதவர்களாக இருக்கிறீர்களோ அதிலே நீங்கள் கைவைப்பதனை தவிர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் தெரிந்து கொண்ட விடயங்களில் உங்கள் சக்திக்கு ஏற்ப உங்கள் கடமையை அல்லாஹ்வுக்காக செய்வதென உணர்ந்து அதிலே அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள்.  ஓன்றை சத்தியமென்று நீங்கள் புரிந்து வைத்திருக்க அதற்கு முரணாக ஒருவன் பேசுவதை நீங்கள் கண்டால் அந்த இடத்தில் நீங்கள் ஒரு ஆலிமாக இல்லாமல் ஆதாரத்தை எடுத்துக் கூறக்கூடிய சக்தி உங்களிடம் இல்லாத நிலையில் உங்கள் வரம்பு என்னவென்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.  பின்வருமாறு அந்த மனிதரிடம் கூறிவிடுவது உங்களது வரம்பாக இருக்கிறது. ஆவரிடம், சகோதரரே! நான் கல்வி சுமந்தவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டது நீங்கள் கூறியதற்கு முரணாக இருக்கிறத.  நூன் புரிந்து வைத்திருப்பது நீங்க்ள் கூறியதற்கு மாற்றமானது. நான் ஆலிமாக இல்லாததின் காரணமாக உங்களுக்கு தெளிவாக எத்திவைப்பதற்கு சக்தி பெற்றவன் அல்ல.  இருந்தாலும், இந்த விடத்தில்தான் நான் இதனைக் கற்றுக்கொண்டேன்.  அதனை இன்னன்ன நூல்களில் இருந்து கற்றேன் என்று அந்த மனிதருக்கு திசையை காட்டுவதே உங்கள் வரம்பாகும்.    


இதற்குமாறாக, நீங்கள் அவர் கூறியதை மறுத்துக் கூறுவதற்கும், அவரிடம் போட்டிபோடுவதற்கும், நான் சத்தியவாதி நீ அசத்தியவாதி என்று போராடுவதற்கு முநதி விட்டீர்கள் என்றால் வரம்பை மீறி நீங்களும் அவர்களோடு சேர்ந்து ஒரு வழிகேட்டையே உருவாக்கி விடுகிறீர்கள்.  புதியதொரு சர்ச்தையைத் தான் ஏற்படுத்தி விடுகிறீர்கள்.  உங்களுக்குத் தெரிந்த உண்மையையும் இதன் மூலம் நாசமாக்கி விடுவீர்கள்.  எனவே தெரிந்த உண்மையை நீங்கள் நிலைநாட்டுவதோடு அந்தஉண்மைக்கு முரணாக பேசுபவரிடம் நீங்கள் எங்கிருந்து அதனைப் பெற்றுக் கொண்டீர்களோ, அதன் திசையை அந்த மனிதருக்கு காட்டிவிட்டீர்களௌ;றால்,  யாரெல்லாம் சத்தியத்தின்பால் ஆசை வைத்தவனாக இருக்கிறானோ அவன் அதனை நோக்கி வருவான்.  


நீங்கள் விருப்புபவர்களுக்கு நீங்கள் நேர்வழிகாட்ட முடியாது. எனினும்,  அல்லாஹ் யாரை நாடுகிறானோ அவர்களுக்கே நேர்வழி காட்டுவான்.  


சகோதர, சகோதரிகளே !


எமது தாய் தகப்பனாக இருந்தாலும், தோழராகவோ, எதிரியாகவோ இருந்தாலும், யாராக இருந்தாலும் நாம் ஆசைப்பட்டவாகளுக்கு நேர்வழியினைக் காட்டிவிட முடியாது.  எமக்கு எத்திவைக்க முடியுமே தவிர நேர்வழியினை அவர்களுக்கு காட்ட முடியாது.  நேர்வழியின் திசையைக் காட்ட முடியும்.  ஆனால் அதிலே வாழ்பவர்களாக அவர்களை மாற்ற முடியாது.  ஏம்மைப் பொறுத்தவரை சொல்வதும் எத்திவைப்பதுமே எமக்குரியதாகும்.  நேர்வழியிலே வாழ வைப்பவன் இரட்சகனாகிய அல்லாஹ் மாத்திரம்தான்.  


அல்லாஹ்தஆலா நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கிக் கூறுகிறான் 

"நபியே உமக்கு எத்திவைப்பதைத் தவிர வேறொரு கடமையும் இல்லை. "


தனது தூதருக்கே அல்லாஹ்தஆலா இதனை கூறியிருக்கிறான் என்றால் எமக்கு அதில் இன்னுமொரு கடமை இருக்க முடியுமா?  எனவே, எத்திவைப்பது மட்டுமே எமது கடமையாகும். ஏத்திவைக்கும் கடமையை நபியைப் பின்பற்றிச் செய்பவன் எத்திவைக்கும் விடயத்தை தூய்மையான முறையில் நிரூபித்து பஸிரா எனும் தெளிவுடன் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு எத்திவைத்தார்களோ அதே வழிமுறையில் தெளிவாக எத்திவைப்பவனாக இருப்பான்.  ஏத்திவைக்கும் விடயத்தில் ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  அதாவது நாம் எத்திவைக்கும் இந்த மார்க்கம் இரட்சகனாகிய அல்லாஹ்வின் மார்க்கமாகும்.  அவன் மிகத் தூய்மையானவன்.  தூய்மையானதொரு மார்க்கத்தை நாம் சுமந்து செல்கின்ற போது அதிலே நாம் எமது ஆசைக்கேற்பவும் இஷ்டத்திற்கேற்பவும் ஒன்றைக் கலந்து விட்டோமென்றால் அது நாம் அல்லாஹ்விற்கு அவனது மார்க்கத்திற்கும் செய்யும் மிகப் பெரிய அநியாயமாகும்.  நீங்கள் இன்னுமொரு மனிதனுடைய சொத்தை வைத்திருந்தால் அதனை மிகவும் கவனமாக பாதுகாத்து அதனை அவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பீர்கள்.  ஊங்கள் தோழரிடத்தில் உங்களுக்கு அபகீர்த்தி ஏற்பட்டு விடும் என்று பயந்து நீங்கள் அந்த அமானிதத்தைப் பேணி நடந்து கொள்வீர்கள்.  ஆனால் இரட்சகனான அல்லாஹ்வின் விடயத்தில் இழிவான முறையில் நடந்து கொள்வது எமக்கு தகுமான ஒன்றாகுமா?  இரட்சகனுடைய மார்க்கத்தைச் சுமந்தவர்களாக நாம் முன்வந்த பின் அதிலே ஒரு கவனமும் பயமும், தெளிவும் இல்லாமல் முந்திவிட்டோமென்றால் அது நாம் இரட்சகனான அல்லஹ்வுக்குச் செய்கின்ற அநியாயமாகும.  இவ்வாறு நடந்து கொண்டால் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நாம் பதில் கூற முடியுமா?  


மறுமையில் அல்லாஹ் எம்மைப் பார்த்து நீ எனது மார்க்கத்தை இவ்வாறெல்லாம் சொன்னாயே? இந்த விடயங்களையெல்லாம் உருவாக்கினாயே?  இதனையெல்லாம் தடுத்து விட்டாயே?  என்று அல்லாஹ் வினவும் நேரத்தில் எம்மால் அதற்கு பதிலளிக்க முடியுமா?  அதன் பின் வருகின்ற விளைவுகளை தாங்க முடியுமா?  அதிலிருந் தப்ப இயலுமா?  எனவே எமது கடமையில் நாம் அல்லாஹ்விற்காக மட்டும் தூய்மையாகச் செய்பவர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இங்கு நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.  


இதன் ஒரு அடிப்படையை அல்லாஹ் தன் தூருக்குக் சொல்லிக் கொடுக்கின்றான்.  


"வமா அன மினல் முஷ்ரிகீன்......"


இணை வைப்பதில் நானும் ஒருவனல்ல.  


இந்த வசனம் கூறுவது போல நாமும் இதில் இணை வைப்பதில் இருந்து தவிhந்து கொள்ள வேண்டும்.  


சகோதர, சகோதரிகளே !


இணைவைப்பதென்பது, சிலைகளுக்கு ஸ{ஜுது செய்வதோ, கப்றுகளில் உதவி கேட்பமோ மட்டுமல்ல.  ஆம் !  நிச்சயமாக இவைகளும் இணை வைப்பதாகும்  இதற்கும் மேல் இன்னும் எத்தனையோ விடயங்கள் இணை வைப்பாக இருக்கின்றன.  அல்லாஹ்வின் சட்டத்தோடு எமது சட்டத்தைக் கலப்பதும் ஓர் இணை வைப்பாகும்.  அல்லாஹ் சொல்லாதவற்றையும் மார்க்கத்தில் சேர்த்துக் கூறுவதும் ஒரு இணை வைப்பாகும்.  அல்லாஹ் சொன்னதை விட்டுவிட்டு மக்களுடைய விளக்கங்களை வளர்பதற்கு முயற்சி செயவதும் ஒரு இணை வைப்பாகும்.  இதன் அடிப்படையில் தான், இன்று மார்க்கத்தின் பெயரால் இயக்கங்களை வளர்க்கும் நோக்கிலும் இன்னும் எத்தனையோ விடயங்களை வளர்ப்பதற்கும் பலர் முயற்சி செய்கிறாhகள்.  இவையனைத்தும் இணைவைப்பன்று வேறில்லை.  


சகோதர, சகோதரிகளே !


இன்று நான் உங்கள் முன் அழைப்புப் பணியின் அவசியத்தையும் அதன் வரம்புகளையும் பற்றி எத்திவைத்ததற்கு இன்று அல்லாஹ் இறைவன் எனக்குக் கூலியைத் தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்.  நான் இதனை எத்திவைத்ததன் காரணம் அது எனது கடமையாக இருந்ததினாலாகும்.  உங்கள் முன் தெளிவாக அதனை எத்திவைப்பது எனது கடமையாகும்.  அவ்வாறு நான் சொல்லத் தவறிவிட்டேனென்றால் இதற்கு அல்லாஹ்விடம் நான் பதில் கூறவேண்டியிருக்கும்.  நான் இதனை எத்திவைத்த பின் உங்கள் கடமையை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.


அழைப்புப் பணியின் அவசியத்தை விளங்கிய பின்னர் அதன் மீதான எம்மில் ஒவ்வொருவரினது பங்களிப்பையும் அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி வணங்குவதில் எம்மில் ஒவ்வொருவரினதும் பங்களிப்பையும் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.  


அழைப்புப் பணியானது வெற்றி பெறுவதற்கு கௌரவமும், பெயரும், பட்டமும் தேவைப்படுவதில்லை.  அதன் வெற்றிக்கு அல்லாஹ்வின் திருப்தியே அவசியமானதாகும்.  அல்லாஹ் நாடிவிட்டானென்றால் "குன்" என்ற வார்த்தை அவனுக்குப் போதுமானதாகும்.  அவன் ஆகுக என்று கூறிவிட்டால், சொத்துக்களும், மதிப்புக்களும் உடனே வந்துவிடும்.  தூய்மையான மார்க்கம் தலைதூக்க முடியாததன் காரணம் எமது பங்களிப்பில் உள்ள குறைபாடாகும்.    எமது பங்களிப்பு எவ்வளவு குறைவாக இருக்குமோ அவ்வளவுக்கு அல்லாஹ்வின் உதவியும் குறைவாகவே கிடைக்கும்.  இந்தத் தூய்மையான அழைப்புப் பணி வளராதிருப்பதற்கு எமது குறைபாடே காரணமாக இருக்கிறது.  மாறாக அது வேறு யாருடைய குறையுமல்ல.  அழைப்புப் பணியின் அவசியத்தை அல்லாஹ் அறியாதவன் அல்ல என்ற விடயத்தை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.  அவன் அதற்கு உதவி செய்யாதிருப்பவனல்ல.  இருந்தாலும் அவன் அதற்கு எப்போது உதவி செய்வானென்றால்

 “நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்.  இன்னும் உங்களை பூமியில் உறுதியாக ஆக்கியும் வைப்பான்.”

        

இதனை அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்;.  அவன் கொடுத்த வாக்கில் அவன் ஒருபோதும் குறை செய்பவனல்ல.  எனவே எங்களுடைய அழைப்புப் பணியின் வழிமுறையை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாக அமைத்துக் கொண்ட மக்களாக நாம் இருந்தால் இதில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.  இருப்பினும் அந்த வெற்றி பல சோதனைகளின் பின்புதான் கிடைக்கும். நாம் சரியாக நடந்து கொள்ளும் மக்களாக இருந்தால் அல்லாஹ்வுடைய "குன்" (ஆகுக) என்ற வார்த்தையின் பின் அவனுடைய உதவியை எம்மைவிட்டும் தடுப்பவர் யாருமில்லை.