[பிரிவுகள்]

வெற்றிபெற்ற கூட்டத்தினர்

வெற்றிபெற்ற கூட்டத்தினர், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்கள் புகழ்ந்து சொன்ன கூட்டம் இவர்கள்தான்

" எப்பொழுதுமே என்னுடைய ஒரு கூட்டம் சத்தியத்தில் வெளிப்படையாக இருப்பார்கள். யாரெல்லாம் அவர்களுக்கு முரணாக ஏமாற்ற முயற்சி செய்வார்களோ இதனால் அவர்களுக்கு ஒரு குறையும் நடக்காது கியாம நாள் வரும் வரை "

அவர்கள்தான் வெற்றிபெற்ற கூட்டம். அவர்கள் நபியும் அவருடைய ஸஹாபாக்களும் இருந்த வழிமுறையில் இருப்பார்கள்.

" என்னுடைய கூட்டம் 73 பிரிவுகளாகப் பிரியும். எல்லாம் நரகத்திற்கு ஒன்றைத் தவிர "
எ‌ன்ற நபிமொழியில் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்கள் குறிப்பாகவும் அந்த ஒரு கூட்டத்தின் வரைவிலக்கணத்தையும் எடுத்துக் காட்டினார்கள்.  இதை நாம் அதிகமாகவோ மிகைப்படுத்தியோ அல்லது தான்தோன்றித் தனமாகவோ சொல்லவில்லை. மாறாக இவையெல்லாம் குர் ஆன் சுன்னாவில் வ‌ந்த விடயங்களாகும். வரலாறு இத‌ன் சாட்சியாகும். மேலும்  இவர்களின் வார்த்தைகளும், நிலைப்பாடுகளும், நூல்களும் சாட்சிகளாகும்.

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا


மேலும், இதற்கு அஹ்லுல் ஹதீஸ் நீங்கள் யாவரும் ஒ‌ன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய வேதமாகிய கயிற்றைப் பலமாக
பறறிப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் நீங்கள் பிரிந்து ‌விட வேண்டாம்  ( அல் குர் ஆன் 3:103 )
மேலே குறிப்பிட்ட குர் ஆன் வசனத்தை இவர்கள் எப்பொழுதுமே தங்கள்  மனதில் நிறுத்தி செயற்படுவார்கள்
வெற்றிபெற்ற கூட்டத்தினர், தமது வணக்கங்களிலும், நடைமுறைகளிலும், வாழ்க்கையின் ஏனைய விவகாரங்களிலும் ரஸுலுல்லாஹி صلى الله عليه و اله و سلم‎ அவர்களுடைய ஸுன்னாவை உயிர்ப்பிப்பார்கள். நபி صلى الله عليه و اله و سلم‎ அவர்கள் பின்வருமாறு கூறியதற்கமைவாக அவர்கள் மக்களுக்கு மத்தியில் அபூர்வமானவர்களாகவே இருப்பார்கள்.


‘இஸ்லாம் அபூர்வமாகவே ஆரம்பித்தது. எவ்வாறு ஆரம்பித்ததோ, அதே நிலைக்கு அது மீளும். அவ்வாறான காலத்திலுள்ள அபூர்வமான அம்மக்களுக்கு நல்வாழ்த்துக்கள் உண்டாகட்டும்’ ஆதாரம்: முஸ்லிம்.