[நிகாஹ் உரைகள்]மனிதனை படைத்த அல்லாஹ், அந்த மனிதனின் பலம் பலவீனம் அனைத்தையும் உணர்ந்து மனிதனின் ஆசைகளுக்கு அனுமதியளிக்கும் அதே நேரத்தில், ஆசை அளவுகடந்து சென்றுவிடாமல் இருப்பதற்கான கடிவாளத்தையும் போடுகிறான். அந்தவகையில் ஆண்களுக்கு நான்கு திருமணம் வரை செய்வதற்கு அல்லாஹ் அனுமதியளிக்கிறான்.

‘திருமணம் எனது வழிமுறை (சுன்னத்), எவர் எனது வழிமுறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்’ என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)


மணந்துகொள்ளுங்கள்! ஏனெனில், இந்தச் சமுதாயத்திலேயே சிறந்தவர் ஆன முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமான பெண்களை மணமுடித்தவராவர் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு, கூறினார்கள்.’ அறிவிப்பவர்: ஸயீத் இப்னு ஜுபைர் ரஹீமஹுல்லாஹ் நூல் புகாரி


திருமணம் என்பது நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத் என்பதால், அவர்கள் எவ்வாறு திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினார்களோ அல்லது செய்து காட்டினார்களோ அப்படிச் செய்வது தான் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றியதாக ஆகும்.


'(விசுவாசிகளே ! உங்களுக்குப் பல மனைவியர் இருந்து, உங்கள்) மனைவியரிடையே (முற்றிலும்) சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது' (4 : 129 )


'உங்களுக்கு விருப்பமான பெண்களை - இரண்டோ, மூன்றோ, நான்கோ - மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)' (4 : 3 )


திருமணப் பருவம் வந்துவிட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும்

எவருக்கு திருமணப் பருவம் வந்துவிட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவரது கண்களுக்கும், வெட்க ஸ்தலத்திற்கும் அரணாகும். எவருக்குத் திருமணம் செய்ய சக்தி இல்லையோ அவர் நோன்பு நோற்கட்டும்.' அறிவிப்பு : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு , ஆதாரங்கள் : புகாரி, முஸ்லிம், 


'மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும்.' அறிவிப்பு : அபூஹூரைரா ரலியல்லாஹு அன்ஹு , ஆதாரங்கள் : திர்மிதி, ஹாகிம், முஸ்னத் அஹ்மத்.


பெண்ணை பார்த்துக் கொள்வீராக

ஒரு நபித்தோழர் ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தான் ஒரு மதீனத்து (அன்சார்) பெண்ணை மணமுடிக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினார். நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீர் அப்பெண்ணை நேரில் கண்டீரா? எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர் இல்லை என்றார். நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீர் சென்று பார்த்துக் கொள்வீராக! எனக் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா ரலியல்லாஹு அன்ஹு ஆதாரம்: முஸ்லிம், 


நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.1. அவளுடைய செல்வத்திற்காக 2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளுடைய அழகிற்காக 4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும் என்று இறைத்தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.புகாரி


இஸ்லாத்தின் சட்டப்படி ஒரு ஆண் 4 நிகாஹ் வரை செய்யலாம். 2 ,3 ,4 , நிகாஹ் அடிப்படையைப் பற்றி ஆழமாக நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இந்த பலதார நிகாஹ்வை கடுமையாக விமர்சிக்கும் முஸ்லிம் அல்லாதோரின் வாழ்க்கையையும், அவர்கள் படும் சிரமங்களையும், துன்பங்களையும், அவர்கள் புரியும் குற்றங்களையும், செய்யும் அசிங்கங்களையும் இந்த நேரிய அடிப்படையிலிருந்து விலகியதால், அவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்களையும், துயரங்களையும் ஆழ்ந்து சிந்தித்தால், ஆராய்ந்து பார்த்தால் பலதார நிகாஹ் மிக அவசியமானதும், இன்றியமையாததும், மிகச் சரியான தீர்வு எனவும் புரிந்து கொள்ளலாம். அறிவுடையோருக்கு இதில் நல்லதோர் படிப்பினை உண்டு.


இத்திருமணங்கள் மூலம் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நல்லுறவுகளை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்று முஸ்லிம்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள்.பல மாறுபட்ட வமிசங்களிலிருந்து நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது திருமணங்களைச் செய்து அந்த வமிசங்களுக்கிடையே உள்ள பகைமையையும் கோபத்தையும் தணிக்க முயற்சித்தார்கள்.


வறுமையிலும் நெருக்கடியிலும் வாழ்ந்த போதிலும் நபி சல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது மனைவிமார்களுடன் மிக அழகிய முறையில் உயர்ந்த பண்புகளுடனும் சிறந்த குணங்களுடனும் வாழ்க்கை நடத்தினார்கள். நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களும் அவ்வாறே உயர்ந்த குணங்களும் சிறந்த பண்புகளும் பெற்றிருந்தனர். பொது மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வறுமையில் வாழ்ந்தும், நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பணிந்து, பணிவிடை செய்து நல்ல மனைவியர்களாகத் திகழ்ந்தார்கள்.


ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்: “நாங்கள் இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்து விட்டோம். நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீடுகளில் எதுவும் சமைக்கப்படவில்லை.


” உர்வா, ரஹீமஹுல்லாஹ் அவர்கள் “நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள்? என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா விடம் கேட்டார். அதற்கு, “பேரீத்தம் பழங்களையும் தண்ணீரையும் உண்டு வாழ்ந்தோம்” என ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)


(பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யும் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் (எனது வாழ்நாளு)க்குப் பிறகு நான்விட்டுச் செல்லவில்லை என்று இறைத்தூதர் சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என உஸாமா இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹா அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி)


இன்னும் நிகாஹ்வுக்கு உடலுறவு செய்யும் வலிமை மட்டுமே நிபந்தனையாக வைக்கப்பட்டுள்ளது தவிர சொத்து செல்வம் , முதல் மனைவியின் அனுமதி போன்றவைகள் அல்ல . திருமணத்திற்கு வலிமை என்ற விடயத்திற்கு " உடலுறவு செய்யும் வலிமை " என்று இமாம் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தப்ஸீர் , தப்ஸீர் இப்னு கஸீரில் பதிவு செய்யப்பட்டுள்ளது .


திருமணத்தால் வறுமை அகலும்

உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்கு திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)


முதல் மனைவியின் அனுமதி தேவையில்லை

மேலும், இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் முதல் மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் திருமணம் செய்யவேண்டுமென்றால், அதற்கு நபி  சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஒவ்வொரு திருமணத்தின் போதும் தமது முந்தைய மனைவியரிடத்தில் இவ்வாறு சொல்லி விட்டுத்தான் செய்தார்கள் என்று ஆதாரத்தை வைக்க வேண்டும்.


ஆனால் அவ்வாறு வைக்க முடியாது. ஏனெனில், நபியவர்கள் போர்களத்திலும், பயணத்திலும் கூட சில மனைவியரை திருமணம் செய்துள்ளார்கள். திருமணம் செய்து வந்ததன் பின் தான் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏனைய மனைவிமார் அறிந்தும் கொள்கின்றனர். எனவே இரண்டாம் திருமணம் செய்யும் கணவன் திருமணத்திற்கு முன்பே மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செய்யவேண்டும் என்ற வாதத்திற்கு எந்த ஆதாரமுமில்லை.


கன்னிப் பெண்ணை தேர்ந்த்தெடுப்பது

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவித்தார் (ஒருமுறை) நான் நபி் சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் இறங்குகிறீர்கள். அதில் (கால்நடைகளினால்) உண்ணப்பட்டுப்போன ஒரு மரத்தையும் உண்ணப்படாத ஒரு மரத்தையும் காண்கிறீர்கள். இந்த இரண்டில் எந்த மரத்தில் தங்கள் ஒட்டகத்தை மேயவிடுவீர்கள்? கூறுங்கள்!'' என்று கேட்டேன். 


நபி் சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'எதில் ஏற்கெனவே மேயவிடப்படவில்லையோ அதில்தான் (நான் என் ஒட்டகத்தை மேய்ப்பேன்)'' என்று பதிலளித்தார்கள். தம்மைத் தவிர வேறு எந்த கன்னிப் பெண்ணையும் இறைத்தூதர் சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணக்கவில்லை என்ற கருத்தில் தான் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா இவ்வாறு கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)


"குழந்தைப்பேறு அதிகமுள்ள பாசமிக்க பெண்ணை நீங்கள் மணந்து கொள்ளுங்கள். ஏனெனில் மறுமை நாளில் எல்லாச்சமுதாயத்தாரிலும் நீங்களே அதிக எண்ணிக்கை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்''

(அறிவிப்பாளர்மஅதில் பின் யசார் ரளியல்லாஹு அன்ஹுநூல் அபூதாவுத், நஸயீ)


'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசம் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்'


நமது அறிவுக்கு சரியென்று தோன்றினாலும் அல்லது தவறென்று தோன்றினாலும் அல்லாஹ் ஒரு கட்டளையிட்டு விட்டால் அதனை நமது அறிவோடு ஒப்பிட்டு பார்க்காமல் அதனை அப்படியே பின்பற்ற வேண்டியது தான் நம்முடைய கடமையென்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் புரிந்து கொள்ளமுடிகின்றது.


இவ்வாறு நான்கு மனைவிகள் வைத்துக்கொள்வது மார்க்கத்தில் ஆர்வம் ஊட்டப்பட்ட நபி வழியாகும். தனது இயலாமையின் காரணமாக ஒருவன் செய்யாமல் இருப்பது , அது அவனைப்பொருத்தது. ஆனால் மாறாக
பலதார மனத்தை ஆர்வம் ஊட்டுபவர்களையும், அதனை நடைமுறை
செய்பவர்களையும் எதிர்ப்பதும், கேவலமாக பேசுவதும் நபி வழியை
மறுக்கும் செயலான குப்ரில் கொண்டு போய் சேர்க்கும்.   
இஜாப் கபூல் என்று வார்த்தைகளால் கூறுவது நபி வழியில் இல்லை

நான் எனது மகளை இவ்வளவு மஹருக்கு அவளது பூரண சம்மதத்துடன் உங்களுக்கு மணமுடித்து தருகிறேன்’ என்று பெண்ணின் தந்தையோ அல்லது பெண்ணின் பொறுப்பாளரோ வார்த்தைகளால் கூறுவதும், மணமகன் அதை ஏற்றுக் கொள்வதாகக் வார்த்தைகளால் கூறுவது நபி வழியில் ஆதாரமில்லாத விடயமாகும். அதாவது சுருக்கமாக இஜாப் கபூல் என்று வார்த்தைகளால் கூறுவது நபி வழியில் சொல்லபடாத விடயமாகும்.

அண்மையில் [2011Sep] இது சம்பந்தமாக பலகத்துரையில் ஒரு சர்ச்சை கிளப்பப்பட்டு ஒரு துண்டு பிரசுரம் வெளியானது. அது வாசிக்கப்பட்டு , பின்னர் மறுபளிக்கப்பட்டது. அதன் ஆடியோ லிங்க் கீழே 
  • எழுத்து மூலமான மறுப்பும் 1 2 3 4 


ஒரு பெண்ணை மணமுடித்ததும் அவளது முன்னெற்றி ரோமத்தை பிடித்திக் கொண்டு மணமகன் துஆ செய்ய வேண்டும்.

:

                                 اللهم إني أسألك خيرها وخير ما جبلت عليه

وأعوذ بك من شرها وشر ما جبلت عليه .


'அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக ஹைரஹா வஹைர மா ஜபல்த்த அலைஹி வ அவூது பிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மாஜபல்த்த அலைஹி' 


பொருள்: இறைவா! இப்பெண்ணிடமிருந்து (எனக்கு) நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், இப்பெண்ணின் இயல்புகளிலிருந்து எனக்கு நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், உன்னிடம் வேண்டுகிறேன். மேலும் இப்பெண்ணிடமிருந்து தீங்குகள் ஏற்படாமலிருக்கவும் உன்னிடம் வேண்டுகிறேன். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர்பின் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆதாரம்: ஹாகிம்

  • Bro Rushdy Badurdeen - பல திருமணங்களும் அது பற்றிய உபதேசமும் 1 2 

ஒன்று சேர்ந்த பின் ஓதும் துஆ / வலிமா
வி
ல்  
மணமக்களுக்காக ஒதுவது


بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير 

பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...


பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! என்று கூறுவார்களென அபூஹூரைரா ரலியல்லாஹு அன்ஹு அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா.


அனஸ் ரலியல்லாஹு அன்ஹூ அறிவித்தார் கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால் அவளிடம் ஏழு நாள்கள் தங்குவார். கன்னி கழிந்த பெண்ணை ஒருவர் மணந்திருந்தால் அவளிடம் மூன்று நாள்கள் தங்குவார். இதுவே நபிவழியாகும். அறிவிப்பாளர்களில் ஒருவர் (காலித், அல்லது அபூ கிலாபா) கூறுகிறார்: இதை நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே கூறினார்கள் என்று நான் சொன்னால் (அது தவறாகாது. எனினும், அனஸ் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களிடம் கேட்டதன்படி 'நபிவழி' என்று கூறியுள்ளேன்.) புகாரி


நபிவழியில் திருமண விருந்து என்று ஒன்று இல்லை. மணமகன் தரும் வலீமா விருந்து நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் காட்டித் தந்த விருந்தாகும். இன்று இந்த வலீமா விருந்து முன் கூடியே தீர்மானிக்கப்படுகிறது. இது நபி வழியும் இல்லை அத்தோடு தவறும் ஆகும். 


ஏனெனில், ஆணும் பெண்ணும் ஒன்று கூடிய பின் கொடுப்பது தான் வலீமா விருந்து. நிகாஹ் முடிந்தவுடன், அல்லது தீர்மானம் செய்யப்பட்ட திகதிக்கு முன் இருவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று யாராலும் நிச்சயமாக கூறமுடியாது. பல்வேறு காரணங்களினால் இந்த புது மனத் தம்பதிகள் ஒன்று சேர்வது தடைப்படலாம். 


எனவே, இந்த வலீமா திகதி முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட படியால் , ஏதோ காரணங்களினால் புது மனத் தம்பதிகள் ஒன்று சேராமல் இருந்தாலும் , வலீமா விருந்து கொடுத்து விடுகிறார்கள். இது தவறாகும். இன்னும் நபி வழிக்கு மாற்றமாகும். 


எனவே, நிகாஹ் திகதி குறிக்கப்பட்டு நிகாஹ் நடந்த பின், இருவரும் ஒன்று சேர்ந்த பின் மூன்று நாட்களுக்குள் வலீமா விருந்து கொடுப்பது தான் நபி வழியாகும். ஒன்று சேர்ந்ததன் பின் தான் வலீமா திகதி தீர்மானிக்கப் பட வேண்டும். அதுவும் மூன்று நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். இன்னும் விரும்பினால் பத்து நாட்களுக்கு தொடர்ச்சியாக இந்த வலீமா விருந்து கொடுக்கலாம்.  


நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுறுத்தினார்கள்:'நீங்கள் வலீமா வீருந்துக்கு அழைக்கபடுவீர்களேயானால், அவ்வழைப்பை ஏற்றுச் சிறப்பளியுங்கள்.'  புகாரி


நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்: எந்த 'வலீமா' விருந்துக்கு செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் மறுக்கப்படுகிறார்களோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தவராவர். 


அறிவிப்பு: அபூஹூரைரா, இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹூம்)  புகாரி, முஸ்லிம்.


  • வீடியோ போட்டோ ,கலாச்சாரமும் அநாச்சாரமும் வாசிக்க