[உரைகள்]


அல் குர் ஆன் சுன்னாவை ஸஹாபாக்களின் விளக்கத்தின் அடிப்படையில் முன்  வைக்கப்பட்ட சொற்பொழிவுகள் இந்த பகுதியில் வரிசை படுத்தப்பட்டுள்ளன.  அல்லாஹ்வை தனித்துவப்படுத்தி  வணங்குவதன் அடிப்படையில் தன்னைத் திருத்திக் கொள்வதானது காடினமானதொரு காரியமென்று யாரும் சொல்ல முடியாது.  நாம் அல்லாஹ்வைத் தனித்துவப்படுத்தி வணங்குவது எமக்கு ஒருபோதும் கடினமாக இருக்கக் கூடிய ஒன்றல்ல.  மாறாக அது ஒரு இலகுவான காரியமாகும்.  

ஆனாலும் ய்த்தான் அல்லாஹ்விடம் “நான் ஆதமுடை மக்களை வலதாலும், இடதாலும், முன்னாலும், பின்னாலும் நின்று வழிகெடுப்பேன்” என்று வாக்குக் கொடுத்துவிட்டான். ய்த்தானின் இந்த வலையிலே சிக்கிக்கொண்டிருக்கும்  காரணத்தினால் நாம் ஏகத்துவத்தை நிலை நாட்டுவதிலே பின்வாங்குகின்றோம்.  

என்றாலும் ய்த்தான் இன்னுமொன்றையும் கூறிவி;ட்டான்.  அதுதான் “உன்னுடைய முஹ்லிஸான அடிமையைத் தவிர” (மற்ற அனைவரையும் வழிகெடுப்பேன்.  இதன் அடிப்படையில் நம்மிடம் இஹ்லாஸ் குறைவடைந்து விடுகின்ற காரணத்தினால் வழிகேட்டை அடைய நேரிடும் என்பதை உறுதியாக விளங்கிக்கொள்ளுங்கள்.  இஹ்லாஸில் நாம் உறுதியாக  இருக்கவில்லையென்றால்  அதாவது அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்வதில் நாம் உறுதியாக இருக்கவில்லையென்றால்  ய்த்தானின் வலையில் சிக்கி வழிகேட்டை அடைந்து விடுவோம்.  

மாறாக இஹ்லாஸுடன் நடந்து கொண்டோமையானால் எமது விடயத்தில் ய்த்தானுக்கு தலையிட முடியாது.  இங்கு இஹ்லாஸ்  (உளத்தூய்மை) தான் மிக முக்கியமானதாகத் திகழ்கிறது.  

எனவே, அழைப்புப் பணியை நாம் இஹ்லாஸுடன் சுமந்தால் நாம் ஒருபோதும்  வழிகேடுகளை சுமந்தவர்களாக இருக்கமாட்டோம்.  இன்னும் வழிகேடுகளை எம்மோடு சேர்த்துக்கொண்டு அழைப்புப் பணியை மேற்கொள்பவர்களாகவும் இருக்கமாட்டோம்.  பித்அத்களுக்கும் சார்பாகப் பேசுபவர்களாக இருக்கமாட்டோம்..  பித்அத்கள் வளர்வதற்கு  இடமளிப்பவர்களாகவும் இருக்கமாட்டோம்.  இன்னும் ஷிர்க்களுக்கும் சார்பாக செயற்படுபவர்களாகவும்  அதனை வளர்வதற்கு இடமளிப்பவர்களாகவும் நாம் இருக்கமாட்டோம்..


எங்கெல்லாம் இந்த முஹ்லிஸான அடிமை இருப்பானோ அங்கெல்லாம் இந்த ஷிர்க்குகளுக்கு எதிர்ப்புகளும் தடைகளும் இருப்பதைக் காண்பீர்கள்.  பித்அத்களுக்கு மறுப்பளிக்கும் குரல்களைக் கேட்பீர்கள்.  அல்லாஹ்வின் இந்த மார்க்கத்திற்கு என்னென்ன குழப்பங்கள் வருகின்றதோ அவைகளுக்கு பதில் கொடுப்பவனாக  நீங்கள் அவனைக் காண்பீர்கள்.  


ஒரு முஹ்லிஸான அடிமை அல்லாஹ்வின் மார்க்கத்தில்  நுழைகின்ற ஷிர்க்குகளுடனும், பித்அதகளுடனும் நடந்துகொள்ளும் முறை இவ்வாறுதான் இருக்கும்.