[உஸுல் அத் தஃவதுஸ் ஸலபிய்யாவும், நேர்வழியின் தனித்துவமான பண்பும்]

உஸுல் அத் தஃவதுஸ் ஸலபிய்யாவும், நேர்வழியின் தனித்துவமான பண்பும்

நானும் ஒரு ஸலபியாக வேண்டும் என்று ஆசையினால் அத் தஃவதுஸ் ஸலபிய்யாவை எத்தனையோ உள்ளங்கள் நேசிக்கின்றன . யாரெல்லாம் இந்த “ஸலபி மன்ஹஜ்” அல்லது “ஸலபி பாதை”யினை உண்மையாகவே பின்பற்றவதற்கு துடிக்கின்றார்களோ, அந்த மக்கள் இந்த சலபி மன்ஹஜ்ஜின் அனைத்து அடிப்படைகளையும் விளங்கி ஸலபி மன்ஹஜ்ஜை , பின்பற்றும் வழிமுறையாக ஆக்கிக்கொள்ள முற்படுவார்கள். அந்த அடிப்படையில் சலபி மன்ஹஜ்ஜின் அடிப்படைகளை அறிந்துக் கொள்வோம் . 

முதன்மையாக 

 “  السلفية 

– என்பது, எவருடைய தனிப்பட்ட உடமையோ கருத்தோ அல்ல. இன்னும் அது எந்தவொரு இடத்தினதும் உடமையோ கருத்தோ அல்ல. மாறாக அது நபி சல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களின்  அழைப்புப் பணியாகும். 

அரபு மொழியில்

 “ سلف  ” 

என்றால் முன்சென்றவர்கள். அதாவது எங்களுக்கு முன் சென்றவர்களே 

“ سلف  ” 

ஆகும். இவர்களுள், முதன்மையானவர்கள் - நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கல்வி கற்ற மாணவர்களான ஸஹாபா ரில்வானுல்லாஹி அஜ்மயீன்கள் ஆவார்கள். அவர்களால் இந்த மன்ஹஜ்ஜை இந்த உம்மத்தில் நிலைநாட்டுவதற்காக அன்றைய தினத்திலிருந்து ஆரம்பித்த அழைப்புப் பணியே 

“ الدعوة السلفية 

அத் தஃவதுஸ் ஸலபிய்யா ” ஆகும்.

 “ الدعوة السلفية 

வின் தலைவர் அருமை ரசூல் முகம்மது சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆவார்கள். அவர்களைத் தவிர்ந்து வேறு எவருக்கும் இந்த தஃவாவிற்கு தலைவராக முடியாது. ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடிருந்த காலம் முதல் கியாமத் வரைக்கும் முகம்மது ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தலைவராவார். 

“ الدعوة السلفية ” 

எந்த தனி மனிதனுடைய விளக்கமோ அல்லது தனியான வழிமுறையோ அல்ல. மாறாக, நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டிச் சென்ற வழிமுறையே 

“ الدعوة السلفية 

ஆகும். ரசூல் சல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களுடைய அழைப்பணியின் வழிமுறையினையும் அதற்கு முரணான  வழிமுறையினையும், ரசூல் சல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலேயே உம்மதுல் இஸ்லாமியாவிற்கு எச்சரித்து, எதிர்காலத்தில் உம்மத்துல் இஸ்லாமியாவில் தோன்றும் நபி  வழிக்கு முரணான வழிகெட்ட கூட்டங்களின் அழைப்புப்பணியின் வழிமுறைகளையும் அடையாளம் காட்டிவிட்டுச் சென்றுள்ளார்கள். 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்கு முன்னால் ஒரு நேர்கோட்டை கீறினார்கள்   . அதன் வலதிலும் இடதிலும் பல கோடுகளை 
கீறினார்கள். தனக்கு முன்னால் வரைந்த நேர்கோட்டில் தனது விரலை வைத்து சூரத்துல் “அன்ஆம்” இன் 153 வசனத்தை ஓதிக் காட்டினார். “ ”  நிச்சயமாக இது நேராக உள்ள என்னுடைய வழியாகும். இதனையே நீங்கள் பின்பற்றங்கள். இன்னும், மற்ற வழிகளைப் பினபற்றாதீர்கள். அவை, அவனுடைய வழியில் இருந்து உங்களைப் பிரித்து விடும். 
என்ற அல்குர்ஆன் வசனத்தைக் ஓதிவிட்டு , ஏனைய அனைத்துப் பாதைகளிலும் ஓர் ஷைத்தான் அழைப்பாளராக இருக்கின்றான் என்று எச்சரிக்கையும் செய்துள்ளார்கள் . (முஸ்னத் அஹ்மத் )

ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறை “

“ الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ” 


என்ற நேரான பாதையாகும். அதனைத் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாதைகளின் வழிமுறைகளைப் பற்றிய ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தீர்ப்பு என்ன வென்றால் 

“ شيطان يدعو إليه ” 


அதாவது ஷைத்தான் அதனுடைய அழைப்பாளராக இருக்கின்றான் என்பதாகும்.  நேர்வழியென்பது நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்த பாதை ஆகும் . 


எனவே, இந்தப்பாதையினை விரிவாக ஆராய்ந்தால், 
அவ்ப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அஹாதீஸ் பின்வரும் கிரந்தங்களில் காணப்படுகின்றன:


 •  இமாம் நஸாயி ரஹிமானுல்லாஹி அவர்களுடைய “சுனன் நஸாய் ”;, 
 •  இமாம் திர்மிதி ரஹிமானுல்லாஹி அவர்களுடைய “திர்மிதி”, 
 •  இமாம் அபுல் காஸிம் லாலகாயி ரஹிமானுல்லாஹி அவர்களுடைய “ஷரஹ் உசுல் இஹ்திகாதில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ”,
 •  இமாம் இப்னு அபீ ஆஸிப் ரஹிமானுல்லாஹி அவர்களுடைய “கிதாபுஸ் ஸுன்னா”,
 •  இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமானுல்லாஹி அவர்களுடைய “கிதாபுல் ஸுன்னா”,
 •  இமாம் முகம்மது இப்னு மர்வஸின் ரஹிமானுல்லாஹி அவர்களுடைய “கிதாபுல் ஸுன்னா”,
 •  இமாம் ஆஜுரி ரஹிமானுல்லாஹி அவர்களுடைய “கிதாபுல் ஷரீயா”,
 •  இமாம் அப்துல் காதர் ரஹாவி “கிதாபுல் பரக்குல் பையின பிரக்”,
 •  இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹிமானுல்லாஹி அவர்களுடைய “முஸ்னத் அஹ்மத்”
 மேலும் ஏனைய ஹதீஸ் கிரந்தங்களிலும் அறிவித்த ஹதீஸ் பின்வருமாறு: 
ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

 • யூதர்கள் எழுபத்தி ஒரு கூட்டமாக பிரிந்தார்கள். அனைத்தும் நரகிற்கு ஒன்றைத் தவிர.
 • கிறிஸ்தவர்கள் எழுபத்தி இரண்டாக பிரிந்தார்கள். அனைத்தும் நரகிற்கு ஒன்றைத் தவிர. 
 • முஹம்மதின் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக ,  எனது  உம்மத் எழுபத்தி மூன்று கூட்டமாகப் பிரியும்.
அன்றைய தினம் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கூறப்பட்ட இவ்வார்தை ஏதிர்காலத்திணை பற்றிய  வார்த்தையாகும். அதாவது 
“எனது உம்மத் எழுபத்தி மூன்று கூட்டமாகப் பிரியும். அனைத்தும் நரகிற்கு ஒன்றைத் தவிர. அப்பொழுது ஸஹாபாக்கள் வினவினார்கள்: யா ரசூலுல்லாஹ்! அந்த சுவனம் செல்லும் பாதையில் செல்லும் கூட்டம் யார் ? என்பதாக ! 
அதற்கு ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெயரினையோ அல்லது பட்டத்தினையோ குறிப்பிடாமல் , மாற்றமாக அக்கூட்டத்தின் பண்பினைக் குறிப்பிட்டார்கள்;. 
அதாவது

 “  “

 -  அல் ஜமாஆ” - அந்த கூட்டம். என்று ஓர் குறிப்பிட்ட கூட்டத்தை குறிப்பிட்டார்கள். இன்னுமொரு ரிவாயத்தில்

 “ ما أنا عليه وأصحابي اليوم “

 இன்றைக்கு நானும் எனது தோழர்களும் எந்நிலைப்பாட்டில் உள்ளோமோ, அந்நிலைப்பாட்டில் யாரெல்லாம் காணப்படுவார்களோ, அவர்கள் ஜென்னத் நுளைவார்கள் என்று அக்கூட்டத்தினருடைய பண்பினைக் குறிப்பிட்டார்கள். 
யூதர்கள் எழுபத்தியொரு கூட்டமாகப் பிரிந்தார்கள் . கிறிஸ்தவர்கள் எழுபத்தி இரண்டாகப் பிரிந்தார்கள் . எனது உம்மத் எழுபத்தி மூன்றாகப் பிரியும் என்றார்கள். 


யூதர்களைப் பற்றிக் கூறும் போது, எழுபத்தி ஒன்றாகப் பிரியும் ஒன்றைத் தவிர என்றார்கள். அவ்வொரு கூட்டம் யாரென்றால் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருந்தவர்களாகும். அவர்கள் தான் உண்மையான அழைப்புப்பணியுடன் மார்க்கத்தை மாற்றாமல், இறக்கப்பட்ட வேதத்தை பின்பற்றியவர்கள். அவருடைய இறப்பிற்கு பின்னர் அந்த கிதாபை மாற்றி, மார்கத்தை மாற்றியவர்கள் அனைத்தும் நரகிற்கு ஒன்றைத் தவிர. அவ்வொன்றாவது, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன், அவர்கள் கூறிய பிரகாரம் இறக்கப்பட்ட மார்க்கத்தை ஏற்றுப் பின்பற்றிய கூட்டமாகும். இவ்வறிவித்தல் “கிதாபுஸ் ஸுன்னாவிலும், இமாம் அஷ்ஷைபானியின் ரஹிமானுல்லாஹ் அவர்களுடைய நூல்களிலும் ஸஹீஹான அறிவிப்பாலர்களுடன் இருப்பதை காண முடியும். 

நஸாராக்கல் (கிறிஸ்தவர்கள்) எழுபத்தி இரண்டாகப் பிரிந்தார்கள், அனைத்தும் நரகிற்கு ஒன்றைத் தவிர. அந்த கூட்டம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் உயிருடன் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவருடைய வார்த்தைகளைப் பின்பற்றி, அவருடைய அழைப்புப்பணியில் ஒன்று சேர்ந்து, இறக்கிய நூலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாமல் பின்பற்றிய கூட்டம் ஆகும் . ஆனால் அவரை அல்லாஹ் ஏழு வானத்திற்கு மேல் உயர்த்திவிட்டபோது, அவர்கள் வேதத்தினை மாற்றி, அழைப்புப்பணியினையும் மாற்றி விட்டார்கள்.  எனவே,  அனைத்து மக்களும் நரகிற்கு ஒன்றைத் தவிர. 


இதுவே வேதங்கள் இறக்கப்பட்ட கூட்டங்களுடைய நிலைப்பாடாகும். எவர்கள் இறக்கப்பட்ட மார்கத்தின் உண்மை நிலைப்பாட்டடில் இருந்தார்களோ, அவர்கள் தப்பிவிட்டார்கள். ஆனால் இறக்கப்பட்ட மார்கத்தில் எவர்கள் மாற்றம் மேற்கொண்டார்களோ அவர்கள் அனைவரும் நரகை சென்றடைவார்கள். 

இவைகளுக்குப் பின்னால் தோன்றியது தான் எங்களுடைய உம்மத். எங்களுடைய உம்மத்தினரைப் பற்றிக் கூறும் போது , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிர் காலத்தினைப் பற்றியே கூறினார்கள். ஏனென்றால், நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னர் நடைபெற இருக்கும் காரியங்களாகும். 


யூத நஸாராக்கள் பற்றி சென்ற காலத்தினையே குறிப்பிட்டார்கள். நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத் விடயத்தில் , அவர்களுடைய உம்மதின் எதிர்காலத்தினைப் பற்றிக் குறிப்பிடுகையில் “என்னுடைய உம்மத் எழுபத்தி மூன்று பிரிவுகளாகப் பிரியும் என்றார்கள் . அதாவது ஏனைய உம்மத்துக்கள் பிரிந்தவாறு தன்னுடைய உம்மத்தும் பிரியும் என்றார்கள் . ஆனால் மேலதிகமாக இன்னொரு பிரிவும் சேர்ந்து எழுபத்தி மூன்றாகப் பிரியும் என்றார்கள் . அவைகள் அனைத்தும் நரகில் ஒன்றைத் தவிர.  


எனவே , ஏனைய உம்மத்தினது சட்டமே ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்திற்கும் சட்டமாக அமைந்தது. அப்பொழுது ஸஹாபாக்கள் வழிகேட்டில் செல்லும் எழுபத்தி இரண்டினைப் பற்றி வினவாமல், மாறாக சரியான பாதையில் செல்லும் அந்த ஒரு கூட்டம் யார்? என்றே வினவினார்கள். ஏனென்றால் நேர்வழியான “ ஜன்னத் "செல்லும் பாதையினை புரிந்து கொள்வதற்காகும். 


இதற்கு ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பதில்: “  

“  “ 


அல் ஜமாஆ” என்பதாக இருந்தது.  இந்தக் கூட்டம். ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் போது அவர்களுடன் இருந்த அந்த ஸஹாபாக்களையே “ அந்தக்  கூட்டம்” என்று அடையாளம் காட்டினார்கள். 


ஏனெனில் இந்தப் பூமியில் அக்காலத்தில் “முஸ்லிம்” என்ற தகுதியுடன் ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களுடைய தோழர்களுமே வாழ்ந்தார்கள். எனவே, 

“  “

அல் ஜமா ஆ ” என்பது ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கிய கூட்டம் ஆகும். அக்கூட்டத்திணை சேர்ந்தவர்கள் ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவருடைய ஸஹாபாக்களும் ஆவார்கள்.

மேற்கூறியதையே இன்னுமோர் ரிவாயத் உறுதிப்படுத்துகின்றது. 

“ ما أنا عليه وأصحابي اليوم   ” – 

இன்றைய தினம் நானும் எனது தோழர்களும் எந்நிலைப்பாட்டில் இருக்கின்றோமோ, அந்நிலைப்பாட்டில் எவர்கள் உள்ளார்களோ அவர்கள் ஆவார்கள். அன்றைய தினம் எவ்வாறு இறக்கிய மார்க்கத்தை ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் , அவர்களுடைய ஸஹாபாக்களும் பின்பற்றினார்களோ, அவ்வழிமுறையில் எவர்கள் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் “ஜென்னத்” சென்றடைவார்கள். 


எனவே , அந்த வழிமுறையினைத் தவிர்ந்து அல்குர்ஆன் அஸ்ஸுன்னா என்று கூறி ஆதாரங்கள் நிருபிக்கிறோம் என்று கூறி அல்குர் சுன்னா விடயங்களை தாமாக சேகரித்து எடுத்துக் காட்டினாலும் அவர்கள் “ஜென்னத்” சென்றடைய மாட்டார்கள்; என்பது ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தீர்ப்பாகும்.

இதனையே மேற்கூறப்பட்ட அஹாதீஸ் விளக்குகின்றது. நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்கு முன்னால் ஒரு நேர்கோடடினை வரைந்தார். அதன் வலதிலும் இடதிலும் பல கோடுகளை வரைந்தார். தனக்கு முன்னால் வரைந்த நேர்கோட்டில் தனது விரலை வைத்து, சூரத்துல் “அன்ஆம்” இன் 153 வசனத்தை ஓதிக் காட்டினார்.  
” – நிச்சயமாக இது நேரானதாக இருக்க என்னுடைய வழியாகும். இதனையே நீங்கள் பின்பற்றங்கள். இன்னும், மற்ற வழிகளைப் பினபற்றாதீர்கள். அவை, அவனுடைய வழியில் இருந்து உங்களைப் பரித்து விடும் என்ற அல்குர்ஆன் வசனத்தைக் கூறி ஏனைய அனைத்துப் பாதைகளிலும் ஓர் ஷைத்தான் அழைப்பாளராக இருக்கின்றான் என்று எச்சரித்துள்ளார்கள். (முஸ்னத் அஹ்மத்); 

ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நேர் பாதையில் ஷைத்தான் அழைப்பாளராக இல்லை. ஆனால் ஏனைய பாதைகளில் ஷைத்தான் அழைப்பாளராக இருந்து மனிதனை நேர்வழியில் செல்வதைத் தடுத்து “ஜென்னத்” சென்றவடைவதைத் தடுக்கின்றான். இதுவே அவர்கள் “நரகம்” சென்றடைவதற்கான காரணமாகும். 


எனவே, ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் இருந்த பாதையை தவிர்ந்துக் கொண்டால் நேர் வழியை அடைய முடியாது. ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இக்கூற்றினை அல்லாஹ் சுபஹானஹுதாலா அல்குர்ஆனில் பல இடங்களில் நிரூபித்திருக்கின்றான். அவைகள் ஏற்கனவே அல் முமினீன் என்ற வாசகத்தினால் அல்குர் ஆனில் பாவிக்கப்பட்டிருப்பதை பார்த்தோம். 


இது ஷேக் யஹ்யா சில்மி அவர்களின் ஒரு பகிரங்க சொற்பொழிவின் ஒரு பகுதியின் எழுத்து வடிவமாகும். தந்தவர் உம்மு ருசைக்