[பிரயோசனமான கல்வியின் அடையாளமும் அதன் பிரதிபலனும் அதன் பிரதிபலிப்பும்]

  • பிரயோசனமான கல்வியின் அடையாளமும் அதன் பிரதிபலனும் அதன் பிரதிபலிப்பும்


நபிசல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்அறிவிக்கின்றார்கள்; நிச்சயமாக அளவிற்கு அதிகமாக சோதனைகளைச் சந்திக்கக் கூடியவர்கள் நபிமார்களாவார். அவர்களைப்பின் தொடரக் கூடியவர்கள் அவர்களை பின்தொடர்வர். 


இல்முடன் வாழக்கூடிய மனிதர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வுடைய சோதனை பலவடிவங்களில், பலதிசைகளில்; இருந்து ஏற்படும். அல்லாஹ்வைப் பற்றி அதாவது அவனுடைய அடிப்படைகளைத் தெரிந்து கொண்டுள்ளோம் என்றால் அதாவது ஷிர்க், குப்ர், நிபாக்; என்பவற்றை கற்றறிந்திருந்தால் அதனுடைய பிரதிபலன், அதனுடைய பெருபேறு இவ்வாறான சந்தர்ப்பங்களில் எம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் கற்ற கல்வியில் எவ்வித பிரையோசனமும் இல்லை. 

பிரையோசனமானகல்வி, “அல்மஹ்ரிபதுல் பிமா யுஷிப்புஹு வயர்லா” - அல்லாஹ்வின் திருப்தி எதில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும். அல்லாஹு சுபஹானஹுத்தாஆலா எதனை வெறுக்கின்றான், எதனைச் செய்தால் அவனுடைய கோபம் மேலோங்கும் என்பதை அவன் அறிந்து வைத்திருப்பான். 

ஏனென்றால், அல்லாஹ்வுடைய “ஜலாலத்”, “அலமத்”, “கிபிரியத்”, “மஜீத்”போன்றவற்றை அறிந்து கொண்டு எவைகளை நடைமுறைப்படுத்தினால் அல்லாஹ்; என்னைநேசிப்பான், எவைகளை நடைமுறைப்படுத்தினால் அவன் என்னை திருப்த்திகொள்வான், இன்னும் நான் எவைகளை விட்டும் அகன்று கொண்டால் அல்லாஹ்வின் கோபத்தில், வெறுப்பில் இருந்து என்னை பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்பதை அவன் அறிந்தகொள்வான். 
இவைகளை நம்பிக்கைகள், வார்தைகள்; உள்ரங்கமான வெளிரங்கமான செயற்பாடுகள் மூலம் நாம் அடைந்துகொள்ளலாம், அதனுடைய பிரதிபலன் என்னவென்றால் அல்லாஹ் எதனைக் கொண்டு திருப்தியடைவானோ அதன்பால் எம்முடைய வேகம், முயற்சி, ஓட்டம் காணப்படும்.

ஏனென்றால், உங்களுடைய இரட்சகனின் மன்னிப்பின்பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள். 

அல்லாஹு சுபஹானஹுத்தாஆலா “சூரதுல் ஆலஇம்ரான்” இல் கூறுகின்றான்; இன்னும் வானம் பூமியின் அளவு விசாலமான சுவர்க்கத்தின்பால் விரைந்து செல்லுங்கள். நன்மையின் பால் முந்திக் கொள்ளுங்கள். (ஆலுஇம்ரான - 3 - 133 ) 

இவைகள் அனைத்தும் அல்லாஹ் எங்களை திருப்தியடைந்துள்ளான் என்பதால் ஏற்பட்டதனால் ஆகும். அவனுடைய திருப்தி எதில் இருக்கின்றதோ அதற்கு அவன் தன்னை முற்படுத்துவான். அதனை செயற்படுத்துவதில், நிலைநாட்டுவதில் தன்னை முற்படுத்துவான்.அல்லாஹ்வுடைய “லஃனத்” - கோபம், எதிர்ப்புத்தனம் எதில் காணப்படுகின்றதோ அதனைவிட்டும் தன்னை தூரமாகுவான்.

ஏனென்றால் அல்லாஹ்வுடைய “லஃனத்தை” – கோபத்தை இவன் சுமப்பதற்கு எத்தனிக்கமாட்டான்.

ஏனென்றால் “இன்னபத்ஷரப்பிகலஷதீத்” - உங்களுடைய இரட்சகனின் பிடி கடினமானது. அவன் பிடித்துவிட்டால் அதிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது. 

அவன் கோட்டை கொத்தளங்களில், அரண்மனைகளில் வாழ்ந்தாலும் என்ன ? கவசங்களை அணிந்தாலும் உங்கள் இரட்சகனுடைய பிடி கடினமானது என்பதின் அடிப்படையை அவன் அறிந்திருந்தால்; அல்லாஹ்வுடைய “லஹ்னத்” - வெறுப்பை விட்டும் தன்னைத் தூரமாக்கிக் கொள்வான். இதுவே இதனுடைய பிரதிபலனாகும். இந்தபிரதி பலனை அந்த இல்முடன் வாழக் கூடிய அடியான், அந்த முஸ்லிம் கண்டு கொண்டால் அதுவே பிரையோசனமான கல்வி என்று இமாம் அபூபக்கர் இப்னு ரஜப் ஹம்பலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அவர்களுடைய “பழ் இல்ம் மு ஸலப் அலா கலப் " என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள். 

இந்த இல்மினை நாங்கள் சுமந்துள்ளோம் என்றால் அதனுடைய பிரதிபலிப்பு எங்களிடையே காணப்படவேண்டும். ஆகவே அப்துல்லா இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்;
அல்லாஹ்வை அறிந்து கொண்டோம் என்று கூறுகின்றோம். அதனுடைய அடையாளம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சம், தக்வா, குஷு , உங்களுடைய உள்ளத்தில், செயற்பாட்டில், தொடர்புகளில், அஹ்லாக்குகளில், ஆதாபுகளில், முஆமலாத்துக்களில் பிரதிபளிக்கவேண்டும். அல்லாஹ்வை பயந்த உள்ளம் பாவங்கள் செய்வதை விட்டும் விரண்டோடுவதற்கு மிகவும் அக்கரையாக, முனைப்பாக இருக்கும். 

அல்லாஹ்வைப் பற்றி அறியாத மனிதன் , கவனயீனமான மனிதன் , இருவரும் தான் ஒரு மூடன் என்பதற்கு, அவனிடத்தில் அறியாமையின் தன்மை உள்ளது என்பதற்கு போதுமானதாக இருக்கின்றார்கள் . 
அவைகளை நிறுபிப்பதற்கு என்று இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஏனைய ஸஹாபாக்களும், எம்முடைய உலமாவுல் ஸலபும் அல்லாஹ் பற்றிய இல்மை அடிப்படையாக வைத்திருக்கின்றார்கள். 

இல்ம் எங்களிடம் காணப்படுகின்றது என்றால் அல்லது ஒரு இல்மினைச் சுமந்த மனிதன் என்றால்; அதனுடைய அடையாளம் அல்லாஹ்வின் அச்சம், பயம், தக்வா என்னுடைய உள்ளத்திலும், என்னுடைய செயற்பாடுகளிலும், என்னுடைய தொடர்புகளிலும் காணப்பட வேண்டும். 
நான்அறியாத மனிதன் அதாவது “ஜஹாலத்”என்னிடத்தில் காணப்படும் என்பதற்கான அடையாளம்; அல்லாஹ்வைப் பற்றி கற்பதில் கவனயீனமாக, அல்லாஹ்வை ஞாபகப்படுத்தாத மனிதனாக, அல்லாஹ்வின் சிந்தனை என்னுடைய உள்ளத்தில் உயிரோட்டமில்லாத மனிதனாக இருப்பேன் என்று அப்துல்லா இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். 

ஸுபியான் இப்னு உயைனா ரஹீமஹுல்லாஹ் அவர்கள்கூறுகின்றார்கள்; இல்ம் என்பது அளவிற்கு அதிகமாகப் படிப்பது அல்லது மஜ்லிஸ்களில் அமர்ந்து அதிக ரிவாயதுக்களை சுமப்பது அல்ல. இல்ம் என்பது அல்லாஹ்வின் மீதான அச்சம். 
ஒவ்வொரு இல்மினையும் நான் சுமக்கின்றபோது அல்லாஹ் பற்றிய அச்சம் என்னுடைய உள்ளத்தில் ஏற்பட வேண்டும். தவ்ஹீதினைப் படிக்கின்ற போது அல்லாஹ் பற்றிய அச்சம் ஏற்பட வேண்டும். தௌஹீதிற்கு எதிரான ஷிர்க்கை படிக்கின்ற போது அல்லாஹ் பற்றிய அச்சம் என்னிலே உருவாக வேண்டும். இதேபோன்று குப்ர், நிபாக், ஈமான் போன்றவற்றை படிக்கின்ற போது அல்லா ஹ் பற்றிய அச்சம் என்னிலே உருவாக வேண்டும். அளவிற்கு அதிகமாகப் படிப்பது ராவி ஆகுவதற்கு அன்று, மாறாக என்னுடைய உள்ளத்தில் அல்லாஹ் பற்றிய அச்சம் ஏற்பட்டிருந்தால் அதுவே உண்மையான இல்ம். 

இமாம் ஹதிபுல் பக்தாதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இதற்கேன்றே ஒரு தனி நூலை எழுதியுள்ளார்கள் . “இக்திலா வல் இல்ம் வல்அமல்” - இல்மின் பிரதிபலன், அதன் முடிவு அமலாக இருக்கும் என்று இமாமவர்கள் எழுதியுள்ளார்கள். இதனை அஷ்ஷேக் நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தஹ்கீக் செய்துள்ளார்கள். 

யாரைல்லாம் இல்மைத் தேடவேண்டும், இல்மோடு உறவாட வேண்;டும், கற்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்களோ அவர்கள் நினைவில் நிறுத்திக் கொள்ளட்டும். அதாவது அவருக்காக வானத்தில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும், கடலில் உள்ளவைகளும் மீன்கள் உற்பட இஸ்திஹ்பார் - பாவமன்னிப்புக்காக பிராத்திக்கின்றன என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதை அபூதர் கிபாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். 
( அபூதாவூத் ) 

இல்மின் பெறுமதி, பிரையோசனம் ஆகியவைகளை உணர்ந்த மனிதர்களுடைய ஒவ்வொரு இல்மும் அமலோடு தொடர்புபற்றிருந்தல் வேண்டும். இந்த இல்மினைச் சுமந்தாலேயே எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு சாத்தியமாகும். 
இல்மைத் தேடக் கூடியவர்களே நான் உங்களுக்கு வஸியத் செய்கின்றேன், உபதேசம் செய்கின்றேன் என்று இமாம் கதிபுல் பக்தாதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அவர்களுடைய நூலை தொடங்குகின்றார்கள்; இல்மினைத் தேடுகின்றவர்களாக இருந்தால் உங்களுடைய உள்ளத்திலே “இஃலாசுன்நிய்யா” - அல்லாஹ்விற்காக இல்மைத் தேடுகின்றேன் என்ற உளப்பக்குவத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

அந்த இல்ம் எதனை கடமையாக்குகின்றதோ, எதனை எடுத்துரைக்கின்றதோ அதனை அமுல்படுத்த முயற்சிக்கும் மக்களாக நீங்கள் இருங்கள் என்று இமாம் கதீபுல் பக்தாதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்கூறியுள்ளார்கள். 
மேலும்கூறுகின்றார்; இல்ம் என்பது ஒருமரம். அமல் - செயற்பாடானது அதனுடைய பலாபலன்கள். ஒருவர் பெற்றுக் கொண்ட இல்மினை அமுல் படுத்தாதவரையில் “ஆலிம்” - இல்மினை சுமந்நவர் என்று கருத வேண்டாம். மேலும் கூறுகின்றார்; இல்ம் என்பது பெற்றோர். அதனை அரவணைக்கக் கூடியவர்கள்.அமல் என்பது பெற்றெடுக்கப்பட்டவைகள்.இல்ம் என்பது அமலோடும் அறிவுட்டல் என்பது ஆராச்சியுடனும் இருக்கின்றது. அறிவிப்பதென்பது அவைகளின் அனைத்து விடையங்களையும் தேர்ந்தெடுத்து படித்து விளங்குவதுடன் காணப்படுகின்றது என்று இமாம் கதீபுல் பக்தாதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள். 

சில உலமாக்கள் கூறுகின்றார்கள்; இல்ம் என்பது ஊழியனாக இருக்கின்றான். அமலை எவ்வாறு அமுல் படுத்தவேண்டும் என்று கூறவதே இல்மாகும். என்னுடைய நோக்கம், குறிக்கோள் அமலாக இருக்கின்றது. எதனைப் பற்றி கற்றீர்களோ அதனைப் பற்றிய அமல் உங்களிடத்திலே வெளிப்படாவிடின் உங்களிடையே இல்ம் இல்லை என்று கருதப்படும். 
ஏனென்றால் இல்ம் இல்லையென்றால் உங்களிடத்தில் அமல் இருக்காது என்று இமாமவர்கள் மேலும் குறிப்பிடுகின்றார்கள். 

ஒருஅடியானுடைய இரு கால் பாதங்களும் நாளை மறுமை நாளியே நகரமாட்டாது நான்கு விடையங்களைக் கேட்கப்படும் வரையிலாகும். ஆவையாவன அவனுடைய வாழ்க்கையைப் பற்றிக் கேட்கப்படும். உன்னுடைய இளமைப்பருவத்தை நீஎவ்வாறு கழித்தாய், உன்னடைய வாலிபப் பருவத்தை நீஎவ்வாறு கழித்தாய், உன்னுடைய திருமனப் பருவத்தை நீ எவ்வாறு கழித்தாய், உன்னுடைய வயோதிபத்தை நீ எவ்வாறு கழித்தாய் என்று வினவப்படுவீர்கள். 
நீங்கள் பெற்றுக் கொண்ட இல்மினை எவ்வாறு செயற்படுத்தினீர்கள் என்று வினவப்படுவீர்கள். 
உங்களுடைய சொத்து செல்வங்கள் எவ்வாறு திரட்டப்பட்டது மேலும் எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்று நீங்கள் வினவப்டுவீர்கள். 

மேற்கூறப்பட்ட விடையங்களையும் மறுமை நாளிலே நீங்கள் வினவப்படும் வரையிலும் அதற்குறிய பதில்கள் அளிக்கப்படாத வரையிலும் உங்களுடைய இரு கால் பாதங்களும் நகராது என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளர்கள். அபூபரதல் அஸ்லமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதனை இமாம் இப்னு பஸ்ஸார் ரஹிமானுல்லாஹ் அவர்கள் அவர்களுடைய இரு கிரந்தங்களில் பதிவு செய்துள்ளார்கள். 

நாம் ஒரு இல்மினை – தௌஹீத், ஈமான், ஷிர்க், குப்ர், நிபாக் ஆகியவற்றைக் கற்றுவிட்டோம் என்றால் அதனுடைய பிரதிபலிப்பான அமல்,  எங்களிடம் ஏற்படவில்லை என்றால் நீங்களும் நானும் பெற்றுக் கொண்ட இந்த இல்மிற்கு என்ன பதில் கூறப்போகின்றோம். 
எங்களுடைய இரு கால் பாதங்களும், வியர்வையிலே அந்த சூட்டிலே உங்களுக்கு முன்னால் சூரியன் வந்து நிற்கின்ற நேரத்தில் எங்களுடைய கால் பாதங்கள் சுவர்க்கத்தின் பால் நகரக் கூடாதா?, அல்லாஹ்வின் அர்ஷிற்குக் கீழ் நகரக் கூடாதா ?, ஹவ்லுல் கவ்ஸரிலே நீர் அருந்துவதற்கு நகரக் கூடாதா ? என எண்ணும் தருணத்தில், 
அவ்வாறு நகர வேண்டும் என்றால் நாம் பெற்ற இல்மிற்கு அமல் இருத்தல் வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அந்த இல்மினைப் பெற்றவர்களாக இல்லை.

ஹவ்வார் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்; இல்ம் என்பது அளவிற்கு அதிகமாக அறிவிப்புக்களைக் கூறுவதல்ல. நிச்சயமாக ஆலிம் என்பவர், சொற்பமான அறிவானாலும் அவன் எந்த இல்மினைப் பெற்றுக் கொண்டானோ அந்த இல்மை செயற்படுத்துவான், அதனைப் பின்தொடர்வான் மேலும் அவ்வழி முறையிலே செயற்படுவான். 

அதேபோன்று அப்பாஸ் பின் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் யார் எங்களிலே ஜிஹாத் முயற்சி செய்கின்றார்களோ அவர்களுக்கு எங்களுடைய பாதையை தெளிவுபடுத்திக் கொடுப்போம். அந்த பாதையிலே நாங்கள் அவர்களை திருப்பி விடுவோம். யார் அறிந்தவைகளை செயல் படுத்துகின்றார்களோ அவர்களுக்கு அறியாதவைகளை அல்லாஹ் சுபஹானஹுத்தாஆலா கற்றுக் கொடுப்பான். மேலும் அந்த பாதையிலே செயல் படுத்துவான் என்று அப்பாஸ் பின் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். 

இதனையே அல்லாஹ் சுபஹானஹுத்தாஆலா கூறுகின்றான்; யார் அல்லாஹ்விற்கு தக்வா செலுத்துகின்றார்களோ, என்று !, தக்வா என்றால் என்ன? இமாம் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்; 
நீங்கள் எதனைப் படித்தீர்களோ அதனைப் படித்ததன் பிரதிபலன் எங்களிடையே காணப்படல் தக்வாவாகும். இந்த தக்வாவை உட்செலுத்தி வாழக் கூடிய மனிதனுக்கு அல்லாஹ் சுபஹானஹுத்தாஆலா கற்றுக் கொடுப்பான். இதே அடிப்படை ஸஹாபாக்களிடையே காணப்பட்டது. 
இமாம் இப்னு கதீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிகின்றார்கள்; ஸஹாபா ரில்வானுல்லாஹில் அஜ்மயீன் 5 அல்லது 8 வசனங்களைக் கற்றுக் கொள்வார்கள். அந்த வசனங்களை நல்ல முறையிலே தெளிவான முறையிலே கற்று பின்பற்றாத வரையில் ஏனைய வசனங்களைக் கற்பற்கு அவர்கள் முந்திக் கொள்ளமாட்டார்கள் என்று ஸஹாபாக்கள் இல்மைப் பெற்ற விதத்தை இமாம் இப்னு கதீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

“எந்த இல்ம் ஸஹாபாக்களிடையே இருக்கவில்லையோ அந்த இல்ம், இல்ம் அல்ல”. மேலும், “எந்த அமல் ஸஹாபாக்களிடையே காணப்படவில்லையோ அந்த அமல், அமல் அல்ல” 

அல்லாஹ்வே மிக அறிந்தவன். 

Taken from a lecture of Shaykh Abu Abdullaah Ashraff Ali hafidhahullaah, Transcribed by
sister Ummu Ruzaik.