[மத்ஹபுகள் , இயக்கங்கள் உருவாக்கிய பிரிவினைகளும் சலபி தஃவாவின் எழுச்சியும்]


    மத்ஹபுகள் , இயக்கங்கள் உருவாக்கிய பிரிவினைகளும் சலபி தஃவாவின் எழுச்சியும்


பல வழிமுறைகளினால் அழைப்புப்ணியின் பெயரில் உருவாக்கம் பெற்றிருக்கும் இயக்கங்களினால் மார்க்கத்தின் ஆதாரங்கள் சுய விருப்பப்படி கையாளப்படுகிறது . இதன் போது இஸ்லாமிய கொள்கை, பிஃஹ் விடயங்கள் போன்றவற்றின் ஆதாரங்களை இவர்கள் தர்க்க வாதங்களினால் முன்வைக்கும் போது, அந்த அழைப்பாளர்களினால் ஏற்படுத்தப்படும் விளக்கங்களும் குழப்பங்களும் இஸ்லாமிய நம்பிக்கையில் பல புதிய நம்பிக்கைகளை , விளக்கங்களை உருவாக்க ஏதுவாக அமைகின்றது. 


எனவே, பொதுமக்களிடையே அல்குர்ஆன் ஆயத் ஒன்றிற்கு பல விளக்கங்கள் அல்லது அஹாதீஸ்களுக்கு பல விளக்கங்களை உருவாகி அதனை இஸ்லாமிய கருத்து என்று கருதி சமூகத்தில் நடைபெறும் குழப்பங்களுக்கான காரணியாக தர்க்கங்களும் வாதங்கள் அமைந்துள்ளன.ஸஹாபா ரில்வானுல்லாஹி அஜ்மயீன்களுடைய காலத்தினை நோக்கினால், அல்குர்ஆனிற்கும், அஹாதீஸ்களுக்கும் இவ்வாறான குழப்பங்களும் வேறுபாடான விளக்கங்களும் பிரிவுகளும் அவர்களிடையே காணப்பட வில்லை. 


அல்குர்ஆனின் ஆழமான விளக்கங்களை தெரிந்தவர்களாக காணப்பட்டாலும் நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய நபி மொழியினை தெளிவாக தெரிந்தவர்களாக காணப்பட்டாலும், ஒரு வழிமுறையில் அவைகளை நிரூபிக்கும் வழிமுறையினை கையாண்டதனால் அவர்கள் வேறுபாடுகள் இன்றி காணப்பட்டார்கள். 


எவ்வண்ணம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தார்களோ அவ்வண்ணம் அவைகளை கையாண்டார்கள். கொள்கை, பிஃஹ் மற்றும் ஏனைய விடையங்களிலும் இஸ்லாத்தில் வேறுபாடுகளை அவர்கள் உருவாக்கவில்லை. இதற்கு மாற்றமாக எக்காலத்தில் அல்குர்ஆன், அஸ்சுன்னாவிற்கு ஸஹாபா வழிமுறையினை தவிர்ந்து கொண்டார்களோ அக்காலம் முதல் வேறுபாடான விளக்கங்கள் ஆரம்பமாக ஏதுவாகியது. ஒரு அல்குர்ஆன் ஆயத்திற்கு பல விளக்கங்கள் உருவாகி மேலும் ஒரு நபி மொழிக்கு பல விளக்கங்களும் உருவாகின. 


ஏனென்றால், அல்குர்ஆன், அஸ் ஸுன்னாவை ஸஹாபா வழிமுறையினைப் பின்பற்றி கையாளததே இவ்வேறுபாடிற்கான காரணமாகும். இயக்கங்கள் மூலம் இஸ்லாமிய அழைப்புப்பணி எப்பொழுது ஆரம்பித்ததோ அக்காலம் முதல் இஸ்லாமிய உம்மத்தில் பல பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன. 


ஆரம்ப காலத்தில் முஹ்தஸிலா தர்க்கவாதத்தினை வளர்த்து மார்கத்திற்கு பல விளக்கங்கள் அளித்து ரசூல் சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களினால் கூறப்படாத ஓர் இஸ்லாமிய கொள்கையினை முன்வைத்து முதன்மையாக இஸ்லாத்தினை திரிவுபடுத்த களமிறங்கியவர்கள் ஆவார்கள் . 


அல் கத்ர் மற்றும் , ஏனைய அல்லாஹ்வின் பெயர் பண்புகள் பற்றியும் பல வழிகேடான விளக்கங்களை முன்வைத்தார்கள். அஹிம்மத்துஸ் ஸலப் , ஸஹாபாக்களுடைய விளக்கங்களே நேர் வழி என்ற முடிவுடன் காணப்பட்டதனால், இந்த பிரிவுகளை வழிகேடு என்று நிரூபித்து, அதனை மக்களுக்கு ஓர் எச்சரிக்கையாக எத்தி வைத்துள்ளார்கள். 


காலங்கள் நகர, வழிகெடுகள், வளர பிரிவுகளுடைய இடங்களும் வளர்ந்து ஸஹாபா வழிமுறையினால் முடிவு காண்பது புறக்கணிக்கப்பட்டதால் ; மத்ஹப்களும், இயக்கங்களும் மேலெழுந்தன. ஓவ்வொரு மத்ஹப்களும் தன் தேவையான விளக்கங்களை உருவாக்கி அதற்கென்று ஓர் வழி முறையினையும் உயிர்ப்பித்தன . 


ஷாபி மத்ஹப் என்ற பெயரில் ஓர் மார்க்கம். ஹனபி மத்ஹப் என்ற பெயரில் ஓர் மார்க்கம். மேலும், ஹம்பலி மத்ஹப். ஸெய்தி மத்ஹப், லாஹிரி மத்ஹப் போன்ற மத்ஹப்களின் பெயர்களினால் மார்க்கத்தையும் பிரிவுகளையும் உருவாக்கினார்கள். 


இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட மத்ஹப்களினால் இஸ்லாமிய உம்மத்தினரிடையே பல புதிய பழக்க வழக்கங்கள் தோன்றின. அதாவது, மத்ஹப் இன்றி மார்க்கத்தினை பெற்றுக் கொள்ள முடியாது. 


ஏனென்றால் அனைத்து ஆயத்துகளுக்கும், அஹாதீஸ்களுக்கும் மத்ஹப் ரீதியாக மட்டுமே விளக்கங்கள் மக்களிடையே பரவலாக பரவிக் கிடந்தன. மத்ரஸாக்களை, காதிகளை, ஆட்சிகளை அல்லது அவர்களுடைய தீர்ப்புகளை நோக்கினால், “தீர்ப்பளித்தல்” என்பது எதாவதொரு மத்ஹப்பின் வழிமுறையை பின்பற்றியே கையாளப்பட்டன. 


எனவே, மத்ஹப் ரீதியான தீர்ப்பே “இஸ்லாமிய தீர்ப்பு” என்ற நிலை மக்களிடையே ஓங்கியிருந்தது. மத்ஹப் அன்றி பெறப்பட்ட ஸலபு ஸாலிஹீன்களுடைய தீர்பினை அனைவரும் புறக்கனித்தனர். 


மத்ஹப் வாதிகளால் வளர்க்கப்பட்ட இயக்கங்ளின் தோற்றத்தினால் பிரிவுகள் உயிர் பெற்றெழுந்தன. இதனால் ஸலபு ஸாலிஹீன்களுடைய அகீதா, மற்றும் அல்குர்ஆனிற்கும் அஹாதீஸ்களுக்கும் வழங்கப்பட்ட விளக்கங்கள் போன்ற அனைத்து விடயங்களும் நூல்களுடன் முடங்கிவிட்டன . ஆதாரங்கள் கிதாப்களுடன் மறைந்து விட்டன. 


ஷாபி மத்ஹப்புடைய கருத்துக்களை, ஹம்பலி மத்ஹப்புடைய கருத்துக்களை மேலும், வழிகேடான ஒவ்வொரு பிரிவுகளும் அவர்களுடை மத்ஹப் ரீதியான கருத்துக்களை நிலை நாட்டும் முகமாக அவர்களுடைய உலமாக்களினால் அக்கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்படுவது வழிமுறையாகியது. 

இவ்வாறு இஸ்லாமிய உம்மத் ஆயிரத்து நூறு வருடங்களாக இந்நிலைப்பாட்டுடன் தொடர்ந்து மத்ஹப் ரீதியாகவே மார்க்கத்தினை நிலைநாட்டினார்கள். 


ஓர் பள்ளிவாசலை நிர்ணயித்தாலும் அல்லது மத்ரஸாவை நிர்ணயித்தாலும் அவைகளை மத்ஹப் ரீதியாகவே நிலைநாட்டினார்கள். இதே போன்று ஓர் முப்தியினது பத்வாக்கள், ஓர் காதீயுடைய தீர்ப்புகள் மத்ஹப் ரீதியாக அதாவது ஷாபி, ஹம்பலி, ஹனபி என்றே பத்வாக்கள் வழங்கப்பட்டன. 


இந்த உம்மத்தில், ஆயிரம் வருடங்களாக கண்மூடித்தனமான நடைமுறைகளை வளர்த்து விட்டார்கள். இந்நிலைப்பாட்டடில் அனைத்து மத்ஹப் வாதிகளும்; மத்ஹப் ரீதியான பத்வாக்களையே செயல்படுத்துவார்கள். அதுவே ஏற்றுக் கொள்ளப்படும் என்ற ஓரே கருத்தில் ஒன்றுபட்டிருந்தனர். 


எவ்வாறென்றால் வழங்கப்பட்ட ஒரு பத்வா ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினருக்கு முரணான பத்வா ஆக காணப்பட்டாலும் அதனை மத்ஹப் ரீதியான பத்வா என்பதால் ஏற்றுக் கொள்கின்றோம் என்று நான்கு மத்ஹப்களையும் - அதாவது ஷாபிய்யா, மாலிக்கிய்யா, ஹம்பலிய்யா, ஹனபிய்யா என அனைத்தையும் பின்பற்றுவோர் தேர்ந்தெடுத்து செயல்பட்டார்கள். 


இந்நான்கு மத்ஹப் ரீதியாக வழங்கப்படும் பத்வாக்களை மாத்திரம் முஸ்லிம்களிடையே நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டன. அஹ்லுல் ஹதீஸ் என்பதை பதிந்து வைப்பதோ, குறிப்பிடுவதோ அல்லது நிரூபிப்பதோ இன்றி அனைவரும் ஒன்றுபட்டு அதனை இழிவுபடுத்தி அவைகளை நூல்களுடன் முடக்கிவிட்டார்கள். ஸலப் என்ற வார்த்தையினை பயன்படுத்தவதை அவர்களுடைய நாவினால் அழித்து விட்டார்கள். இத்திட்டதினை ஆயிரம் வருடமாக கையாண்டு அதனை உம்மத்துல் இஸ்லாமியாவிற்கு பழக்கப்படுத்தி விட்டார்கள். 


அல்லாஹு சுபஹானஹுத்தாலா காலம் காலமாக, இஸ்லாமிய உம்மத்தில், அவனுடைய தீன் உயர்ந்து, செழிப்புடன் இருப்பதற்காக, நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய அஸ் ஸுன்னாவை உயிர்ப்பிக்கும் மக்களை அவன் வழங்கிக் கொண்டே இருந்தான். ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் அவர்களை உயிர்பித்துக் கொண்டே இருந்தான். ஒவ்வோர் வருடங்களையும் நோக்கினால், அவர்கள் காலங் காலமாக பெரும் மாற்றங்களை ஒவ்வொரு ஊர்களிலும், ஒவ்வொரு பகுதிகளிலும் ஸஹாபா விளக்கத்தினை ஹயாத்தாக்கிக் கொண்டே வந்துள்ளார்கள். 


உதாரணமாக அவர்களுள் மிகப் பெரிய பிரச்சாரத்தினை முன்வைத்து சர்வதேச ரீதியாக இஸ்லாமிய கொள்கையில் ஸஹாபா விளக்கத்தினை மேலோங்கி நிலைநாட்டுவதற்காக முன்வந்த ஒருவரே ஷேகுல் இஸ்லாம் அபுல் அப்பாஸ் அஹம்மது இப்னு அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா அல் ஹர்ரானி ரஹீமஹுல்லாஹ் அவர்களாகும். 

ஹிஜ்ரி 700 – 800 இற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அவருடைய பிரச்சாரம் ஹனாபிலா மற்றுமன்றி, மாலிக்கிய்யா, ஷாபிய்யா, ஹனபிய்யா இடையே உண்மையான கொள்கை என்றால் அது அஹ்லுல் ஹதீஸ். இது தவிர்ந்து அனைத்துக் கொள்கைகளும் வழிகேடாகும் என்ற பிரச்சாரம் உலகலாவிய ரீதியில் மேலோங்கி காணப்பட்டது. 

அவருடைய அளவுகோல்களும்; குறிக்கோள்களும் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஸஹாபா விளக்கம் என்பதை உறுதியாக தெளிவாக எடுத்துரைத்துள்ளார். தன்னுடைய மிகப் பெரிய அளவுகோலாக அகீதாவுடைய விடையங்கள் உட்பட ஏனைய அனைத்து விடையங்களையும் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா வழிமுறையில் நிரூபித்தார். 


மேலும் அவைகளுக்கு முரணான அனைத்து விளக்கங்களையும் வாதங்களையும் மறுத்து புழுதியோடு புழுதியாக்கி விட்டார். ஆயிரம் வருடங்களாக வளர்த்து வைத்திருந்த அடிப்படைகள் அனைத்தினையும் உலகில் மீண்டும் தலையெடுக்கா முறையில், மறுத்து நிரூபித்துச் சென்றுள்ளார் .உலகில் மிகப் பெரியதோர் மாற்றம் ஏற்பட ஷேகுள் இஸ்லாம் இமாம் இப்னு தைமியா அல் ஹர்ரானி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய பிரச்சாரங்கள் ஏதுவாக அமைந்தன. அதனால் ஸலபி தஃவா தலை நிமிர்ந்தது. இதற்குப் பின் தோன்றிய அனைத்து ஸலபி தஃவாவை சுமந்தவர்களும் இமாம் இப்னு தைமியா அல் ஹர்ரானி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய நூல்களை கற்றறியாமல் ஸலபி தஃவத்தினை செவிமடுத்ததே இல்லை என்றாகி விட்டது. 


ஸலபுஸ் ஸாலிஹீன்களுடைய வழிமுறையினை பின்பற்றிய இமாம் முகம்மது இப்ராஹீம் இப்னு வஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், யெமன் நாட்டில் ஸெய்தீ மத்ஹபினைப் பெற்றுக் கொண்டு அனைத்து இஸ்லாமிய துறைகளிலும் நன்கு திறமைசாலியாக செயற்பட்டுக் கொண்டு இருந்தார்கள். 


இவ்விமாமுக்கும் அல்லாஹ் நேர்வழியினை இமாம் இப்னு தைமியா அல் ஹர்ரானி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய கிதாப்கள் மூலமே ஏற்படுத்தினான். அவைகளினாலேயே இமாம் முகம்மது இப்ராஹீம் இப்னு வஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸலபி தஃவத்தை முன் நோக்கி பிரச்சாரத்தினை ஆரம்பித்தார். 


இமாம் இப்னு வஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்களைத் தொடர்ந்து இமாம் முகம்மது இப்னு அலி ஷவ்கானி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இமாம் ஸன்ஆனி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் ஸலபி தஃவத்திற்கு களமிறங்கினார்கள். இவர்களைத் தொடர்ந்தே யெமனில் இன்றுவரையான ஏனைய ஸலபி தஃவா உலமாக்களின் தோற்றம் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது. 


மேலும், இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய பிரச்சாரத்தினால் இமாம் ஷாவொலியுள்ளா தஹ்லவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸவூதி நாட்டிற்குச் சென்று இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய நூற்களினால் தெளிவு பெற்று ஹனபி மத்ஹபினை கைவிட்டு ஹிந்துஸ்தானில் “அஹ்லுல் ஹதீஸ்” கொள்கையினை ஆரம்பித்து ஹதீஸ் நூற்களுக்கு முதலிடத்தினை வழங்கினார். 


இவரைத் தொடர்நது பல இமாம்களும் அஹ்லுல் ஹதீஸ் கொள்கையினை எத்திவைத்து தஃவத்தினை முன்னெடுத்துச் சென்றார்கள்.


இமாம் ஷவ்க்கானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பிரச்சாரத்தினால் பயனடைந்த ஷேக் ஸித்தீக் ஹஸன் கான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸலபுஸ் ஸாலிஹீன்களுடைய வழிமுறையினை இனங்கண்டு ஹிந்துஸ்தானில் இஸ்லாமிய ஆட்சியினை நிறுவி ஸலபுஸ் ஸாலிஹீன்களுடைய தஃவத்தினை தலைதூக்கி விட்டார். 


இவர்களை தொடர்ந்து ஷேகுள் இஸ்லாம் முகம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அந் நஜிதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அழைப்புப்பணியில் களமிறங்கினார். 


எவர்கள் முகம்மது சித்திக் ஹஸன் கான் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய நூற்களினாலும் இமாம் முபாரக் பூரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய நூற்களினாலும் ஸலபுஸ் ஸாலிஹீன்களுடைய கொள்கையினை அடைந்தார்களோ அவர்களைப் பார்த்துக் கூறப்பட்டது ,

 “பாகிஸ்தானின் ஹிந்தாவில்(hindustan) இருந்து வெளியேரியவர்கள்;” என்றாகும். மதீனாவிற்கு வருகை தந்திருந்த இமாம் முகம்மது இப்னு ஹயாதுஸ் ஸிந்தி ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் சென்று கல்வியினை சுமந்தவரே ஷேகுள் இஸ்லாம் முகம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அந்நஜிதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆவார்கள் .


இவ்விமாம் மூலமே நஜ்த் நாட்டில் ஸஹபுஸ் ஸாலிஹீன்களுடைய கொள்கை வியாபிக்க ஆரம்பித்தது . ஷேகுள் இஸ்லாம் முகம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அந்நஜிதி; ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பல ஷிர்க்களையும், குப்ர்களையும் அழித்து அந்த நாட்டினை இஸ்லாமிய பிரச்சாரத்திற்கும்; அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவிற்கு ஒத்தாசையாக இருக்கும் ஓர் நாடாக மாற்றியவர். 


இவ்வாறு பல பகுதிகளில் பல இமாம்களினாலும் சத்தியம் தலைநிமிர்ந்து நின்றது. 


Allaah knows the best
Taken from a Lecture of Shaykh Yahya Silmy Hafidhahullaa, Transcribed by Ummu Ruzaik