[இயக்க வாதிகளின் ஸலபி போர்வை தஃவா குழப்பங்களும் அது பற்றிய எச்சரிக்கையும் பாதுகாப்பு நடவடிக்கையும்]

இயக்க வாதிகளின் ஸலபி போர்வை தஃவா குழப்பங்களும்  அது பற்றிய எச்சரிக்கையும் பாதுகாப்பு நடவடிக்கையும் 

இயக்கங்களுடைய தர்க்கங்களினால் ஆதாரங்களுக்கிடையே பல சலசலப்புக்களை ஏற்படுத்தி பிரிவினைகளை உருவாக்கியுள்ளார்கள். உதாரணத்திற்கு, ஸலபி தவா என்ற பெயரில் இலங்கையில் பலகதுரை என்ற கிராமத்தில் எத்தனை சலசலப்புக்களை உருவாக்கி உள்ளார்கள். இவைகள் அனைத்தும் அவர்களுடைய இடத்தினை பாதுகாப்பாக வைப்பதற்காகவும், அவர்களுடைய பெயரினை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இவ்வாறான விடையங்களை அனைத்து இயக்கங்களும் மேற்கொள்கின்றனர். 

இவைகள் அனைத்தினதும் விளைவு, பொதுமக்கள் தூமையான கொள்கை சுமந்தவர்களை அடையாளம் காணத் தெரியாமல் திண்டாடுவதாகும். என்றாலும் ஆழமாக கற்று விளங்குபவர்கள் இவர்களை அடையாளம் காண்பார்கள். 

ஏனென்றால் அனைவரும் தங்களை ஸலபி என்றே அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். பெயரளவில் ஸலபாக காட்சியளிப்பார்கள். ஆனால், வழிமுறையில் ஹலபாக செயற்படுவார்கள். இவர்கள் ஸலபி தவத்தை வளர்ப்பதற்கு தடையாக இருப்பார்கள். இதற்கு அனைத்து உத்திகளையும் மேற்கொண்டு ஸலபி என்ற போர்வையில் தவத்தை தொடர்ந்து கொண்டிருப்பார்கள். எவ்விதமாவது அவர்களுடைய தவத்தினை ஸலபி பெயருடன் தொடர்ந்து மேற்கொள்வார்கள். அவர்களுடைய தவத் உரிய முறையில் அல்லது பெயரளவில் தொடர்வது அவர்களுடைய தேவையாகும். 

இதற்கு மாற்றமாக தூய அழைப்புப்பணியினை மேற்கொள்ள வேண்டும், வழிகேடர்களை மறுக்க வேண்டும், குப்ர் ஷிர்க் பித்அத்களை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோள்கள் இன்றி அவர்களுடைய தவத்தினை தொடர்வார்கள். 

ஸலபி தவத்தில் குப்ர், ஷிர்க், பித்அத்களை மறுத்து இயக்கங்களை அடையாளம் காட்டுவார்கள் என்பதற்காக, அவர்கள் ஸலபுடைய பெயரினைக் கொண்டு வழிகேடான வழிமுறையில் தவத்தினை முன்னெடுத்துச் செல்வார்கள். 

இக்குறிக்கோளினை அடையும் முகமாக நாவினால் ஸலபு ஸாலிஹீன்களுடைய வழிமுறையினை அழகாண  முறையில் அதாவது, எங்களுடைய ஷேஹ் நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ், இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ், இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் என்று ஸலப் உலமாக்களை முன்வைப்பார்கள். 

ஆனால் அவர்களுடைய அடிச்சுவட்டினை ஏற்று பின்பற்றுவதை புறக்கணிப்பார்கள். இவைகளை கூறியே ஷேஹ் அல்பானியுடைய எதிரிகளையும் அவர்களுடைய நஞ்சுகளையும் மதரஸாக்களில்; பரப்பி விடுவார்கள். இவர்கள், கதீப்களாகவும், இமாம்களாகவும் வெளிரங்கமாக உலாவருவார்கள். 
இவர்கள் யாரை ஏமாற்றுகின்றார்கள்? அல்லாஹ்வுடைய மார்க்கத்தையா ஏமாற்றுகின்றார்கள்? மேலும் முஸ்லிம்களுடன் விளையாடுகின்றார்கள். அதிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளையாடுகின்றார்கள். தெளிவில், சத்தியத்துடன் விளையாடுகின்றார்கள். 

ஏனென்றால், சத்தியம் தலைநிமிராமல் இருப்பதற்காக இவ்வாறு பல விளையாட்டுக்களை அவர்கள் நடைமுறைப்படுத்துகின்றார்கள். சத்தியவாதியாக செயற்பட்டு, அசத்தியங்களை கண்ணுற்றும் அசத்தியவாதிகளுக்கு மறுப்பு அளிப்பதற்கு தங்களை முற்படுத்த மாட்டார்கள். 

என்றாலும் ஸலபி தவத் எங்காவது மகத்துவமாக நிலைநிறுத்துவதை கண்ணுற்றால் அவர்களால் இயன்ற மறுப்புக்களை, குழப்பங்களை, பல சச்சரவுகளை ஏற்படுத்துவதற்கு முற்படுவார்கள். ஏனென்றால் மக்களிடையே இந்த தவத் பல சத்தியங்களை ஏற்படுத்தும் முகமாகவும், தலை நிமிராமல் இருப்பதற்காகவும் இவ்வாறு இவர்கள் முனைப்பாக   பல திட்டங்களை அமுல்படுத்துவார்கள். 

இவ்வாறான நடவடிக்கைகளை முன்வைப்பது இயக்கங்களின் தன்மை ஆகும். மாறாக, சத்தியத்தினை நேசிப்பவர்கள்; சத்தியத்தினை அமுல்படுத்துவார்கள். ஆனால் அதற்கு மாற்றமாக சத்தியத்தினை குழைக்க மாட்டார்கள். சத்தியத்தினை நேசிப்பவர்கள், சத்தியத்தினை தடுக்காமல் அதற்கு மேலும் ஒத்துழைப்பார்கள். 

உலமாவுல் சுன்னா இவ்வாறு சத்தியத்தினை மறுத்தார்களா? அல்லது குழைத்தார்களா? எனவே இவர்களுள் சத்தியவாதியினையும் அசத்தியவாதியினையும் இனங்காண்பது எம்முடைய கடப்பாடாகும். 
இன்று ஸலபு ஸாலிஹீன்களுடைய தவத்திற்கு தடையாக இருப்பவர்கள் தப்லீக் ஜமாத்தினர்கள், தரீக்காக்கள், இஹ்வானிகள், யஹுதிகள், நஸ்ரானிகள் மட்டும் அல்லர். மாறாக ஸலப் என்ற பெயரினைச் சுமந்து ஸலபுஸ் ஸாலிஹீன்களுக்கு மாற்றமாக செயற்படுவர்கள் ஆகும். 

பொது மக்களுக்கு ஸலப் பாதை எதுவென்று அடையாளமின்மையினால்; இவர்கள் இவ்வாறு ஸலபி போர்வை கொண்டு நிலைநாட்டுகின்றார்கள். தர்க்க வாதங்களினால் தவத்தின் அடிப்படைகளை அவர்கள் கைவிட்டார்கள். அதாவது, உலமாக்களின் தொடர்பு அவசியமற்றது. அவர்களிடம் அமர்ந்து கற்பதினாலா ஆலிம் என்ற தகுதியினை அடைவார்கள் என்ற ஸலபு ஸாலிஹீன்களின் கல்வி சுமக்கும் அடிப்படைகளை துண்டிப்பதற்கு ஆரம்பித்தார்கள். 

ஏனென்றால், அவர்களுக்கு அவ்வாறான அடிப்படைகள் அற்ற ஸலபிகள் தேவைப்பட்டன. அவர்களுடைய இடங்களை பாதுகாத்து, அவர்களை உண்மைப்படுத்தும் நோக்குடன் ஸலபுகளின் அடிப்படைகளை துண்டிப்பதற்கு ஆரம்பித்தார்கள். இவ்வாறான சலசலப்பக்களால் மக்களிடையே நம்மிக்கை யற்ற தன்மை ஊன்றலாயிற்று. மேலும் மக்களிடையே ஒத்துழைப்புக்கள், ஒற்றுமை அருகி பல பிரச்சினைகள் உருவாகின. அந்த போலி ஸலபி தவத்தினை சரிகண்டார்கள்.  

ஆனால் , அழைப்புப்பணிக்கு ஓர் வரலாறு உள்ளது. அழைப்புப்பணியின் வழிமுறையென்று எம்முறைகளையெல்லாம் சலபுஸ் சாளிஹீன்கள் இனங் காட்டியுள்ளார்களோ அவைகளை இஸ்லாமிய வரலாற்று ஏட்டில் பதியப்பட்டிருக்கின்றன. இதனை “ஜரஹ் வல் தஹ்தீல்” எனப்படும். 
அழைப்பாளர்களுடைய ஆட்டங்கள், சர்ச்சைகள் போன்றவற்றின் வரலாற்று பதிவுகளைக் கொண்டு அழைப்பாளர்கள் இனங் கண்டு கொள்ளப்படுகின்றனர். ஸஹாபா காலம் தொட்டு அனைத்து அழைப்பாளர்களையும் இனங்கண்டு பதியப்பட்டுள்ளது. 

வழிகேடர்களை வழிகேடர்கள் என்று அவர்களுடைய ஊரில் நிறூபணமானதன் பின்னர் அவர்கள் ஊரையும் பெயரையும் மாற்றி உலகம் முழுதும் அழைப்புப்பணி மேற்கொள்வார்கள். 
இன்று இலங்கை நாட்டில் வசிக்கும் மக்களுக்கு ஆதாரம் எதுவென்று தெரியாமையினால் அழைப்பாளர்கள் இஸ்லாத்தின் பெயரை மாற்றி, மாற்றி விளையாடுகின்றனர். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பெயரில் அழைப்புப்பணி மேற்கொண்டனர். குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பெயர் உலமாக்களிடையே இனங்காணப்பட்டு அக்குறிப்பிட்ட அழைப்புப்பணியினை உலமாக்கள் மறுத்து குரலெழுப்பி மக்களிடையே நிறூபணமான பின்னர், முகம் கொடுக்க இயலாமையினால் இன்னுமோர் பெயரில் ஆனால் அதே கொள்கையுடன் அழைப்பப்பணியினை தொடர்வார்கள். 

பித்அத்கள், ஷிர்க்கள், குப்ர்கள் போன்ற அனைத்தையும் இயக்கங்கள் இவ்வாறே வளர்த்து விட்டார்கள். கவாரிஜ், கவாரிஜ் என்று உயர குரலெழுப்பி கவாரிஜ் உருவாக வில்லை. கவாரிஜ் காலப் போக்கில் அவர்களுடைய பெயரை மாற்றினார்கள். ஆனால் அதே கொள்கையினை முன்வெத்தார்கள். 

இன்று ஹிஸ்புத் தஹ்ரீரின் பித்அத்கள் தலைவிரித்தாடுவது. இவர்கள்  காவாரிஜுடைய அடிப்படையை கையாள்வதனாலேயே ஆகும். மேலும் இன்று காவாரிஜ் உடைய கொள்கையினால் மிஸ்ர் நாட்டிலும், டினுஷியாவிலும் பல போராட்டங்கள் நடைபெறுகின்றன. மேலும் ஸவுதி அரேபியாவிலும் புகுந்து போராட்டங்களை மேற்கொள்ள முனைந்தனர். என்றாலும் அல்லாஹ்வுடைய அருளினால் அவ்வாறான விஷங்கள் அங்கு சென்றடைய வில்லை. 

உண்மையான சத்தியவாதிகள் உயிர்பெற்று இஸ்லாமிய கொள்கை எழாவிட்டால் வழிகேடர்கள் அனைவரும் தலைநிமிர்வார்கள். இயக்கங்களுடைய தர்க்க வாதகங்களின் விளக்க குழப்பங்களினால் தெளிவுடன் காணப்படுபவர்களும் குழப்பி விடுவார்கள். ஸலபு ஸாலிஹீன்களுடைய தவத்தை குழப்பி கலைத்து விடுவதே அவர்களுடைய குறிக்கோளாகும். 

ஸலபு ஸாலிஹீன்களுடைய கொள்கை உலமாக்களின் அடிச்சுவட்டில் உலமாக்களுடைய அட்தாட்சியுடன் அழைப்புப்பணி வளர வேண்டும் என்ற கொள்கை அவர்களுக்கு வேம்பாக கசக்கும் ஓர் உண்மையாகும். என்றாலும் அவர்களை உலமாக்கள் இனங்கண்டு வைத்துள்ளார்கள். ஆதலால் அவர்களுக்கு உலமாக்களுடைய அனுமதி, அத்தாட்சி கிடைக்கப் பெறாமையினால் அவ்வழைப்பாளர்கள் ஸலபு ஸாலிஹீன்களுடைய தவத்தினை இழிவாக்க முனைகின்றார்கள். 

தூய்மையான அழைப்புப்பணியினை சுமந்தவர்களை உலமாக்கள் இனங்கண்டு, தாராளமாக அவர்களுக்கு அத்தாட்சியுடனான அனுமதி வழங்குகின்றார்கள். 
மேலும் அவர்களுக்கு அனைத்து ஒத்துழைப்புக்களையும் - பிர்ருக்கும் தக்வாவிற்கும் உதவியாக இருங்கள் என்ற அடிப்படையில் உலமாக்கள் அவர்களுடைய கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய நாவினாலும், எழுத்தினாலும் மக்களுக்கு பல உபதேசங்களையும் பல எச்சரிக்கைகளையும் முன்வைத்துக் கொண்டிருப்பார்கள். 
இதனாலேயே அவர்கள் உலமாக்களுடன் தொடர்புடன்  இருக்கின்றார்கள். இதற்காவே சர்ச்சைகள் உருவாக்கப்படும் போது உலமாக்களுடன் தொடர்பு கொள்வது அவசியமாகின்றது. 

எம்மூரில் அல்லது ஏனைய ஊர்களில் இவ்வழைப்புப்பணியினை மேற்கொள்பவர்கள் ஸலபி பெயரை உபயோகித்து ஸலபி பாதையினை அழித்து, இழிவுபடுத்தி முடக்கி விடுவதற்கே அவர்கள் முற்படுகின்றார்கள். 

எனவே கல்வி பெற்றுக்கொள்ளும் விடையங்களில் மிக கடுமையான கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடில் உள்ளோம். உலமாக்களுடைய அத்தாட்சியற்ற இடங்களில் இருந்து எங்களை பாதுகாத்துக் கொள்ள முற்பட வேண்டும். 

Taken from a lecture of Shaykh Abu Abdur Rahuman Yahya silmy hafidhahullaah  , 
Transcribed by sister Ummu Ruzaik