[இஸ்லாமிய தஃவா அமைப்பில் ஸலபிகளின் உண்மைகளும் ஹலபிகளின் தன்மைகளும்]


ஸலபி, ஹலபி என்ற இரு பிரிவினரின் வழிமுறைகளை எமது சமூகத்திற்கு நாம் எடுத்துக் காட்டுவதற்கான காரணம் என்னவென்றால், எமது சமூகத்தில் இருப்பவர்கள் கல்வியில்லாத மடமையான வழிமுறைகளைக் கையாள்வதால் சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காணமுடியாத துர்ப்பாக்கியசாலிகளாக மாறிவிட்டார்கள். 


எந்தவிடயத்தை எடுத்தாலும் அதில் சரி அல்லது பிழையென்று தீர்ப்பளிப்பது வெறுமனே அவர்களின் தனி வழிமுறையோடான நடவடிக்கையாகவே இருக்கின்றது. அந்த முடிவுகள் அனைத்தும் குர்ஆன், சுன்னா ஆகிய அடிப்படைகளுடனோ அல்லது சிறப்புமிக்க முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் உஸ_ல்களின் வழிமுறைகளிலோ, அல்லது உலமா உஸ்ஸ{ன்னாவின் உபதேசங்களின் மூலமோ அல்லது அஹ்லுல் ஹதீஸின் அகீதாவின் பாதையில் இருந்த உலமாக்களின் பாதையை விளங்கியோ எடுக்கப்பட்ட முடிவுகளாக இருப்பதில்லை. 


இவர்களில் பொது மக்களும் மௌலவிகள் என்பவர்களும் இதே வழிமுறையில் சரியென்றும் பிழையென்றும் தீர்ப்பளிப்பதற்கு முந்திக்கொண்டு முன்வந்து விடுகிறார்கள். இந்நிலையிலும் இன்று சமூகத்தின் போக்கு எப்படியான நிலையில் இருக்கின்றதென்று நாம் கவனிக்கையில், யாரெல்லாம் இயக்கங்களோடு சேர்ந்து நடந்து அவ்வியக்கங்களுக்குக் குறை சொல்லாதவர்களாக இருக்கிறார்களோ அவர்களெல்லாம் சிறப்பானவர்களாக மாறிவிட்டார்கள். 


தனிமனித வழிபாடுகளை எதிர்த்து அதனைத் தட்டிக்கேட்டவர்களும் இயக்கங்களுக்குக் குறை சொல்பவர்களும் செய்கின்ற தஃவாவானது இன்று சமூகத்தில் கவனிக்கப்படாத, மதிப்பற்றதொரு தஃவாவாக ஆகிவிட்டது. எமது சமூகத்தில் இதுதான் இன்றைய யதார்த்த நிலை. 


இந்தக் களங்கத்தை விட்டும் எமது சமூகத்திற்கு தெளிவு காட்டுவதற்காக இஸ்லாமிய தஃவா அமைப்பில் ஒரு ஸலபி எப்படி உண்மையானவனாக நடந்து கொள்வான் என்பதையும் இதில் ஒரு ஹலபி எவ்வாறு நடந்து கொள்வானென்பதையும் நான் எடுத்துக்காட்ட ஆசைப்படுகின்றேன்.


ஒரு ஸலபியைப் பொறுத்தவரை அவன் இந்த தஃவாவைப் பெற்றுக்கொள்ளும் காலத்திலும் அதனை நடைமுறைப்படுத்தும் காலத்திலும் அல்லது அதனை எத்திவைக்கும் காலத்திலும் அவனுக்கென்று இதில் ஒரு அடிப்படையுள்ளது. அந்த அடிப்படைக்கு மாற்றமாக அதனை அவன் மீறுபவனாக நடந்து கொள்ளமாட்டான். 


கல்வியைப் பெற்றுக்கொள்ளும் பொழுதும் அவன் ஆதாரப+ர்வமான கல்வியை மட்டும்தான் பெற்றுக்கொள்வான். அது ஹதீஸ்களாக இருக்குமாயின் அதில் ஸஹீஹான ஹதீஸ்களை அறிந்து அதனையே அவனது வாழ்வில் நடைமுறைப் படுத்துவதற்கும் நம்பிக்கையைப் பெறுவதற்கும் ஒரு ஆதாரமாக எடுப்பவனாக இருப்பான். 


அதே போன்று ஒரு ஆலிமுடைய அல்லது உலமாக்களுடைய ஒரு வார்த்தை (கவ்ல்) என்றாலும் அந்த வார்த்தை உண்மையாவே அந்த ஆலிம் சொன்னதுதானா என்று ஆராய்ந்து அவர்களின் நூல்களில் அந்தக் கருத்து அறிவிப்பாளர் தொடரோடு அடைந்திருக்கிறதா என்று தெரிந்த பின்புதான் இன்னின்ன உலமாக்கள் இதனைக் கூறியிருக்கிறார்களென்று உறுதியுடனும் திருப்தியுடனும் பெற்றுக்கொள்வான்.


ஸலபியாக இருப்பவர்கள் ஒரு மத்ஹபில் ஒரு கருத்து அமைந்துள்ளதெனக் கூறுவதற்கு முன் கல்வியின் அடிப்படையில் ஒரு மாணவராகச் செயற்பட்டு அந்தக் கருத்து குறிப்பிட்ட மத்ஹபில் அமைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வார்கள். 


யாரோ எவரோ ஒர கருத்து இந்த மத்ஹபின் கருத்தென்று சொன்னதனால் அதனை அப்படியே ஹலபிகளின் அடிப்படையில் சுமந்து கொண்டு ஷாபிஈ மத்ஹப் இப்படி சொல்கின்றது, ஹனபி மத்ஹப் இப்படி சொல்கின்றதென்று ஒரு போதும் ஸலபிகள் கூறமாட்டார்கள். 


ஸலபிகள் கல்விரீதியாக இப்படி நடப்பவர்களல்ல. உதாரணமாகக் கூறுவதாயின், எகிப்தைச் சேர்ந்த அல் ஜஸ்ரி என்பவர் 'அல் பிக்ஹ் அலா மத்ஹபில் அர்பஆ" என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் எட்டுப் பாகங்களைக் கொண்டது இந்த நூலின் மூலம் அல் ஜஸ்ரி நான்கு மத்ஹபின் அடிப்படையில் நான் பிக்ஹ்ஹை வழிகாட்டுகிறேன் என்று இதனை எழுதினார். 


இதனால் சமூகம் நினைத்தது என்னவென்றால் நாம் இந்த நூலைத் திறந்தால் நிச்சயமாக அங்கே ஒரு விடயத்தைப்பற்றி ஷாபிஈ மத்ஹப், ஹனபி மத்ஹப், மாலிகி மத்ஹப், ஹன்பலி மத்ஹப் ஒவ்வொன்றும் எதனைச் சொல்கின்றது என்பதனை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்று சமூகம் நினைத்து விட்டது. 


உண்மை என்னவென்றால், 'அல் பிக்ஹ் அலா மத்ஹபில் அர்பஆ" என்ற இந்த நூலை ஸலபிகள் அல்லாத ஹலபிகள் தான் ஒரு வழிகாட்டும் நூலாக எடுத்தார்களே தவிர, ஸலபிகளாக இருக்கும் மாணவர்களும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழிமுறையில் கல்வியைச் சுமந்த உலமாக்களும் இன்றுவரை இந்த நூலை ஒரு சரியான நூலாக ஏற்றுக்கொள்ள வில்லை. 


காரணம் என்னவெனில், இந்த நூல் எதனை ஷாபிஈ மத்ஹபில் இருப்பதாகச் சொல்கின்றதோ அது ஷாபிஈ மத்ஹபில் இல்லாத ஒன்றாக இருக்கின்றது. இந்த நூல் ஷாபிஈ மத்ஹப் சொல்லாத ஒன்றை ஷாபிஈ மத்ஹப் சொல்வதாக கூறுகின்றது. 


இவ்வாறுதான் இந்தநூலில் ஏனைய முன்று மத்ஹப்களும் இருக்கும் நிலை. இந்த நிலைகளைப் பற்றி ஷெய்க் நாஸிருத்தீன் அல்-அல்பானி ரஹிமஹ{ல்லாஹ் ஒரு உண்மையான வார்த்தையைச் சொன்னார். 


அதாவது 'யாரெல்லாம் தங்களை மத்ஹப் வாதிகளெனக் கூறிக்கொள்கின்றார்களோ, நாங்கள் ஷாபிஈ மத்ஹப், ஹனபி மத்ஹப், மாலிகி மத்ஹப், ஹன்பலி மத்ஹப் என்று கூறும் இவர்களில் எவருமே உண்மையான ஷாபிஈயும் அல்ல, மாலிகியும் அல்ல, ஹனபியும் அல்ல, ஹன்பலியும் அல்ல. ஏனெ;றால் ஷாபிஈ என்று சொல்லிக்கொள்ளும் யாரும் இமாம் ஷாபிஈயுடைய பாதையில் சென்று இமாம் ஷாபிஈ வழிகாட்டிய முறையிலே மத்ஹபைப் பின்தொடர்ந்தவர்களல்ல இந்த இமாமின் கருத்துகளை இவர்கள் சுமக்கவேயில்லை. இதே நிலைதான் ஹன்பலி, மாலிகி, ஹனபி பொன்றவைகளுக்கும் .


எனவே இதன் அடிப்படையில் ஷெய்க் நாஸிருத்தீன் அல்-அல்பானி ரஹிமஹ{ல்லாஹ் அவர்கள் கூறுகிறார்: 'உண்மையாக ஷாபிஈ,மாலிகி, ஹன்பலி, ஹனபி ஆகிய பாதையிலே போகிறவர்களென்றால், அவர்கள் யாரெனில் யாரெல்லாம் குர்ஆன்,சுன்னா இரண்டையும் ஸஹாபாக்கள் விளங்கிப் பின்பற்றிய பிரகாரம் பெற்றுக்கொண்டார்களோ அவர்கள்தான் அந்த இமாம்களின் பாதையில் போகின்ற மக்களாகும். ஏனென்றால் அந்தப்பாதையில் தான் அந்த நான்கு இமாம்களும் இருதார்கள்." 


ஸலபி என்பவர்களின் உண்மையான நிலைப்பாடு யாதெனில் இந்தப்பாதையில் இருக்கும் பொதுமக்களும், உலமாக்களும், மாணவர்களும் எதுவெல்லாம் ஸஹாபாக்களின் கருத்துக்களோடு சேர்ந்து போகவில்லையோ அதனை மார்க்கமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்த விடயமும் யார் சொன்னதாக சொல்லப்பட்டாலும் அதனை ஆதாரமில்லாமல் சுமக்க மாட்டார்கள். 


முரண்பாடான எதிர்க்கருத்துக்களை சுமந்தவர்களின் கருத்துக்களை எதிர்த்து அதற்கு மறுப்பாக பதிலளிக்கும் பொழுது எப்பொழுதுமே ஸலப் உலமாக்கள் அந்த எதிர்கருத்து சுமந்தவர்களின் நூல்களிலிருந்து நேரடியே எடுத்துக்காட்டித்தான் அதனை மறுப்பார்களே தவிர பொதுமக்கள் சொன்னதாகவோ அல்லது ஏதோ கதைகள் காதில் வீழ்ந்ததற்காகவோ மறுப்புக்களை எழுதியதாக எந்தவொரு ஸலபி இமாமுடைய நூலிலும் காணமுடியாது. 


அதே போன்று ஸலபுஸ் ஸாலிஹீன்களுடைய பாதையில் இருக்கும் தாலிபுல் இல்ம் எனப்படும் மாணவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தங்களுடைய கல்வியில் இன்னொரு கருத்தைச் சுமந்தவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கு முன்வரும் போது அதில் ஸலபி வழிமுறையில் 'தஹ்ரீஜும்", 'தஹ்கீகும்" கையாள்கிறவர்களாக இருக்கிறார்கள். 


எதிர்க் கருத்தைச் சுமந்தவர்களின் நூலிலிருந்து அதனைச் சுட்டிக்காட்டி அதனைத்தான் விமர்சனம் செய்வார்கள். இதன் அடிப்டையிலேதான் எதிர்த்தரப்பினருடைய கருத்தை மறுத்துக் கூறுவார்கள். இதுவே ஸலபிகளுடைய தன்மையாகும். 


நாம் எமது அழைப்புப் பணியின் பாதையிலும் இந்த அடிப்படையிலே கையாள்கின்றோம். நாம் எமது மார்க்கத்தை பெற்றுக்கொள்ளும் வழிமுறையாகட்டும், அல்லது ஏதேனு மொன்றைப் பார்த்து இது எங்கள் மார்க்கத்தில் இல்லையென்று நிரூபிக்கும் சந்தர்ப்பமாகட்டும் இவையனைத்தும் அந்த விடயங்கள் தொடர்புபடும் நூல்களிலிருந்து நேரடியாக புரிந்து கொண்ட பின்புதான் நாம் ஒன்றை ஏற்றுக்கொள்கின்றோம் அல்லது மறுக்கின்றோம். இதுவே எமது வழிமுறையாகும்.


நாம் இன்றிருக்கும் தப்லீக் ஜமாஅத் என்ற கூட்டத்தைப் பார்த்து அவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்துவிட்டு அது எமக்கு வழிகேடென்று தோன்றியதற்காக அவர்களை வழிகேடென்று சொல்லவில்லை. 


தப்லிக் ஒரு வழிகேடென்பதை நிரூபிக்கும் எமது ஆதாரம், அவர்களுடைய நூல்களின் அடிப்படையில் தான். அதாவது, அவர்களுடைய முக்கியமான நூல்களான பதாயிலுல் அஃமால், காந்தலவியுடைய ஹயாதுஸ் ஸஹாபா, அஷ்ரப் அலி தானவியுடைய பதாவாக்கள் அவர்களுடைய நூல்கள், முஹம்மது இல்யாஸ் எழுதிய நூல்கள் போன்றவற்றைப்பார்த்து அதன் அடிப்படையில் காணப்படுகின்ற அவர்களுடைய அகீதாவையும், கொள்கைகளையும், அவர்கள் மார்க்கத்தைப் பின்பற்றும் வழிமுறையான மன்ஹஜையும் விளங்கிய பின்னர் தான் தப்லிக் என்ற கூட்டம் வழிகேடென்று நாங்கள் நிரூபிக்கின்றோம். 


அதேபோன்று மௌலானா மௌதூதி உருவாக்கிய அல் ஜமாஅதே இஸ்லாமி என்ற இயக்கமும் வழிகேடென்பதை அந்த இயக்கம் கையாளும் நூல்களின் அடிப்படையிலேயே நிரூபிக்கின்றோம். 


அவர்களுக்கும் எமக்கும் இருக்கும் பிரச்சினைக்காகவோ, கொடுக்கல் வாங்களிலுள்ள ஏதும் கோபத்திலோ நாங்கள் அவர்களை வழிகேடென்று சொல்லவில்லை. அவர்கள் முக்கியமாக கருதக்கூடிய நூல்களாக மௌதூதியுடைய நூல்களான 'தப்ஹீமுல் குர்ஆன்", 'கிலாபத் வ முலூகிய்யா", 'ரிலாலயில் மஸாஅலா" போன்றவை இருக்கின்றன. 


இந்த நூல்களின் அடிப்படையில் மௌதூதியிடம் அஷாயிராக் கொள்கை காணப்படுவதை எடுத்துக் காட்டியிருக்கின்றோம், முஃதஸிலாவின் வழிமுறையை காட்டியிருக்கின்றோம். அவர் கையான்டவற்றில் இருக்கின்ற மௌழூஆன அறிவித்தல்களை (பொய் அறிவித்தல்) சுட்டிக் காட்டியிருக்கின்றோம். உலமாக்களால் பொய்யரான அறிவிப்பளர்களென்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் அறிவிப்புகளை மௌதூதி சுமந்திரப்பதனை சுட்டிக் காட்டினோம். பாதினீய்யா கொள்கையின் செல்வாக்கு இவருடைய நூலிலே இருப்பதைக் காட்டினோம்.  இவ்வாறு அவருடைய நூல்களிருந்து எடுத்துக்காட்டுவதன் மூலம் அவர்கள் வழிகேடானவர்கள் என்று நிரூபிக்கிறோமே தவிர மொளதூதியின் மீதுள்ள கோபத்தில் அல் ஜமாஅதே இஸ்லாமி என்ற இயக்கத்தை நாம் விமர்சிக்கவில்லை. 


இதேபோன்று இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தை நாம் விமர்சனம் செய்ததும் இதே அடிப்படையில் தான். அதன் ஸ்தாபகர் ஹஸன{ல் பன்னா எழுதிய 'ரிஸாலுல் ஹஸனுல் பன்னா" என்ற நூலில் அவர் எழுதியிருக்கும் குர்ஆன், ஸ{ன்னாவின் அடிப்படைக்கு எதிரான கருத்துக்களை காண்கிறோம். அவர் இந்த வழிகேடான நச்சுக்கருத்துக்களை இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்துக்கு உபதேசமாகக் கூறுவதைக் காண்கிறோம். இதனை உலமாக்கள் கண்ட போதுதான் ஹஸனுல் பன்னாவுடைய பாதை வழிகேடானதென தீர்ப்பளித்தார்கள். 


இவரைப்போன்று, அப்துல் காதர் அவ்தா, ஷைய்யித் குத்;ப், முஹம்மது குத்ப், அபுல் ஹஸல் அலி நத்வி, போன்றவர்களுடைய நூல்களை உலமாக்கள் பார்த்து விளங்கிய பின்புதான் இவர்கள் வழிகடானவர்கள் என்று தீர்ப்பளித்தார்கள். 


ஸலபி என்பவர்கள் இந்த வழிமுறையிலேயே யாரையும் வழிகேடர்களென்று தீர்ப்பளிக்கிறார்கள். இருந்தாலும், அனைத்துப் பொது மக்களும் அனைத்து நூல்களையும் வாசித்தவர்களோ விளங்கியவர்களோ அல்லர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் காரணமான அனைவரும் இந்த உண்மைகளைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


சகோதரர்களே!

நாங்கள் எந்த ஒரு கூட்டத்தையேனும் வழிகேடென்று கூறுவதனால், அது எமது தனிப்பட்ட கோபத்தினாலோ எமது தனிவழிமுறையிலான போக்கினாலோ, ஏதோ ஒரு காரணத்தை காட்டுவதினாலோ அவர்களை வழிகேடர்களென்று சொல்வது ஸலபியுடைய உஸ_ல் அல்ல. இவ்வாறு சொல்வது ஸலபி என்றால் என்னவென்று தெரியாதவனுடைய வழிமுறையாகும். 


ஸலபி உஸ_ல் என்னவென்பதைப் புரிந்தவன் மற்றவனை வழிகேடென்று நிரூபிப்பது ஒரு விமர்சனம் என்றே கருதுவான். அது அவர்களைத் திட்டுவதாகவோ ஏசுவதாகவோ அர்த்தம் கொள்ளப்படமாட்டாது. நாங்கள் யாரையும் திட்டுவதில்லை. மாறாக நாம் செய்வது விமர்சனம் மட்டுமே. நாங்கள் அனைத்து வழிகேடான போக்குடையவர்களையும் விமர்சனம் செய்கிறோம். நாங்கள் எந்த ஒரு அஹ்லுல் பித்அத்துக்கும் திட்டுவதில்லை. திட்டுவதென்பது எமக்கும் அவர்களுக்கும் இடையில்லுள்ள தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு அவர்களை நாம் கடிந்து கொள்வதையே குறிக்கும். 


மாறாக, நாம் அனைத்து அஹ்லுல் பித்அத்துக்கும் விமர்சனம் செய்கிறோம். இந்த விமர்சனத்தின் மூலமே அவர்களின் வழிகேடுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்கின்றோம். இதுவே திட்டுவதற்கும் விமர்சனம் செய்வதற்குமுள்ள வித்தியாசமாகும். 


நாம் எந்தக் கூட்டத்தைப் பார்த்து வழிகேடென்று சொன்னோமோ அவர்களின் வழிகேடுகள் அனைத்தும் அல்லாஹ்வின் அருளால் தகுந்த ஆதாரத்தோடு இல்லாமல் அவர்களை வழிகேடென்று நாம் கூறவில்லை. 


இன்னும் கூறினால், அவர்களை வழிகேடென்று நாம் தீர்ப்பளிக்கக் காரணம் அவர்கள் ஸலபுஸ் ஸாலிஹீன்களின் பாதையிலிருந்து வெளியே சென்றதுதான் என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் இஸ்லாமிய தஃவாவில் ஸலபிகள் நடந்து கொள்ளும் முறையாகும். 


இவ்வாறான பண்புகளுடைய ஒரு ஸலபியைப் பொருத்தவரை சத்தியத்திலிருந்து திசைதிரும்பி அவனது உறவுகளாகட்டும், தகப்பனாகட்டும், பிள்ளைகளாகட்டும் அது யாராக இருந்தபோதும் அவர்களுக்கு எதிராக தீர்ப்பளிப்பதில் அவன் தயக்கம் காட்டுவதை நாம் காணமுடியாது. 


இந்த அடிப்படையில்தான் எமது நாட்டில் எட்டு வருடங்களாக ஸலபி தஃவாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய டாக்டர் நுபாரின் சில செயற்பாடுகளின் மீதான தீர்ப்பை வழங்குவது எமக்குக் கடமையாகி விட்டது. டாக்டர் நுபாரின் விடயத்தில் நாம் செயற்பட்ட விதத்தைக் கண்டவர்கள் இது வெறுமனே சொந்தப் பிரச்சினைகளுக்காகவும், கோபங்களுக்காகவும் செய்யப்பட்ட விமர்சனம் எனக் கூறுகின்றார்கள். 


இவ்வாறு கூறுபவர்கள் இஸ்லாமிய அழைப்புப்பணியில் ஸலபிகளின் நிலைப்பாட்டை அறிந்தவர்களென்றால் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள். ஒரு ஸலபியானவன் உலக விடயங்களில் வருகின்ற முரண்பாடுகளை வைத்து மார்க்கத்தில் தீர்ப்பளிப்பவனல்ல. அவன் அனைத்து மனிதர்களுடனும் உலக ரீதியாக கொடுக்கல் வாங்கல்களைச் செய்பவனாக இருப்பான். வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவான். உலகில் பலதரப்பட்ட விடயங்களில் ஈடுபடுவான். இந்த விடயங்களுக்காக அவன் மார்க்கத்தில் ஒருவரை விமர்சிக்க முந்த மாட்டான். அவ்வாறு செய்வது அவனுக்குத் தகுதியானதல்ல.


ஏனென்றால் ஸலபிகளைப் பொறுத்தவரை தங்களுக்குள் செய்து கொள்ளக்கூடிய வியாபார கொடுக்கல் வாங்கல்களில் அவர்களுக்குள் ஏதேனும் பிணக்குகளோ முரண்பாடுகளோ உருவானாலும் அவர்களுடைய கொள்கை ஒன்றாக இருந்தால் அவர்கள் ஒருவரை யொருவர் சகோதரர்களாகவே நினைப்பார்கள். 


ஏனென்றால் முஃமின்களில் ஒருவர் மற்றவருக்குச் சகோதரராவார். எமது சகோதரத்துவம் பிரிவதற்கு வியாபாரக் கொடுக்கல் வாங்கல் காரணமாக இருக்குமாயின் அங்கு எமது கொள்கையில் உருதித்தன்மைஇல்லை யென்பதே பொருளாகும். 


இவ்வாறு செய்வதனால் உலகத்தில் ஒரு பிழையைச் செய்ததற்காக கொள்கையை நாம் இழந்து விடக்கூடாது. மனிதன் என்ற ரீதியில் எமது உலக விடயங்களில் எம்மிடம் தாராளமாக பிழைகள் இருக்கலாம். ஒவ்வொரு மனிதரும் அவருடைய தனிப்பட்ட காரியங்களில் தவறுகளை விடுவதம் பிழைகளை செய்வதும் சாத்தியமானதாகும். மார்க்க விடயமாக இருந்தாலும் ஒருவருடைய தனிப்பட்ட செயலினால் அவர் அந்த மார்க்கத்தில் தவறு செய்து விடலாம். 


ஆனால் நாம் நம்மை ஸிராதுல் முஸ்தகீம் என்ற நேரான பாதையில் செல்பவர்கள் என்று கூறிக்கொண்டு எமக்கு மத்தியில் சொந்தப் பிரச்சினைகள் இருந்ததற்காக அதுவே எமது மார்க்கத்தையும் இரண்டாகப் பிரித்து இருதரப்பாரும் இரண்டு கொள்கையோடு இருப்பதற்கு எவ்வாறு சாத்தியமாகலாம்? இவர்கள் மார்க்கத்தில் பிரிய முடியாது. இந்த அடிப்படையை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள். இதுவே ஸலபிகளின் உண்மையாகும்.


ஸலபி சகோதரர்கள் மத்தியில் கொடுக்கல் வாங்கல்கள் இருக்கின்றன. அவர்களுக்குள் கடன்கள் இருக்கின்றன. வியாபாரத்திலே இலாபமும் நஷ்டமும் வந்ததாகவும் இருக்கின்றது. அவர்களுக்குள் வியாபார விடயத்தில் பினக்குகள் தோன்றியதாகவும் இருக்கின்றது. இவைகளெல்லாம் ஸஹாபாக்கள், தாபிஈன்களின் காலத்திலும் நடந்திருக்கும் விடயங்களாகும். இவைகள் அனைத்தும் மனிதப் பிழைகளால் நடப்பதாகும். இந்தப் பிழைகள் நிகழ்ந்தாலும் அவர்களின் கொள்கையில் மாற்றம் ஏற்படுவதில்லை. 


ஸலபிகளின் போக்கிற்கு மாற்றமான போக்குடையவர்களான ஹலபிகள்தான் தங்களுக்குள் ஒருவர் கடன் தர மறுத்துவிட்டால் அவர் இந்த இயக்கத்தை விட்டு இன்னொரு இயக்கத்தில் சேர்ந்து கொள்வார். அல்லது தான் ஒரு கடமையை சரியாக செய்யாவிட்டால் என் இயக்கத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டு விடுமென்று பயப்படுவார். இவைகளெல்லாம் ஹலபிகளுடைய உஸ_ல்களாகும். 


ஓரு ஸலபி சகோதரர் உலக காரியத்தில் தவறிழைத்ததனால் ஸலபி தஃவாவிற்கு அவமானம் ஏற்பட்டு விடும் என்று ஸலபிகள் கருதுவதில்லை. ஏனென்றால் ஒருவருடைய தவறு அவரோடு மட்டுமே சம்பந்தமானது. அவருடைய போக்கும், நடவடிக்கையும் எமது மார்க்கமாகாது. 


மார்க்கமென்பது குர்ஆன், ஸ{ன்னா, ஸஹாபாக்களின் வழிமுறை ஆகியவையாகும். ஸலபிகளின் பார்வையில் ஒருவர் மார்க்கத்தில் ஒரு விடயத்தை எடுத்துப் பின்பற்றிவிட்டாரென்றால் அவர் ஒரு நல்ல செயலை செய்து விட்டார். அதேபோன்று மார்க்கத்தில் ஒன்றைப் பின்பற்றா விட்டால் அந்த விடயத்தில் அவர் தவரிழைத்து விட்டார். அவர் தவரிழைத்து விட்டதனால் அழைப்புப்பணிக்கு எந்தவொரு இலாபமோ நஷ்டமோ வந்து விடாது. இதனை நமது சமூகம் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். 


இஸ்லாமிய தஃவா அமைப்பில் ஸலபிகளிடம் இருக்கும் இன்னுமொரு முக்கிய அம்சம்தான்; யாரெல்லாம் அல் குர்ஆனையும், அஸ் ஸ{ன்னாவையும் ஸஹாபாக்கள் பின்பற்றிய வழிமுறையில் பெற்றுக்கொள்கிறார்களோ அல்லது, அதனை நடைமுறைப்படுத்துகிறார்களோ அல்லது, அதனை எத்திவைக்கிறார்களோ அல்லது, அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் தோழர்களாக இருக்கிறார்களோ அப்படிப்பட்டவுடன் சேர்ந்திருப்பார்கள். 


இதில் அவர்களுக்கிடையில் எந்தளவு உலக விடயங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் பிரிந்து போக மாட்டார்கள். ஏனென்றால், அவர்களின் நோக்கத்தின் அடிப்படையில் அவர்கள் பின்பற்றும் மார்க்கம் ஒன்றாக இருக்கின்றது. 


ஆனால் இதற்கு மாறாக ஹலபிகளின் தன்மைகள் எப்படியானதென்றால், இருவர் மத்தியில் எப்போது உலக ரீதியான ஒரு பிரைச்சினை ஏற்படுமோ அப்போதே அவர்களின் மார்க்கமும் இரண்டாகிவிடும். இதன் காரணம் அவர்கள் அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுடைய இஷ்டத்தின் அடிப்படையில் அமைத்துக்கொண்டது தான். அவர்கள் மார்க்கத்தில் தங்களை அமைத்துக் கொள்ளவில்லை.


ஸலபி என்பவன் மார்க்கமென்பது எனது தனிப்பட்ட வழிமுறையல்ல, அதை எனது இஷ்டத்தில் நான் அமைத்துக்கொள்ள முடியாது என்பதை நன்கு உணர்ந்தவனாக இருக்கின்றான். எனது மார்க்கம் ஸஹாபாக்களின் வழிமுறையில் இருக்கின்றது என்பதை அவன் தெரிந்தவனாக இருக்கின்றான். இந்தத் தன்மைகள் அவனிடம் இருப்பதனால் அவன் உலக விடயத்திலோ மார்க்க விடயத்திலோ ஒரு தவறைச்செய்து விட்டால் அதைத் தனது தவறாக மட்டுமே கருதுவான். மாறாக அதனை மார்க்கத்தோடு ஒருபோதும் சம்பந்தப்படுத்த மாட்டான்.


இன்றுள்ள ஹலபிகளின் நிலைப்பாட்டில் ஒன்றுதான், ஒருவன் தாஈயாக தஃவத்தில் தலைதூக்கி இருக்கையில் அவன் ஒரு பிழையைச் செய்துவிட்டால் அந்தப்பிழைக்காக மார்க்கத்தையும் இன்னொரு திசைக்குத்திருப்பி விடுகிறார்கள். அவர்களுடைய வழிகேடான போக்கைப் பாதுகாப்போடு வைப்பதற்கும் அவர்களுடைய பிழைகள் வெளியே தெரியாமல் மறைத்து விடுவதற்கும் அவர்கள் இந்த மார்க்கத்தை காலத்துக்குக் காலம் மாற்றிவிடுகிறார்கள். 


இவ்வாறான நிலைப்பாட்டிற்கு முக்கியமான காரணம் மார்க்கத்தில் ஒரு அடிப்படையை உஸ_லைப்பின்பற்ற வேண்டுமென்று அவர்கள் கருதுவதில்லை. அதன் முக்கியத்துவத்தை அவர்கள் கண்டுகொள்வதில்லை. உஸ_ல் என்கின்ற அடிப்படையோ அதற்கொரு எல்லையோ அவர்களுக்கு அவசியமற்றதொன்றாக இருக்கிறது. இதுதான் ஸலபிகளின் தன்மைகளிலிருந்து ஹலபிகள் வேறுபடுவதற்கான முக்கியமான காரணமாகும்.


முஃதஸிலாவின் பெரும் தலைவரான அப்துல் ஜப்பார் அல் ஜுப்பாஈ அவருடைய மாணவரான அபுல் ஹஸன் அல் அஷ்அரியோடு கருத்து முரண்பாடு கொண்டதனால் இருவரும் பிரிந்து விட்டனர். இதன் காரணமும் அவர்கள் ஹலபி உஸ_லைக் கையான்டதுதான். அவர்களின் இஷ்டத்தின் பிரகாரம் மார்க்க விடயங்களைக் கையாண்டதினால் ஒன்றாக இருந்த ஆசிரியரும், மாணவரும் இரு கூட்டமாகப் பிரிந்தார்கள். 


இங்கு நடந்த உண்மை என்னவெனில், ஆசிரியரான அப்துல் ஜப்பார் அல் ஜுப்பாயிக்கும் மாணவரான அபுல் ஹஸன் அல் அஷ்அரிக்கும் இடையில் ஒரு விவாதம் நடந்தது. அந்தவிவாதத்தின் போது ஒரு இடத்தில் மாணவரான அபுல் ஹஸன் அல் அஷ்அரியின் வாதத்திற்கு பதில் கூற முடியாத நிலை ஆசிரியரான அப்துல் ஜப்பார் அல் ஜுப்பாயிக்கு ஏற்பட்டது. 


அந்த சமயத்தில் பதிலளிக்க முடியாமல் போன ஆசிரியரைக் குறித்து அபுல் ஹஸன் அல் அஷ்அரி 'ஷெய்குடைய கழுதை நின்று விட்டது" என்று கூறிவிட்டார். மாணவர் சொன்ன இந்த ஒரு வார்த்தையினால் மாணவரும் ஆசிரியரும் பிரிந்து போனார்கள். இதனால் முன்பு முஃதஸிலாக் கொள்கையில் இருந்த அபுல் ஹஸன் அல் அஷ்அரி தனக்கொரு கொள்கையை உருவாக்கினார். இதுதான் அஷாயிராக் கொள்கையென அழைக்கப்படுகிறது. 


இங்கு நாம் கவணிக்க வேண்டிய விடயம் தான் இவர்களில் மாணவர் தனது ஷெய்கை மதிப்புக்குறைவாகக் கூறியதினால், ஒரு வார்த்தை மதிப்புக்குறைவானதாக வந்து விட்டதால் ஷெய்கிற்கு முஃதஸிலா என்றொரு இயக்கமும் மாணவருக்கு அஷாயிரா என்ற இயக்கமும் உருவாகிவிட்டது. இதுவே ஹலபிகளின் தன்மையாகும். இந்தத் தன்மையை நாம் இன்றும் காணமுடிகிறது. 


இதில் சில உதாரணங்களைக் கூறலாமென நினைக்கிறேன். மௌதூதி ஜமாஅதே இஸ்லாமி என்ற இயக்கத்தை அமைத்தார். அந்த மௌதூதியுடன் சேர்ந்து கல்வியைப் பெற்றவர்கள் மௌதூதிக்குப்பின் தங்களுக்குள் பலவாறு கருத்து வேறுபாடு கொண்டதனால் அவர்களுக்குள்ளேயே பல நிலைப்பாட்டில் பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டார்கள். 


அதில் தங்களின் சொந்தப் பிரச்சினைகளினால் பலர் பிரிந்தார்கள். பிரிந்தது மற்றுமன்றி மார்க்கத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தைச் சுமக்கத் தொடங்கினார்கள். இது ஜமாஅதே இஸ்லாமி என்ற இயக்கத்திற்கு ஏற்பட்ட நிலை. 


அதே போன்று இந்தியாவின் தமிழ்நாட்டின் பீ.ஜெய்னுல் ஆபிதீன் என்பவரும் ஹாமித்பக்ரி என்பவரும் அண்ணன் தம்பி போன்று ஒன்றாக மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள். இறுதியில் தங்களுக்குள் ஏற்பட்ட சொந்தப் பிரச்சினைகளினால் பிரிந்து விட்டார்கள். பிரிந்த பின்னர் ஹாமித் பக்ரி என்பவருக்கு பீ.ஜெய்னுல் ஆபிதீன் வழிகேடானவராக மாறிவிட்டார். 


இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், இவர்கள் இருவரும் இணைந்து ஊரெங்கும் பிரச்சாரம் செய்த காலமெல்லாம், பீ.ஜெய்னுல் ஆபிதீனின் கொள்கையைப் பரப்புவதில் தோல்கொடுத்து ஒத்துழைத்த காலமெல்லாம் ஹாமித் பக்ரி என்பவருக்கு பீ.ஜெய்னுல் ஆபிதீன் நேர்வழியில் இருக்கும் ஒருவராக இருந்தார். தனிப்பட்ட பிரச்சினைகளினால் பிரிந்தவுடன் தனது சகோதரன் போன்று இருந்தவர் வழிகேடனாக ஆகிவிட்டார். இதே நிலைதான் ஏனைய இயக்கங்களான தப்லீக் ஜமாஅத், இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற அனைத்து இயக்கங்களிலும் இருக்கிறது. 


இருப்பினும் ஹலபிகளின் உஸ_ல் விடயத்தில் ஹலபிகளின் முக்கியமானதொரு தன்மைதான், அவர்களுக்குள் எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும், அவர்களுக்குள் எந்தளவு பிரிவுத்தன்மைகள் காணப்பட்டாலும் சத்தியம் தலைதூக்கும் வேலையில் அதனை எதிர்ப்பதற்கு இவர்கள் அனைவரும் சேர்ந்து கொள்வார்கள். உண்மை வெளியே வந்து பரந்து விடாமல் அதைக் குழப்புவதில் இவர்கள் அனைவரும் சேர்ந்து செயற்படுவார்கள். 


ஏனென்றால், அவ்வாறு குழப்பினால் தான் அவர்களுடைய இயக்கமும் அவர்களுடைய பாதையும் தொடர்ந்து வாழ முடியும். உண்மையை உண்மையென்று அவர்களில் யாரேனும் எடுத்துக்காட்ட முன்வந்து விட்டானாயின் அவர்களில் யாரும் எஞ்கியிருக்க முடியாதென்பதை அவர்கள் நன்கு தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள். 


இதனால் தான் அவர்கள் அனைவரும் கைகோர்த்து உண்மையை நாம் ஒருபுரம் தூக்கிவைத்து விடுவோம் என்று களமிறங்கி விட்டார்கள். சத்தியமான கருத்துக்கள் இந்தக் கூட்டங்கள் அனைத்தினதும் கொள்கையையும் செயற்பாட்டையும் பாதிக்கக்கூடியதாக இருப்பதால் தங்களுக்குத் தலைவலியைக் கொடுக்கக் கூடிய சத்தியத்தின் கருத்துக்களை இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதுடன் அதனை சமூகத்தின் பார்வைக்கு அசத்தியம் போன்று காட்டுகிறார்கள். அதற்கென்று அனைத்து திசைகளிலும் சத்தியத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இந்த அனைத்துக் கூட்டங்களாலும் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன. தங்களுக்கு மத்தியில் எத்தனை கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் இந்தவிடயத்தில் மட்டும் தங்களுக்கிடையிலுள்ள பகைமையை மறந்து கூட்டணியாகச் செயற்டுவதைக் காணமுடிகிறது. 


இதே நிலை அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை இருக்கும் ஒரு யதார்த்தமான நிலையாகும். அன்றைய காலம் தொட்டே வரலாற்றிலே பஹ்ருத்தீன் ராஸி போன்ற வழிகேடான தலைவர்கள் தங்களின் ஒரு உஸ_லாக (அடிப்படையாக) கூறினார்கள். அதிலும் முக்கியமாக பஹ்ருத்தீன் ராஸி கூறியதொரு அடிப்படை என்னவென்றால், 


('இதா ஹாலபதுல் அக்லி வன் நக்லி யஜ்பு தக்தீமுல் அக்லி அலன் நக்ல்") : 'அறிவிப்புடன் எமது புத்திமுரண்பட்டால் அறிவிப்பைவிட புத்திக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்." என்று கூறினார். 


இந்த அடிப்படையைப் போன்று அதன் பின்னர் இன்னும் சிலர் ஹதீஸ{ம் ரைஇயும் (அறிவும்) முரண்பட்டால் ஹதீஸை விட அறிவிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்;. 


அதைப்போன்று இஜ்திஹாதும் தக்லீதும் முரண்பட்டால் இஜ்திஹாதை விட தக்லீதுக்கு முக்கியத்துவம் அளித்தனர். 


அதைத்தொடர்ந்து இத்திபாவும் மத்ஹபும் முரண்படுமாயின் அங்கு மத்ஹபுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. 


அதன் பின்னர் இன்னும் சிலபடிகள் மேலேசென்று மத்ஹபில்லாமல் மார்க்கமே இல்லையென்று கூறி மத்ஹபுகளை வளர்த்தார்கள். இவ்வாறு அவர்கள் அனைத்து ஹலபிகளின் தன்மைகளையும் வளர்த்துவிட்டார்கள். இவர்களுடைய அழைப்புப்பணி (தஃவத்) வழிகேடுகளை வழிகேடென்று எடுத்துக்காட்டாததொரு அழைப்புப் பணியாகவே அமைந்திருக்கிறது. 


அனைத்து ஹலபிகளினதும் தஃவத்தின் இன்னுமொரு முக்கியமான அடையாலம் இவர்களின் தஃவத்தில் 'வழிகேடு" என்ற வார்த்தையை நாம் கேட்க முடியாது. இவர்களைப் பொருத்தவரை ஒருவிடயத்தை வழிகேடென்று நிரூபித்து எடுத்து வைப்பதானது தஃவத்தோடு தொடர்பான ஒரு விடயமல்ல. இவர்களுடைய தஃவத்தில் அனைத்து அம்சங்களையும் காணக்கூடியதாக இருந்தாலும் எந்த விடயங்கள் வழிகேடென்று எடுத்து வைக்க மாட்டார்கள். 


ஏனென்றால், அவ்வாறு எடுத்துக் காட்டினால் அவர்களும் அதில் மாட்டி விடுவார்கள். அவர்களிடமும் அந்த வழிகேடான அடிப்படைகள் இருப்பது வெளியே தெரிந்துவிடும். எனவேதான் இவர்களின் தஃவத்தில் வழிகேடுகளின் வரைவிலக்கனங்களை எடுத்து வைப்பதோ, வழிகேடான போக்குகளுக்கு விமர்சனம் செய்வதோ, அல்லது அந்த வழிகேடான விடயங்களுக்கு மறுப்பாகவும் எதிராகவும் குரல்கொடுத்து அதற்கு பதிலளிப்பதோ நாம் காணமுடியாத அம்சங்களாகும். 


அவ்வாறு அவர்கள் மறுப்பதாயின் அவர்களுக்கிடையிலுள்ள பிரச்சினைகளுக்கே மறுப்பளிப்பார்கள். தங்களின் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் வந்தால் தங்களின் கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் தவராது அதற்கு பதிலளிப்பார்கள் அதனை மறுத்துக் கூறுவார்கள். இவைகளுக்கே அவர்களிடம் மறுப்பளிக்கும் தன்மை இருக்கின்றதே ஒழிய வழிகேடுகளுக்கு எதிராகவல்ல. அவ்வாறு மறுப்பளிப்பதை அவர்கள் தங்களின் கடமையாக ஒருபோதும் கருதுவதில்லை. 


சமூகத்தில் ஷிர்க், குப்ர், பித்அத்கள் என்று எது வளர்ந்தாலும் அதனைத் தட்டிக்கேட்டு, அதனை மறுத்து சமூகத்தை நேர்வழியை நோக்கி வழிநடத்துவது இவர்களுடைய தஃவத்தில் அமையாத ஒரு அம்சமாகும். அவர்களின் பார்வையில் அவ்வாறு தட்டிக்கேட்பதும், எதிர்ப்பதும், மறுப்பதும் சமூகத்தைக் குழப்பிவிடும் செயல்களாகும். அவ்வாறு செய்பவர்கள் குழப்பவாதிகளாகவே சமூகத்துக்குக் காட்டப்படுகிறார்கள். 


தஃவத் என்பது இவர்களைப் பொறுத்தவரை சமூகத்துடன் நெகிழ்ந்து கொடுத்து அந்த சமூகத்தை சமாளிப்பதும், சமூகம் பிரிந்து விடாமல் சேர்த்து வைப்பதும், தங்களின் சகாக்களை சந்தோசப்படுத்துவதும், தங்களுக்குச் சார்பான கூட்டங்களையும் சேர்பதுமாகும். 


எந்தளவுக்குச் சொத்தும், கூட்டமும், பெயரும் சேர்க்கிறதோ அந்தளவுக்கு அது சிறப்பான தஃவத்தாக ஆகிவிட்டது. எந்தளவு சொத்தையும் கூட்டத்தையும் பெயரையும் ஒருவர் சேர்கிறாரோ அந்தளவுக்கு சிறப்பான தாயியாக அவர் மாறிவிட்டார். இதுவே ஹலபி தஃவத்தின் தன்மைகiளாகும். 


இது இந்த நாட்டில் மட்டும் இருக்கும் நிலையல்ல. ஏனைய நாடுகளிலும் இதுவே யதார்த்த நிலையாகும். இவர்கள் தங்களுடைய அழைப்புப் பணியில் றஸ{லுல்லா அவர்கள் எது வழிகேடான பாதையென்று காட்டித் தந்தார்களோ அதனை வெளியே எடுத்துக்காட்ட மாட்டார்கள். 


றஸ{லுல்லாஹி வு அவர்கள் கூறினார்கள்:


எனது உம்மத் எழுபத்தி மூன்று பிரிவுகளாகப் பிரியும் அதில் ஒன்றைத் தவிர (அனைத்துப் பிரிவுகளும்) நரகம் செல்லும். அந்த ஒரு கூட்டம் யாரென ஸஹாபாக்கள் கேட்டார்கள். நபி அவர்கள் யார் இன்று நானும் எனது தோழர்களும் இருக்கும் நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் (தான் அந்தக் கூட்டம்) என்று பதிலளித்தார்கள்.


என்ற ஹதிஸில் நபி அவர்கள் நரகம் செல்பவர்களின் பதை என்னவென்பதையும் அவர்களின் அடிப்படைகள் என்னவென்பதையும், சுருக்கமாகவும் தெளிவாகவும் காட்டித்தந்திருக்கிறார்கள். இந்த வழிகேடான நரகத்தின் பாதையில் இருக்கும் கூட்டங்கள் எவையென்பதை நேர்வழிசென்ற எமது இமாம்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். 


இதனையெல்லாம் இந்த ஹலபிகள் தங்களின் தஃவத்தில் எடுத்துக்காட்டமாட்டார்கள். ஏனென்றால், அவ்வாறு காட்டும்போது அவர்களும் அந்த வழிகேடான பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்களாகி விடுவார்கள். 


நபி அவர்களுடைய மேற்கண்ட ஹதீஸினை விளக்குவதற்காக தென் இந்தியாவைச் சேர்ந்த வழிகேடான தர்க்கவாதத்தில் மார்க்கத்தைச் சுமக்கும் பீ.ஜெய்னுல் ஆபிதீன் என்பவர் தனது உரையொன்றில் தனது தலைப்பாக 'அந்த 72 கூட்டங்கள் யார்?" என்று வைத்தார். இதுவே அவருடைய தலைப்பு. 


தனது தலைப்பில் 72 கூட்டங்களைப் பற்றி விளக்கிவிட்டு அந்த 72 வழிகேடான கூட்டத்தினுல்லேயே நபித்தோழர்களையும் அவர்களைப் பின்தொடந்தவர்களையும் சேர்த்து விடுகிறார். இதில் இந்த மனிதன் எந்தளவு மயக்கத்தை சமூகத்தினுள் ஊற்றிவிட்டான் என்று விளங்கமுடிகிறது. 


ஏனென்றால் நபி அவர்கள் கூறிய வார்த்தை என்னவென்பதை தெரிந்து கொண்டே இந்த மனிதன் அந்தத் தெளிவான நபி மொழியின் வார்த்தையை மயக்கமானதாக மாற்றிவிட்டான். நபி அவர்களிடம் ஸஹாபாக்கள் சுவர்க்கம் செல்லும் அந்தக் கூட்டம் எதுவென்று கேட்டபோது நபி அவர்கள் கூறினார்கள்:


யார் இன்று நானும் எனது தோழர்களும் இருக்கும் நிலைப்பாட்டில் இருக்கிறார்களோ அவர்கள் (தான் அந்தக் கூட்டம்) இந்த நபிமொழி தெட்டத் தெளிவாக நபித்தோழர்களின் பாதையை நேர்வழியின் பாதையென்று கூறியிருக்க பீ.ஜெய்னுல் ஆபிதீன் என்பவர் அந்த உத்தம நபித்தோழர்களையும் அவர்களது அடிச்சுவடுகளோடு வாழ்ந்த சிறப்புமிக்க ஸலபுஸ்ஸாலிஹீன்களையும் 72 வழிகேடானவர்களின் பட்டியலில் சேர்த்து விட்டார். இது அந்த ஹதீஸின் விளக்கத்தின் பெயரில் கொடுக்கப்பட்ட மயக்கமாகும்.


நேரடியே ஹதீஸின் வார்த்தைகளைக் கையாண்டு எத்திவைக்காமல் தங்களின் வார்த்தைகளால் விளக்க முன்வந்ததால் நபித்தோழர்களுக்கும் வழிகேடர்கள் என்ற பட்டத்தை ஹலபி உஸ_லைக் கையான்டவர்கள் கொடுத்து விட்டார்கள். 


நபி அவர்கள் இந்த ஹதிஸைக் கூறியதிலிருந்து 1400 வருடங்கள் தாண்டிவிட்ட நிலையில் இன்று வரைக்கும் எந்தவொரு இஸ்லாமிய அறிஞர்களும் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள வழிகேடர்களையும் நேர்வழி செல்பவர்களையும் பற்றிக் கூறவில்லையா? அந்த 72 கூட்டங்களையும் பற்றி எந்த உலமாக்களும் எமக்கு வழிகாட்டவில்லையா? அதனை பீ.ஜெய்னுல் ஆபிதீன் என்பவர் சரியாகத்தானா கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார்? 


நிச்சயமாக வரலாற்றில் இந்தவிடயத்தைப் பற்றி பல உலமாக்கல் தெட்டத்தெளிவாக தங்களின் நூல்களில் விளக்கியிருக்கிறார்கள். அதில் குறிப்பாக இமாம் ஷஹ்ரஸ்தானி (ரஹிமஹ{ல்லாஹ்) எழுதிய - 'அல் மிலல் வன் நிஹல்" இமாம் இப்னு ஹஸ்ம் அல் அந்துலூஸி (ரஹிமஹ{ல்லாஹ்) எழுதிய - 'அல் பிஸல் பில் மிலல் வன் நிகல்" இமாம் அப்துல் காஹிர் பக்தாதி (ரஹிமஹ{ல்லாஹ்) எழுதிய 'அல் பரகு பைனல் பிரக்" போன்ற இன்னும் பல உலமாக்களுடைய நூல்களில் 72 வழிகேடான பிரிவுகள் யாரென்பதையும் நேர்வழியில் இருக்கும் அந்த ஒரு பிரிவு யாரென்பதையும் பற்றி தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. 


வரலாற்றிலே இமாம்கள் இதனை அழகாக விளக்கியது மட்டுமின்றி அந்த 72 வழிகேடான பிரிவுகளும் ஹவாரிஜ், ரவாபித், கதரிய்யா, ஜபரிய்யா, முர்ஜிஆ, முஃதஸிலா ஆகிய ஆறு அடிப்படையான பிரிவுகளாகளப் பிரிவதாகவும் எமக்கு எடுத்து விளக்கியிருக்கின்றார்கள். 


இந்த ஆறு அடிப்படையான பிரிவுகளில் ஒவ்வொன்றும் 12 பிரிவுகளாகவப் பிரிகிறது. எனவே அனைத்துப் பிரிவுகளும் அவர்களின் அடிப்படைகளின் ரீதியாக மொத்தத்தில் 72 கூட்டங்களாக அமைகிறது. இந்த அனைத்து கூட்டங்களுக்குமுரிய பட்டங்களையும் பெயர்களையும் உலமாக்கள் அடையாலம் காடுவதோடு அவர்கள் ஒவ்வொருவரும் வழிகேடானதன் காரணம் என்னவென்பதையும் எடுத்துக் காட்டுகிறார்கள். 


இது வரலாற்று உண்மையாக இருந்தும் பீ.ஜெய்னுல் ஆபிதீன் தனது தலைப்பில் கூறும் எந்தவொரு விடயத்திலும் இமாம்கள் கூறியதாக எந்த இமாமையும் அவர் அடையாளம் காட்டவில்லை. அதே போன்று அந்த இமாம்கள் எழுதிய எந்த ஒரு நூல்களின் பெயர்களையும் அடையாளம் காட்டப்படவில்லை. இந்த உலமாக்கள் நூல்களையும் சமூகத்துக்கு இவர் எடுத்துக்காட்டவுமில்லை. இந்த உலமாக்களின் உபதேசங்களை இந்த உம்மத்துக்கு கூறிவைக்கவுமில்லை. 


அவர் விளக்கிய அனைத்தும் வெறுமனே அவருடைய புத்தியில் தோன்றிய விளக்கங்களாகும். அவர் கூறும் வரலாறு வெறுமனே அவர் உறுவாக்கியதொரு புதிய வரலாறாக இருக்கிறது. அவர் வரலாற்றின் அடிப்படையில் பிரிவுகளைப்பற்றி விளக்குகையில் தான் உருவாக்கிய வரலாற்றைக் கூறுகின்றாரே தவிர, ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு கஸீர் (ரஹிமஹ{ல்லாஹ்) எழுதிய 'அல் பிதாயா வன்நிஹாயா" என்ற நூலில் உள்ளதையோ அல்லது இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹிமஹ{ல்லாஹ்) எழுதிய ' அல் முன்தஸிம் அத்தாரீஹ்" என்ற நூலில் உள்ளதையோ, அல்லது இமாம் இப்னுல் அஸீர் (ரஹிமஹ{ல்லாஹ்) எழுதிய 'அல் காமில்" என்ற நூலில் உள்ளதையோ, அல்லது இமாம் தபரி (ரஹிமஹ{ல்லாஹ்) எழுதிய 'தாரிஹ் உமம் வல் முலூக்" என்றநூலில் உள்ளதையோ - இந்த மேற்கண்ட சிறப்பான வரலாற்று நூல்களில் உலமாக்கள் எடுத்துக் காட்டியதையோ அவர் எடுத்துக் காட்டவில்லை. 


இவைகளை யெல்லாம் தவிர்ந்து கொண்டு தனக்கொரு தனி வரலாறை உருவாக்கிக் கொண்டு அதனை வைத்து பிரிவுகளைப்பற்றி விளக்கம் கொடுக்கிறார். இதனடிப்படையில் இவரது விளக்கம் கூறும் ஒரு முக்கிய விடயம் என்னவெனில், இவரைப் பொருத்தவரையில் ஸலபி என்னும் குர்ஆனையும், ஸ{ன்னாவையும், ஸஹாபாக்களின் அடிச்சுவட்டிலும் பாதையிலும் விளங்கக் கூடியவர்களும் அந்த 72 வழிகேடான பிரவுகளுக்குள் உள்ளடங்கக் கூடியவர்களே! 


ஆனால், இவர் விளக்க எடுத்த அதே ஹதீஸிலேயே நபி அவர்கள் நேரான வழியிலுள்ள கூட்டம் 'யார் இன்று நானும் எனது தோழர்களும் இருக்கும் நிலைப்பாட்டில் இருக்கிறார்களோ அவர்கள் (தான் அந்தக் கூட்டம்)" என்று வெளிப்படையாகவும் தெளிவாகவும் கூறிவிட்டார்கள். 


இவ்வாறு நபி அவர்கள் கூறியிருக்கையில், பீ.ஜெய்னுல் ஆபிதீன் ஆராய்ச்சி செய்து - அந்த ஸஹாபாக்களின் பாதையில் சென்ற ஸலப்களையும் நரகவாதிகள் என்று கூறுகிறார். 


இதனடிப்படையில் தெரிகின்ற ஹலபிகளின் இன்னுமொரு அடிப்படை என்ன வென்றால், அவர்களுக்கு எந்தவொரு ஹதீஸ{ம் கூறுகின்ற நபிவழியைப் பின்பற்றி நடக்க வேண்டிய அவசியமில்லை. அதனைப் பணிவோடு ஏற்றுக்கொண்டுஅதனைப் பின்பற்றும் நோக்கத்தில் அவர்கள் செயற்படுவதில்லை. அது முக்கியமானதோ தேவையானதொரு அம்சமோ இல்லை. 


இதன் காரணமாக அவர்கள் ஹதீஸ்களிலிருந்து தங்களுக்குத் தேவைபோன்று விளக்கங்களையும் தீர்ப்புகளையும் அந்த ஹதீஸிலிருந்து கலற்றிவிடுவார்கள். இதனை உம்மத்துக்கு அடையாளம் காட்டுவதற்கென்று வரலாற்றிலே முஹத்திஸின்கள் - (உலமா உஸ்ஸ{ன்னா) அவர்களுடைய அகீதா நூல்களில் ஹலபிகள் ஹதீஸ்களில் எவ்வாறெல்லாம் விளையாடுபவர்களென்பதை எடுத்துக் காட்டுபவர்களாக இருந்தார்கள்.


எனது அனுபவத்தில் கண்டதொரு உண்மையை இங்கு நான் சுட்டிக் காட்டலாமென நினைக்கிறேன். அதாவது, தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பீ.ஜெய்னுல் ஆபிதீன் என்கின்றவர் குர்ஆனையும், ஸ{ன்னாவையும் பின்பற்றும் ஒருவர் என்ற கருத்து நிலவியிருந்தது. இந்தக் கருத்தை சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பே நான் கேள்விப்பட்ட போது - நான் கூறினேன் இந்த மனிதர் குர்ஆன், ஸ{ன்னாவை பின்பற்றுபவரல்ல. 


மாறாக இந்த மனிதன் தர்க்கவாதப் போக்கில் இருக்கின்ற ஒருவன். இன்னும், தனது சொந்தக்கருத்தை குர்ஆனினதும், ஸ{ன்னாவினதும் பெயரில் சொல்கின்றவர். இவ்வாரெல்லாம் நான் ஒன்பது வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள வில்லை. 


ஆனால் இன்று பலர் இந்த உண்மையை விளங்கிவிட்டார்கள். அதில் ஒரு எடுத்துக்காட்டடைக் கூறுவதாயின், நாம் அந்தத் தர்க்கவாதப் பாதையில் செல்லும் மனிதனிடம் அவரைப் பின்பற்றுபவர்களிடம் கேட்க விரும்புவது என்னவென்றால், எமக்குக் குர்ஆனும், ஸ{ன்னாவும் மட்டும் போதுமானது, இஜ்மாஃ, கியாஸ் எதுவும் அவசியமில்லை என்று வாதாடும் பீ.ஜெய்னுல் ஆபிதீனிடம் நான் கேட்கிறேன் - அதாவது, குர்ஆன் வசனமொன்றை அது கூறப்பட்டுள்ள - விதமே அதனை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா? அல்லது, ஹதீஸின் வார்த்தையொன்று வந்ததென்றால் அது வந்த வாரே ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா? 


அவ்வாறு அது வந்திருப்பது போன்றே நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரென்றால் நீங்கள் உண்மையில் குர்ஆனையும், ஸ{ன்னாவையும் பின்பற்றுகின்றீர்கள் என்று பொருளாகும். 


ஆனால் பீ.ஜெய்னுல் ஆபிதீனைப் பொறுத்தவரை குர்ஆனின் பல வசனங்களுக்கும் ஹதீஸின் பல வார்த்தைகளுக்கும் தனது விளக்கத்தைக் கொடுக்காமல் இருக்க முடியவில்லை. அல்லது, அந்த குர்ஆனின் விளக்கங்களைத் தவிர்ந்து கொண்டு அதற்கொரு மாற்றுக் கருத்தோ, விளக்கமோ தராமல் அந்த ஆயத்களையும் அந்த ஹதீஸ்களையும் அவருக்கு விளங்க முடியவில்லை. 


ஆனால் இதனைச் செய்கின்ற அந்த மனிதர்தான் எங்களுக்கு குர்ஆனும், ஸ{ன்னாவும் போதுமானது. இஜ்மாஃ என்றும் கியாஸ்; எதுவும் அவசியமில்லையென்று கூறுகிறார். இதனை உதாரணம் மூலம் கூறுவதாயின்,


'யத் உல்லாஹ் பவ்க அய்தீஹிம்" 

'அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளுக்கு மேல் இருக்கிறது" என்ற வார்த்தையை பீ.ஜெய்னுல் ஆபிதீனைப் பொறுத்த வரை அது வந்த பிரகாரமே சொல்ல முடியாது அதற்கொரு விளக்கம் தேவைப்டுகிறது. குர்ஆனும், ஸ{ன்னாவும் போதுமான மனிதனுக்கு அவருடைய விளக்கமும் தேவைப்டுகிறது. 


அவ்வாறாயின் இவருக்கு ஸஹாபாக்களின் விளக்கம் தேவையற்றதாகிப் போனது ஏன்? உம்மதுல் இஸ்லாமியுடைய ஏகோபித் முடிவான இஜ்மாஃ தேவையற்றதானது ஏன்? இவர்கள் அனைவரது விளக்கங்களும் அவசியமற்றதெனக் கூறியதுடன் அதற்கு தான் விளக்கங்கொடுக்காமல் அந்த ஆயத்களையும் ஹதீஸ்களையும் விளங்க முடியாதென்ற நிலைப்பாட்டினை அவரது செயல் எடுத்துக்காட்டுகிறது. அதே போன்று இன்னுமொரு உதாரணத்தைக் கூறுவதாயின்,


'யன்ஸ{லு ரப்புனா இலா ஸமாஅத்துன்யா"


என்று ஒரு ஹதீஸை நபி வு அவர்கள் கூறுகிறார்கள். 'எங்களது இரட்சகன் ப+மியின் வானத்திற்கு இறங்குகிறான்". என்பது தான் நபிகளாரின் ஹதீஸில் வரும் வார்த்தை. 


இங்கு குர்ஆனையும், ஸ{ன்னாவையும் மட்டுமே பின்பற்றுவேன் என்று கூறுபவன் ஒருவன் மேற்கண்ட ஹதீஸில் வந்துள்ள வார்த்தையை அது எப்படி வந்திருக்கிறதோ அப்படியே ஏற்க வேண்டும். ஆனால் குர்ஆன், ஸ{ன்னாவென்று குரளெழுப்பி அதற்கு வாதாடும் இந்த மனிதன் நபி  அவர்களின் இந்த ஹதீஸ{டைய வார்த்தையோடு தடுமாறுவதேன். 


எதனையெல்லாம் அப்படியே நம்ப வேண்டுமோ அதனை இவர்கள் நம்புவதில்லை நபி அவர்கள் 'எங்களது இரட்சகன் ப+மியின் வானத்திற்கு இறங்குகிறான்" என்று கூறுகிறார்கள். இந்த ஹதீஸ{க்கு பீ.ஜெய்னுல் ஆபிதீன் விளக்கம் கொடுக்கையில் 'இரட்சகன் இறங்குவதில்லை, அவனுடைய அருள்தான் இறங்குகிறது" என்று கூறுகிறார். 


இது எவ்வாறு குர்ஆனையும், ஸ{ன்னாவையும் பின்பற்றுவதாக முடியும். நபி அவர்களின் வார்த்தைக்கு மேலால் தனக்கொரு விளக்கத்தை அமைத்துக் கொண்டார் இவர். இவைகள் ஹலபிகளின் தன்மைக்குள் அடங்கும் விடயங்களாகும்.


ஹலபிகளைப் பொறுத்தவரை அவர்கள் வெறுமனே பெயரளவில்தான் குர்ஆன் என்றும் ஸ{ன்னா என்றும் முன்வைப்பார்கள். சமூகத்தில் தங்கள் மீதுள்ள நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும், சமூகத்தின் மத்தியில் தங்களின் பாதை சரியான, நேரான பாதையென்று கருத்தைப் பதித்து வைப்பதற்கும் இவர்கள் குர்ஆனின், ஸ{ன்னாவின் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் சரியான பாதையென்று ஒன்றை நிரூபித்து அவர்களுக்குக் காட்டினால் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 


சரியான பாதையென்றால் என்ன? நான் இன்று வந்து இதுதான் சரியான பாதையென்று கூறுவது சரியான பாதையல்ல. சரியான பாதையென்பது எமக்கு முன் சென்ற உலமாக்களின் பாதையாகும். ஸஹாபாக்களின் அடிச்சுவட்டினைப் பின்தொடர்ந்து எமது சிறப்பு மிக்க ஸாலி ஹான முன்னோர்களின் பாதையே சரியான பாதையாகும். 


இந்த ஹலபிகளுக்கு ஸிராதுல் முஸ்தகீம் என்ற நேரான பாதையென்பது ஸஹாபாக்கள் இருந்த பாதைதான் என்று கூறுவதில் சந்தேகமும் மயக்கமும் இருக்கிறது. சூறதுல் பாத்திஹாவில் வருகின்ற ஒரு வசனத்தின் 'கோபத்துக்குள்ளானவர்களும் வழிதவறியவர்களும்" என்ற வார்த்தைக்கு அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் னு விளக்கம் தருகையில் - ஆது ய+தர்களையும், கிறிஸ்தவர்களையும் குறிப்பிடுகிறது என்ற விளக்கத்தை இமாம் தபரி அவருடைய தப்ஸீரில் பதிவுசெய்திருக்கிறார். இந்த விளக்கத்தையும் பீ.ஜெய்னுல் ஆபிதீன் என்பவர் மறுக்கிறார். நாம் ஹலபியின் தன்மைகளைப் புரிந்து கொண்டால் எமக்கு அவர்களின் அடையாலங்களை தெளிவாகக் கண்டுகொள்ள முடியும். 


இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஒருவர் பித்அத்வாதிகளை விமர்சிப்பதற்கும் அவர்களை அடையாளம் காட்;டுவதற்கும் தான் வெட்கப்படுவதாகக் கூறுவாராயின், கூச்சப்படுவதாகக் கூறுவாராயின், இது ஒரு சாதாரன விடயமல்ல. நிச்சயமாக இது ஒரு ஆபத்தான விடயமாகும். 


பித்அத்தையும், குப்ரையும், ஷிர்க்கையும் செய்கின்றவர்களை சமூகத்துக்கு அடையாளம் காடுவதற்கு அவர் கூச்சப்படுவதேன்? பித்அத்தை பித்அத்தென்றும் ஷிர்க்கை ஷிர்க்கென்றும், குப்பைரை குப்ரென்றும் கூறுவதற்கு வெட்கப்படுதென்றால், தஃவத்தானது எதற்காகச் செய்யப்படுகிறது? அல்லாஹ்வக்கு இணைவைப்பதையும், மார்க்கத்தில் புதிதாக உருவாக்குவதையும் கண்டுவிட்டு அதனைத்தட்டிக் கேட்பதற்கு கூச்சப்படுகின்றவர்கள் தங்களின் தஃவத்தில் எதனைச் செய்ய வந்திருக்கிறார்கள்? 


அல்லாஹ்வின் மார்க்கத்தை எத்தி வைப்பவர்களாகவும் அல்லாஹ்வின் பால் அழைப்பவர்களாகவும் நாம் இருப்பவர்களெனில் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணை வைப்பவர்களைக் கண்ட பின்னும் அதசை சுட்டிக்காட்டுவதில் நாம் வெட்கப்பட முடியமா? 


நிச்சயமாக அதனைப் பகிரங்கமாக நீங்கள் சுட்டிக் காட்டிட வேண்டும். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வுடன் இணை வைப்பதன்பால் பிறருக்கு வழிகாட்டுவார்கள். அல்லாஹ்வை மட்டும் வணங்குவதைக் குழப்புபவர்கள்.


எனவே இவர்கள் ஷிர்க்கின் அழைப்பாளர்க ளென்றும் தவ்ஹீதைக் குழப்பிவிடுபவர்களென்றும் சமூகத்துக்கு எடுத்துக் காட்டுவது உங்களது கடமையாகும். எனவே யார் இதனை எடுத்துக் காட்டுவதற்கு வெட்கப்படுகிறாரோ அந்த விடயங்கள் அவரிடத்திலும் குறைபாடாக அமைந்திருப்பதே அவர் அவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணமாகும். 


ஏனென்றால், அதனை அவர் எடுத்துக்காட்டினால் அவரும் அதிலே மாட்டிக் கொள்வாரென்பதை அவர் புரிந்திருக்கிறார். இதனால் அவர் அதனை எடுத்துக் காட்ட மாட்டார்.


இன்று மனிதர்களுடைய கௌரவங்களும் மானங்களும் பெரிதாகிவிட்டது. மார்க்கத்தில் அமைந்துள்ள உண்மைகள் மதிப்பற்றதாகிவிட்டது. இந்த நிலையைக் கண்டு யாரும் கூச்சப்படவில்லை. இந்நிலைக்காக எவரும் வெட்கப்படவில்லை. 


ஆழைப்பாளர் தன் பெயரையும் பட்டத்தையும் இடத்தையும் தக்கவைத்துக் கொள்வது அவருக்குக் கடமையாகி விட்டது. இயக்கஉறுப்பினர்களுக்கு இயக்கத்தின் தலைவரின் பெயரைப் பாதுகாத்து வைப்பது கடமையாகிவிட்டது. மார்க்கத்தின் உண்மைகள் தட்டப்படுவதை மறுப்பதோ மார்க்கத்தைப் பாதுகாப்பதோ தாயி எனும் அழைப்பாளருக்குப் பொறுப்பானதொரு காரியமல்ல என்ற தொரு நிலை வந்து விட்டது. 


அப்படியானால் இவர்கள் அனைவரும் எதனை அழைப்புப் பணியாகச் செய்கிறார்கள். எனவே இதன் அடிப்படையில் நான் உங்களுக்குக் கூறுகிறேன் நீங்கள் ஹலபிகளின் தன்மைகள் என்னவென்பதை நன்கு விளங்கிக் கொள்ளுங்கள். 


யாரும் பெயரை ஸலபியென்று வைத்ததினால் அவர்கள் ஸலபிகளாகி விட முடியாது. ஸலபுஸ்ஸாலிஹீன்களிலுள்ள உலமாக்கள் பித்அத் வாதிகளை அடையாளங் காட்டுகாட்டுவதற்கு வெட்கப்பட்டவர்களல்ல. 


இமாம் பர்பஹாரி இமாம் இப்னு தைமிய்யா இமாம் இப்னு கய்யிம் இமாம் இப்னு கஸீர் ஷெய்க் அல்பானி ஷெய்க் பின்பாஸ் ஷெய்க் முஹம்மது அப்துல் ஹாதி ஷெய்க்; உஸைமீன் ஷெய்க் உபைத் அல் ஜாபிரி ஷெய்க் ரபி அல் மத்ஹலி போன்ற தற்கால உலமாக்களும் முன்சென்ற உலமாக்களும் பித்அத்களையும் பித்அத்வாதிகளையும் அடையாளம் காட்டும் விடையத்தில் தயக்கம் காட்டுபவர்களல்ல. ஷிர்க்கையும், குப்ரையும் அடையாளம் காட்டாமல் பின்வாங்கியவர்களல்ல. 


இதுதான் முன்சென்றதும், இன்றிருப்பதும், இனிவருவதுமான ஸலபி உலமாக்களுடைய வழிமுறையாக இருக்கின்றது.


இன்று பலர் ஸலபுஸ் ஸாலிஹீன்களின் பாதையில்லாத ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு நாங்களும் ஸலபிகள் தான் என்று கூறிக் கொள்கிறார்கள். இதனை நாம் கண்ட பின்னும் மக்களை அவர்களின் பின்னால் செல்வதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது. 


அவ்வாறு அனுமதிக்க இயலாத காரணத்தால்தான் சமூகத்தில் பரந்திருக்கும் அனைத்து பித்அத்களுக்கும், ஷிரக்களுக்கும் எதிராக நாம் மறுப்பளிக்க வேண்டியிருந்தது. ஸலபியின் பெயரில் பல இயக்கங்கள் செயற்படுகின்றன. இவை இயக்கத்தின் வழியில் வாழ்ந்து கொண்டு ஸலபின் பெயரில் சமூகத்தை மயக்கும் கூட்டங்களாகும். 


இதனால் ஸலபியின் பெயரில் பித்அத்களை வளப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விட்டது. ஸலபியின் போர்வையிலே பித்அத் வாதியும், பித்அத்தும் வளர்கிறது. எனவே இதில் இருப்பவன் - தான் எவ்வளவு பித்அத்களைச் செய்தாலும், ஷிர்க்கை செய்தாலும் நானும் ஒரு ஸலபிதான் என்று நினைத்துக் கொள்கிறான். 


இவர்கள் நாளை ஒரு ஸலபி தாயி என்ற பெயரில் பித்அத்களையும், குப்ர்களையும், ஷிர்க்களையும் கூறுவார்கள். இது அவர்களுக்கு ஒரு தஃவத்தாக அமைந்து விடும். ஷிர்க்கை வளர்ப்பதும் ஒரு தஃவத்தாகும். பித்அத்தைப் பரப்புவதும் அவர்களிடத்தில் ஒரு தஃவத்தாகிவிடும். 


அசத்தியங்களை சுட்டிக்காட்டுவதற்கு வெட்கப்படுவார்கள். இவர்கள் இருக்கும் காலமெல்லாம் பித்அத்களை வளர்ப்பவனுக்கும் ஷிர்க்களைக் கூறுபவனுக்கும் எதிராக விமர்சனம் இருக்காது. 


எனவே, இந்த வாசலை நாம் திறந்து விட்டோமெனில் ஸலபியின் பெயரில் அசத்தியங்கள் வளக்கப்படுவதிலும், பரப்பப்படுவதிலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்க விபரீதங்களை உணர்ந்திருப்பதன் காரணத்தினால்தான் பல வருடங்களுக்கு முன்பிருந்தே எமது அழைப்புப் பணியில் ஸலபிகளினதும் ஹலபிகளினதும் வேறுபட்ட தன்மைகளை எமது சமூகத்துக்கு எத்திவைப்பதை எமது மிக முக்கிய கடமையாகக் கருதிச் செயற்பட்டு வருகிறோம். 


இதில் உதாரணமாகக் கூறுவதாயின் “ஸலபி தஃவாவும் இலங்கை சர்ச்சைகளும்” என்ற தலைப்pல் சில வருடங்களுக்கு முன் நாம் எத்திவைத்ததைக் கூறலாம். இன்னும், இதே விடயம் தொடர்பாக பல தலைப்புகளில் நாம் எத்திவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இஸ்லாமிய அழைப்புப் பணியில் - தஃவாவில் ஸலபிகளின் உண்மைகள் என்னவென்றால், ஸலபிகள் தங்களது தஃவத்தில் எப்பொழுதுமே பித்அத்தை பித்அத்தென்று வெளிப்படையாக சமூகத்துக்கு எத்திவைத்து விடுவார்கள்.அதைப்போன்று ஷிர்க்கை ஷிர்கென்று கூறுவார்கள். அதில் தயக்கமும் வெட்கமும் காணமுடியாது. 


அதே போன்று வாஜிபாக இருப்பதை வாஜிபென்றும், ஹலாலை ஹலால் என்றும் ஹராமை ஹராம் என்றும் தெளிவாகக் கூறிவிடுவார்கள். அதே போன்று ஒரு பித்அத்வதியை பித்அத்வாதியென்று சமூகத்தக்குக் காட்டிக்கொடுத்து விடுவார்கள். இவைகளையெல்லாம் ஸலபிகள் தங்கள் தஃவாவில் தெட்டத்தெளிவாக சொல்லிவிடுவார்கள். 


இவ்வாறு எத்திவைப்பதால் சமூகத்தினுள் சர்ச்சை வருகின்றது, குழப்பம் ஏற்படுகின்றதென்ற இன்னோரன்ன போலிக் காரனங்களைக் கூறிக்கொண்டு அசத்தியத்தை அசத்தியமென்று தெளிவாக எடுத்துவைப்பதில் ஸலபிகள் ஒரு போதும் பின்வாங்குவதில்லை. 


ஆனால், ஹலபிகள் தங்கள் பித்அத்தை பித்அத்தென்றும், ஷிர்க்கை ஷிர்கென்றும் எடுத்துக் காட்டமாட்டார்கள். இதற்காண காரணத்தை அவர்களிடம் கேட்டால், சமூகம் பிரிந்துவிடும், குழப்பங்களும் பிரச்சினைகளும் உருவாகி விடும் போன்ற சாட்டுளைக் கூறிக்கொண்டு காலத்தைக் கடத்துவார்கள். இயலுமான வரை ஆட்களை சேர்த்துக்கொண்டும் ஒருவரையொருவர் அன்போடு நேசித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். 


அனால், மறுபுரம் மார்க்கம் நாசமாகிக் கொண்டே போகிறது. இதுதான் ஹலபிகளின் தன்மை. இதற்கு மாற்றமான போக்குடையது தான் ஸலபிகளின் தன்மைகளும் போக்கும். 


இவைகளைத் தெளிவாக நீங்கள் புரிந்து கொண்டு, ஸலபியின் பெயரில் செயற்படும் கூட்டங்களை அடையாலம் கண்டுகொள்ளுங்கள். நாங்கள் எமது சொந்தப் பிரச்சினைகளின் காரணமாகவோ ஏனைய இயக்கங்களை விமர்சிக்கிறோமென்ற குறள்கள் பல திசைகளிலிருந்தும் வந்ததன் காரணமான அவர்களுக்கு உண்மையான நிலையை விளக்க வேண்டுமென்று கருதியதால் நான் இந்த விடயங்களையெல்லாம் இந்த சமூகத்துக்கு எத்திவைத்தேன். 


இப்போது இந்த சமூகத்தைப் பார்த்து நான் கேட்பது என்னவென்றால், நாங்கள் இந்த அனைத்துக் கூட்டங்களையும் பார்த்து இவர்கள் இயக்கவாதிகள், அவர்கள் ஸலபிகள் அல்ல என்று கூறுவது உண்மையானதா? அல்லது பொய்யான வாதமா? 


ஹலபிகளின் வார்த்தைகளிலேயே அவர்களின் உஸ_ல்கள் - அடிப்படைகள் வெளிவருகின்றன. அவர்களின் நாவுகளினால் எத்தனையோ பித்அத்வாதிகளைப் புகழ்ந்துரைப்பதைக் காணமுடிகிறது. தங்களை ஸலபிகள் என்று கூறுபவர்கள் எத்தனையோ ஸலபி உஸ_ல்களை மறுக்கிறார்கள். தங்களால் எந்தளவு முடியமோ அந்தளவுக்கு இவர்கள் ஸலபிகளின் உண்மைகளை மறைத்து அதற்குள் குழப்பங்களை எற்படுத்துகிறார்கள். எனவே இவர்களைக் கண்கூடாகக் கண்டு இவர்கள் பற்றிய முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். 


இவர்களில் யாரும் ஸலபிகளின் பெயரில் தெளிவில் மயக்கத்தினை ஊற்றினாலும் நாம் அதனால் மாறிவிட முடியாது. ஸலபியின் பெயரை சுமந்த இவர்கள் வெறுமனே இயக்கவாதிகள்தான் என்பதை நாம் உறுதியாக கல்வியின் அடிப்படையில் கூறமுடியும். 


இவர்களின் இந்த மயக்கம்தான் இன்று தமிழ்பேசும் மக்கள் மத்தியில் ஸலபி தஃவா தலைதூக்க முடியாமைக்காண காரணமாகும். இவர்கள் குழப்பமான கருத்துக்களை ஸலபி என்ற பெயரில் சமூகத்தினுல் வளர்க்கிறார்கள். இவர்களுடைய இந்த விளையாட்டு ஒரு பயங்கரமானதொரு விளையாட்டாகும். 


ஏனென்றால், இதில் சிக்குபவர்கள் அனேகமாக தூய்மையான மார்க்கத்தைத் தேடும் சகோதரர்கள்தான். ஏனென்றால், அவர்களின் பார்வையில் இவர்கள் ஸலபிகளாகத் தொன்றுவதால் இலகுவாகச் சிக்கிவிடுகிறார்கள். ஸலபியின் போர்வையில் செயற்படுபவர்களின் மயக்கமான வலையில் சத்தியத்தையும் தூய்மையான மார்க்கத்தையும் நேசிப்பவர்களும் தேடுபவர்களும் சிக்குவதென்பது சாத்தியமற்றது. 


எனவேதான் ஸலபியின் பெயரில் ஆடுகின்ற இந்த ஆட்டம் மிகவும் பயங்கரமானதாகும். சத்தியத்தை நேசிப்பவர்களையும் தூய்மையான மார்க்கத்தைத் தேடுபவர்களையும் மயக்கத்திலிருந்கும் அல்லாஹ் காப்பாற்றுவானாக. இதுவே நான் உங்கள்முன் எத்திவைக்க விரும்பியதாகும். 


அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்!.