[மன்ஹஜ் வழிமுறை]

சத்தியம் ஸஹாபாக்களின் விளக்கத்தின் உள்ளே அடங்கியுள்ளது

இவர்கள் ஏனையவர்களின் வார்த்தைகள், வழிகாட்டல்களை விடவும் ஸஹாபாக்கள், தாபியீன்களின் வார்த்தைகளுக்கும்  வழிகாட்டல்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். அது கொள்கை, வணக்கவழிபாடு, அன்றாட நடவடிக்கை, குனாதிசயம், அர‌சிய‌ல் மற்றும் சமூக விடயங்கள் போன்ற எந்த அம்சமாக இருப்பினும் சரியே!.

மார்க்கத்தில் அடிப்படையான விடயங்களிலும் ஏனைய விடயங்களிலும் அல்லாஹ் அவனது தூதருக்கு அனுப்பிய வஹியின் அடிப்படையில் உறுதியாக இருப்பார்கள். 

இவர்கள் தூய்மையாகவும் உண்மையாகவும் உறுதியாகவும் தஃவா பாதையில் நிமிர்ந்து நிற்பார்கள். மேலும் இவர்கள் தான் நபித்துவத்தின் கல்வியை சுமப்பவர்கள்.
இதனை – நான் (பஸீரா) எனும் தெளிவோடு  சுமப்பேன்.  அது போன்று என்னைப் பின்பற்றுபவர்களும் அவ்வாறுதான் இருப்பார்கள்.  அதாவது அல்லாஹ்வின் பால் அழைக்கும் அழைப்புப் பணியானது தெளிவோடு இருக்கும்.  

அந்தத் தெளிவு என்பது என்னவென்றால் அவை அல்குர்ஆனின் ஆதாரங்களோடும் அஸ்ஸுன்னாவின் ஆதாரங்களோடும் அத்தெளிவு இருக்கும்.  அந்தத் தெளிவை அந்த நபி பெற்றவராக இருப்பதுடன் அந்த நபியை அழைப்புப் பணியில் பின்பற்றுபவர்களும் தெளிவோடு இருப்பார்கள்.  

அழைப்புப் பணியில் தெளிவுடன் இருப்பதன் அவசியத்தை அறிந்ததனால்தான் யாரும் ஒருவன் எந்தளவுக்குப் படித்தவனாக இருந்தாலும் அவனுக்கு அழைப்புப் பணிவிடயத்தில்  உலமாக்கல் அனுமதி கொடுக்கும் வரை அவனை அழைப்புப் பணிக்குத் தகுதியுடையவனாக அயிம்மத்துஸ் ஸுன்னா (ஸுன்னாவுடைய இமாம்கள், உலமாக்கள் ) ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  

ஏனென்றால்  அழைப்புப் பணியைச் சுமந்தவன் தெளிவைப் பெற்றவனாக இருக்க வேண்டும்.  அது எத்தகைய தெளிவு என்றால் எத்திவைப்பதற்கு முன் கற்றுக்கொண்டதை சரிவர அறிந்தவர்களாகவும், பூரணமாக விளங்கியவர்களாகவும் இருக்க வேண்டும்.

இன்று பலர் குர்ஆனைப் படிக்கின்றார்கள்  ஆயத்தின் விளக்கங்களை வாசிக்கின்றார்கள்  வாசித்த பின் அதனை விளங்க முடியாத நிலைவருகின்ற போது அதனை தங்களுக்குள்  மறைத்துககொண்டு தங்களது தேவைக்கேற்றாற் போல் விளக்கமளிக்கின்றார்கள்.  இவ்வாறு விளக்கம் கொடுப்பது பஸீரா அல்ல.  

மாறாக அந்த ஆயத்துடைய விளக்கங்களில்  எந்தெந்த ஆயத்துக்களுக்கு என்னென்ன வரைவிலக்கனங்கள் அதன் வரையரைகள், அதற்கான ஸஹாபாக்களின் விளக்கங்கள் இன்னும் அதன் சட்டங்கள்  என்பவற்றையெல்லாம்  அவர்கள் புரிந்தவர்களாக இருக்க வேண்டும்.  

அதே போன்று இதற்கு முரணான விடயங்களில் எப்படி குர்ஆன் ஸுன்னா அடிப்படையைக் கையாள்வது எனத்தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.    

அதேபோன்று எந்த ஆயத் எந்த ஆயத்துடன் சம்பந்தமானது என்பதை விளங்குவதுடன் ஒரு விடயத்துடன் எந்த ஆயத் தொடர்புடையுது எந்த ஆயத் அதனுடன் தொடர்பற்றது என்பதைப் புரிந்தவர்களாக இருக்க வேண்டும்.  அதேபோன்று  எந்த ஹதீஸ்கள் எந்த ஹதீஸ{டன் தொடர்புடையது இன்னும் எது தொடர்பற்றது என்பவற்றையெல்லாம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.  

இவையனைத்தையும் எதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்?  எமக்குத் தேவையான மாதிரி ஓதுவதாலும், வாசிப்பதனாலும், பெற்றுக்கொள்ள முடியுமா?  ஒரு போதும் முடியாது.  இவர்களுக்கு யார் இதனைக் கற்றுக்கொடுப்பது?  ஆயத்துக்களின் வரையரைகள் என்னவென்றும், ஒரு ஆயத்தினை இன்னுமொரு ஆயத்துடன் எவ்வாறு சேர்த்து, பிரித்து விளங்குவதென்றும் மேலும் ஒரு ஹதீஸ{டன் எந்த ஆயத்தினை அல்லது எந்த ஹதீஸினை சேர்து  விளங்குவது என்பதையும் நபி அவர்கள் ஸஹாபாக்களுக்குக் காட்டிக் கொடுத்த வழமுறை எவையென்பதையும் நாம் அறிந்துகொள்ளவில்லை என்றால் ஒவ்வொருவரும் அவர்களது தேவைக்கேற்றாற் போல் ஹதீஸ்களை ஹதீஸ்களுடனும் ஆயத்துக்களுடனும் தொடர்புபடுத்தி தங்களுக்குத் தேவையான விளக்கங்களைப் பெற்றுக்கொள்வார்கள்.  

இந்த வழிமுறையில் வந்த கூட்டங்கள்தான் குர்ஆன் ஸுன்னாவின் பெயரில் அவர்அவரது தேவைக்கேற்ப வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டார்கள்.  இதனால்தான் இயக்கங்கள் வளர்ந்தன.  இதன்காரணமாகத்தான் மத்ஹபுகள், பிரிவுகள் வேறுபாடுகள் சர்ச்சைககள் என்று தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஏற்பட்டுவிட்டன.

ஸஹாபாக்களின் காலத்தில் அவர்கள் கற்றவர்களாகவும் அதனைப் புரிந்த மார்க்க மேதைகளாக திகழ்ந்தும் அவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கவில்லை.  அவர் அவர்களுது தேவைக்கேற்ப அல்குர்ஆனுக்கும் அல்ஹதீஸிற்கும் விளக்கம் கொடுக்கவில்லை.  நபித்தோழர்களிடத்தில் ஒரு ஆயத்திற்கு பலவிதமான விளக்கங்கள் இருக்கவில்லை.  இதற்குக் காரணம் அவர்கள் அதன் வரையறைகளை அறிந்தவர்களாகவும் நன்கு புரிந்தவர்களாகவும் இருந்தார்கள்.  இதனால்தான் அந்த ஸஹாபாக்களின் காலத்தில் பித்அத் என்ற பேச்சிற்கே இடமிருக்கவில்லை.

அவர்கள் மத்தியில் பிரிவுகள் உருவாகவில்லை.  அவர்களது கொள்கையும் மாறுபட்டதாக இருக்கவில்லை.  இதனால் அந்த உம்மத்தின் மத்தியில் பிரிவுத்தன்மை தலைதுக்கவில்லை.  


எபபொழுது உம்மத்தே இஸ்லாமியா ஸஹாபாக்களின் வழிமுறையை ஓரம் கட்டிவிட்டார்களளோ அன்று தொடக்கம் ஒவ்வொருவரும் குர்ஆன் விடயத்தில் தான்தோன்றித்தனமான விளக்கங்களும், ஹதீஸ் விடயத்தில் அவரவருக்கென்று புதுப்புது விளக்கங்களும் வர ஆரம்பித்து விட்டன. அவனுடைய விளக்கத்திற்கு சார்பாக  அவர்களுக்குத் தோன்றியது போன்று  ஆயத்துக்களையும் ஹதீஸ்களையும் தொடர்புபடுத்தி கொள்வார்கள் இவ்வாறு தம் விருப்பத்திற்கேற்ப ஒன்றையொன்று சம்பந்தப்படுத்தி  குர்ஆன், ஸுன்னாவின் பெயரில் ஆதாரம் என்று வாதிடுகின்றார்கள்.  


இதனால்தான் இன்று அழைப்புப்பணியில் பல பிரிவுகள், இயக்கங்கள், கூட்டங்கள், மத்ஹபுகள், சர்ச்சைகள் என்று ஆகிவிட்டது.  நிச்சயமாக குர்ஆன் ஆயத்துக்களினாலும் ஹதீஸ்களினாலும் இவ்வாறு பிரிவுகள் உருவாகுமென்றிருந்தால் அது முதலில் ஸஹாபாக்கள் மத்தியில் தான் உருவாகியிருக்க வேண்டும்.    


ஏனென்றால் அவர்களைவிட மார்க்கத்தை தெளிவாக விளங்கிய கூட்டம் யாருமே கிடையாது.  ஆயத்துக்களின் வரையரைகளையும் அதன் ஆழமான கருத்துக்களையும் அவர்களைவிடவும் விளங்கியவர்கள் எவருமிலர்.  அந்தளவு து}ரம் விளங்கிய அவாகள் ஒற்றுமையாக வாழ்ந்ததன் காரணம் அவர்கள் அதற்கான் வரையரைகளை சரிவரப் புரிந்து பேணிவந்தமையேயாகும்.  அதனுடைய விளக்கங்களை சரியாக விளங்கிய காரணத்தினால் அவர்களுடைய கொள்கை ஒன்றாக இருந்தது.  அவர்களுடைய வணக்கவழிபாடுகள் ஒன்றாக இருந்தன.  அனைத்து அம்சங்களும் ஒன்றாகவே இருந்தன. விடயங்கள் அனைத்தும் ஒரு அடிப்படையோடு இருந்த காரணத்தினால் அந்த மக்கள் வேறுபடவில்லை.இமாம் அல் அவ்ஸாயி ( இறப்பு 157ஹிஜ்ரி) முன்னோர்களின் அறிவித்தல்களை பற்றிக்கொள், மக்கள் உன்னை புறக்கனித்தாலும் சரியே !, மக்களின் அபிப்பிராயங்களில் கவனமாயிரு, அது அவர்களின் வார்த்தைகளால் எவ்வளவு அழகாக இருந்தாலும் சரியே. (கிதாபுல் ஷரியா இமாம் ஆஜூரி )
  • அல்குர் ஆன் ஸுன்னாஹ் பின்பற்றும் வழி முறை என்ன? முன்னுரை சொற்பொழிவு 1 2 
  • இந்தியா பயண உரைகள் 2014 Jan : மார்க்கத்தை பின்பற்றுவதும்  அதன் சரியான வழிமுறையும் 1  2  
  • 22 Oct 2013 அஹுளுஸ் சுன்னாஹ் தவ்ஹீதின் குரலை உயர்த்துவதும் அல்லாஹ் அஹுளுஸ் சுன்னாவின் குரலை உயர்த்தி வைப்பதும்