[லாஇலாஹ இல்லல்லாஹ்வும் அதன் நிபந்தனைகளும்]

லாஇலாஹ இல்லல்லாஹ் வும் அதன் நிபந்தனைகளும் 


முஸ்லிம்களுக்கு அல்லாஹ் த’லா கொள்கையாக தந்திருக்கும் அடிப்படை விஷயம் என்னவென்றால் 


”வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை, இன்னும் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதராவார். ”

இதுவே முஸ்லிம்களின் அடிப்படை கொள்கையாகும். இந்த கொள்கையை பரப்புவதும் இதனை விளக்குவதும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் கருவாக இருந்தது.

லாஇலாஹ இல்லல்லாஹ் என்பது இஸ்லாத்தின் அஸ்திவாரமாகும். இதற்கு மிகப்பெரும் அந்தஸ்து இருக்கிறது. இதுவே இஸ்லாமியக் கடமைகளில் முதற் கடமையும் ஈமானின் கிளைகளில் மிக உயர்ந்ததுமாகும்.

இக்கலிமாவை மொழிவதும் அதற்கேற்ப செயல்படுவதும் செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நிபந்தனையாகும்.

இன்று வாழும் அநேக முஸ்லிம்கள் கலிமாவை மொழிந்துள்ளார்கள் ஆனால் , அதனை விளங்கி கொள்ளவில்லை.மக்கத்து காபிர்கள் கலிமாவை விளங்கி இருந்தார்கள் ஆனால் , மொழியவில்லை.

ஏனெனில், லா இலா ஹ .......அல்லாஹு , ஹு ...ஹு...என்று திக்ர் மஜ்லிஸ் வைத்து கலிமாவை சப்தமிட்டு மொழிந்துக் கொண்டே , அவ்லியாக்கள் என்றும் தர்கா என்றும் மண்டியிடுகிறான். ஏன் , துன்பமான நேரத்தில் கூட " யா முஹியத்தீனும், நாகூர் ஆண்டகையையும் " தான் அழைக்கிறான்.

ஆனால், மக்கத்து காபிர்களோ, கடலில் ஒரு துன்பம் வந்துவிட்டால், தூய்மையாக அல்லாஹ்வின் பக்கம் திருப்பிவிடுவான் என்று அல்லாஹ்வே சொல்கிறான். இன்னும், மழையை பொழிவிப்பவன் யார் என்றால் அல்லாஹ் என்பான். இது மிகப் பெரிய கைசேதமே.

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதன் செய்கின்ற அநியாயங்கள், விபச்சாரங்கள், சொத்துகளை அபகரிக்கும் களவுகள், கொலைகள், போன்ற அனைத்து அக்கிரமங்களையும் கண் முன்னால் கண்ட போது அதை அனைத்தையும் சீர்திருத்துவற்கு அவர் ஒரேயோரு வழிமுறையையே கையாண்டார்கள்.

அன்னார் கையாண்ட ஒரே வழிமுறை ”வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேருயாரும் இல்லை” எனும் அடிப்படையான கொள்கையை கூறியதாகும்.

தவ்ஹீத் , லாஇலாஹ இல்லல்லாஹ் ,இஸ்லாத்தின் மிக முக்கியமான தூணாகும். தவ்ஹீதுக்காகவே , இந்த முழு பிரபஞ்சமும் படைக்கப்பட்டது. நபிமார்கள் தவ்ஹீதுக்காகவே அனுப்பப்பட்டார்கள். வேதங்கள் மக்களுக்கு அதனை கற்பிப்பதற்கே இறக்கப்பட்டது.

லாஇலாஹ இல்லல்லாஹ் வை மொழிவதும் , அதனை விளங்கி அதற்கேற்ப செயல்படுவதும் செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நிபந்தனையாகும்.

அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரான இமாம் வஹ்ப் இப்னு முனப்பஹ் ரஹீமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது :

கலிமா லாஇலாஹ இல்லல்லாஹ் சுவர்கத்தின் திறவுக்கோல் இல்லையா என்று ? அவர் கூறினார் :

ஆம், கண்டிப்பாக, இருப்பினும், பற்கள் இல்லாத திறவுகோல் இல்லையே என்றார்.எனவே, நீ, சரியான சாவியை கொண்டு திறந்தாள் அது திறக்கும். இல்லையென்றால் அது உனக்கு திறக்கப்பட மாட்டாது.


அதே போன்று தான் இந்த சுவனத்தின் திறவு கோலின் பற்கள் அதன் நிபந்தனைகளாகும்.


வெப்பத்தால் தாகத்தில் வாடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதருக்கு, குளிரான தண்ணீர் கிடைத்தால் , அது எப்படி அவருக்கு குளிர்ச்சியை கொடுத்து அவரை சாந்தப்படுத்துமோ அதே போன்றோ தான் இந்த லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமா வின் கல்வி மனிதரின் வாழ்வை சந்தோஷப்படுத்தி சுபிட்சமாக்கி வைக்கும். 


[கலிமது இஹ்லாஸ் என்ற நூலில் இமாம் இப்ன் ரஜப் அழ ஹன்பலி ரஹீமஹுல்லாஹ்.]


சுபியான் இப்னு உயைனா ரஹீமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்


லா இலா ஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை படிப்பது ,
அதன் தெளிவை ஒரு மனிதருக்கு அல்லாஹு சுபஹானஹுதாலா கொடுப்பது , அல்லாஹு சுபஹானஹுதாலா துன்யாவில் கொடுக்கக் கூடிய ஒரு சிறப்பான நிஹ்மத் ஆகும்.

துன்யாவிலும் ஆகிரத்திலும் எம்மை உறுதிப்படுத்தி வைக்ககூடிய ஒரு வார்த்தை இருக்கும் என்றால் அது லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவாகும்.

உறுதியான வார்த்தையை கொண்டு ஈமான் கொண்டவர்களை துனியாவிலும் ஆகிரத்திலும் அல்லாஹ் உறுதிப்படுத்துவான்.
[அல்குர் ஆன்]

 
உறுதியான வார்த்தைக்கு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுக்கும் விளக்கம் லாஇலாஹ இல்லல்லாஹ்.
இதனை இமாம் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். தப்சீர் இப்னு கஸீர் , தப்சீர் இப்னு ஜரீர் இல் பதியப்பட்டு உள்ளது.

என்னுடைய வாழ்க்கை துன்யாவிலே சந்தேகங்களை, மனோ இச்சைகளை, ஆசா பாசங்களை கொண்டு தடுமாறுகிறது என்றால்,
அதற்குரிய காரணம், நான் லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையை கொண்டு உறுதிபடுத்தப்படவில்லை.

நாங்கள் கலிமாவை மொழிந்து உள்ளோம் ஆனால், அல்லாஹ்வின் நம்பிக்கையிலேயே குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறோம். அஷாயிரா , முஹ்தசிலா , ஜஹ்மியா, ஜெபரிய்யா , கதரிய்யா என்று பல வழிகெட்ட கூட்டங்களின் வழிமுறைகளை அல்லாஹ்வின் நம்பிக்கையில் கொண்டு உள்ளோம்.

ஏன் , லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதை உச்சரிப்பதிலேயே வழிகெட்டு , காணப்படுகிறோம்.லாயிலாஹ இல்லல்லாஹ் , இந்த கலிமாவில் இரண்டு பகுதி இருக்கிறது.

ஒன்று முழுமையான மறுப்பு. மற்றது அல்லாஹ் என்று உறுதிக் காட்டுவது. வணக்கத்திற்கு தகுதியானவன் யாருமில்லை என்று முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது.

பின்னர். அல்லாஹவை தவிர என்று உறுதிக் காட்டப்படுகிறது.
இதனையே , நபிஃய் மறுத்தல் , இஸ்பாத் உறுதிக் காட்டல் எனப்படும்.

இந்த சூபி கூட்டங்கள் "லாஇலாஹுன் இல்லல்லாஹ்" என்று உச்சரிக்கின்றன. வணக்கப்படுவைகள் இல்லை, அல்லாஹ்வை தவிர என்று உச்சரிக்கிறார்கள்.

அப்படி என்றால், வணங்கப்படுபவை அனைத்தும் அல்லாஹ் என்ற கருத்து வருகிறது. இது கலிமாவின் பெயரில் குப்ர் அன்றி வேறில்லை.

மேலும், இன்னொரு சூபி கூட்டங்கள், அவர்களுடைய ஹலாரா என்ற திக்ர் மஜ்லிஸில் , லா இ லா ...... ஹ இல்..லல்லாஹ்...என்று மூச்சை கண்டபடி நீட்டி நிறுத்தி உச்சரிப்பார்கள்.

அத்தோடு , லா இலா ...ஹ.. என்று 300 தடவை சொன்னால் , இல்லல்லாஹ் என்பதை 200 தடவை சொல்லி முடித்து விடுவார்கள்.
வணங்க்கத்திற்கு தகுதியானவன் இல்லை என்பது 100 தடவை சொல்லப்பட்டு உள்ளது. இது ஷிர்க் அன்றி வேறில்லை.

இப்படி இரண்டாக பிரித்து சொல்வதே முதல் குப்ரும் தவறும் . அதுவும் அந்த முதல் பகுதியான மறுக்கும் பகுதியை மட்டும் சொல்லி முடித்து விடுவது அதற்கு அடுத்த ஷிர்க்கும் குப்ரும்.

லாஇலாஹ இல்லல்லாஹ் வின் நேரடியான கருத்து வணக்கத்திற்கு தகுதியானவன் யாருமில்லை , அல்லாஹ்வை தவிர என்பதாகும். இப்படி இருந்தும்,

வஸ்த்துக்களுக்கு எந்த சகத்தியும் இல்லை, அல்லாஹ்வை தவிர என்று ஜமாதுத் தப்லீக் பொருள் கொடுக்கிறது. இது தவ்ஹீதின் ருபுபிய்யா என்ற வகையை சேர்ந்த பொருளாகும்.

இந்த ருபுபிய்யா என்ற தவ்ஹீதின் வகையை மக்கத்து காபிர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இருந்தும் தான் அல்லாஹ் அவர்களை காபிர் என்று சொல்கிறான்.

நபியே(அவர்களிடம் ) சொல்லுங்கள் . .


உங்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார் ? உங்களது பார்வை கேள்வி (அனைத்துக்கும் ) சொந்தக்காரன் யார் . ? செத்ததிலிருந்து உயிருள்ளதையும் உயிருள்ளதிலிருந்து செத்ததையும் வெளிப்படுத்துபவன் யார் ? எனக் கேளுங்கள் அல்லாஹ்தான் என்று அவர்கள் கூறுவார்கள். அப்படியானால் அவர்கள் (அவனைப்) பயப்பட வேண்டாமா ? (ஸூரத்துல் யூனுஸ் : 37)

எனவே அன்றைய குறைஷிக் காபிர்களிடம் கூட அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன் . ஆக்குபவன் அழிப்பவன்,காப்பவன் ,உணவளிப்பவன் , நோயைக் குணப்படுத்துபவனெல்லாம் அவன்தான் எனும் நம்பிக்கை இருக்கத தான் செய்தது.

எனவே, இந்த லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை இந்த காலக்கட்டத்தில் எந்தளவுக்கு முக்கியமாக பேணி படிக்க வேண்டும்
என்பதை சற்று நிதானமாக சிந்தித்து பாருங்கள்.

எந்தளவுக்கு , இந்த கலிமாவை விளங்குவோமோ அந்தளவுக்கு மார்கத்தை விளங்க முடியும். அதனை பின்பற்றுவோம், நிலை நாட்டுவோம்.

எந்தளவுக்கு அல்லாஹ்வின் மார்கத்தை நிலை நாட்டுகிறோமே அந்தளவுக்கு அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக் கொள்வோம்.
எந்தளவுக்கு இந்த கலிமாவை கற்பதை விட்டு தூரமாகுவோமே அந்தளவுக்கு மார்கத்தை பின்பற்றுவதை விட்டு தூரமாகுவோம்.

அதனால், அல்லாஹ் சுபகாணஹுதாலாவின் திருப்தியை
விட்டு தூரமாகி , அவனது கோபத்தை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக மாறிவிடுவோம்.


லாயிலாஹ இல்லல்லாஹ் வின் நிபந்தனைகள் 

வகுப்பு 1 2 3 4 5(1 ,2)6 (1,2), 7 ( 1 , 2 ) , 


8(1,2),9,10(1,2),11,12(1,2),13(1,2),14(1,2),15(1,2),16(1,2),

17(1,2),18(1,2),19,20