[சொற்பொழிவுகள்]

அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்.


அல்லாஹ்வோ அல்லது அவனுடைய தூதர் صلى الله عليه و اله و سلم‎ அவர்களோ குறிப்பிட்ட அல்லாஹ்வின் நாமங்கள் அல்லது தன்மைகளைத் தவிர வேறு எவற்றையும் அல்லாஹ்வை குறிப்பிட உபயோகிக்கக் கூடாது.
* அல்லாஹ்வுடைய குர்ஆனும் அவனுடைய தூதர் முஹம்மது صلى الله عليه و اله و سلم‎ அவர்களும் அல்லாஹ்வைப் பற்றிக் கூறிய தன்மைகளை உறுதிப்படுத்தல். அவற்றை எல்லளவேனும் மாற்றாமலும், அவற்றை முற்றாகப் புறக்கணிக்காமலும், புது அர்த்தங்களை புகுத்தாமலும், படைப்பினங்களை சுட்டிக்காட்டும் தன்மைகளை கொடுக்காமலும் இருக்க வேண்டும். 
அல்லாஹ்வின் திருநாமங்கள் அறிவினடிப்படையில் அமைந்தவையல்ல. மாறாக அவை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு தான் அமையும். எனவே அவற்றில் கூட்டல், குறைத்தல் கூடாது. 

بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَاء

மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்’ (அல்-மாயிதா 5:64)
இந்த வசனத்தில் ‘யதானி‘ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரபு மொழியில் ‘யதானி‘ என்பதன் பொருள் ‘இரு கைகள்‘ என்பதாகும்.
எனவே இவ்வசனத்திலிருந்து அல்லாஹ்வுக்கு ‘இருகைகள்’ இருப்பதாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றமாக ‘கை’ என்பதற்கு ‘சக்தி’ என்று விளக்கம் கொடுப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதாகவே அமையும்.
அதேவேளை ‘காலத்தைத் திட்டாதீர்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் "காலம்"ஆவான்’ (முஸ்லிம் – 2246) 

என்ற ஹதீஸ் அடிப்படையில்  ‘அத்தஹ்ரு’  (காலம்) என்பது அல்லாஹ்வுடைய நாமங்களில் ஒன்று. 
அல்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் பொறுத்தவரை அவை தருகின்ற வெளிப்படையான கருத்திலேயே அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. அல்குர்ஆனும் நபிமொழிகளும் தருகின்ற
வெளிப்படையான கருத்துக்களை விட்டுவிட்டு அவற்றுக்கு வேறு அர்த்தங்கள்
கற்பிப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுவதாக அமையும். அல்லாஹ் தனக்குத் தாமாக சூட்டிக்கொண்டஇ அல்லது நபி صلى الله عليه و اله و سلم‎ அவர்கள் அவனுக்கு இருப்பதாகச் சொன்ன பெயர்களே தவிர புதிதாக அவனுக்குப் பெயர்களை உருவாக்குவதோஇ அல்லது அவன் தனக்கு சூட்டிக் கொண்ட பெயர்களை மறுப்பதோ பெரும் குற்றமாகும். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

*************************************************************************