[கொள்கை விளக்கம்]

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அவன் அனைத்து மொழிகளாலும் புகழப்படக் கூடியவன்.  எல்லா இடங்களிலும், காலங்களிலும் வணங்கப்படக் கூடியவன்.  அவனது அறிவிலிருந்து ஒரு இடமும் விடுபடாது.  ஒரு விடயம் இன்னுமொரு விடயத்தைவிட்டும் அவனை பராமுகமாக்கி விடாது.  ஒப்வுமைகளை விட்டும் மகத்தானவன்.  மனைவி, குழந்தைகளை விட்டும் பரிசுத்தமானவன்.  அவனது சட்டம் அனைத்து அடியார்களின் செயல்பாடாகிறது. சிந்தனைகளின் மூலம் புத்திகள் அவனை உவமைப் படுத்தல் முடியாது.  உருவகிப்பதன் மூலம் உள்ளங்கள்  அவனை கற்பனை செய்ய முடியாது.

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ

அவனைப் போன்று  எந்த ஒன்றும் இல்லை. அவன் யாவற்றையும் கேற்கக் கூடயவனும்பார்க்கக் கூடியவனுமாக இருக்கின்றான்.  (ஸுரத்து ஸூரா – 11)  
அவனுக்கு அழகிய பெயர்களும், உயர்ந்த பண்புகளும் இருக்கின்றன.  அகிலத்தாருக்கு அருள்புரியக் கூடியவன் 

الرَّحْمَـٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوَىٰ

لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرَىٰ

وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى

அர்ஸுக்கு மேல் உயர்ந்து விட்டான்.  அவனுக்கு வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவைகளும்
அவை இரண்டுக்கு மத்தியில் உள்ளவைகளும், பூமிக்கடியில் உள்ளவைகளும், சொந்தமாகும். வார்த்தையில் வெளிப்படுத்தினாலும் நிச்சயமாக அவன் இரகசியமானதையும்
இன்னும் அதைவிடவும் மறைவானவற்றையும் நன்கறிவான். (ஸுரா தாஹா 5 - 7) 
ஒவ்வொரு காரியத்தையும் அறிவால் சூழ்ந்திருக்கின்றான்.  ஒவ்வொரு படைப்பினத்தையும் கண்ணியம், ஞானத்தால் மிகைத்திருக்கிறான்.  ஒவ்வொரு காரியமும் அருளாலும், அறிவாலும் விசாலமாகக் காணப்படுகிறது.  
அவர்களுக்கு முன்னால் உள்ளதையும், அவர்களுக்கு பின்னால் உள்ளதையும் அவன் அறிவான்.  அறிவால் அவனை சூழ்ந்துகொள்ள முடியாது.” 

அவன் தன்னை அவனது மகத்தான வேதத்தில் வர்ணித்ததைக் கொண்டு கண்ணியமிக்க நபியின் நாவாலும் வர்ணித்ததைக் கொண்டு வர்ணிக்கப்பட்டவன்.

  • அகிலாத்தாருக்கு அருள் புரியக்கூடியவனின் பண்புகளில் எவை அல்குர்ஆனில் வந்திருக்கின்றதோ, அல்லது முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்களிடம் இருந்து ஸஹிஹானதாகக் காணப்பட்டதோ அவை ஒவ்வொன்றையும் ஈமான் கொள்வது வாஜிபாகும்.  அதனை கீழ்ப்படிவுடனும், ஏற்றுக்கொள்ளும் தன்மையுடனும் பெற்றுக்கொள்ள வேண்டும்.  

அதற்கு மறுத்தல், ஒப்புவித்தல்எப்படி எவ்வாறு என்று கேள்வி கணை தொடுத்தல்,  உவமைப்படுத்தல் போன்றவைகள் மூலம் புறக்கணிப்பதை விட்டுவிடுதல். இவைகளில் ஏற்பதற்கு சங்கடமாக உள்ளவைகளை வார்த்தைகளால் அதனை உறுதிப்படுத்துவதும், அதன் கருத்தை புறக்கணிப்பதை விட்டுவிடுவதும் கடமையாகும்.  


அறிவை அதனைக் கூறிய அல்லாஹ்விடமே திருப்பி விடுவோம்.  அதனது ஒப்பந்தத்தை அதனை சுமப்பவரிடமே ஆக்கிவிடுவோம்.  இது அறிவில் ஆழமானவர்களின் பாதையை பின்பற்றியே ஆகும்.  


அத்தகையவர்களை அல்லாஹ்தஆலா தெளிவான அவனது வேதத்திலே பாராட்டியுள்ளான்.  அல்லாஹ்தஆலா கூறுகிறான்

 

 وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِّنْ عِندِ رَبِّنَا

 “ கல்வியில் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் அதனைக்கொண்டும் நாங்கள் ஈமான் கொண்டோம்.  ஒவ்வொன்றும் எங்கள் இரட்சகனிடமிருந்தே ஆகும் எனக் கூறுவார்கள். (ஸுரா ஆலஇம்ரான் - 07)
  • அல்லாஹ்வை பற்றிய இல்மும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் 1  2
  • அல்லாஹ் பற்றிய நம்பிக்கையும் அதில் அந்நிய வழிமுறைகளின் ஊடுருவலும்1 2 3
  • அண்டசராசரங்களை பற்றி சிந்திப்பதின் உண்மைகளும் ஏகத்துவத்தை விளங்குவதின் தன்மைகளும் 1 2 
  • பிரிவுகளை தவிர்ந்திருப்பதும் அல் ஜமாத்தோடு இணைந்திருப்பதும் வாசிக்க